கல்வி உதவித் தொகையை குறைக்காமல் தொடர்ந்து வழங்க வேண்டும் என்று திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தில் மாணவ, மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்திற்கு நேற்று ஏராளமான மாணவ, மாணவிகள் படையெடுத்து வந்தனர். அவர்களுக்கு அம்பேத்கர் கல்வி நூற்றாண்டு இயக்க மாநில அமைப்பாளர் பரதன் தலைமைத் தாங்கினார். முழக்கங்களை எழுப்பியவாறு அவர்கள் ஆட்சியர் அலுவலக நுழைவு வாசல் பகுதிக்கு வந்தனர். பின்னர் நுழைவு வாசல் பகுதியில் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த பாளையங்கோட்டை […]
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து 174 நாள்களாக நடந்துவந்த போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது. மேலும், எரிவாயு எடுக்க முயற்சித்தால், போராட்டம் வேறு வடிவில் மீண்டும் தொடங்கும் என்று எச்சரித்தனர் புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள நெடுவாசல் உள்பட நாடு முழுவதும் 31 இடங்களில் ஹைட்ரோகார்பன் எரிவாயு எடுக்கும் திட்டத்திற்கு பிப்ரவரி 15-ஆம் தேதி மத்திய அரசு அனுமதி அளித்தது. இதனையடுத்து, பிப்ரவரி 16-ஆம் தேதி இந்தத் திட்டத்தை எதிர்த்து நெடுவாசல், நல்லாண்டார்கொல்லை, வடகாடு, […]
தமிழக அரசுக்கும் முதல்வருக்கும் எதிராகவும் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் தினகரன் ஆதரவாளர்கள் சேலத்தில் பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்கள் விநியோகித்தனர். இதுதொடர்பாக கொண்டலாம்பட்டி பகுதி செயலாளர் விநாயகம் அளித்த புகாரின் அடிப்படையில் தினகரன் ஆதரவாளர்களான முன்னாள் எம்.எல்.ஏ வெங்கடாசலம், பகுதி செயலாளர் சரவணன் உள்ளிட்ட 10 பேரை சேலம் அன்னதானப்பட்டி போலீசார் கைது செய்தனர். துண்டு பிரசுரங்கள் விநியோகித்ததற்காக தினகரன் உட்பட அவரது ஆதரவாளர்கள் 30 பேர் மீது தேசதுரோகம் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் சேலம் […]
இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பகுதியில் கீழமானங்கரை கிராமத்தில் அமரர் சின்னார் என்ற விவசாயி ஒரு புதிய நெல்ரகத்தை அதே கிராமத்தில் உள்ள புஷ்பம் என்பவர் உதவியுடன் உருவாக்கியுள்ளார். இந்த நெல் 110-115 நாட்கள் வயதுடையது. நெல் கத்தரி ஊதா கலரில், சாயாத நெல் வகையைச் சேர்ந்தது. புதிய நெல் ரகம் உருவான வரலாறு: 7 வருடங்களுக்கு முன்னர் புஷ்பம் என்ற விவசாயி முதுகுளத்தூர் பஞ்சாயத்து யூனியனில் எடிடி 36 என்ற நெல் ரக விதையை வாங்கிக் கொணர்ந்து […]
திருச்சி: திருச்சி மேலபுலிவார்டு ரோட்டை சேர்ந்த கவிதா(36).(பெயர் மாற்றம்) எலக்ட்ரிக்கல் கடை உரிமையாளர். தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் உறவினர் தூத்துக்குடியை சேர்ந்த மாரியப்பன் (என்ற) கண்ணனை (45) அணுகியுள்ளார். சில பூஜைகள் செய்தால் தொழில் அபிவிருத்தி அடையும் என நம்பிக்கை தெரிவித்த மாரியப்பன், திருச்சிக்கு வந்து சில பூஜைகள் செய்துள்ளார். அதன்பின் மாரியப்பன் செய்து வந்த ‘ஷிப்பிங்’ தொழிலில் கவிதாவை பங்குதாரராக சேர்த்துக்கொள்வதாக கூறியுள்ளார். இதை நம்பிய கவிதா ரூ.5 லட்சத்தை மாரியப்பனிடம் வழங்கினார். தொழில் மேலும் […]
சேலம் : தமிழக அரசுக்கு எதிராக துண்டு பிசுரங்களை விநியோகித்ததாக அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. கைது செய்யப்பட்டார். தினகரானால் சேலம் மாவட்ட அதிமுக செயலாளராக முன்னாள் எம்.எல்.ஏ. வெங்கடாசலம் நியைக்கப்பட்டார். கைதான வெங்கடாசலத்திடம் துண்டறிக்கை குறித்து அன்னதானம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.