திண்டுக்கல் மாவட்டம் பெருந்தலாறு மற்றும் பரப்பலாறு அணைகளிலிருந்து புதிய ஆயக்கட்டு புன்செய் பாசனம், பச்சையாறு குளங்கள் பாசன நிலுவைப் பயிர்களுக்கு தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இந்த பெருந்தலாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பதால் 9,600 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெரும். பரப்பலாறு அணையில் தண்ணீர் திறப்பதன் மூலம் 1223.17 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெரும்.
ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது எடுக்கப்பட்ட வீடியோ இல்லை தங்களை பாதுகாத்துக்கொள்வதற்காக இதுபோன்ற வீடியோவை வெளியிடுவது கண்டிக்கத்தக்கது கே.பி.முனுசாமி source: dinasuvadu.com
வேலூர் மாவட்டத்தில் ஜோலார்பேட்டையின் அருகே சென்னையிலிருந்து பெங்களூர் செல்லும் விரைவு ரயிலில் 750 மூட்டை அரிசி கடத்தல் செய்யப்பட்டது. இதனை ரயில்வே போலீசார் பறிமுதல் செய்தனர். ரேசன் அரிசியை பரிமுதல் செய்து, அந்த 750 மூட்டை அரிசி நுகர்பொருள் வாணிய கிடங்கில் ரயில்வே போலீசார் ஒப்படைத்தனர். இந்த கடத்தல் சம்பவம் குறித்து ரயில்வே போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
தற்போது மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சிகிச்சை பெற்ற வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இது சிகிச்சை பெற்ற வீடியோ இல்லை என அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் மறுப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில் தற்போது தினகரன் ஆதரவாளாரான வெற்றிவேல், மேலும் கூறுகையில், ‘ஜெயலலிதா உடல்நிலை சரியில்லாமல் சென்ற போது அவரை எங்கு அட்மிட் செய்யலாம் என அமைச்சர்கள் விவாதித்த வீடியோகள் நிறைய உள்ளன. அதனையும் வெளியிடுவோம்.’ என தெரிவித்தார். மேலும், ‘ஆர்கே நகர் தேர்தலுக்காக இதனை […]
எம்.பில். மற்றும் பிஎச்.டி. பட்டங்கள் தமிழ்நாடு திறந்த நிலை பல்கலையில் நேரடி முறையில் பெறப்பட்டால் அவை செல்லும் என அரசு தெரிவித்துள்ளது. யூ.ஜி.சி. அங்கீகரித்த பல்கலைகழகத்தில் முதலில் பட்டம் பெற்ற பிறகு, தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைகழகத்தில் முழு அல்லது பகுதி நேர படிப்பில் சேர்ந்து ஆய்வு பட்டம் பெற வேண்டும். இவ்வாறு பெற்ற பட்டம், தமிழக அரசு, அரசுசார் நிறுவனங்கள், பல்கலை கழகம் மற்றும் கல்லூரியில் பணி நியமனம் செய்வதற்கு மற்றும் பதவி உயர்வுக்கு இந்த பட்டம் […]
ஆட்டுக்கு தாடி போல, தேவையில்லாதவர்கள் ஆளுநர்கள் என்றார் அண்ணா. ஆளுநர் தேவையில்லை என்பது திராவிடக் கட்சிகளின் கோரிக்கையாக இருந்தாலும் இரு திராவிடக் கட்சிகளுமே தங்களுக்கு தேவையானபோது ஆளுநரைப் பயன்படுத்திக்கொள்ள தவறியதில்லை. ஆட்சிக் கலைப்பு என்ற அஸ்திரம் காங்கிரஸ் கட்சிக்கு கைவந்த கலை. தனக்கு மாநில அரசு இணக்கமாகவும், அடக்கமாகவும் இல்லையென்றால் அவர்கள் எடுக்கும் அஸ்திரம் ஆளுநர் ஆட்சி என்பதே. 25-06-1975 அன்று பிரதமர் இந்திராகாந்தி நெருக்கடி நிலையைப் பிரகடனம் செய்தார். திமுக இதை கடுமையாக எதிர்த்தது. விளைவு […]
மேட்டூர் அணை நீர்மட்டம் கடந்த 6 நாளில் 4.89 அடி குறைந்து 74.34 அடியாக உள்ளது அணையின் நீர்வரத்து 382 கனடியில் இருந்து 235 கனஅடியாக குறைந்தது நீர் இருப்பு: 36.547 டிஎம்சி நீர் வெளியேற்றம்: 10,000 கன அடி தற்போது மழையின் அளவு குறைந்துள்ள நிலையில் அணையின் நீர் மட்டம் படிப்படியாக குறையத்தொடங்கியுள்ளது. source: dinasuvadu.com
தமிழகத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.71.87 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.61.88 காசுகள் உள்ளன.நேற்றையதினம் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.71.79 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.61.77 காசுகள் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. நேற்றையத்தினத்தை விட இன்றைய பெட்ரோல் விலையானது 8 காசுகளும்,டீசல் 10 காசுகளும் உயர்ந்துள்ளன.
ஆர்.கே.நகர் தொகுதி தேர்தலுக்கான கருத்துக் கணிப்புகளையும் வெளியிட தேர்தல் ஆணையம் தடை.அதேபோன்று சமூக வலைதளங்களில் தேர்தல் விளம்பரங்கள் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல் வெளிமாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஆர்.கே.நகர் தொகுதியில் இருந்து வெளியேறி வருகின்றனர்.வேட்பாளருக்கு ஆதரவாகவோ, எதிராகவோ குறுஞ்செய்தி வெளியிட்டாலும் நடவடிக்கை என பல கட்டுபாடுகளை விதித்துள்ளது தேர்தல் ஆணையம்.
ஒகி புயல் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க பிரதமரிடம் கோரிக்கை வைத்தோம்.நிவாரண பணிக்கு ₹747 கோடி, சீரமைப்பு பணிக்கு ₹5,255 கோடி வழங்க கோரிக்கை வைத்தோம்.அரசு அளித்த கோரிக்கையை பரிசீலித்து மத்திய குழுவை அனுப்புவதாக பிரதமர் மோடி கூறினார் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து என வெளியாகும் செய்தி உண்மையில்லை என மறுத்துள்ளார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி. ஆர்.கே .நகர் இடைதேர்தலில் என்ன செய்தாலும் பணப்பட்டுவாடாவை தேர்தல் ஆணையம் தடுக்கவே முடியாது. ஆனால் அதற்குப் பதில். “அந்த ஏரியாவில் ஆறாயிரம் ருபாய் கொடுத்தார்கள். எங்கள் ஏரியாவில் நாலாயிரம் ரூபாய்தான் கொடுத்தார்கள்.பாக்கி இரண்டாயிரம் ரூபாயை இடைத்தரகர்கள் அமுக்கிவிட்டார்கள்” என்று ஏராளமான வாக்காளர்கள் புகார் செய்த வண்ணம் உள்ளார்கள்.இவ்வாறு அதிமுக மீது திமுகவினரும் ,அதிமுக மீது தினகரன் அணியும் […]
தினகரன் மெது தொடர்ந்துள்ள அந்நிய செலவாணி வழக்கு தொடர்பான விசாரணை நடந்து வருகிறது. இதில் சென்னை உயர்நீதிமன்றம் பதில் மனுதாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில், அந்நிய செலவானி வழக்கை இழுத்தடிக்கும் நோக்கில் தினகரனும் மனு தாக்கல் செய்துள்ளார் என்றும் அதில் தினகரன் கொடுத்துள்ள பட்டியலில் உள்ள பலர் உயிருடன் இல்லை எனவும் குறிப்பிட பட்டுள்ளது.
ஆர்கே நகர் இடைதேர்தல் நடைபெறுவதை ஒட்டி அந்த தொகுதியில் டாஸ்மாக் கடைகளை மூட தேர்தல் ஆணையம் உத்தரவிடபட்டுள்ளது. இன்று மாலை 5மணி முதல் 21ஆம் தேதி வரை டாஸ்மாக் மூட தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும் ஓட்டு எண்ணிக்கை நாளானா 24ஆம் தேதியன்றும் டாஸ்மாக்கை மூடவும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
அரசு அலுவலகங்களில் லஞ்ச புகார் தொடர்பான தகவல் பலகையை மக்கள் பார்வைக்கு வைக்கக்கோரி வழக்கு தமிழக நிர்வாக சீர்திருத்தத்துறை செயலர், ஊழல் தடுப்பு கண்காணிப்புத் துறை இயக்குநர் பதிலளிக்க ஆணை முகமது காசிம் என்பவரின் பொதுநல வழக்கில் ஜன.5ல் பதிலளிக்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவு #justin source: dinasuvadu.com
அரசிடம் முறையான அனுமதி பெறப்படாத உணவகங்கள், தள்ளுவண்டி கடைகள், பேக்கிரிகள், விடுதிகள் என சுமார் 15,000 அமைப்புகள் டிசம்பர் 31க்குள் மூடப்படும் என உணவு பாதுகாப்புத்துறை ஆணையர் பி.அமுதா அறிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், ‘மக்கள் விரும்பி சாப்பிடும் உணவுபொருட்கள் வகைகளில் கலப்படம் இல்லாத நல்ல உணவு வகைகள் கிடைக்க வேண்டும்’ என அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் பல செய்திகளை படிக்க.. dinasuvadu.com
ஜெயலலிதா மரணம் தொடர்பாக தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் பொதுமக்கள் சார்பில் கொடுக்கப்பட்ட 302 புகார்கள் விசாரணை ஆணையத்திடம் ஒப்படைப்பு * ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமியின் விசாரணை ஆணையத்தில் ஏற்கனவே 120 புகார் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.. source: dinasuvadu.com
அந்நிய செலாவணி வழக்கை இழுத்தடிக்கும் நோக்கில் தினகரன் மனு தாக்கல் செய்துள்ளார் – சென்னை உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை முறையீடு அந்நிய செலாவணி மோசடி வழக்கில் 17 சாட்சியங்களை விசாரிக்கக்கோரி தினகரன் தரப்பு மேல்முறையீடு தினகரனின் பட்டியலில் உள்ள பலர் தற்போது உயிருடன் இல்லை – சென்னை உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை பதில் source: dinasuvadu.com
மதுரை ஆதீனத்தின் மடாதிபதி என கூறி நித்யானந்தா தாக்கல் செய்த பதில் மனுவை திரும்பப் பெறாவிட்டால் நித்யானந்தா மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்: உயர்நீதிமன்ற கிளை. source: dinasuvadu.com
வைகை அணையில் இருந்து குடிநீர் மற்றும் பாசனத்திற்காக நாளை முதல் தண்ணீர் திறக்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு. குடிநீர் தேவைக்காக, வைகை அணையிலிருந்து நாளை முதல் 349.06 மில்லியன் கன அடி தண்ணீர் திறக்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு.. source: dinasuvadu.com
ஓகி புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்கள் நடுக்கடலில் தத்தளித்தவர்களை சக மீனவர்கள் மீட்டனர். வல்வினையைச் சேர்ந்த மீனவர்கள் 10 பேர் ஒகிபுயல் தாக்கத்தால் சுமார் 102 மைல்கள் கடந்து நடுக்களில் தத்தளித்தவர்களை மீன்பிடிக்க சென்றவர்கள் தங்களது உயிரை பணயம் காப்பாற்றினர். தங்களை காப்பாற்றியவர்களை கட்டித்தழுவி தங்களது நன்றியை பரிமாறி கொண்டனர். மேலும் படிக்க dinasuvadu.com