புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே நற்சாந்துபட்டியில் இயங்கி வருகிற அரசு உதவிபெறும் பள்ளியில் 8-ம் வகுப்பு மாணவி சுபலேகா, ஆசிரியை தாக்கியதில் மயங்கி விழுந்தார். புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள நற்சாந்துபட்டி அரசு உதவிபெறும் பள்ளியில் படிக்கும் 8-ம் வகுப்பு மாணவி சுபலேகா. சுபலேகாவின் தம்பியும் அதேபள்ளியில் 6-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் அதே பள்ளியில் படிக்கும் 3 மாணவர்கள் சுபலேகாவின் தம்பியை அடித்துள்ளனர். இதனால் சுபலேகா, பள்ளி ஆசிரியையிடம் இது குறித்து புகார் தெரிவித்துள்ளார். […]
ஸ்ரீரங்கம்:இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழக மாணவர்களுக்கான விபத்து காப்பீடு திட்டம் கொண்டு வர இருக்கிறோம் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் சுவாமி தரிசனம் செய்தபின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு கணிணி முறையில் கல்வி வழங்க 486 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது என்றார்.
யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரக்கூடிய உரிமை ஜனநாயக நாட்டில் உண்டு.அதனை நமது அரசியலமைப்பு சட்டமும் நமக்கு வழங்கியுள்ளது .ஆனால், தமிழகத்தில் ஏற்பட்டுருக்கிற அரசியல் வெற்றிடத்தை கணக்குப்போட்டு ”காற்றுள்ள போதே தூற்றிக் கொள்வோம் என்று கூறிக்கொண்டு வருவது தான் சந்தர்ப்பவாதம் என்பார்கள். குறிப்பிட்ட காலம் சாதாரணத் தொண்டனாக அரசியலில் ஈடுபட்டு மக்களுக்கு சேவை செய்து, அதன் பின்னரே தேர்தலில் குதித்து ஆட்சியை பிடிப்பதுதான் நியாயம்.நேற்று கட்சி ஆரம்பித்து, இன்று ஆட்சியை பிடித்துவிடலாம் என்று எண்ணுவது சரியல்ல.மக்களிடையே பிரபலம் என்பதால் மட்டுமே ஒருவர் முதல்வர் […]
தூத்துக்குடி திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி ஆலய கந்தசஷ்டி திருவிழாவை முன்னிட்டு 25-10-2017 தேதி அன்று உள்ளூர் விடுமுறை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
அறியப்படாத நந்தன் என்னும் தலைப்பில் தனது ஆய்வு கட்டுரையை சமர்ப்பித்து 10.10.2017 அன்று தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்துக்கான பொது வாய்மொழித் தேர்வை எதிர்கொண்டார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் ரவிக்குமார் .பின்பு தனது விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தோல்.திருமாவளவன் முன்னிலையில் மாண்புமிகு தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தரிடமிருந்து முனைவர் பட்டத்துக்கான சான்றிதழைப் பெற்றார். அந்த பட்டமளிப்பு விழாவில் ஆய்வு நெறியாளர் சாம்பசிவம் உதயசூரியன்,தேர்வாளர் அ. ராமசாமி, பதிவாளர், துறைத் தலைவர் குறிஞ்சி வேந்தன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
நேற்று கரூர் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட சிறுபான்மைத்துறை கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்திற்குத் மாநில சிறுபான்மைத்துறைத் தலைவர் அஸ்லாம் பாஷா அவர்கள் தலைமையில் நடைபெற்றது . மேலும் இக்கூட்டத்தில் கரூர் மாவட்ட சிறுபான்மைப் பிரிவுத் தலைவர் அன்புச் சகோதரர் முகமது சக்காரியா,கரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டித் தலைவர் சின்னசாமி ஆகியோர் கலந்து கொண்டனர் .
“சீதையைக் கடத்தி வந்ததைத் தவிர இராவணன் எந்தத் தவறும் செய்யாதவர், அதுவும் தன் தங்கை அவமானப்படுத்தப்பட்டதற்கு பழி வாங்கத்தானேத் தவிர காமத்தால் அல்ல.” இந்தக் குரல்கள் மேலெழும்ப ஆரம்பித்திருக்கின்றன. நாசிக்கில், பழங்குடி மாணவர்களின் ஹாஸ்டலில் இந்த செப்டம்பர் 30ம் தேதி, இராவணன் போல வேடமிட்டு இருந்த மனிதரைச் சுற்றி 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் ”இராவண ராஜா வாழ்க, இராவண ராஜா வாழ்க” என கோஷங்கள் எழுப்பி இருக்கின்றனர். விதர்பா அருகில் இன்னொரு பழங்குடிச் சமூகத்தில் தசராவில், இராவணன் […]