வைகோவை மலேசியாவுக்குள் நுழைய விடாமல் தடுத்த மலேசிய அரசுக்கு மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளதாக ம.தி.மு.க கூறியுள்ளது. இது தொடர்பாக இந்திய அரசின் வெளியுறவு அமைச்சகத்தில் இருந்து வைகோவுக்கு ஒரு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அந்தக் கடிதத்தில், 2017 ஜூன் 9ஆம் தேதி கோலாலம்பூர் விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தது குறித்துப் பிரதமருக்கு வைகோ கடிதம் எழுதியதைக் குறிப்பிட்டுள்ளது. இது குறித்துக் கோலாலம்பூரில் உள்ள இந்தியத் தூதரகம் மலேசிய உள்துறை அமைச்சகத்துக்குக் கண்டனம் தெரிவித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. இந்திய வெளியுறவு […]
இன்று தமிழகம் முழுவதும் பல அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றன. அதில் ஒன்றாக பகுதிநேர ஆசிரியர்கள் சென்னை சேப்பாக்கத்தில் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதனால், இன்று பள்ளிக்கு வராத பகுதிநேர ஆசிரியர்களை கணக்கெடுத்து வருகிறது பள்ளிகல்வித்துறை. இன்னொரு போராட்டமானது, தமிழகத்தை சேர்ந்த விஏஓக்கள் இன்று ஒருநாள் விடுப்பு எடுத்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டமானது, கடந்த 3 ஆண்டுகளாக அரசு வழங்கிய லேப்டப்களுக்கு இணைய கட்டணம் அரசு கொடுக்கவில்லை என்பதற்காக நடத்துகிறார்கள். source : […]
ஜெயலலிதா சிகிச்சை வீடியோவை, தினகரன் ஆதரவாளரான வெற்றிவேல், கடந்த 20ஆம் தேதி வெளியிட்டார். இதுதொடர்பாக ஆர்.கே.நகர் தேர்தல் அதிகாரி கொடுத்த புகாரின் அடிப்படையில், வெற்றிவேல் மீது, போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் தரப்பிலும், வெற்றிவேல் மீது, அண்ணா சதுக்கம் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், ஜெயலலிதா சிகிச்சை வீடியோவை அளிக்குமாறு, வெற்றிவேலுக்கு, விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பி இருந்தது. இதையடுத்து, ஜெயலலிதா சிகிச்சை வீடியோ நகலை, வெற்றிவேல் தரப்பில், […]
தமிழகத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.72.26 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.62.55 காசுகள் உள்ளன. ஆனால் நேற்றையதினம் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.72.17 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.62.48 காசுகள் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. நேற்றையத்தினத்தை விட இன்றைய பெட்ரோல் விலையானது 9 காசுகளும்,டீசல் 7 காசுகளும் குறைந்துள்ளன.
தமிழகத்தில் எய்ட்ஸ் நோயால் இறப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த 2014 – 2015ல் ஆண்டில் 4407 பேரும், 2015-2016ல் 4437 பேரும், எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்ததாக மத்திய அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை 4536 பேர் எய்ட்ஸ் நோயால் மரணம் அடைந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்த ஆண்டு மே மாதம் முதல் 2375 பேர் […]
ஓகி புயல் வந்து தமிழ்நாடு, கேரளா கடலோர மாவட்டங்களை பெரிதும் பாதித்தது. மேலும், இதன் பாதிப்புகளிலிருந்து இன்னும் மீள முடியாமல் மக்கள் பலர் தவிக்கின்றனர். இந்நிலையில் பிரதமர் மோடி சில தினகளுக்கு முன்னர் வந்து ஆய்வு மேற்கொண்டார். கன்னியாகுமரியில் ரப்பர் உள்ளிட்ட விவசாய பயிர்கள் கடுமையாக சேதமடைந்தன. இதன் மொத்த பாதிப்புகளை மதிப்பீடு செய்வதற்காக 8 பேர் கொண்ட மத்திய அதிகாரிகள் குழு 28ஆம் தேதி தமிழகம் வருகின்றனர். source : dinasuvadu.com
இலங்கை சிறையில் தமிழக மீனவர்கள் ஏற்கனவே 56 மீனவர்கள் சிறைபிடிக்க பிட்டனர். இவர்களின் நீதிமன்ற காவல் தற்போது ஜனவரி 9ஆம் தேதிவரை நீட்டித்து இலங்கை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த மீனவர்கள் ராமநாதபுரம், புதுகோட்டை மீனவர்கால் ஆகும். மேலும், ஏற்கனவே இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட ராமநாதபுரம், நகை மாவட்ட மீனவர்கள் 20 பேர் நாளை தமிழகம் வரவுள்ளனர் என்பது குறிப்ப்பிடத்தக்கது. source : dinasuvadu.com
ரயில் பயணிகள் அதிகமாக செல்லும் மாநகரங்களின் ரயில் நிலையங்களில் இலவச வைஃபை வசதி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது, சேலம் ரயில் நிலையத்திற்கு நாள்தோறும் 50 ஆயிரத்துக்கும் அதிகமான பயணிகள் வந்து செல்கின்றனர். இதனால், சேலம் ரயில் நிலையத்தில், 5 நடைமேடைகளிலும் இலவச வைஃபை வசதி ஏற்படுத்த நிர்வாகம் முடிவு செய்து இருந்தது. அதன் படி இன்று முதல் சேலம் வைஃபை வசதி செயல்படும் என நிர்வாகம் அறிவித்ததுள்ளது. source : dinasuvadu.com
ஆர்.கே.நகரில் 20 ரூபாய் நோட்டு டோக்கனுக்கு பணம் வழங்கவில்லை என மோதலில் ஈடுபட்ட 2 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஆர்.கே,நகர் தேர்தலுக்கு முன்னர் ரூ.20 கொடுத்து “அதனை டோக்கனாக வைத்துக்கொள்ளுங்கள் பிறகு அதற்கான பணத்தை பட்டுவாடா செய்கிறோம்” என்று தினகரன் சார்பில் கூறியதாக புகார்கள் எழுந்தது. அதன் பின் தற்போது தேர்தல் நடந்து முடிந்து அதில், தினகரன் வெற்றியும் அடைந்துள்ளார். இந்நிலையில் தற்போது ஆர்.கே.நகரில் உள்ள மீனாம்பாள் நகரில், டோக்கனுக்கு பணம் வழங்குமாறு அங்குள்ள […]
சென்னை: காவலர் முனிசேகர்தான் பெரியபாண்டியனை சுட்டார்’ என்பதை சென்னை காவல்துறை உறுதிபடுத்தியுள்ளது. ’ராஜஸ்தானில் கொள்ளையர்களை பிடிக்க சென்ற இடத்தில், ஆய்வாளர் முனிசேகர் கொள்ளையர்களை சுட்டபோது தவறுதலாக பெரியபாண்டியன் மீது குண்டு பாய்ந்தது’ இதனால் அவர் உயரிழந்தார் என்று தமிழக காவல்துறை அறிவித்துள்ளது… sources; dinasuvadu.com
தமிழக சட்டப்பேரவை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையுடன் ஜனவரி 2ம் வாரத்தில் தொடங்குகிறது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் முதல் நாள் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றுகிறார். அரசு திட்டங்கள் மற்றும் கொள்கை முடிவுகள் அடங்கிய ஆளுநர் உரை மீதான விவாதம் 3 நாட்கள் வரை நடைபெறும் என்று கூறப்படுகிறது. இந்த கூட்டத்தொடர் பொங்கல் பண்டிகைக்கு முன்பாகவே நிறைவடையும் என்றும் கூறப்படுகிறது. மேலும், தமிழகத்தில் புதிய ஆளுநராக பொறுப்பேற்ற பிறகு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் முதல் கூட்டத்தொடர் இது என்பது […]
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், தமிழகத்துக்கு வந்தபோது சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், `உயர் நீதிமன்றத்தில் வழங்கப்படும் தீர்ப்புகள் ஆங்கிலத்தில் மட்டும் இருக்கக் கூடாது என்றும். தமிழிலும் வழங்கப்பட வேண்டும்’ என்று கோரியுள்ளார். இதற்கு நீதிபதிகளும் சம்மதம் தெரிவித்துள்ளனர்… sources; dinasuvadu.com
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தொகுதியான ஆர்கே நகரில் நடைபெற்ற இடைதேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்ட T.T.V.தினகரன் சுமார் நாற்பதாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற்றார். இந்நிலையில் வரும் 29ஆம் தேதியன்று ஆர்கே நகர் சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்கிறார். அன்றைய தினம் மதியம் 1.30 மணிக்கு சபாநாயகர் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். 29ஆம் தேதி வைகுண்ட ஏகாதசி என்பதால் அன்று பத்தி ஏற்று கொள்கிறார்.
தமிழகத்தில் ஊழலுக்கு எதிரான அரசியல் நிலைப்பாடு எடுப்பவர்களை பாரதிய ஜனதா வரவேற்கும் .ரஜினிகாந்தின் தற்போதைய பேச்சில் உறுதி தெரிகிறது; ரஜினி டிசம்பர் 31 ஆம் தேதி உறுதியான அறிவிப்பை வெளியிடுவார் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளார் . சற்று முன் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியல் குறித்த அறிவிப்பை வருகின்ற 31 ஆம் தேதி அறிவிப்பதாக தெரிவித்தது குறிபிடத்தக்கது. source: dinasuvadu.com
ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் என்று தெரிவித்துள்ள அமைச்சர் ஜெயக்குமார். அவர்களை ஏற்றுக்கொள்வது மக்களின் கையில் இருப்பதாகக் கூறினார். ரஜினியை பா.ஜ.க. பயன்படுத்திக்க்கொள்ளுமா என்ற கேள்விக்கு அதற்கு அமைச்சர் ஜெயக்குமார் யூகங்களுக்கு பதிலளிக்க முடியாது என்று கூறினார். டி.டி.வி.தினகரனின் ஆர்.கே.நகர் வெற்றி கொள்ளையடித்த பணத்தில் கொள்ளையடித்த வெற்றி என்றும் ஜெயக்குமார் தெரிவித்தார். SOURCE: dinasuvadu.com
வாழ்க்கை என்றாலே போர்தான், அரசியல் களம் என்பதே போர்தான். தினகரனின் வெற்றி, கொள்ளையடித்த பணத்தில் கொள்ளையடிக்கப்பட்ட வெற்றி அது நியமானது இல்லை .ஸ்டாலினுடன் கூட்டுசேர்ந்து தினகரன் சதி செய்துள்ளார். இருவரும் கூட்டு சதிகாரர்கள் எனவும் கூறியுள்ளார் . தினகரனுடன் மறைமுகமாக கூட்டு வைத்ததால் திமுகவுக்கு உள்ளேயே பிரச்னை ஏற்பட்டுள்ளது என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். source: dinasuvadu.com
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவால் ஏற்பட்ட வெற்றிடத்தை தினகரன் நிரப்புவதாக நான் கருதவில்லை என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். தேமுதிக சார்பில் சென்னை சைதாப்பேட்டை அருகே உள்ள சின்னமலையில் நேற்று கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. இதில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி னர். அப்போது அவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஏற்பட்ட வெற்றிடத்தை தினகரன் நிரப்புவதாக நான் கருதவில்லை. பொதுத் தேர்தல்தான் அதை முடிவு செய்யும். இப்போது அதுகுறித்து கருத்து […]
சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் நடைபெற்ற இடைத் தேர்தலில் திமுக 3வது இடத்திற்கு தள்ளப்பட்டதுடன் டெபாசிட்டையும் இழந்தது. ஆர்.கே.நகர் தேர்தல் முடிவு திமுகவினரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் திமுகவின் உயர்நிலை செயல் திட்டக் குழுக் கூட்டம் வரும் 29ந்தேதி கட்சியின் செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது. ஆர்.கே.நகரில் ஏற்பட்ட தோல்விக்கான காரணங்கள் குறித்து இந்தக் கூட்டத்தில் முக்கியமாக ஆராயப்படும் என்று கூறப்படுகிறது. இதற்கிடையே ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் கட்சி நிர்வாகிகளின் பணிகள் மற்றும் செயல்பாடுகள் […]
கொழும்புவிலிருந்து கடத்திக் கொண்டுவரப்பட்ட ரூ.17 லட்சம் மதிப்புள்ள 650 கிராம் தங்கம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் சம்மந்தப்பட்ட முகமது நசீர், அபுபக்கர் என்ற 2 பேரிடம் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.
சுனாமி நினைவு தினத்தை முன்னிட்டு புதுச்சேரியின் 18 மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்லவில்லை.. அதேபோன்று தமிழகத்தில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேளாங்கண்ணியில் சுனாமியால் பலியானவர்களுக்கான 13 ஆம் ஆண்டு நினைவுதின அமைதிப்பேரணி நடைபெற்றது. வேளாங்கண்ணி பேராலயத்தில் இருந்து 3 கி.மீ. தூரம் வரை மீனவர்கள், பொதுமக்கள் பேரணி செல்கின்றனர்.