ஈரோடு மாவட்டம் கோபியில் மேக்லீன் முதியோர் இல்லம் செயல்பட்டு வந்தது. இதன் ஆலோசகராக புஷ்பராஜ் இருந்து வந்தார். ஆண்டுதோறும் இல்லத்தின் வரவு-செலவு கணக்கை சார் பதிவாளரிடம் ஒப்புதல் பெற்று, மாவட்ட பதிவாளரிடம் சமர்பிக்க வேண்டியது கட்டாயமாகும். இதற்காக, 2004-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சார் பதிவாளராக இருந்த தங்கவேல் என்பவரிடம், புஷ்பராஜ் வரவு செலவு கணக்கை சமர்பித்துள்ளார். ஆனால், ஒப்புதல் அளிக்க தங்கவேல், ரூ.500 லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து, புஷ்பராஜ் அளித்த புகாரின் பேரில், […]
செல்வி எங்கள் அணி வாக்குச்சாவடி முகவரே, அவரிடம் ரூ 20 லட்சம் கைப்பற்றப்பட்டதாக வரும் தகவல் உண்மையல்ல . வாக்குச்சாவடி முகவர் என்பதனால் கையில் ரூ 10,000 வைத்திருந்திருக்கலாம் தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல்.சற்று முன் தான் செல்வி பணபட்டுவாடா புகாரில் போலிசாரால் அழைத்து சென்றார்.
கர்நாடக உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து, புகையிலைப் பொருட்கள் மீது 85% எச்சரிக்கைப் படங்கள் தொடர்ந்து வெளியிடப்படுவதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும். புகையிலைப் பொருட்களின் உறைகள் மீது 85% அளவுக்கு எச்சரிக்கைப் படங்களை வெளியிட வேண்டும் என்ற மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் ஆணை செல்லாது என்று கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது மிகவும் ஆபத்தானது – அன்புமணி ராமதாஸ்.
ஆர்.கே.நகர் தொகுதியில் 20 லட்சம் பணம் பறிமுதல் செல்வி என்பவரை போலீசார் அழைத்து சென்றனர் . தினகரன் ஆதரவாளர்கள் சாலை மறியல் சற்று முன் தான் தினகரன் ஆதரவாளர் செல்வியிடமிருந்து கட்டுக்கட்டாக ரூ.20 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
பணப்பட்டுவாடா தொடர்பாக புகார் அளித்தும், காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை .கோடி, கோடியாக பணப்பட்டுவாடா செய்தாலும், ஆர்.கே.நகரில் அதிமுக டெபாசிட்டை இழக்கும் – ஸ்டாலின்.
ஆர்.கே.நகரில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாலகங்காவின் வீட்டில் இருந்து பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாக கூறுவதில் உண்மையில்லை – அமைச்சர் காமராஜ்
ஆர்.கே. நகரில் டிடிவி தினகரன் ஆதரவாளர் செல்வி என்பவரிடம் ரூ. 20 லட்சம் பணம் பறிமுதல்… வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக வைத்திருந்த பணமா என விசாரணை…
ஆர்.கே. நகரில் கட்சிகள் போட்டிபோட்டுக் கொண்டு பணப்பட்டுவாடா செய்து வருகின்றன ஆர்.கே. நகரில் நியாயமாக தேர்தல் நடைபெறவில்லை என்றால் தேர்தலை நடத்தி பயன் இல்லை – தமிழிசை
ஒகி புயல் பாதிப்பு குறித்த அறிக்கையை இன்று மத்திய அரசுக்கு அனுப்புகிறது தமிழக அரசு மீனவர்கள், விவசாயிகளுக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்த அறிக்கையை தமிழக அரசு தயாரித்துள்ளது.
ஓக்கி புயல் பாதிப்பு மற்றும் மீனவர்கள் மீட்புப்பணி தொடர்பாக முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் தொடங்கியது.
தமிழ்நாட்டில், மாவட்டவாரியாக பல இடங்களில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சென்று ஆய்வு செய்து வருகிறார். இதற்கு ஆளுங்கட்சியை தவிர்த்து,மற்ற அனைத்து கட்சியும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இருப்பினும் சட்டப்படியே ஆய்வு நடக்கிறது என ஆளுநர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுவருகிறது. இது பற்றி மேலும் தெரிவிக்கையில், கவர்னரின் வேலைகளை மரியாதை குறைவாக பேசுவது சட்டப்படி குற்றமாகும் எனவும் ஆளுநர் மாளிகையிலிருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை குறித்து, முன்னாள் மத்திய மந்திரி காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ப.சிதம்பரம் அவர்கள் வெளியிட்டுள்ள டிவிட்டரில், தமிழக […]
சென்னை தலைமை செயலகத்தில் தேர்தல் சிறப்பு அதிகாரியை சந்தித்து, பணப்பட்டுவாடா குறித்து புகார் அளிக்க உள்ளார், திமுக செயல் தலைவர் ஸ்டாலின்.
பெரியபாண்டியன் சுட்டுக்கொல்லப்பட்டது எப்படி? உடன் சென்ற ஆய்வாளர் முனிசேகர் ராஜஸ்தான் போலீசில் புகார் – எஃப்.ஐ.ஆர். விவரம் .3 பெண்கள் உட்பட 5 பேர் கட்டை, இரும்புக் கம்பியால் போலீசாரை தாக்கினர் .கொள்ளையர்கள் தாக்கியதில் ஆய்வாளர் முனிசேகரின் துப்பாக்கி தவறி விழுந்தது முனிசேகரின் துப்பாக்கியை எடுத்தார் ஆய்வாளர் பெரியபாண்டியன் . கொள்ளையர்களின் தாக்குதலையடுத்து எல்லோரும் தப்பிவிட பெரியபாண்டியன் சிக்கிக் கொண்டார் .துப்பாக்கி சப்தம் கேட்டது; உள்ளே சென்று பார்த்தபோது ரத்த வெள்ளத்தில் பெரிய பாண்டியன் கிடந்தார். ■ […]
ஆர்.கே. நகர் வாக்காளர்களுக்கு எழும்பூரில் பணப்பட்டுவாடாவானது அதிமுகவின் முன்னாள் எம்.பி. பாலகங்கா வீட்டில் வைத்து தைரியமாக அப்பகுதியை சேர்ந்த மக்களுக்கு கொடுக்கபடுகிறது.ஆர்.கே. நகரில் பண மழைதான் பொழிகிறது. சென்னை எழும்பூரில் உள்ள முன்னாள் எம்பி. பாலகங்கா அடையாள அட்டையுடன் 300க்கும் மேற்பட்டோர் தலா ரூ. 6000 பணம் பெற்று செல்கின்றனர் என வீடியோ பதிவு வெளிவந்துள்ளது.
நாகப்பட்டினதில் போராட்டம் நடத்த வந்த ஹெச்.ராஜாவை வஞ்சியூரில் காவல்துறையினர் தடுத்து நிறுத்தி அவரை கைது செய்தனர். திருமாவளவனை கண்டித்து பாஜக நடத்த இருந்த போராட்டத்திற்கு நாகை காவல்துறை அனுமதி மறுத்தது.எனவே காவல் துறையினர்கும் பா.ஜ.க.வினர் இடையே தொடர்ந்து வாக்குவாதம் ஏற்ப்பட்டது இதனால் அத்துமீறி களத்துக்கு வந்தார் ராஜா. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
ஆர்கே நகர் இடைதேர்தல் களம் படு பயங்கரமாக இயங்கி வருகிறது. வேட்புமனு தாக்கல் ஆரம்பித்து தற்போது வரை இன்னும் பரபரப்பாக செயல்பட்டு வருகிறது. ஏற்கனவே பணபட்டுவாடா புகார் காரணமாக தான் ஆர்கே நகர் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது. தற்போது அங்கு பாதுகாப்பு பலபடுத்தபட்டு தொகுதிக்குள் வரும் ஒவ்வொரு வாகனமும் சோதனைக்கு உட்பட்டு தான் உள்ளே அனுமதிக்கபடுகிறது. தற்போது திமுகாவை சேர்ந்த முன்னாள் அமைச்சர், பூங்கோதை , ஆலடி அருணா, ஆகியோர் அதிமுகவினர் பணபட்டுவாடா செய்வதாக கூறி சாலை மறியலில் […]
சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நான் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் பாஜக வேட்பாளராக களமிறங்கவில்லை என்று கங்கை அமரன் விளக்கமளித்துள்ளார். இதைப்பற்றி இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சமீபத்தில் எனக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்தேன் . உடல் நலக்குறைவு காரணமாகவே இந்த முறை ஆர்.கே.நகரில் போட்டியிடவில்லை. பா.ஜனதா சார்பில் கரு.நாகராஜன் போட்டியிடுகிறார் என்று அவர் தெரிவித்தார் . இந்த இடைதேர்தலில் ஆர்.கே.நகர் மக்கள் கரு.நாகராஜனுக்கு வாக்களித்து பா.ஜனதாவை வெற்றி பெற செய்ய […]
ஆர்.கே.நகரில் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமாரின் கார் கண்ணாடி உடைப்பு. இருதினங்களுக்கு முன்புதான் இரு ஆதரவாளர்களுக்கிடையே மோதல் நடைபெற்றது. இதனை தொடர்ந்து ஆர்.கே.நகரில் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமாரின் கார் கண்ணாடியை டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள் உடைத்ததாக கொருக்குப்பேட்டை காவல் நிலையத்தில் ஆதிமுக இபிஎஸ்-ஓபிஎஸ் அணியினர் புகார் செய்தனர்…