தமிழ்நாடு

2018ஆம் ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டை துவங்கி வைத்த அமைச்சர் விஜயபாஸ்கர்…!

  இந்த 2018ம் ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை தச்சங்குறிச்சியில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.இங்கு நடைபெற்ற ஜல்லிக்கட்டில் சுமார் 300க்கும் மேற்பட்ட காளைகள், அப்போட்டியில் சுமார் 100க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். முதலமைச்சர் அறிவுரையின்படி தமிழகத்தில் இந்தாண்டு தடையின்றி ஜல்லிக்கட்டு நடைபெறும் என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

#TNGovt 2 Min Read
Default Image

தஞ்சாவூர் மாவட்டத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்ட தலித் குடியிருப்புகளை கொளுத்திய ஜாதி கும்பல்…??

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா ஆம்பலாபட்டு தெற்கு குடிக்காடு கிராமத்தில் தலித் இளைஞர்கள் ஞாயிறு அன்று மேடை ஒளி,ஒலி அமைத்து புத்தாண்டை கொண்டாடினர். இதை பொறுத்துக் கொள்ள முடியாத ஆம்பலாபட்டு வடக்கு கிராமத்தை சேர்ந்த ஆதிக்க சாதி இளைஞர்கள் கொடிய ஆயுதங்களோடு தலித் குடியிருப்பு பகுதியில் புகுந்து கொலைவெறி தாக்குதல் நடத்தியதோடு, வீடுகள், மோட்டார் சைக்கிள்களை உடைத்து வீசி எறிந்து விட்டு சென்றுள்ளனர். குடிதண்ணீர் பைப்புகளையும் ,மின் இணைப்புகளையும் உடைத்து வீசியுள்ளனர்.தலித் மக்கள் வீடுகளை அடைத்து கொண்டும், […]

#Politics 3 Min Read
Default Image

கடந்த இரு தினங்களில் மட்டும் ரூ.211 கோடிக்கு மது விற்பனை….!!

தமிழகத்தில் கடந்த 2017 ஆண்டின் கடைசி நாளான டிசம்பர்.31 மற்றும் புத்தாண்டு முதல் தினமான ஜனவரி.1 ஆகிய இரு தினங்கள் மட்டுமே சுமார் ரூ.211 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது. இதனை கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் மதுபானங்களின் விலை 10% முதல் 12% வரை அதிகரித்த போதிலும், ரூ.36 கோடிக்கு கூடுதல் விற்பனை நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

#Tasmac 1 Min Read
Default Image

ரஜினியின் அரசியல் வருகை குறித்த கருத்துக்கணிப்பு முடிவுகள் இதோ

நடிகர் ரஜினிகாந்த் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட போவதாக அறிவித்துள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் பெரும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இந்நிலையில் அவரது ரசிகர்கள் மட்டுமல்லாது ஒட்டுமொத்த தமிழக மக்களின் மன நிலை என்ன என்பதை தெரிந்துக்கொள்ள கருத்துக்கணிப்பினை நேற்று ஒரு தனியார் செய்தி நிறுவனம் நடத்தியது. அதன் முடிவுகள் இதோ 40% ரஜினி நிச்சயம் சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியை பெறுவார் 33% கடும் தோல்வியடைந்து, டெபாசிட்டை இழப்பார் 17& பெரும்பான்மை பெறாமல் எதிர்கட்சியாகி, மக்களுக்கு […]

#Politics 2 Min Read
Default Image

புத்தாண்டை முன்னிட்டு கருணாநிதியை சந்தித்து ஸ்டாலின், கனிமொழி வாழ்த்து பெற்றனர்!

புத்தாண்டை முன்னிட்டு, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி,முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா ஆகியோர், திமுக தலைவரும், தங்கள் தந்தையுமான கருணாநிதியை சந்தித்து வாழ்த்து பெற்றனர். நண்பகலில்கருணாநிதியை சந்தித்து ஸ்டாலின் வாழ்த்து பெற்றார். பின்னர் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, தனது தாய் ராஜாத்தி அம்மாளுடன் சென்று கருணாநிதியை சந்தித்து ஆசி பெற்றனர். source: dinasuvadu.com

#Chennai 2 Min Read
Default Image

நான் சட்டப்பேரவையில் பேசினால் அன்றே அலறத்தொடங்குவார்கள் அதிமுகவினர் …….

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே தட்டன்கோவிலில் உள்ள குலதெய்வம் கோயிலில் குடும்பத்துடன் வழிபாடு நடத்துவதற்காக அவர் அங்கு சென்றார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த தினகரன், சட்டப்பேரவையில் தான் என்ன பேச போகிறேன் என்பதை பொறுத்திருந்து பார்க்குமாறு கூறினார்.அதிமுகவினர் தோல்வி பயத்தால் ஏதேதோ பேசிக் கொண்டிருப்பதாக ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ. டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்… source: dinasuvadu.com

#ADMK 2 Min Read
Default Image

ஆன்மீக அரசியல் குறித்து ரஜினிதான் விளக்க வேண்டும் அமைச்சர் ஜெயக்குமார்!

ஆர்.கே.நகரில் அனைத்து நலத்திட்டங்களும் செயல்படுத்தப்படும் என ஜெயக்குமார் உறுதியளித்துள்ளார். இந்த ஆண்டு இறுதிக்குள் 6,500 விசைப்படகுகளில் டிரான்ஸ்மீட்டர் கருவி பொருத்தப்படும். மேலும் ஆன்மீக அரசியல் குறித்து ரஜினிதான் விளக்க வேண்டும் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு எப்போது எடுத்தாலும் தயாராக இருக்கிறோம் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் சென்னை ஆர்.கே.நகரில் பேட்டியளித்துள்ளார். source: dinasuvadu.com

#ADMK 2 Min Read
Default Image

தமிழகம் முழுவதும் புத்தாண்டையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்!

புத்தாண்டையொட்டி திருச்செந்தூர் முருகன் கோவிலில் அதிகாலை முதலே சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. லட்சக்கணக்கன பக்தர்கள் கடலில் நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை அடுத்த திரு உத்தரகோசமங்கை கோயிலில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு ஒரே மரகதக்கல் நடராஜர் சிலையில் சந்தனக் காப்பு அகற்றப்பட்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன. ஒலி – ஒளியால் மரகதக் கல் சேதம் அடையும் என்பதால், ஆண்டு முழுவதும் சந்தனம் பூசப்பட்டு […]

#Tuticorin 3 Min Read
Default Image

வழக்கத்தை விட குறைவாக பெய்த வடகிழக்கு பருவமழை

வடகிழக்கு பருவமழை வழக்கத்தை விட இந்த வருடம் குறைவாகவே மழையளவு பதிவாகியுள்ளது. டிசம்பர் மாதம் மழை பெய்யும் என எதிர்பார்த்தால் மழை பெய்யவில்லை எனவே இந்தாண்டு மழை அளவு குறைந்துள்ளது. இந்தாண்டு 89% முதல் 110%  மழைபெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. ஆனால், இந்தாண்டு டிசம்பர் 4 க்கு அப்புறம் தமிழகத்தின் மழை பெய்யவில்லை அதனால் தமிழகத்தில் வழக்கத்தை விட 9% குறைவாகவே மழை பெய்து உள்ளது. source : dinasuvadu.com

#Rain 2 Min Read
Default Image

சிவகாசியில் 7 வது நாளாக தொடர் போராட்டம் : 4 லட்சம் தொழிலாளர்கள் பாதிப்பு

நம் நாட்டில் நல்லது என்றாலும் கெட்டது என்றாலும் பட்டாசு வெடிப்பது அனைவருக்கும் விருப்பமான செயல். அதனை நம்பி பல லட்சம் உழைப்பாளர்கள் தங்கள் வாழ்வாதிரமாக கொண்டுள்ளனர். ஆனால் பட்டாசு வெடிப்பதினால் சுற்று சூழல் மாசுபடுகிறது. என பட்டாசு வெடிக்க தடை கோரி பல வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. இந்த சுற்றுசூழல் விதிகளில் இருந்து விலக்கு அளிக்கவேண்டும் என கூறி பட்டாசு உரிமையாளர்கள் நடத்தி வரும் போராட்டம் 7வது நாளாகத் தொடர்கிறது. சுமார், 950 பட்டாசு ஆலைகள் […]

#Sivakasi 2 Min Read
Default Image

அரசியலில் டிடிவி தினகரன் ஒரு எல்.கே.ஜி. ஸ்டுடென்ட் ; தினகரனை கலாய்த்த ஓபிஎஸ்…!

அஇஅதிமுகவின் வரலாறு, தியாகம் தினகரனுக்குத் தெரியாது.துரோகம் செய்ததால் கட்சியில் இருந்து நீக்கி வைக்கப்பட்டவர் இன்று எங்களை துரோகிகள் எனக் கூறுகிறார். முதலமைச்சராவதற்கு சதித்திட்டம் தீட்டியதாலேயே 2008ல் தினகரனை மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் வெளியேற்றினார். அஇஅதிமுகவில் நான் சேர்ந்து 19 ஆண்டுகள் பணியாற்றியிருந்தபோது தான், தினகரன் கட்சியில் சேர்ந்து தனது எல்.கே.ஜி.யைத் தொடங்கியிருந்தார் என தினகரனை கலாய்த்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.. என்ன சார் நீங்களே இப்புடி பொய் சொல்லலாமா pic.twitter.com/lUOZSRtEN1 — RP (@andprabhu) […]

#ADMK 2 Min Read
Default Image
Default Image

நங்கள் எந்த சோதனைகளையும் வீழ்த்தி வெற்றி கண்டு சாதனைகளாக மாற்றியுள்ளோம்; துணைமுதல்வா் ஓபிஎஸ்

திண்டுக்கல்: திமுக டெபாசிட்டை இழந்து பரிதாபமாக நிற்கிறது.இனிமேல் வேறு எந்த தேர்தல் வந்தாலும் திமுக தேறாது என மதுரையிலிருந்து ஒரு குரல் வருகிறது அதுதான் அழகிரி எனவும் நங்கள் எந்த சோதனைகளையும் வீழ்த்தி வெற்றி கண்டு சாதனைகளாக மாற்றியுள்ளோம் என மாண்புமிகு துணைமுதல்வா் ஓபிஎஸ் அவா்கள் தெரிவித்துள்ளார்.

#ADMK 1 Min Read
Default Image

நச்சு ஆலைகளால் ஏற்படும் பாதிப்பு குறித்த குறும்படம் வெளியீடு….!!!

நச்சு அலைகளால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதை வலியுறுத்து குறும்படம் வெளியிடப்பட்டுள்ளதாக வணிகர் சங்க தலைவர் பேட்டியளித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய வணிகர் சங்கத்தலைவர் வெள்ளையன், போபாலில் ஏற்பட்டது போன்ற பாதிப்பு நாட்டில் வேறெங்கும் ஏற்படக்கூடாது. நச்சு அலைகளால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்பட கூடாது என்றும் தெரிவித்துள்ளார். மேலும் எல்லாருக்கும் விழிப்புணர்வு ஏற்படும் வகையில் குறும்படம் வெளியிடப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.

tamilnews 2 Min Read
Default Image

ஜனநாயக போரில் நமது படையும் போட்டியிடும் !ரஜினிகாந்த்…..

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் கடந்த 5 நாட்களாக பல்வேறு மாவட்ட ரசிகர்களை சந்தித்து, புகைப்படம் எடுத்த நடிகர் ரஜினிகாந்த், இன்று தனது அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பை வெளியிட உள்ளதாக அறிவித்திருந்தார். இதையடுத்து, ராகவேந்திரா திருமண மண்டபத்தின் உள்ளே சென்னை ரசிகர்கள் குவிந்திருந்தனர். திருமண மண்டபத்துக்கு வெளியிலும் பல ஊர்களைச் சேர்ந்த ரசிகர்கள், ரசிகர் மன்ற கொடியை ஏந்தியபடி உற்சாகத்துடன் காணப்பட்டனர். இதனிடையே, சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் இருந்து ராகவேந்திரா திருமண […]

#Politics 8 Min Read
Default Image

ரஜினி அரசியலுக்கு வந்தால் அவருக்கு முதல் எதிரி நாங்கள் தான்!

தமிழர் மண்ணை தமிழரே ஆள வேண்டும்.ரஜினியை கடுமையாக எதிர்த்து அரசியல் செய்வோம்..அரசியலில் எது சரியில்லை என ரஜினி தெளிவாக கூற வேண்டும்.நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர நடிகரும், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளருமான சீமான் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ரஜினிகாந்த் தனது இனத்தையே மாற்றி ஏமாற்ற முயற்சிப்பதாகவும் அவர் சாடியுள்ளார். source: dinasuvadu.com

#Chennai 1 Min Read
Default Image

69 மீனவர்கள் இலங்கை சிறையிலிருந்து விடுவிக்க பட்டனர் : இன்று காரைக்கால் கடற்கரைக்கு வந்து சேர்ந்தனர்

இலங்கை கடற்படைகளால் தமிழக மீனவர்கள் பலர் துன்புறுத்த படுகின்றனர். அவ்வபோது, அவர்கள் கைது செய்யபடுவதும் பிறகு விடுவிக்க படுவதும். இந்நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த மீனவர்கள் 69 பேர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். அவர்கள் டிசம்பர் 28,29ஆம் தேதிகளில் விடுவிக்கப்பட்டனர். சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட அனைவரும் இன்று காரைக்கால் கடலில் வந்து சேர்ந்தனர். source : dinasuvadu.com

#Politics 2 Min Read
Default Image

நான் அரசியலுக்கு வருவது உறுதி; தனிக்கட்சி தொடங்கி 234 தொகுதிகளிலும் போட்டி: ரஜினி

நான் அரசியலுக்கு வருவது உறுதி. இது காலத்தின் கட்டாயம். வரும் சட்டப்பேரவை தேர்தலில்  தனிக்கட்சி ஆரம்பித்து தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளிலும் போட்டியிட முடிவு செய்துள்ளார்  நடிகர் ரஜினிகாந்த். சென்னையில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் தனது ரசிகர்களை அவர் சந்தித்து வருகிறார். 6-வது நாள் சந்திப்பான இன்று அரசியல் நிலைப்பாடு குறித்து ரஜினி பேசியதாவது: அரசியலுக்கு வர பயம் இல்லை. ஊடகங்கள் பார்த்துதான் பயம். பெரிய பெரிய ஜாம்பவான்கள் எல்லாம் ஊடகங்களைப் பார்த்து பயப்படுகிறார்கள். திணறுகிறார்கள். […]

#Chennai 6 Min Read
Default Image

சீல் வைக்கப்பட்ட மர்ம அறைகள் திறப்பு-போயஸ் கார்டன் இல்லத்தில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றல்…!!

  போயஸ் கார்டனில் வருமானவரித்துறையினரால் சீல் வைக்கப்பட்ட 2 அறைகள் இன்று திறக்கப்பட்டுள்ளன. போயஸ் தோட்ட இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றுவதற்கான முயற்சியில் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் முதற்கட்டமான பணிகள் இன்று காலை 7.30 மணியிலிருந்து நடைபெற்று வந்தன.இப்பணியில் மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர் மற்றும் காவல்துறை, மாநகராட்சி, வருவாய்த்துறை, வருமானவரித்துறை அதிகாரிகள் என 100க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். தற்போது, பூட்டப்பட்டிருந்த ஜெயலிலதா மற்றும் பூங்குன்றன் அறைகள் இன்று திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் திறக்கப்பட்ட அந்த அறைகளில் […]

#ADMK 3 Min Read
Default Image

யானைகள் முகாமிட்டுளதால் ஓசூர் பகுதி மக்களுக்கு எச்சரிக்கை

வனப்பகுதிகளை ஆக்கிரமித்து கட்டிடங்களை காட்டியதால், வனவிலங்குகள் காட்டுபகுதியை விட்டு ஊருக்குள் வருவது சகஜமாகிவிட்டது. அதேபோல் சமீபத்தில், ஓசூர் சானமாவு வனபகுதியில் கட்டு யானைகள் முகமிட்டுள்ளதால் வணபகுதிய ஒட்டிய கிராமங்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அந்த இடங்கள் என்னவென்றால், சானமாவு, பீர்ஜேபள்ளி, ஆழியாளம், ராமாபுரம், பாத்தகோட்டா உள்ளிட்ட கிராமங்களுக்கு மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும், யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என எச்சரிக்கை வனத்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. source : dinasuvadu.com

elephant 2 Min Read
Default Image