முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவால் ஏற்பட்ட வெற்றிடத்தை தினகரன் நிரப்புவதாக நான் கருதவில்லை என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். தேமுதிக சார்பில் சென்னை சைதாப்பேட்டை அருகே உள்ள சின்னமலையில் நேற்று கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. இதில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி னர். அப்போது அவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஏற்பட்ட வெற்றிடத்தை தினகரன் நிரப்புவதாக நான் கருதவில்லை. பொதுத் தேர்தல்தான் அதை முடிவு செய்யும். இப்போது அதுகுறித்து கருத்து […]
சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் நடைபெற்ற இடைத் தேர்தலில் திமுக 3வது இடத்திற்கு தள்ளப்பட்டதுடன் டெபாசிட்டையும் இழந்தது. ஆர்.கே.நகர் தேர்தல் முடிவு திமுகவினரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் திமுகவின் உயர்நிலை செயல் திட்டக் குழுக் கூட்டம் வரும் 29ந்தேதி கட்சியின் செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது. ஆர்.கே.நகரில் ஏற்பட்ட தோல்விக்கான காரணங்கள் குறித்து இந்தக் கூட்டத்தில் முக்கியமாக ஆராயப்படும் என்று கூறப்படுகிறது. இதற்கிடையே ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் கட்சி நிர்வாகிகளின் பணிகள் மற்றும் செயல்பாடுகள் […]
கொழும்புவிலிருந்து கடத்திக் கொண்டுவரப்பட்ட ரூ.17 லட்சம் மதிப்புள்ள 650 கிராம் தங்கம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் சம்மந்தப்பட்ட முகமது நசீர், அபுபக்கர் என்ற 2 பேரிடம் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.
சுனாமி நினைவு தினத்தை முன்னிட்டு புதுச்சேரியின் 18 மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்லவில்லை.. அதேபோன்று தமிழகத்தில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேளாங்கண்ணியில் சுனாமியால் பலியானவர்களுக்கான 13 ஆம் ஆண்டு நினைவுதின அமைதிப்பேரணி நடைபெற்றது. வேளாங்கண்ணி பேராலயத்தில் இருந்து 3 கி.மீ. தூரம் வரை மீனவர்கள், பொதுமக்கள் பேரணி செல்கின்றனர்.
தமிழ், ஆங்கிலம், இந்தி, உருது, அரபி, ஸ்பானீஸ், பிரெஞ்சு, சைனீஸ் என இந்த 7 மொழிகளைக் கத்துக்கிட்டா உலகின் எந்த மூலைக்கும் போய் பிழைச்சுக்கலாம் என நமக்கு கற்ப்பிக்கப்பட்டுள்ளது.ஆனால் தன்னுடைய 12 வயதில் சுமார் 400 மொழிகள் கற்று “வேர்ல்டு யங்கஸ்ட் மல்டி லாங்குவேஜ் சயின்டிஸ்ட்” அவார்டு வென்ற சென்னையை சேர்ந்த வித்தகர் மெஹ்மூத் அக்ரம் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
சசிகலாவின் அண்ணன் மகள் கிருஷ்ண ப்ரியாவிற்கு ஜெயலலிதா அவர்கள் வளைகாப்பு செய்த புகைப்படங்களை பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார் , அந்தப் பதிவில் ‘சில நினைவுகள் நம் மரணம்வரை நம்முடன் தொடரும் என்று குறிப்பிட்டுள்ளார். அந்தப் புகைப்படங்கள் தற்போது பேஸ்புக்கில் வைரலாகி வருகிறது…
மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியமானது தமிழகத்தில் உள்ள 7 பிரதான ஆறுகள் தொழிற்சாலைகளால் (ஆலைகளால்) வெளியிடப்படும் கழிவுகளால் மாசுபட்டு வருகின்றன என தமிழக அரசை எச்சரித்துள்ளது. மாசு கட்டுப்பாட்டு வாரியம் சொல்லுகிற மாசடையும் ஆறுகள்: பவானி காவேரி பாலாறு சரபங்கா தாமிரபரணி திருமணிமுத்தாறு வசிஸ்தா ஆகியவை ஆகும்.மேலும் இத்தகைய ஆறுகள் மேல் தனிக்கவனம் செலுத்துமாறு தமிழக அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் அச்சுந்தவயல் அருகே அரசு பேருந்து ஒன்று கட்டுபாடின்றி வந்து ஒரு கார் மீது மோதியது. இந்த கார் பரமக்குடியில் இருந்து ராமேஸ்வரம் நோக்கி சென்று கொண்டு இருக்கும்போது அரசு பேருந்து வந்து மோதியது. இந்த கோர விபத்தில் காரில் இருந்த குழந்தை உள்பட 2 பேர் பலியாகினர். மேலும், இந்த விபத்தில் காரில் இருந்தவர்கள் 5 பேர் படுகாயமுற்று அருகில் உள்ள மருத்துவமையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். source : dinasuvadu.com
கட்சி பொறுப்பிலிருந்து நீக்க யாருக்கும் அதிகாரம் இல்லை; நாங்கள் ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்டவர்கள்.டி.டி.வி. தினகரன் தலைமையில் விரைவில் அரசியல் மாற்றம் வரும் தினகரன் ஆதரவாளர் தங்கத் தமிழ்ச்செல்வன் . source: dinasuvadu.com
ஜெயலலிதா இல்லாததால் தோல்வியை சந்தித்துள்ளோம். மக்களை சந்தித்து பணிகளை செய்திருக்க வேண்டும். இருப்பினும் அதிமுக தனது வாக்கு வங்கியை இழக்கவில்லை. 47 ஆயிரம் வாக்குகளை பெற்றுள்ளதால் மன நிம்மதியோடு இருக்கிறோம். திமுக நிலைமைதான் மோசமாக போய்விட்டது. தினகரன் அதிகப்படியான தேர்தல் வேலைகள் செய்து வெற்றி பெற்றுள்ளார். மக்களுக்கு பணியாற்றட்டும். பின்னர் அதைப்பற்றி பேசலாம். இடைத்தேர்தல் முடிவால் அதிமுகவினர் அனைவரும் தினகரன் பின்னால் வருவார்கள். சட்டமன்றத்திற்குள் ஆட்சி மாறாது, காட்சி மாறும் என்று புகழேந்தி கூறுகிறாரே?. 3 மாதத்தில் […]
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றது பணநாயகம், தோல்வி நமக்கல்ல.வாக்கு வங்கியில் ஏற்பட்ட சரிவு குறித்து ஆய்வு செய்யப்படும் . ஆர்.கே.நகரில் விலை கொடுத்து வாங்கப்பட்ட வெற்றி வெகுமானமல்ல, பெரும் அவமானம்-திமுக செயல் தலைவர் ஸ்டாலின்… source: dinasuvadu.com
தினகரன் அரசியலுக்கு வருவதற்கு 18 வருடங்கள் முன்பே அரசியலுக்கு வந்தவன் நான் ஆர்.கே. நகர் தேர்தலில் நடந்த தில்லுமுல்லு குறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தோம் எங்கள் பக்கம் இருப்பவர்கள் யாரும் தினகரன் தரப்புக்கு செல்லவில்லை – துணை முதலமைச்சர் source: dinasuvadu.com
ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி ஒரு போதும் தேர்தலை சந்தித்ததில்லை. ஆர்.கே.நகர் தேர்தல் முடிவு: மாயாஜாலமாக மக்களை ஏமாற்றி வெற்றி பெற்றுள்ளனர். கட்சிக்கு துரோகம் செய்பவர்கள் மீது நடவடிக்கை தீவிரமாகும் – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.. டிடிவியும்,ஸ்டாலினும் கூட்டுசேர்ந்து இரட்டை இலையை தோற்கடிக்க நினைத்துள்ளனர்;அதிமுகவுக்கு துரோகம் செய்த அனைவர் மீதும்நடவடிக்கை எடுக்கப்படும் ஆர்கே.நகர் தேர்தலில் அதிமுகவுக்கு தோல்வி ஏற்படவில்லை;மக்களை ஏமாற்றி மாயாஜாலம் செய்து வெற்றி பெற்றுள்ளனர்;இது உண்மையான வெற்றியல்ல-முதல்வர் source: dinasuvadu.com
தினகரன் ஆதரவாளர்கள் அ.தி.மு.க.வில் வகித்து வந்த பதவிகளில் இருந்து இதுவரை நீக்கப்படாமல் இருந்தனர். தினகரனின் ஆர்.கே.நகர் வெற்றியை தொடர்ந்து அதிமுக இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக தகவல். தினகரன் ஆதரவு 6 மாவட்ட செயலாளர்கள் அதிமுக-வில் இருந்து நீக்கம் என தகவல். வி.பி.கலைராஜன், வெற்றிவேல், தங்க. தமிழ்ச்செல்வன், ரங்கசாமி, பாப்புலர் முத்தையா, சோழிங்கர் பார்த்திபன் ஆகியோரை மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்க அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு.. source: dinasuvadu.com
வெற்றிவேல், தங்க தமிழ்செல்வன், கலைராஜன் உள்ளிட்டோரை அ.தி.மு.க.விலிருந்து நீக்க திட்டம் .அதிமுக-வின் அவசர ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு என தகவல். * கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்படுபவர்கள் ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்டவர்கள்… தினகரன் ஆதரவாளர்கள் அ.தி.மு.க.வில் வகித்து வந்த பதவிகளில் இருந்து இதுவரை நீக்கப்படாமல் இருந்தனர். * தினகரனின் ஆர்.கே.நகர் வெற்றியை தொடர்ந்து அதிமுக இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக தகவல். * தினகரன் ஆதரவு 6 மாவட்ட செயலாளர்கள் அதிமுக-வில் இருந்து நீக்கம் என தகவல். source: dinasuvadu.com
திமுக உயர்நிலை செயல்திட்டக்குழு கூட்டம் வரும் 29 ஆம் தேதி நடைபெறுகிறது ஆர்.கே. நகர் தேர்தலில் திமுக தோல்வி குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என தகவல் source: dinasuvadu.com
பணம் கொடுத்து தினகரன் ஒரு தொகுதியில் வெற்றி பெறலாம்; அது எரிநட்சத்திரம் போல் எரிந்து போய்விடும் தினகரன் 5 மாதமாக வீட்டுக்கு வீடு பணம் கொடுத்து வெற்றி பெற்றது – ஹெச் ராஜா source: dinasuvadu.com
கழிவுநீர்தொட்டி சுத்தம் செய்யும் பணியில் விஷவாயு தாக்கி பலியானவர்கள் பட்டியலில் தமிழகம் முதலிடம் தமிழகத்தில் கடந்த நவம்பர் வரை விஷவாயு தாக்கி 144 பேர் உயிரிழப்பு -மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் source: dinasuvadu.com
ஆர்.கே. நகர் தேர்தலில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு தினகரன் ட்விட்டரில் நன்றி விஷால், சுப்பிரமணியன் சுவாமி, கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோருக்கும் நன்றி- தினகரன் source: dinasuvadu.com
அதிமுக தலைமை அலுவலகத்தில், ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் தொடங்கியது. * கூட்டத்தில் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி, அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் பங்கேற்றுள்ளனர். source: dinasuvadu.com