சென்னை : கடந்த மார்ச் 14ம் தேதி தொடங்கிய தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு பெறுகிறது. மார்ச் 14இல் நிதிநிலை அறிக்கை, அடுத்த நாளில் வேளாண் நிதி நிலை அறிக்கை பேரவையில் தாக்கலானது. இறுதிநாளான இன்று காவல் மற்றும் தீயணைப்பு துறைகளுக்கான மானியகோரிக்கையில் சட்டப்பேரவை உறுப்பினர்களின் கேள்விக்கு பதில் அளித்து புதிய அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட உள்ளார். நடிகர் அஜித்குமாருக்கு பத்ம பூஷன் விருதை குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வழங்கினார். நேற்றைய […]
சென்னை : நேற்று முன் தினம் தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மனோ தங்கராஜ் மீண்டும் அமைச்சர் பொறுப்பு ஒதுக்கப்பட்டது. மனோ தங்கராஜ், கன்னியாகுமரி மாவட்டத்தின் பத்மனாபபுரம் சட்டமன்றத் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். இந்த நிலையில், சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், மனோ தங்கராஜுக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். அப்பொழுது, இவருக்கு பால்வளத்துறை மீண்டும் ஒதுக்கப்பட்டுள்ளது, இது இவர் […]
சென்னை : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம் வழங்கப்படும் என்பது பற்றி விவரம் அறிவிக்கப்பட்டிருந்தது. அதில் அஜித்குமார் உட்பட 19 பேர் பத்மபூஷன் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர் தவிர, நந்தமூரி பாலகிருஷ்ணா, ஆகியோருக்கும் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த அறிவிப்பை தொடர்ந்து விருது வழங்கும் விழா இன்று டெல்லியில் நடைபெற்றது. பத்மபூஷன் விருதுகளை வென்றவர்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு விருதுகளை வழங்கினார். வழக்கமாக எந்த […]
சென்னை : திமுக தலைமையிலான அமைச்சரவையில் 6வது முறையாக அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பரிந்துரையின்படி அமைச்சரைவை இலாகாக்களில் மாற்றம் செய்து ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். செந்தில் பாலாஜி பதவி விலகிய நிலையில், அவருடைய வசம் இருந்த மின்சாரத்துறை போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கருக்கு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. அதைப்போல, வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமிக்கு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வரிசையில் ஏற்கனவே, பத்மநாபபுரம் தொகுதி எம்எல்ஏ மனோ தங்கராஜ், தமிழ்நாடு அமைச்சரவையில் […]
கோவை : கடந்த 2019 பிப்ரவரி மாதம் தமிழகத்தையே அதிர வைக்கும் வண்ணம் பாலியல் வழக்கு ஒன்று வெளிச்சத்திற்கு வந்தது. சுமார் 100க்கும் மேற்பட்ட பெண்கள் இதில் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்பட்டது. சமூக வலைதளம் வாயிலாக பெண்களை ஏமாற்றி அவர்களை ஒரு கும்பல் பாலியல் ரீதியாக துன்புறுத்தி அதனை வீடியோவாக பதிவு செய்த கொடூரம் அரங்கேறியதாக செய்திகள் வெளியாகின. இந்த வழக்கின் தீவிரம் தமிழகம் முழுக்க தீயாய் பரவியது. இவ்வழக்கில் 8 பெண்கள் அளித்த புகாரின் அடிப்படையில் […]
சென்னை : செந்தில் பாலாஜி, பொன்முடி இருவரும் பதவியில் இருந்து விலகியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்து அரசியல் தலைவர்கள் பலரும் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பேசும்போது “திமுக ஆட்சியின் பாதாள வீழ்ச்சி ஆரம்பித்து விட்டது. ஆட்சி மாற்றத்திற்கான விதைகள் துளிர்விடத் துவங்கி விட்டன” எனவும் பேசியிருந்தார். எடப்பாடி பழனிசாமி பேசியதற்கு பதிலடி கொடுக்கும் […]
டெல்லி : முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் (2011) அமைச்சராக இருந்த போது பதியப்பட்ட வழக்கில், சட்ட விரோத பணப்பரிவர்த்தனை நடைபெற்றதாக கூறி அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கில் கைதாகி தற்போது ஜாமீனில் இருக்கிறார். அவர் ஜாமீன் மனுவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை சார்பில் வழக்கு பதியப்பட்டது. ஜாமீனில் வெளியே வந்த பிறகு மீண்டும் அமைச்சர் பதவி ஏற்ற செந்தில் பாலாஜிக்கு எதிராக உச்சநீதிமன்றம் கடந்த வாரம் அதிருப்தி தெரிவித்து இருந்தது. […]
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை கூடிய நிலையில், காவல்துறை மானியக் கோரிக்கை குறித்த விவாதம் நடைபெற்று வருகிறது. சட்டப்பேரவையில் கலந்து கொண்டு முதல் ஆளாக பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய 9 அறிவிப்புகளை அறிவித்தார். உதாரணமாக, பொங்கல் பண்டிகை போனஸ் உயர்வு,ஓய்வூதியர்களுக்கான பண்டிகை முன்பணம் உயர்வு, பழைய ஓய்வூதிய திட்ட ஆய்வு, அரசு ஊழியர்களின் குழந்தைகளின் உயர்கல்விக்கு முன்பணம் உள்ளிட்ட பல விஷயங்களை அறிவித்தார். அவரை தொடர்ந்து சட்டப்பேரவையில் கலந்து […]
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய 9 அறிவிப்புகளை அறிவித்தார். அதன் பிறகு, பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் தமிழ்நாட்டில் பயங்கரவாதம் இருப்பதாக கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “தமிழ்நாட்டுக்குள் எந்த ரூபத்திலும் மதவாதம் உள்ளே நுழைய முடியாது. மத பயங்கரவாதம் எங்கு உள்ளது என கூறுங்கள்? பொத்தாம் பொதுவாக கூறக் கூடாது. கோவையில் நடைபெற்ற சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. […]
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காவல்துறை மானியம் தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய 9 அறிவிப்புகளை அறிவித்தார். அதன் பிறகு அதிமுக எம்எல்ஏ ஓ.எஸ்.மணியன் காவல்துறை சார்ந்த அரசு முன்னெடுத்த நடவடிககைகள் குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஓ.எஸ்.மணியன் எழுப்பிய கேள்விகளுக்கு நாளை நான் விரிவான விளக்கம் அளிக்கிறேன் எனக் கூறினார். இன்று இதுவரையில் தமிழக அரசு […]
சென்னை : தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் மாதத்திலிருந்து கடும் வெப்பம் கொளுத்தி வருகிறது. இந்த வேளையில், சில இடங்களில் மழை பெய்து கொஞ்சம் குளிர்வை ஏற்படுத்தியிருந்தது. டெல்டா மாவட்டங்களில் நேற்று முதல் இடியுடன் மழை பெய்து வருகிறது. இதனிடையே, மே 4ஆம் தேதி முதல் தொடங்கும் அக்னி நட்சத்திரம் மே 28ஆம் தேதி வரை நீடிக்கும் என்றும் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் […]
சென்னை : இன்று அரசு ஊழியர்கள் மற்றும் காவலத்துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்று வருகிறது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு ஊழியர்களுக்கான சிறப்பு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். ஓய்வூதியம், அகவிலைப்படி, மகப்பேறு விடுப்புகள் உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகள் வெளியாகின. அதில், அரசு ஊழியர்களுக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்த 9 அறிவிப்புகளை கிழே காணலாம். கோவிட் 19 காலத்தில் அரசுக்கு ஏற்பட்ட பெரும் நிதிச்சுமை காரணமாக நிறுத்திவைக்கப்பட்டு இருந்த அரசு ஊழியர்களின் விடுமுறையை சமன் […]
சென்னை : நேற்றைய விடுமுறை தினத்தை தொடர்ந்து இன்று காலை அவை தொடங்கியதும், கலைஞர் பல்கலைக்கழகம் அமைப்பது குறித்த சட்ட முன் வடிவை பேரவையில் இன்று உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் தாக்கல் செய்கிறார். உறுப்பினர்களின் கோரிக்கையை அடுத்து கும்பகோணத்தில் கலைஞர் பெயரில் புதிய பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என முதலமைச்சர் அறிவித்து இருந்தார். மேலும், டெல்லியில் இன்று மாலை நடைபெறவுள்ள விழாவில் பத்மபூஷன் விருதை பெறுகிறார் நடிகரும் ரேஸருமான அஜித்குமார். சினிமா, கார் ரேஸ் என இரட்டைக் […]
சென்னை : முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் 6வது முறையாக அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பரிந்துரையின்படி அமைச்சரைவை இலாகாக்களில் மாற்றம் செய்து ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். அதன்படி, செந்தில் பாலாஜி வசம் இருந்த மின்சாரத்துறை போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கருக்கு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமிக்கு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பத்மநாபபுரம் எம்.எல்.ஏ மனோதங்கராஜ் மீண்டும் அமைச்சராகிறார். மனோ தங்கராஜுக்கு என்ன துறை ஒதுக்கப்படும் என விரைவில் […]
குரும்பபாளையம் : கோவையில் நேற்றைய தினத்தை தொடர்ந்து, இன்றும் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம், 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கட்சியின் தேர்தல் பணிகளை வலுப்படுத்துவதற்காக நடத்தப்பட்டது. இந்த மாநாடு கோவை மாவட்டம் குரும்பபாளையத்தில் உள்ள எஸ்.என்.எஸ் பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. தவெக தலைவர் விஜய் இன்றும் கருத்தரங்கில் பங்கேற்று, கட்சி நிர்வாகிகள் மத்தியில் உரையாற்றினார். அவரது உரையில், ”மக்களிடம் செல், மக்களிடமிருந்து கற்றுகொள், மக்களுடன் வாழ், மக்களுடன் சேர்ந்து […]
சரவணம்பட்டி : கோவையில் 2ஆம் நாளாக இன்று (ஏப்.27) தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கு நடைபெறுகிறது. குரும்பபாளையத்தில் உள்ள கல்லூரி வளாகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த கருத்தரங்கில், கரூர், கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களைச் சேர்ந்த தவெக முகவர்கள் பங்கேற்றனர். இந்த கருத்தரங்கு மேடையில், தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் பேசியதை தொடர்ந்து, தவெக தேர்தல் மேலாண்மை பிரிவு பொதுச்செயலர் ஆதவ் அர்ஜுனா பேசுகையில், ”ஊழலாட்சியை, அடிமை ஆட்சியை எதிர்க்க இங்கே புரட்சி உருவாகிக் கொண்டிருக்கிறது. இது மக்களுடைய […]
கோவை : தவெக தலைவர் விஜய், கோவையில் இன்று இரண்டாவது நாளாக ரோட் ஷோவில் ஈடுபட்டுள்ளார். சரவணம்பட்டியில் நேற்று பூத் கமிட்டி முகவர்களுக்கான கருத்தரங்கை விஜய் நடத்தினர். அதனை தொடர்ந்து, இன்றும் இரண்டாவது நாளாக நடைபெறவுள்ள இந்த கருத்தரங்கிற்கு அவர் ஹோட்டலில் இருந்து புறப்பட்டு, செல்லும் வழி முழுக்க, திறந்த வாகனத்தில் விஜய் தொண்டர்களை சந்தித்தபடியே தவெக கருத்தரங்கிற்கு வருகை தந்தார் தலைவர் விஜய். மேலும், கரூர், கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்ட தவெக முகவர்கள் இன்றைய […]
சென்னை: தமிழகத்தில் கனிம வளங்கள் அடிப்படை யில், நில வரி விதிப்பதற்கு, குவாரி உரிமையா ளர்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்துள்ளது. சமீபத்தில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட குவாரி உரிமையாளர்கள், ஜல்லி, எம்.சாண்ட் போன்ற கட்டுமான பொருட்களின் விலையை உயர்த்தினர். அதன்படி, யூனிட் ஜல்லி விலை ரூ.4,000-ல் இருந்து ரூ.5,000 ஆகவும், எம்.சாண்ட் விலை ரூ.5,000-ல் இருந்து ரூ.6,000 ஆகவும், பி.சாண்ட் விலை ரூ.6,000-ல் இருந்து ரூ.7,000 ஆகவும் உயர்த்தப்பட்டது. இதனால் புதிதாக வீடு கட்டும் நடுத்தர மக்கள் […]
கோவை : தமிழ்நாடு அரசியலில் எதிரும் புதிருமாக இருந்து வரும் தவெக மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளும் இன்றைய தினம் கோவையில் ரோட் ஷோவில் ஈடுபட்டுள்ளனர். அட ஆமாங்க ஒரு பக்கம், தவெக தலைவர் விஜய் கோவையில் இன்று இரண்டாவது நாளாக ரோட் ஷோவில் ஈடுபட்டுள்ளார். சரவணம்பட்டியில் நேற்று பூத் கமிட்டி முகவர்களுக்கான கருத்தரங்கை விஜய் நடத்தினர். இன்றும் இரண்டாவது நாளாக நடைபெறவுள்ள இந்த கருத்தரங்கிற்கு அவர் ஹோட்டலில் இருந்து புறப்பட்டுள்ளார். செல்லும் வழி முழுக்க, […]
கோவை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவையில் உள்ள குரும்பபாளையத்தில் தனியார் கல்லூரி வளாகத்தில் ஏப்ரல் 26 மற்றும் 27, 2025 அன்று இரு நாட்கள் நடைபெற்று வருகிறது. இதில் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம் ஆகிய 7 மாவட்டங்களைச் சேர்ந்த 16,000-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடி முகவர்கள் பங்கேற்கின்றனர். தவெக தலைவர் விஜய் இரு நாட்களும் மதியம் 3 மணிக்கு கருத்தரங்கில் பங்கேற்று நிர்வாகிகளிடையே உரையாற்றுகிறார். இந்த நிலையில், […]