நமக்கு ஜல்லிகட்டை பற்றிய அறிமுகம் தேவை இல்லை .ஏனென்றால் தமிழனின் வீர விளையாட்டுகலில் ஒன்றான ஜல்லிகட்டு மிகவும் சிறப்பு வாய்ந்தது.தமிழனின் வீரத்தை பறைசாற்றும் விளையாட்டு ஆகும் . ஆனால் ஜல்லிகட்டு தான் கடந்த ஆண்டின் தொடக்கத்தில் உலகம் முழுவதும் பேசப்பட்ட வார்த்தை…தை புரட்சியின் மூலம் மீட்கப்பட்ட தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிகட்டுக்கு, மதுரை மாவட்டத்தில் உள்ள அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு புகழ்பெற்றவை. இங்கு தான் வாடிவாசல் அமைத்து ஜல்லிகட்டு போட்டிகள் ஆண்டுதோறும் நடைபெற்று வருகின்றது. பொங்கல் திருநாள் […]
நம் வீட்டை சுற்றியுள்ள குப்பைகளை அகற்றி தெருவில் உள்ள குப்பை தொட்டியில் கொட்டுவோம். மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் அவற்றை சேகரித்து மக்கும் குப்பை மக்கா குப்பை என பிரித்து அவற்றை அப்புறபடுத்துவர். இதேபோல் தூத்துக்குடி மாநகராட்சியிலும் குப்பைகளை அகற்றி குப்பை கிடங்குகளில் கொட்டி அகற்றி வருகிறது. இதனை மக்கும் மக்கா குப்பை என பிரிக்க தூத்துக்குடியில் குப்பை கிடங்கு அமைக்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனால், தூத்துக்குடி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான கீதாஜீவன் இதனை எதிர்த்துள்ளார். […]
காஷ்மீரில் பனிச்சரிவில் சிக்கி இறந்த ராணுவ வீரர் உடல் இன்று அவரது சொந்த ஊரான தூத்துக்குடியில் ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. காஷ்மீர் மாநிலத்தில் பணியில் ஈடுபட்டிருந்தபோது பனிச் சரிவில் சிக்கி தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் இறந்தார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள சாத்தூரப்ப நாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவருடைய மகன் ராஜேஷ் கண்ணன்(33). இவர் கடந்த 14 ஆண்டுகளாக இந்திய ராணுவத்தில் காஷ்மீர் பகுதியில் பணியாற்றி வந்தார். கடந்த 3 […]
பசுமை வழிச்சாலையில் உள்ள முதலமைச்சர் இல்லத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மருத்துவ தேர்வு வாரியம் நடத்திய தேர்வில் தேர்ச்சி பெற்ற 105 பேருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பணி நியமன ஆணைகளை வழங்கினார். பின்னர் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், மருத்துவர்கள் சேவை மனப்பான்மையுடன் செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். source: dinasuvadu.com
ஆளுநர் ஆய்வு நடைமுறையில் இல்லாத ஒன்று.ஆனால் தமிழக முதலமைச்சர், துணை முதலமைச்சர் இருவரும் தங்களது பதவியை காப்பாற்றுவதிலேயே குறியாக உள்ளனர். இனி வரும் தேர்தலில் ஈபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் சொந்த தொகுதியில் கூட வெற்றி பெற முடியாது.மேலும் சட்டப்பேரவையில் கதிராமங்கலம், நெடுவாசல் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு குரல் கொடுப்பேன்.நடந்து முடிந்த ஆர்.கே.நகரில் திமுக முறையாக வாக்கு சேகரித்து இருந்தால் அதிமுக டெபாசிட் இழந்திருக்கும்.2ஜி வழக்கில் சிபிஐ சரியாக செயல்படாததால் ஆ.ராசா, கனிமொழி விடுதலையானார்கள் என செய்தியாளர்களிடம் தெரிவித்தார் ஆர்கே.நகர் எம்.எல்.ஏ டிடிவி […]
கவிஞர், ஓவியர், எழுத்தாளர், “குதிரை வீரன் பயணம் சிற்றிதழின் ஆசிரியர், மொழிபெயற்ப்பாளர் என பன்முக ஆளுமையான யூமா வாசுகிக்கு 2017 ஆம் ஆண்டின் சிறந்த மொழிபெயற்ப்பிற்க்கான சாகித்ய அகாதமி விருது ”கசாக்கின் இதிகாசம்” என்னும் நூலினை மொழிபெயற்ப்பு செய்தமைக்காக கிடைத்திருக்கிறது. பாரதி புத்தகாலயம் நடத்திய புத்தகங்களுடன் புத்தாண்டு கொண்டாட்டம் நிகழ்வில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் ஜி. ராமகிருஷ்ணனும், மூத்த எழுத்தாளர் சா. கந்தசாமியும் யூமாவை கவுரவித்தார்கள்.
நெல்லை மாவட்டம் பாவூர் சத்திரம் கீழ்ப்பாவூர் பகுதியில், மு.க ஸ்டாலினுக்கு எதிராக அழகிரி ஆதரவாளர்கள் ஒட்டிய போஸ்ட்டர்களால் திமுகவினர் மத்தியில் பரபரப்பு ஏற்ப்பட்டுள்ளது. கடந்த மாதம் நடைபெற்ற ஆர்கே.நகர் இடைத்தேர்தலில் திமுகவின் மிகப்பெரிய தோல்வியை மு.கருணாநதியின் மூத்த மகனும்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் மு.க.அழகிரி மற்றும் அவரது பேரனும் முன்னாள் மத்திய அமைச்சருமான தயாநிதிமாறன் கடுமையாக விமர்சித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்திவரும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் முன்பு இளவரசியின் மகள் கிருஷ்ணப்பிரியா நேரில் ஆஜராகியுள்ளார். டி.டி.வி.தினகரன் ஆதரவளரான வெற்றிவேல் ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான வீடியோவை வெளியிட்ட போது அதற்கு கிருஷ்ணப்பிரியா கண்டனம் தெரிவித்தார். அந்த வீடியோவை எடுத்தது சசிகலா என்று தெரிவித்த கிருஷ்ணப்பிரியா, ஜெயலலிதா தனக்குப் பின்னால் இருக்கும் மருத்துவக் கருவிகளைப் பார்ப்பதற்காக அந்த வீடியோ எடுக்கப்பட்டதாகத் தெரிவித்தார். இன்னும் பல வீடியோக்கள் இருப்பதாகவும் அவர் கூறினார். கிருஷ்ணப்பிரியாவுக்கு வீடியோ குறித்தும் ஜெயலலிதா சிகிச்சை […]
பெங்களூரில் உள்ள பரப்பனஅக்ரகார சிறையில் ஊழல் குற்றசாட்டில் தண்டனை பெற்று அடைக்கப்பட்டுள்ள சசிகலா மவுனவிரதம் இருப்பதால் அவர் சார்பாக வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் ஆஜராக உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்நிலையில் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் சசிகலா சார்பாக அவரது வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் ஆஜராக உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
சென்னை கிரீன் வேஸ் சாலையில் உள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில், சித்தா மற்றும் இந்திய மருத்துவம் சார்ந்த மருத்துவர்கள் 105 பேருக்கு பணி நியமன ஆணையை முதலமைச்சர் பழனிசாமி வழங்கினார்.இந்த விழாவில் சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதார துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.
இந்த 2018ம் ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை தச்சங்குறிச்சியில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.இங்கு நடைபெற்ற ஜல்லிக்கட்டில் சுமார் 300க்கும் மேற்பட்ட காளைகள், அப்போட்டியில் சுமார் 100க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். முதலமைச்சர் அறிவுரையின்படி தமிழகத்தில் இந்தாண்டு தடையின்றி ஜல்லிக்கட்டு நடைபெறும் என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா ஆம்பலாபட்டு தெற்கு குடிக்காடு கிராமத்தில் தலித் இளைஞர்கள் ஞாயிறு அன்று மேடை ஒளி,ஒலி அமைத்து புத்தாண்டை கொண்டாடினர். இதை பொறுத்துக் கொள்ள முடியாத ஆம்பலாபட்டு வடக்கு கிராமத்தை சேர்ந்த ஆதிக்க சாதி இளைஞர்கள் கொடிய ஆயுதங்களோடு தலித் குடியிருப்பு பகுதியில் புகுந்து கொலைவெறி தாக்குதல் நடத்தியதோடு, வீடுகள், மோட்டார் சைக்கிள்களை உடைத்து வீசி எறிந்து விட்டு சென்றுள்ளனர். குடிதண்ணீர் பைப்புகளையும் ,மின் இணைப்புகளையும் உடைத்து வீசியுள்ளனர்.தலித் மக்கள் வீடுகளை அடைத்து கொண்டும், […]
தமிழகத்தில் கடந்த 2017 ஆண்டின் கடைசி நாளான டிசம்பர்.31 மற்றும் புத்தாண்டு முதல் தினமான ஜனவரி.1 ஆகிய இரு தினங்கள் மட்டுமே சுமார் ரூ.211 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது. இதனை கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் மதுபானங்களின் விலை 10% முதல் 12% வரை அதிகரித்த போதிலும், ரூ.36 கோடிக்கு கூடுதல் விற்பனை நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் ரஜினிகாந்த் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட போவதாக அறிவித்துள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் பெரும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இந்நிலையில் அவரது ரசிகர்கள் மட்டுமல்லாது ஒட்டுமொத்த தமிழக மக்களின் மன நிலை என்ன என்பதை தெரிந்துக்கொள்ள கருத்துக்கணிப்பினை நேற்று ஒரு தனியார் செய்தி நிறுவனம் நடத்தியது. அதன் முடிவுகள் இதோ 40% ரஜினி நிச்சயம் சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியை பெறுவார் 33% கடும் தோல்வியடைந்து, டெபாசிட்டை இழப்பார் 17& பெரும்பான்மை பெறாமல் எதிர்கட்சியாகி, மக்களுக்கு […]
புத்தாண்டை முன்னிட்டு, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி,முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா ஆகியோர், திமுக தலைவரும், தங்கள் தந்தையுமான கருணாநிதியை சந்தித்து வாழ்த்து பெற்றனர். நண்பகலில்கருணாநிதியை சந்தித்து ஸ்டாலின் வாழ்த்து பெற்றார். பின்னர் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, தனது தாய் ராஜாத்தி அம்மாளுடன் சென்று கருணாநிதியை சந்தித்து ஆசி பெற்றனர். source: dinasuvadu.com
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே தட்டன்கோவிலில் உள்ள குலதெய்வம் கோயிலில் குடும்பத்துடன் வழிபாடு நடத்துவதற்காக அவர் அங்கு சென்றார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த தினகரன், சட்டப்பேரவையில் தான் என்ன பேச போகிறேன் என்பதை பொறுத்திருந்து பார்க்குமாறு கூறினார்.அதிமுகவினர் தோல்வி பயத்தால் ஏதேதோ பேசிக் கொண்டிருப்பதாக ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ. டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்… source: dinasuvadu.com
ஆர்.கே.நகரில் அனைத்து நலத்திட்டங்களும் செயல்படுத்தப்படும் என ஜெயக்குமார் உறுதியளித்துள்ளார். இந்த ஆண்டு இறுதிக்குள் 6,500 விசைப்படகுகளில் டிரான்ஸ்மீட்டர் கருவி பொருத்தப்படும். மேலும் ஆன்மீக அரசியல் குறித்து ரஜினிதான் விளக்க வேண்டும் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு எப்போது எடுத்தாலும் தயாராக இருக்கிறோம் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் சென்னை ஆர்.கே.நகரில் பேட்டியளித்துள்ளார். source: dinasuvadu.com
புத்தாண்டையொட்டி திருச்செந்தூர் முருகன் கோவிலில் அதிகாலை முதலே சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. லட்சக்கணக்கன பக்தர்கள் கடலில் நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை அடுத்த திரு உத்தரகோசமங்கை கோயிலில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு ஒரே மரகதக்கல் நடராஜர் சிலையில் சந்தனக் காப்பு அகற்றப்பட்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன. ஒலி – ஒளியால் மரகதக் கல் சேதம் அடையும் என்பதால், ஆண்டு முழுவதும் சந்தனம் பூசப்பட்டு […]
வடகிழக்கு பருவமழை வழக்கத்தை விட இந்த வருடம் குறைவாகவே மழையளவு பதிவாகியுள்ளது. டிசம்பர் மாதம் மழை பெய்யும் என எதிர்பார்த்தால் மழை பெய்யவில்லை எனவே இந்தாண்டு மழை அளவு குறைந்துள்ளது. இந்தாண்டு 89% முதல் 110% மழைபெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. ஆனால், இந்தாண்டு டிசம்பர் 4 க்கு அப்புறம் தமிழகத்தின் மழை பெய்யவில்லை அதனால் தமிழகத்தில் வழக்கத்தை விட 9% குறைவாகவே மழை பெய்து உள்ளது. source : dinasuvadu.com
நம் நாட்டில் நல்லது என்றாலும் கெட்டது என்றாலும் பட்டாசு வெடிப்பது அனைவருக்கும் விருப்பமான செயல். அதனை நம்பி பல லட்சம் உழைப்பாளர்கள் தங்கள் வாழ்வாதிரமாக கொண்டுள்ளனர். ஆனால் பட்டாசு வெடிப்பதினால் சுற்று சூழல் மாசுபடுகிறது. என பட்டாசு வெடிக்க தடை கோரி பல வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. இந்த சுற்றுசூழல் விதிகளில் இருந்து விலக்கு அளிக்கவேண்டும் என கூறி பட்டாசு உரிமையாளர்கள் நடத்தி வரும் போராட்டம் 7வது நாளாகத் தொடர்கிறது. சுமார், 950 பட்டாசு ஆலைகள் […]