திருபுவனை : புதுச்சேரி மாநிலம் திருபுவனையில் புரட்சியாளர் அம்பேத்கர் திருஉருவச் சிலையை நேற்று திறந்துவைத்தார். இவ்விழாவில் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, திரைக்கலைஞர் தீனா மற்றும் விசிக முன்னணி பொறுப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்று சிறப்பித்தனர். இந்த நிகழ்வில் பேசிய, விசிக தலைவர் திருமாவளவன், ”ஆட்சி அதிகாரத்தில் பங்கு, துணை முதல்வர் பதவி என்று ஆசை வார்த்தைகள் கூறி என்னை வீழ்த்தி விட முடியாது. கூட்டணி தர்மத்துக்காக விஜய் திறந்து வைத்த கதவையும் மூடினேன். […]
கோவை : கோவையில் நடைபெற்று வரும் தவெக கருத்தரங்கில் பங்கேற்க அக்கட்சியின் தலைவர் விஜய் வந்தபோது, விமான நிலையத்திற்குள் தடுப்புகள், ட்ராலி ஆகியவற்றை உடைத்ததாக தவெக தொண்டர்கள் மீது பீளமேடு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தவெக பூத் கமிட்டி மாநாடு நேற்று, இன்றும் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரி வளாகத்தில் நடைபெற்று வருகிறது. இதற்காக கோவை விமான நிலையம் வந்த அக்கட்சியின் தலைவர் விஜயை, தவெக தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்றனர். சுமார் 2,000 பேர் […]
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனை அக்கட்சி தலைவர் விஜய் தலைமையேற்றி நடத்தி வருகிறார். உடன் கட்சி நிர்வாகிகள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டுள்ளனர். இந்த நிகழ்வில் தேர்தல் சமயத்தில் பூத் கமிட்டி உறுப்பினர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்த பயிற்சி அளிக்கப்படுகிறது. அதற்காக முதலில் பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கு தேர்தல் வியூகம் […]
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்று வருகிறது. தவெக தலைவர் விஜய், கட்சி பொதுச்செயலாளர் ஆனந்த், முக்கிய நிர்வாகிகள் ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன் என பலரும் இந்த கருத்தரங்கில் கலந்து கொண்டுள்ளனர். இந்த நிகழ்வில், விழா மேடையில் விஜய், மற்ற நிர்வாகிகள் நின்று கொண்டிருக்கும் போது மேடை அருகே பலர் கூடியிருந்ததாக தெரிகிறது. அவர்களை ஒதுங்கி நிற்க சொல்லி முதலில், […]
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது. அதற்காக இன்று காலையில் அக்கட்சி தலைவர் விஜய் சென்னையில் இருந்து தனியார் விமானம் மூலம் கோவை வந்தடைந்தார். பல ஆண்டுகளுக்கு பிறகு கோவை வந்த விஜய்க்கு தொண்டர்கள், ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அங்கு திறந்தவெளி வாகனத்தில் தொண்டர்களை பார்த்து கையசைத்தவாறு சிறுது தூரம் ரோட் ஷோ சென்ற விஜய், பிறகு அவிநாசி சாலையில் உள்ள […]
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய சட்டமசோதாவை தாக்கல் செய்தார். அதில், கட்டாய கடன் வசூலில் ஈடுபட்டால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை, கட்டாய கடன் வசூலால் ஒருவர் தற்கொலை செய்துகொண்டால் அந்த நிறுவனம் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு உள்ளிட்ட சட்டதிருத்தங்கள் அதில் குறிப்பிடப்பட்டு இருந்தன. அந்த சட்ட மசோதாவில் குறிப்பிடப்பட்டவை, பொருளாதாரத்தில் பின் தங்கிய மற்றும் நலிவடைந்த மக்கள், விவசாயிகள், […]
விருதுநகர் : பட்டாசு ஆலையில் தீ விபத்து சம்பவங்கள் அவ்வப்போது நடைபெறுவது தொடர் கதையாகி வருகின்றன. இன்றும் சிவகாசி அருகே உள்ள தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர் என்ற செய்தி அப்பகுதியினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே எம்.புதுப்பட்டியில் ராஜரத்தினம் என்பவரது பெயரில் இயங்கி வரும் தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பட்டாசு வெடி விபத்த்தில் கட்டங்கள் தரைமட்டமாகி உள்ளன என்றும் இதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் […]
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் அக்கட்சி பூத் கமிட்டி நிர்வாகிகள் கலந்து கொள்ளும் கருத்தரங்கம் நடைபெற உள்ளது. இந்த கருத்தரங்கு கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது. மலை 3 மணிக்கு தொடங்கும் இந்த கருத்தரங்கில் கலந்து கொள்ள சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் அக்கட்சித் தலைவர் விஜய் கோவை வந்தார். கோவை விமான நிலையம் வந்த தவெக கட்சித் தலைவர் விஜய்க்கு, அங்கு […]
சென்னை : இன்றும் நாளையும் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் நடைபெற உள்ளது. இந்த கருத்தரங்கிற்கு தலைமை தங்குவதற்காக அக்கட்சி தலைவர் விஜய் கோவை வந்துள்ளார். அவரை வரவேற்க தவெக தொண்டர்கள் கோவை விமான நிலையத்தில் குவிந்துள்ளனர். பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா – பாகிஸ்தான் இடையே எல்லை பதற்றம் சற்று அதிகரித்துள்ளது. நேற்று நள்ளிரவு காஷ்மீர் பகுதியில் இந்தியா எல்லைக்குள் […]
சென்னை : 2026 தமிழக சட்டப்பேரவையை குறிவைத்து தமிழக அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. முதல் முறையாக தேர்தல் களம் காணும் தவெக கட்சியும் தங்கள் தேர்தல் பணிகளை பெரிய கட்சிகளுக்கு இணையாக தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. ஏற்கனவே, மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம், ஐடி விங் நிர்வாகிகள் பயிற்சி கூட்டம் ஆகியவற்றை தொடர்ந்து ஏற்கனவே அறிவித்தது போல 2 நாள் பூத் கமிட்டி முகவர்கள் கருத்தரங்கம் இன்றும் நாளையும் கோவையில் நடைபெறுகிறது. கோவை […]
சென்னை : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த கொடூர தாக்குதலுக்கு உள்ளூர் முதல் உலக நாட்டு தலைவர்கள் வரை பலரும் தங்கள் கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். இன்று சென்னை விமான நிலையத்திற்கு வந்த நடிகர் ராஜினிகாந்த்திடம் செய்தியாளர்கள் காஷ்மீர் தாக்குதல் பற்றி கேள்வி எழுப்பினர். அப்போது அவர், காஷ்மீர் சம்பவம் கண்டிக்கத்தக்கது என தனது கடும் அதிருப்தியை பதிவு செய்தார் […]
சென்னை : கத்தோலிக்க சபையின் 266-வது திருத்தந்தையாக 2013 மார்ச் 13 முதல் பதவி வகித்த போப் பிரான்சிஸ் கடந்த ஏப்ரல் 21 அன்று வாட்டிகன் நகரில் உள்ள அவரது இல்லத்தில் உயிரிழந்தார். போப் பிரான்சிஸின் அடக்க நிகழ்வு நாளை (ஏப்ரல் 26) காலை 10 மணி அளவில் புனித பீட்டர் சதுக்கத்தில் வைத்து நடைபெறவுள்ளது. அவரது உடல் ஏப்ரல் 23 முதல் புனித பீட்டர் பசிலிக்காவில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. மறைந்த போப் பிரான்சிஸ் உடலுக்கு […]
சென்னை : இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைப்பெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் கட்சியின் மூத்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிறுத்தி அதிமுகவில் எடுக்கப்படும் முக்கிய முடிவுகள் பற்றி இந்த ஆலோசனை கூட்டத்தில் பேசப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், செல்லூர் ராஜு, விஜயபாஸ்கர், சி.வி.சண்முகம், கே.பி.முனுசாமி, தங்கமணி, வேலுமணி என […]
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று அதிமுக மாவட்ட செயலாளர் ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்று வருகிறது. இந்த சமயத்தில் இன்று சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள எடப்பாடி பழனிச்சாமி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் எழுந்ததாக தகவல் கிடைக்கப்பெற்றது. இந்த மிரட்டல் இ-மெயில் மூலம் கிடைக்கப்பெற்றதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து, எடப்பாடி பழனிச்சாமி வீட்டிற்கு விரைந்த வெடிகுண்டு செயலிழப்பு குழுவினர் மற்றும் மோப்பநாய் குழுவினர் வெடிகுண்டை தேடும் பணியில் தீவிரமாக ஈடுப்பட்டு வருகின்றனர். […]
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறை தொடர்பான மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. அதில் அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், டி.ஆர்.பி.ராஜா ஆகியோர் உறுப்பினர்களின் கேள்விக்கு பதில் அளித்தும், புதிய அறிவிப்புகள் பற்றியும் பேசினர். அதில், தகவல் தொழில்நுப்டம் துறை ரீதியில் உள்ள முக்கிய அறிவிப்பை அத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேரவையில் அறிவித்தார். அதில், வீடுதோறும் மாதம் ரூ.200-க்கு 100 Mbps வேகத்தில் இணைய சேவை வழங்கும் திட்டத்தை பற்றி […]
உதகை : ஊட்டி ராஜ்பவன் மாளிகையில் இன்று (ஏப்.25) காலை துணைவேந்தர்கள் மாநாடு தொடங்கியது. மாநாட்டை குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் தொடங்கி வைத்தார். இன்றும், நாளையும் நடைபெறும் இந்த மாநாட்டிற்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமை வகித்தார். இந்த மாநாட்டுக்கு மொத்தம் 49 பல்கலைக்கழக துணை வேந்தர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், இதில் பெரும்பாலான அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர். இது குறித்து பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாட்டில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, […]
உதகை : மாநில, மத்திய, தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாடு உதகையில் இன்று நடக்கிறது. உதகை ராஜ்பவனில் நடக்கும் இந்த மாநாட்டை குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் தொடங்கி வைக்கிறார். தற்பொழுது, துணைவேந்தர்கள் மாநாட்டில் பங்கேற்க சிறப்பு விமானம் மூலம் ஜெகதீப் தன்கர் கோவை வருகிறார். இந்த நிலையில், உதகையில் நடைபெறும் துணைவேந்தர்கள் மாநாட்டை அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் புறக்கணிப்பதாக அறிவித்த சில நிமிடங்களில், தனியார் பல்கலைக்கழக துணை வேந்தர்களும் புறக்கணிப்பாதக அறிவித்துள்ளனர். அதன்படி, மனோன்மணியம் […]
சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப்-4 பணியிடங்களுக்கான தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், வனக் காப்பாளர் உள்ளிட்ட 3,935 பணியிடங்களுக்கான தேர்வு ஜூலை 12-ம் தேதி அன்று நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வர்கள் 25.04.2025 முதல் 24.05.2025 வரை தேர்வாணைய இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். டிஎன்பிஎஸ்சி: 2018 முதல் 2025 வரையுள்ள 8 ஆண்டுகளில், முதன்முறையாக தொடர்ச்சியாக அடுத்தடுத்த ஆண்டுகளில் (2024 மற்றும் […]
சென்னை : ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது, கடந்த செவ்வாய்க்கிழமை தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் மூன்று தமிழக சுற்றுலாப் பயணிகள் காயமடைந்தனர். இதனைத் தொடர்ந்து, தமிழக அரசு மற்றும் மத்திய அரசு இணைந்து விரைவான மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு, பாதிக்கப்பட்ட பயணிகளை பாதுகாப்பாக சென்னைக்கு அழைத்து வர திட்டமிட்டனர். அதன்படி, தமிழக அரசின் உதவியோடு, ஜம்மு காஷ்மீரில் இருந்து விமானம் மூலம், 68 சுற்றுலா பயணிகள் இன்று சென்னை வந்தடைந்தனர். சுற்றுலாப் […]
காஷ்மீர் மாநிலம் பெஹல்காமில் ஏப்ரல் 22ம் தேதி சுற்றுலா பயணிகள் மீதான தீவிரவாத தாக்குதலில் 26 கொல்லப்பட்டு, பலர் படுகாயம் அடைந்துள்ளனர். இதில், தமிழகத்தைச் சேர்ந்த மூவர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தாக்குதலை அடுத்து காஷ்மீரில் உள்ள சுற்றுலா பயணிகள் தங்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டு வருகின்றனர். இந்த பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, இண்டிகோ, ஏர் இந்தியா மற்றும் ஸ்பைஸ்ஜெட் ஆகிய விமான நிறுவனங்கள் நேற்று (புதன்கிழமை) ஸ்ரீநகரில் இருந்து 7 கூடுதல் விமானங்களை […]