திருநெல்வேலி: நேற்று மாலை பாளை மார்க்கெட் மைதானத்தில் கந்துவட்டி கொடுமைக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிம் (எம்)) மாவட்ட குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னதாக இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.இந்த ஆர்பாட்டத்தில் சிபிஎம் மாவட்ட செயலாளர் கே.ஜி.பாஸ்கரன்,இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ராஜகுரு உட்பட பலர் கலந்து கொன்றனர். மேலும் இன்று அனைத்து கட்சி கூட்டம் காலை சிபிஐ(எம் ) அலுவலகத்தில் நடைபெற உள்ளதாக கூறியிருக்கிறார்கள்.
அக்டோபர் 24, 1801. மருது பாண்டியர் எனப்படும் மருது சகோதரர்கள் தமிழ்நாட்டில் ஆங்கிலேயருக்கு எதிரான விடுதலைப் போராட்ட முன்னோடிகளுள் குறிப்பிடத்தக்கவர்கள். ஆங்கிலேயரைத் தமிழ் மண்ணிலிருந்து விரட்ட 1785 முதல் 1801 இறுதி வரை ஆயுதம் தாங்கிப் போராடினார்கள். பெரிய மருது, சின்ன மருது எனப்படும் இவர்கள் ஆங்கிலேயருக்கு எதிராகப் போராடிய அனைத்திந்திய குழுக்களையும் ஒன்றிணைத்துத் திரட்ட முயன்ற போதுதான் ஆங்கிலேயரின் கோபத்திற்கு ஆளானார்கள். இவர்களது களம் சிவகங்கைச் சீமையைச் சேர்ந்த காளையார்கோயில் ஆகும். ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியரால் […]
மீன் பிடிப்பதில் பெரும் சிக்கல்களை மீனவர்கள் பெற்றுவரும் நிலையில் சக்தி வாய்ந்த சீன இன்ஜின்களை பயன்படுத்தி மீன் பிடிப்பதால் மீன்வளம் பாதிக்கப்படுகிறது. சீன இன்ஜின்களை பயன்படுத்துபவர்கள் அமைச்சர் ஜெயக்குமாரின் பினாமிகள் என்பதால் அவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று மீனவர்கள் கருதுகின்றனர். இன்று வேறு வழியின்றி காசிமேடு மீன்வளத்துறை அலுவலகம் முன் மீனவர்கள் சாலைமறியல் செய்தனர். கண்மூடித்தனமாக போலிஸ் தடியடி நடத்தியுள்ளது. கடிவாளமற்ற குதிரையாக போலிஸ் செயல்படுகிறது. தாக்குதலை எதிர்கொண்டு மக்கள் உறுதியாக நின்றனர். வேறு […]
சிபிஎம் மாநிலக்குழு கூட்டத்தில் நிறை வேற்றப்பட்ட கண்டனத் தீர்மானம் வருமாறு:நெல்லை மாவட்டம், காசிதர்மத்தைச் சார்ந்த இசக்கிமுத்து என்பவரின் குடும்பம் நெல்லை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ள சம்பவம் தமிழகத்தையே பதற வைத்துள்ளது. இதில் இசக்கிமுத்துவின் மனைவி மற்றும் அவரது இரண்டு குழந்தைகள் மருத்துவமனையில் தீக்காயங்களுக்கு பலியாகியுள்ளனர். இசக்கிமுத்து கடுமையான காயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு இந்த கொடூர நிகழ்வு குறித்து ஆழ்ந்த கவலையையும், அதிர்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறது.ரூ. […]
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் (DYFI) சிவகங்கை மாவட்ட அமைப்பாளர் VP.வசந்தகுமாரை சாதியை சொல்லி திட்டி கொலைவெறி தாக்குதல் நடத்திய ஜாதி வெறி கயவர்களை கண்டித்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி(TNUEF ) மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்(DYFI) சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் மானாமதுரை பேரூராட்சி அலுவலகம் அருகில் நடைப்பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் அகில இந்திய குழு உறுப்பினர் ரெஜிஸ் குமார் ,TNUEFன் மாநில செயலாளர் முனியசாமி ,மாவட்ட செயலாளர் பொன்னுசாமி,வாலிபர் சங்க […]
மெர்சல் படத்தில் ஜிஎஸ்டி வசனத்தை நீக்க கோரி தமிழக பிஜேபி தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன், பிஜேபி செய்தி தொடர்பாளர் H.ராஜா மற்றும் இதர பிஜேபி நிர்வாகிகளும் கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர். மெர்சல் திரைப்படத்தில் ஜிஎஸ்டி பற்றி தவறான கருத்துக்களை பரப்பி வருகின்றனர் எனுவும் கூறி வருகின்றனர். இந்நிலையில் நேற்று ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் H.ராஜா அவர்கள் மெர்சல் திரைப்படத்தை தான் இணையத்தில் பார்த்ததாக தெரிவித்தார். விஷால் பட நிறுவனத்தில் ரெய்டு இதனை தயாரிப்பாளர் சங்க தலைவர் […]
இந்திய ஜனநாயக வாலிபர்சங்க(dyfi) விழுப்புரம் (தெ) கமிட்டி நிர்வாகிகள் தாக்கப்பட்டனர் .மேலும் அந்த அமைப்பில் உள்ள பழனி Mk தலைவர் உட்பட 4வாலிப சங்க நிர்வாக தலைவர்களை தாக்கிய சாகுல் அமித் காவல்துறை ஆய்வாளர் தலைமையிலான காவல்துறையை கண்டித்து அந்த அமைப்பின் நிர்வாகிகள் போராட்டம் நடத்தினர் .இது போல் மாணவ சங்க அமைப்பினர் பல்வேறு இடங்களில் தாக்க படுவது வழக்கமாகமே உள்ளது .
கந்துவட்டி கொடுமையால் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு குடும்பத்தினர் நான்கு பேர் தீ குளித்து படுகாயம் அடைந்துள்ளனர். அவர்களை நெல்லை அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று அவர்களின் உடல் நலம் குறித்து விசாரித்த போது.உடன் நெல்லை மாநகர செயலாளர் திரு. ALS. லட்சுமணன் MLA அவர்கள்,நெல்லை மாநகர வழக்கறிஞர் அணி அமைப்பாளர் திரு. ALB.தினேஷ் அவர்கள் மற்றும் கழக நிர்வாகிகள்
நெல்லை மாவட்டம் தென்காசியருகே காசிதர்மம் கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி இசக்கிமுத்து இவர் மனைவி சுப்புலெட்சுமி மற்றும் மகள்கள் சாருன்யா, பரணிகா ஆகியோர் நெல்லை கலெக்டர் அலுவலகம் முன்பு மண்ணெண்ணைய் ஊற்றி தீக்குளித்தனர்.இதனால் அங்கு பரபரப்பு நிலவுகிறது. இதனை விசாரிக்கையில் இசக்கிமுத்து மனைவி சுப்புலட்சுமி ஒரு கந்துவட்டிகாரரிடம் ருபாய் 1,5,000 கடனாக வாங்கியுள்ளார். இதனை மாதம் தோறும் தவணை முறையில் ருபாய் 2,30,000-ஆக அடைத்துள்ளார். இதனை தொடர்ந்து அந்த கந்து வட்டி கும்பல் இதுவரை வட்டி மட்டுமே […]
கருத்து சுதந்திரத்திற்கு எதிராக தொடர்ந்து விஷத்தை கக்கி வருகின்ற காவிகளின் வன்முறைக்கு எதிராக.. மெர்சல் திரைப்படத்தில் சொல்லியுள்ள உண்மையை கண்டு ஜீரனிக்க முடியாமல் கதறி, பட தயாரிப்பாளர்,நடிகர், இயக்குநருக்கு கொலை மிரட்டல் கொடுத்து வரும் பாசிச RSS&BJP அமைப்பினரின் அராஜக போக்கை கண்டித்தும்..மெர்சல் படத்திற்கு ஆதரவாகவும்…இன்று சேலம் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்(DYFI)&விஜய் மக்கள் இயக்கம் சார்பில்…மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழக்கத்தில் தற்போது காலநிலை மாறி மாறி வருகிறது.எப்போது மழை வரும் எப்போது வெயில் அடிக்கும் என்று கிடையாது எப்போது வேண்டுமானாலும் மழை வெயில் என மாறி மாறி வருகிறது . ஆகவே தற்போது வானிலை மையம் ஒரு தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. வருகின்ற அக்டோபர் 25க்கு பின் வடகிழக்குப்பருவமழை தொடங்கும் என அறிவித்துள்ளது.
தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் நாள்தோறும் மக்கள் அனைவரும் உயிர் இழந்து வருகின்றனர். இதற்கு காரணமாக கூறப்படுவது சுத்தம் கடைபிடிக்காமல், கொசு உற்பத்திக்கு வழிவகுக்கும் வீடுகளில், குடிநீர் இணைப்பை, ‘கட்’ செய்ய, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மாவட்ட கலெக்டர்கள், மாநகராட்சி கமிஷனர்கள் மற்றும் உள்ளாட்சிகளின் அதிகாரிகள், வீடு தோறும் அதிரடி ஆய்வை துவக்கி உள்ளனர். சேலத்தில், நேற்று, 18 இடங்களில், குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது. டெங்கு காய்ச்சலை முற்றிலும் ஒழிக்க, தமிழக அரசு முழு முனைப்புடன், இந்த நடவடிக்கைகளில் […]
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் நவம்பர் 4 ஆம் தேதி முதல் 6 ஆம் தேதி வரையில் மதுரையில் நடைபெறுகிறது.மேலும் அதன் ஒரு முன்னேற்பாட்டு நிகழ்ச்சிதான் “ஜாதி ஒழிப்பு சமத்துவ கலைவிழா” மாநாட்டின் வரவேற்ப்புக்குழு தலைவரான கபாலி பட இயக்குனர் பா.ரஞ்சித் தனது உரையில் குறிப்பிட்டவை: “கம்யூனிச சித்தாந்தம் இந்த நாட்டிற்கு அவசியம்”… ஏனெனில் அவர்களால்தான் சமத்துவமான ஒரு சமூக கட்டமைப்பை உருவாக்க முடியும்….மேலும் கம்யூனிச சித்தாந்ததோடு அம்பேத்கரியமும் ஒன்றிணைந்தால் இங்கு ஜாதி கட்டமைப்பை அடித்து நொறுக்க […]