தெலங்கானா: புஷ்பா 2 சிறப்புக் காட்சி பார்க்க வந்தபோது நெரிசலில் சிக்கி பெண் உயிரிழந்த சம்பவத்தையடுத்து, நடிகர் அல்லு அர்ஜுன் கைது, முதல்வர் ரேவந்த் ரெட்டியின் காட்டமான பேச்சு, இப்போது அல்லு அர்ஜுனின் வீடு தாக்குதல் என விவகாரம் நீண்டு கொண்டே செல்கிறது. இந்த நிலையில், நடிகர் அல்லு அர்ஜுனின் வீட்டின் மீது, நடத்தப்பட்ட தாக்குதலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட 6 பேருக்கு ஜாமீன் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. BREAKING: Bail GRANTED to Allu Arjun house🏡 […]
சென்னை: நடிகர் அல்லு அர்ஜூன் வீட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதலால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது. சமீபத்தில் திரையரங்கில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ஒரு பெண் பலியான சம்பவம் தொடர்பாக, நடிகர் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்ட நிலையில், தெலுங்கனா சட்டப்பேரவையில், “புஷ்பா 2 படம் முதல் ஷோவிற்கு அல்லு அர்ஜுன் தியேட்டருக்கு வரக் கூடாது என காவல்துறை அறிவுறுத்தி இருந்தது. அதையும் மீறி அவர் முதல் ஷோவிற்கு சென்றார், மக்கள் கூட்டம் […]
தெலங்கானா : ‘புஷ்பா 2’ படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க வந்த பெண் உயிரிழந்த விவகாரம் குறித்து, தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி சட்டப்பேரவையில் காட்டமாக பேசியிருக்கிறார். ‘திரையரங்கிற்கு வரவேண்டாம் என காவல்துறையினர் கூறியதை மதிக்காமல் அல்லு அர்ஜூன் சென்றதே கூட்ட நெரிசல் ஏற்பட காரணம்’ என குற்றம் சாட்டியுள்ளார். மேலும், பெண் உயிரிழந்தது தெரிந்தும் படத்தை முழுவதுமாக பார்த்த பிறகே அல்லு அர்ஜூன் வெளியே வந்ததாக கூறியுள்ளார். புஷ்பா 2 வெளியீட்டின்போது படம் பார்க்க வந்த […]
டெல்லி : போனை தயாரிக்கும் வளர்ச்சியில் இந்தியா தற்போது அசுரத்தனமான வளர்ச்சியை கண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால். இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களை தான் 99.2% பேர் இந்தியாவில் பயன்படுத்தி வருகிறார்கள் என சர்வேவில் தெரியவந்ததாக மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் ஜிதின் பிரசாத் தெரிவித்துள்ளார். இது குறித்து நாடாளுமன்றத்தில் பேசிய ஜிதின் பிரசாத் ” இந்தியாவில் கடந்த 10-ஆண்டுகளில் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி மதிப்பு அதிகம் வளர்ச்சியை கண்டுள்ளது மகிழ்ச்சியாக இருக்கிறது. கடந்த 2014, 2015 ஆகிய நிதியாண்டில் […]
சென்னை: கடந்த சில தினங்களாக ஏற்றத்திலிருந்த தங்கம் விலை, நேற்று எந்த மற்றமும் இல்லாமல் விற்பனையான நிலையில், இன்று திடீர் சரிவைக் கண்டுள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று கிராமுக்கு ரூ.55 குறைந்து ரூ.7,230க்கும், சவரனுக்கு ரூ.440 குறைந்து ரூ.57,840-க்கும் விற்பனையாகிறது. அதேபோல் வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.3 குறைந்து, ரூ.101க்கும், கிலோ வெள்ளி ரூ.101,000-க்கும் விற்பனையாகிறது. மேலும், 24 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.7,887-க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு சவரன் […]
மும்பை : பலரும் உபயோகம் செய்து வரும் இன்ஸ்டாவில் அடிக்கடி நல்ல அப்டேட்டுகளை மெட்டா நிறுவனம் கொண்டு வருகிறது. அந்த வகையில் தற்போது, மெசேஜை Schedule செய்து வைத்துக்கொள்ளலாம் அப்டேட்டை கொண்டு வந்துள்ளது. இந்த அப்டேட்டின் மூலம் காதல் செய்பவர்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என கூறப்படுகிறது. ஏனென்றால், நமக்கு பிடித்த நபரின் பிறந்த நாள் அன்று சரியாக 12 மணிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் சொல்லவேண்டும் என்றால் சில சமயங்களில் துக்கம் வந்து உறங்கிவிடுவோம். இதனால் நம்மளுடைய பிறந்த […]
டெல்லி : இந்தியாவில் Oppo Find X8 போனை வாங்குவதற்காக நீங்கள் ஆர்வமான ஒருவராக இருந்தீர்கள் என்றால் உங்களுக்காகவே அசத்தலான குட் நியூஸ் வந்திருக்கிறது. அது என்னவென்றால், Oppo ஆன்லைன் ஸ்டோர், ப்ளிப்கார்ட் மற்றும் பிற சில்லறை விற்பனை நிலையங்கள் மற்றும் பல்வேறு விற்பனை நிலையங்களில் Oppo Find X8 விற்பனைக்கு வந்துள்ளது என்பது தான். விலை எவ்வளவு? இந்த போன்களுடைய விலையை பற்றி பார்க்கையில் Oppo Find X8 Pro 16ஜிபி + 512ஜிபி மாறுபாட்டின் விலை […]
டெல்லி : iQOO நிறுவனமானது ஒரு வழியாக iQOO 13 ஐ இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த போன் எப்போது வெளியாகும் என பலரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த நிலையில், தற்போது அறிமுகமாகியுள்ளதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். இந்த அளவுக்கு இந்த போனின் மீது எதிர்பார்ப்பு எழுவதற்கு முக்கியமான காரணமே iQOO 13 போனானது ஸ்னாப்டிராகன் 8 செயல்திறன் கொண்ட காரணம் தான். இதற்கு முன்னதாகவே, ஸ்னாப்டிராகன் 8 செயல்திறன் கொண்ட Realme GT 7 Pro போனை […]
சென்னை : இன்ஸ்டாகிராம் அடுத்த காலகட்டத்திற்குள் பல வசதிகளை கொண்டு வந்து இப்போது இருப்பதை விட பெரிய அளவில் வளர்ந்து விடும் என்கிற அளவுக்கு மெட்டா நிறுவனமானது அடிக்கடி பல அப்டேட்டுகளை தொடர்ச்சியாக கொண்டு வந்து பயனர்களை கவர்ந்து வருகிறது. இப்படியான அப்டேட்டுகளை கொண்டுவருவதன் மூலம் இன்ஸ்டாகிராம் மீது மக்களுக்கு இருக்கும் ஆர்வமும் நாளுக்கு நாள் எகிறி கொண்டே செல்கிறது. அந்த வகையில், இன்னுமே மக்களுடைய எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இன்ஸ்டாகிராம் உபயோகம் செய்யாதவர்களையும் ஆப்பிற்குள் கொண்டு வர […]
சென்னை: கடந்த வாரம் முழுக்க ஏறுமுகமாக இருந்த தங்கத்தின் விலை, இந்த வாரம் தொடர்ந்து இரண்டு நாளாக இறக்கம் கண்டது. இந்நிலையில், விலை இன்று திடீரென மீண்டும் உயரத் தொடங்கியிருப்பதால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.960 குறைந்து ரூ.56,640க்கு விற்பனை, கிராமுக்கு ரூ.120 குறைந்து ரூ.7,080க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், வெள்ளி விலை இன்று மாற்றம் இல்லாமல், ஒரு கிராம் வெள்ளி ரூ.98க்கும் கிலோவுக்கு ரூ.98.000க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், […]
மும்பை : கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அமெரிக்காவில் இரட்டை கோபுர தாக்குதல் உலகையே அதிரவைத்தது. இந்த தாக்குதலை இப்போதும் உலகம் 911 என்று நினைவு கூறுகிறது. ஆனால், அதை விட கொடூரமான ஒரு தாக்குதல் தான் கடந்த 2008-ம் ஆண்டு மும்பையில் நடந்த தாக்குதல் தான். ட்வின் டவர் தாக்குதலை எப்படி 911 என பேசுகிறார்களோ அதே போல இந்த மும்பை தாக்குதலையும் 26/11 என 16 ஆண்டுகள் கடந்தும் பேசுகிறார்கள். மறக்க முடியாத […]
பெர்த் : இந்தியா – ஆஸ்திரேலியா இடையே நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றி இந்திய அணிக்கு ஒரு மிக முக்கிய வெற்றியாக பார்க்கப்படுகிறது. அதற்கு காரணம் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் சர்வதேச டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதி போட்டி தான். முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடி, முதல் இன்னிங்ஸ்க்கு 150 […]
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றனர். இதில், ஜார்க்கண்டில் மொத்தமுள்ள 81 தொகுதிகளுக்கு இரு கட்டங்களாக கடந்த நவம்பர் 13,20 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 2.60 கோடி வாக்காளர்களைக் கொண்ட இம்மாநிலத்தில் இரு கட்டங்களையும் சேர்த்து 67.74 சதவீத வாக்குகள் பதிவாகின. மாநிலத்தில் ஆளும் கட்சி கூட்டணியில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா 43, காங்கிரஸ் 30, […]
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக இதில் 5 தொகுதிகள் திரிணாமுல் காங்கிரஸ் வசமும், ஒரு தொகுதி பாஜக வசமும் இருந்தன. அதாவது, மதரிஹட் என்கிற தொகுதி பாஜகவின் கோட்டையாக உள்ள தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கையில், எ.ஜி.கர் மருத்துவ மாணவி கொலை விவகாரம் உள்ளிட்ட பல விஷயங்கள் ஆலமரசுக்கு எதிராக இருந்தும் அந்தக் கட்சி தேர்தலில் வெற்றியை சாத்தியப்படுத்தி உள்ளது. […]
டெல்லி : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் வாக்குகள் எண்ணப்பட்டு முன்னிலை நிலவரங்கள் வெளியாகி வருகிறது. இதில் பாஜக கூட்டணி மற்றும் காங்கிரஸ் கூட்டணி இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் காலை 9 மணி நிலவரப்படி மொத்தமுள்ள 288 தொகுதிகளில் பாஜக, சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே), தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார்) கட்சிகள் அடங்கிய மகாயுதி கூட்டணி 110 தொகுதிகளில் […]
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த குரோம் செல்போன், கணினி , லேப்டாப் உள்ளிட்ட எலக்ட்ரானிக் சாதனங்கள் வாங்கும் போதே அதில் இடம்பெற்று இருக்கும் அதிகளவில் அதனை பலர் உபயோகித்து வந்தாலும், அதனை பெரும்பாலானோர் அப்டேட் செய்வதில்லை. இதனை யாரும் கவனிப்பதும் இல்லை. அதில் தான் தற்போது பிரச்சனை ஆரம்பித்துள்ளது. ஆம், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கணினி எமர்ஜென்சி குழு (CERT-In) […]
டெல்லி : அமேசான் நிறுவனமானது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட (Black Friday Sale) பிளாக் ஃப்ரைடே விற்பனைக்கான தொடக்க தேதி முன்னதாக அறிவித்தது. இதனால் பல்வேறு தயாரிப்புகள் தள்ளுபடி விலையில் கிடைக்கும். இந்த ஆண்டு, பிளாக் ஃப்ரைடே விற்பனை நவம்பர் 22 (வெள்ளிக்கிழமை) முதல் டிசம்பர் 2 அன்று வரை நடைபெறுகிறது. ஆனால், தள்ளுபடிகள் மற்றும் சலுகைகள் உட்பட விற்பனையின் சரியான விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை, அந்த விபரங்கள் விற்பனைக்கு முந்தைய நாள் வெளியிடப்படும். அமேசானில் வரவிருக்கும் பிளாக் ஃப்ரைடே […]
வாஷிங்டன் : உலக தொழில்நுட்ப தலைமுறையின் அடுத்தகட்ட அசுர வளர்ச்சியானது செயற்கை நுண்ணறிவு எனும் AI தொழில்நுட்பத்தை தாங்கி வேகமாக பயணித்து வருகிறது. தற்போது தொழில்நுட்ப பயனர்கள் முதல் சாமானிய மக்கள் வரையில் AI தொழில்நுட்பத்தை பயன்படுத்த துவங்கி விட்டனர். ஆனால், அதில் சில ஆபத்துகளும் உள்ளன என தொழில்நுட்ப வல்லுநர்கள் எச்சரித்தும் வருகின்றனர். அமெரிக்க மாணவன் ஒருவன் வீட்டு பாடம் செய்ய கூகுள் AI இயங்குதளமான Gemini சாட் பாக்ஸில் உதவி கேட்டுள்ளார். அதற்கு அந்த […]
டெல்லி : ஓடிடி தளங்களில் மிகவும் பிரபலமாக இருக்கும் தளங்களில் ஒன்று டிஸ்னி + ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar). இந்த ஓடிடி தளத்திற்கு இணையாக ஒரு ஓடிடி தளம் கொண்டு வரவேண்டும் எனத் திட்டமிட்டு அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஜியோ சினிமா (JioCinema) என்ற ஓடிடி தளத்தைக் கொண்டு வந்தது. அதில் பல சீரிஸ்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவது மட்டுமின்றி ஐபிஎல் போட்டிகளை இலவசமாகப் பார்க்கும் வசதியைக் கொண்டு வந்து முன்னணி ஓடிடி நிறுவனமாகவும் வளர்ந்தது. […]
உலகம் முழுவதும் பலரும் பயன்படுத்தி வரும் வாட்சப்பில் பல அப்டேட்டுகளை கொண்டு வந்து பயனர்களை மெட்டா கவர்ந்து வருகிறது. குறிப்பாக, ஏற்கனவே, வாட்ஸ்அப்பில் இப்போது ட்ரெண்டிங்கில் இருக்கும் AI தொழிநுட்பம் வசதியைக் கொண்டு வந்தது. அதன்பிறகு, நாம் போடும் ஸ்டேட்டஸ்க்கு பார்ப்பவர்கள் லைக்குகள் போடும் வசதியைக் கொண்டு வந்திருந்தது. அதனைத் தொடர்ந்து, இப்போது நமது சேட்டிங்கை தனித் தனியாகப் பிரித்துக் கொண்டு அதனைத் தேவைப்படும்போது பார்த்துக்கொள்ளலாம் என்கிற வகையில் வசதி ஒன்றைக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் […]