ஆர்.கே.நகரில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து ஜெயிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை – சென்னை விமான நிலையத்தில் தினகரன் பேட்டி * ஆர்.கே.நகர் தேர்தலில் நல்ல முடிவு வரும் – தினகரன் source: dinasuvadu.com
திருச்செந்தூர் முருகன் கோயிலில் சுற்று புறத்தில் உள்ள மண்டப மேற்புறசுவர் இடிந்து விழுந்து, ஒரு பெண்மணி உயிரிழந்தார். சிலர் காயமுற்றனர். இறந்தவரின் குடும்பத்திற்கு முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து ரூ.5 லட்சம் வழங்கப்பட்டது. இந்நிலையில் இடிந்து விழுந்த மேற்புற சுவர் மற்றும் சுற்று சுவர் முழுவதும் இடிக்கப்பட்டு கல்மண்டபம் கட்ட கோயில் நிர்வாகம் முடிவுசெய்துள்ளது. இதனால், தற்போது அதனை இடிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
டெல்லியில் இருந்து திமுக தலைவர் கருணாநிதிக்கு ஆ.ராசா எழுதியுள்ள கடிதத்தில், நிலைகொள்ளாத இந்த நடுநிசியில், தலைநகரின் கடுங்குளிரில் தங்கள் வார்த்தைகளின் ஒலிக்காக தனது செவிகள் உண்ணா நோன்பிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். தாக்குதல்களை எதிர்கொண்டு இந்த அலைவரிசைப் பயணத்தில் தான் கரைந்துவிடாமல் இருக்க பனிக்குடத்தில் வைத்து பத்திரப்படுத்திய தாய் கருணாநிதி என்று குறிப்பிட்டுள்ள ஆ.ராசா, 2ஜி தீர்ப்பை நன்றியுணர்ச்சியோடு கருணாநிதியின் காலடியில் வைத்து வணங்குவதாகக் கூறியுள்ளார். ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசினை வீழ்த்திட நடத்தப்பட்ட சதியில் அலைவரிசை அகப்பட்டுக் கொண்டதை […]
மறைந்த முதல்வர் எம்ஜிஆரின் 30-வது ஆண்டு நினைவுதினம், வரும் 24ம் தேதி அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு, அது தொடர்பான ஆலோசனைக் கூட்டம், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பன்னீர்செல்வம், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு அமோகமாக உள்ளதாகவும், மதுசூதனன் மாபெரும் வெற்றி பெறுவார் என்றும் குறிப்பிட்டார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் […]
மன்னார்குடி அருகே ஆவிக்கோட்டை என்ற ஊரில் தனியார் பேருந்து மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளனர். மேலும் 30 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்…
ஆர்கே நகர் இடைதேர்தல் பரபரப்பாக நடந்து வருகிறது. மதியம் 3 மணி வரை நிலவரப்படி 57.16% வாக்குகள் பதிவாகிவுள்ளது. மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.
ஜெயலலிதாவின் மகள் என உரிமை கோரி அம்ருதா சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு; ஜெயலலிதா உடலை தோண்டி எடுத்து டிஎன்ஏ பரிசோதனை செய்ய அம்ருதா கோரிக்கை அம்ருதாவின் முறையீட்டை ஏற்று பிற்பகல் 2.15 மணிக்கு விசாரிக்கிறது சென்னை உயர்நீதிமன்றம். source: dinasuvadu.com
ஒகி புயலால் உயிரிழந்த அனைவருக்கும் பாகுபாடின்றி ரூ 20 லட்சம் இழப்பீடு வழங்கக்கோரிய வழக்கு . தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.. source: dinasuvadu.com
ஆர்கே நகர் இடைதேர்தல் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் காலை 11 மணி வரை நிலவரப்படி 24.01% வாக்குகள் பதிவாகியுள்ளன. இன்று காலை முதல் மக்கள் நீண்ட வரிசையில் தங்கி தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர். இதனை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
நாட்டையே உலுக்கிய 2ஜி வழக்கில் இன்று தீரர்ப்பு வெளியானது. இதில் குற்றவாளிகள் என குறிப்பிடபட்டிருந்த கனிமொழி, ஆ.ராசா உள்ளிட்டோர் நிரபராதி என கூறி இன்று தீர்ப்பு வெளியானது. இதுகுறித்து, பல அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். அது குறித்து, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், ‘அரசியல் வரலாற்றில் ஒரு கட்சியை அவமானபடுத்தி அழிக்க போடப்பட்ட வழக்கு தான் 2ஜி. இந்த வழக்கில் இருந்து அனைவரும் விடுவிக்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது.’ என்று கூறினார். […]
மாவட்ட தேர்தல் அதிகாரி கார்த்திகேயன் அளித்த பெட்டியில், நேற்று தெர்த்சல் விதிமுறைகளை மீறியதாக சிலர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டதாகவும், இன்று காலையில் பணபட்டுவாடா நடந்ததாக புகார் வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ஆர்கே நகர் தேர்தலில் ஓட்டு போடுவதற்காக பணம் கொடுக்க வாக்காளர்களுக்கு 20 ருபாய் டோக்கேன் கொடுத்து பணபட்டுவாடா செய்த 15 பேர் கைது செய்யப்பட்டனர்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வீடியோவை தினகரன் ஆதரவாளரான வெற்றிவேல் வெளியிட்டார். அதனையடுத்து அந்த விடியோவை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி ஒளிபரப்ப கூடாது என்று கூறியதால், அந்த வீடியோவின் ஒளிபரப்பு சமூக வலைத்தளங்களில் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் இதுகுறித்து பேசிய சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி கார்த்திகேயன், தேர்தல் நடைபெறும் 48 மணி நேரத்துக்கு முன் தேர்தலை மையப்படுத்தி எவ்வித பரப்புரையும் செய்யக்கூடாது என்று கூறியுள்ளார். வீடியோ ஒளிபரப்பு மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் பிரிவு126(1)(பி)ஐ மீறுவதாகும். […]
முன்னாள் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா, திமுக எம்.பி. கனிமொழி உள்ளிட்டோருக்கு எதிரான, 2-ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கின் தீர்ப்பு இன்று (டிச.21) வெளியாகிறது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது 2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து, டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ 2 வழக்குகளை தொடுத்தது. இந்த வழக்கு மீதான இறுதி வாதம் கடந்த ஏப்ரல் 26-ம் தேதி முடிந்ததையடுத்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது. […]
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கான தனது வாக்கை பதிவு செய்தார் திமுக வேட்பாளர் மருதுகணேஷ். ஜனநாயக முறைப்படி தேர்தல் நடைபெற வேண்டும் என்பது தான் திமுகவின் கோரிக்கை எனவும்,அதேபோல் ரூ.6,000 அல்ல ரூ.60,000 கொடுத்தாலுமே ஆர்.கே.நகர் மக்கள் ஏமாறமாட்டார்கள் எனவும் வாக்களித்த பின்பு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். source : dinasuvadu.com
சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது வாக்குப்பதிவிற்காக 51 மையங்களில் 258 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன; மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.இதனால் ஆர்.கே.நகர் முழுவதும் பாதுகாப்புக்காக ஏராளமான துணை ராணுவப்படை மற்றும் போலீசார் குவிக்கப்பட்டு கண்காணித்து வருகின்றனர். அதேபோல் ஆ.கே.நகர் வாக்குப்பதிவின் போது தகராறு செய்தால் உடனடி கைது செய்யபடுவார்கள் என சென்னை மாநகர காவல்துறை எச்சரிக்கை செய்துள்ளது.
இன்று சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. இதனால் ஆர்.கே.நகர் முழுவதும் பாதுகாப்புக்காக ஏராளமான துணை ராணுவப்படை மற்றும் போலீசார் குவிக்கப்பட்டு கண்காணித்து வருகின்றனர். அதேபோல் ஆ.கே.நகர் வாக்குப்பதிவின் போது தகராறு செய்தால் உடனடி கைது – சென்னை மாநகர காவல்துறை எச்சரிக்கை செய்துள்ளது.
தமிழகத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.71.95 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.61.99 காசுகள் உள்ளன.நேற்றையதினம் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.71.87 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.61.88 காசுகள் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. நேற்றையத்தினத்தை விட இன்றைய பெட்ரோல் விலையானது 6 காசுகளும்,டீசல் 11 காசுகளும் உயர்ந்துள்ளன.
சென்னை: பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த ஆர்.கே நகர் தொகுதிக்கான இடைத்தேர்தலில் வாக்குப் பதிவு காலை 8 மணிக்கு தொடங்குகிறது.ஆர்.கே.நகர் தொகுதியில் காலை 8 மணி முதல் வாக்குப் பதிவுஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தல் வாக்குப் பதிவை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு. வாக்குப்பதிவு 8 மணிக்கு தொடங்க உள்ள நிலையில் காலையில் 6 மணிக்கே வாக்குச்சாவடிகளில் குவிந்திருக்கும் வாக்காளர்கள் ஆர்வமா?
திண்டுக்கல் மாவட்டம் பெருந்தலாறு மற்றும் பரப்பலாறு அணைகளிலிருந்து புதிய ஆயக்கட்டு புன்செய் பாசனம், பச்சையாறு குளங்கள் பாசன நிலுவைப் பயிர்களுக்கு தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இந்த பெருந்தலாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பதால் 9,600 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெரும். பரப்பலாறு அணையில் தண்ணீர் திறப்பதன் மூலம் 1223.17 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெரும்.