தமிழ்நாடு

திருப்பூர், கரூர் மாவட்டங்களில் 54,637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் அமராவதி அணையில் இருந்து கூடுதல் நீர் திறப்பு…!

திருப்பூர், கரூர் மாவட்டங்களில் 54,637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் அமராவதி அணையில் இருந்து பழைய, புதிய ஆயக்கட்டு பாசத்திற்கு கூடுதல் நீர் திறக்கப்பட உள்ளது.இன்று முதல் வரும் 31ம் தேதி வரையில் இடைவெளி விட்டு அணையைத் திறக்க தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

#Karur 1 Min Read
Default Image

வேதாரண்யம் கடற்கரையில் ஒதுங்கிய ஆளில்லா மர்ம படகு…!!

நாகை மாவட்டத்தில் வேதாரண்யம் அருகே உள்ள மணியன் தீவு கடற்கரையில் இலங்கையை சேர்ந்த பைபர் படகு ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. இப்படகானது கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட படகா என கடலோர பாதுகாப்பு குழும போலீசார் தீவிரமாக விசாரணை செய்துவருகின்றனர்.

fibre boat 1 Min Read
Default Image

கோவில்பட்டி அருகேயுள்ள எட்டையாபுரத்தில் ஆசிரியர் வேலை தருவதாக கூறி ரூ.13 லட்சம் மோசடி..!!

தூத்துக்குடி : கோவில்பட்டி அருகேயுள்ள எட்டையாபுரத்தில் ஆசிரியர் வேலை தருவதாக கூறி ரூ.13 லட்சம் மோசடி செய்துள்ளனர்.ஆகவே சம்மந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்ட ஆசிரியர் ஹரிணிகாஸ்ரீ பள்ளி முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

#Thoothukudi 1 Min Read
Default Image

புத்தாண்டு அன்று குடிப்போதையில் வாகனம் ஒட்டி பிடிபட்ட 125 பேருக்கு பாஸ்போர்ட் பெற தடையில்லா சான்று கிடைக்காது…!!

சென்னையில் புத்தாண்டு அன்று குடிப்போதையில் வாகனம் ஒட்டி பிடிபட்ட 125 பேருக்கு பாஸ்போர்ட் பெற தடையில்லா சான்று கிடைக்காது என தமிழக  போக்குவரத்து காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. குடிபோதையில் வாகனம் ஓட்டினால் பாஸ்போர்ட் கிடைக்காது என புத்தாண்டுக்கு முன்பாகவே காவல்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.  

#Chennai 1 Min Read
Default Image

மதுரை திருப்பரங்குன்றத்தில் MCA இரண்டாமாண்டு பயிலும் மாணவி அமலா இரயிலில் அடிபட்டு பலி.

மதுரை திருப்பரங்குன்றம் அருகில் உள்ள தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் MCA பட்டப்படிப்பு இரண்டாமாண்டு பயிலும் மாணவி அமலா இரயிலில் அடிபட்டு பலியானார். மேலும் இறந்த அம்மாணவியின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.மேலும் அம்மாணவியின் இறந்த பின்புலம் குறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

#Accident 1 Min Read
Default Image

ஊபர் மற்றும் ஓலா நிறுவனங்களை கண்டித்து தொழிற்சங்கங்கள் போராட்டம்..!

ஊபர் மற்றும் ஓலா ஓட்டுநர்களின் அனைத்து சங்கங்களும் ஒன்றிணைந்து அந்த 2 நிறுவனங்களின் நடவடிக்கைகளையும் கண்டித்து இன்று வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். மீட்டர் கட்டணம், நிலையான வருமானத்திற்கு அரசு வழி செய்யவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி இன்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

#OLA 1 Min Read
Default Image

திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்கிறார் நடிகர் ரஜினிகாந்த்!அடுத்தது என்ன ?

அரசியல் கட்சி தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ள நிலையில் திமுக தலைவர் கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்திக்கவுள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.. திமுக தலைவர் கருணாநிதியை இன்று மாலை நடிகர் ரஜினிகாந்த் சந்திக்க உள்ளதாக தகவல். கட்சி தொடங்குவதற்கான பணிகளில் ரஜினி மும்மரமாக ஈடுபட்டுள்ள நிலையில் சந்திப்பு நடக்கிறது.உடல்நலம் குறித்து விசாரிக்கவும், ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவிக்கவும் கருணாநிதியை ரஜினி சந்திக்கிறார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.ஏற்கனேவே அவர் ஆளுங்கட்சியை விமர்சித்த நிலையில் திமுக தலைவர் கருணாநிதியை சந்திப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது …. […]

#Chennai 2 Min Read
Default Image

ஓகி புயலில் சிக்கி இறந்து போன மற்றொரு மீனவரின் உடல் ஒரு மாத காலத்திற்கு பின்பு கண்டுபிடிப்பு…

ஒக்கி புயலில் கேரள கடலில் சிக்கிய 6 தூத்துக்குடி மீனவர்களில் மீனவர் ஜெகன் மட்டும் 2 நாட்கள் ஆழ்கடலில் மரண போராட்டம நடத்திய நிலையில் மீட்கப்பட்டு கேரள அரசின் சிறப்பான சிகிச்சையால் மீட்கப்பட்டார். தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த ஜுடு உடல் விழிஞ்சம் கடலில் கண்டெடுக்கப்பட்டு அடையாளம் காணப்பட்டு கேரள அரசின் துணையோடு மார்க்சிஸ்ட் கட்சி தூத்துக்குடி மாவட்ட செயலாளர் தலைமையிலான குழுவின் உதவியால் தூத்துக்குடி கொண்டு வரப்பட்டு டிச 9. ல் அடக்கம் செய்யப்பட்டது. நேற்று இரவு […]

#Thoothukudi 3 Min Read
Default Image

சண்டையில் சடலத்தை மாற்றி கொடுத்த மதுரை அரசு மருத்துவமனை ஊழியர்கள்

ஆங்கில புத்தாண்டு அன்று மதுரையில் அன்னலெட்சுமி என்ற பெண்மணி சாலை விபத்தில் உயிரிழந்தார். அவரின் சடலத்தை கேட்டு சென்ற அவரது உறவினர்களிடம் அரசு மருத்துவமனை ஊழியர்கள் லஞ்சம் கேட்டனர். மருத்துவமனை ஊழியர்கள் லஞ்சம் கேட்டதால் ஊழியர்களுக்கும் இறந்தவரின் உறவினர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் கோபமடைந்த ஊழியர்கள் ஊழியர்கள் அன்னலெட்சுமியின் சடலத்துக்கு பதிலாக வேறு ஒரு சடலத்தை கொடுத்துள்ளனர். source : dinasuvadu.com

govt hospital 2 Min Read
Default Image

தாய்பால் கொடுப்பதை கட்டாயமாக்க சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கேள்வி

தாய்ப்பால் கொடுப்பதை கட்டாயமாக்கபடவேண்டும் எனவும் பேறுகால விடுப்பின் போது குழந்தைகளுக்கு தாய்பால் கொடுக்க வேண்டும் எனவும் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி கிருபாகரன் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கை விசாரிக்கையில் உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் தாய்பால் கொடுப்பதை ஏன் கட்டாயமாக்க கூடாது எனவும், மேலும், பேறுகால விடுப்பின் போது குழந்தைகளுக்கு தாய்பால் கொடுக்கும் பழக்கம் ஏன் கட்டாயபடுத்தபடகூடாது. எனவும் கேள்வி எழுப்பினார். source : dinasuvadu.com

#Chennai 2 Min Read
Default Image

நாளை வேலைநிறுத்தம்!ஓலா, ஊபர் நிறுவனங்களின் நடவடிக்கைகளை கண்டித்து நாளை வேலைநிறுத்த போராட்டம்….

ஓலா, ஊபர் நிறுவனங்களின் நடவடிக்கைகளை கண்டித்து நாளை வேலைநிறுத்த போராட்டம் அறிவித்துள்ளது. ஓலா, ஊபர் ஓட்டுநர்களின் அனைத்து சங்கங்களும் போராட்டம் அறிவித்துள்ளது. மீட்டர் கட்டணம், நிலையான வருமானத்திற்கு அரசே வழி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி, ஓலா, ஊபர் ஓட்டுநர்களின் அனைத்து சங்கங்களும் ஒன்றிணைந்து நாளை வேலை நிறுத்தப் போராட்டம்  அறிவித்துள்ளது.ஓலாவால்  மற்ற ஓட்டுனர்கள் பாதிப்படைவதால் அதை கண்டித்து போராட்டம் … CITU உட்பட 5 மோட்டார் வாகன தொழிலாளர்கள் சங்கம் அறிவிப்பு… source: dinasuvadu.com

#Chennai 2 Min Read
Default Image

பென் டிரைவை ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் சமர்ப்பித்துள்ளேன்!

முன்னால் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தில் ஒவ்வொருவராகா ஆஜராகி விளக்கம் அளித்து வரும் நிலையில் தற்போது  தினகரன் சார்பில் வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் ஆஜரானார்.ஆஜரானா பின்னர் அவர் கூறியது, என்னிடம் கொடுக்கப்பட்ட பென் டிரைவை ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் சமர்ப்பித்துள்ளேன்.வெற்றிவேல் அவரிடம் இருந்த ஆவணங்களை விசாரணை ஆணையத்தில் ஒப்படைத்துள்ளார் – வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன்.. source: dinasuvadu.com

#ADMK 2 Min Read
Default Image

புரட்சியின் மூலம் மீட்கப்பட்ட தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிகட்டு! பயிற்சியில் காளைகள் ….ஒரு தொகுப்பு…

நமக்கு ஜல்லிகட்டை பற்றிய அறிமுகம் தேவை இல்லை .ஏனென்றால் தமிழனின் வீர விளையாட்டுகலில் ஒன்றான ஜல்லிகட்டு மிகவும் சிறப்பு வாய்ந்தது.தமிழனின் வீரத்தை பறைசாற்றும் விளையாட்டு ஆகும் . ஆனால்  ஜல்லிகட்டு தான்  கடந்த ஆண்டின் தொடக்கத்தில் உலகம் முழுவதும் பேசப்பட்ட வார்த்தை…தை புரட்சியின் மூலம் மீட்கப்பட்ட தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிகட்டுக்கு,  மதுரை மாவட்டத்தில் உள்ள அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு புகழ்பெற்றவை. இங்கு தான் வாடிவாசல் அமைத்து ஜல்லிகட்டு போட்டிகள் ஆண்டுதோறும் நடைபெற்று வருகின்றது. பொங்கல் திருநாள் […]

#Madurai 6 Min Read
Default Image

தூத்துக்குடியில் குப்பை கிடங்கு அமைக்க எம்.எல்.ஏ கீதாஜீவன் எதிர்ப்பு

நம் வீட்டை சுற்றியுள்ள குப்பைகளை அகற்றி தெருவில் உள்ள குப்பை தொட்டியில் கொட்டுவோம். மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் அவற்றை சேகரித்து மக்கும் குப்பை மக்கா குப்பை என பிரித்து அவற்றை அப்புறபடுத்துவர். இதேபோல் தூத்துக்குடி மாநகராட்சியிலும் குப்பைகளை அகற்றி குப்பை கிடங்குகளில் கொட்டி அகற்றி வருகிறது. இதனை மக்கும் மக்கா குப்பை என பிரிக்க தூத்துக்குடியில் குப்பை கிடங்கு அமைக்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனால், தூத்துக்குடி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான கீதாஜீவன் இதனை எதிர்த்துள்ளார். […]

#ADMK 2 Min Read
Default Image

காஷ்மீரில் பனிச்சரிவில் சிக்கி இறந்த தூத்துக்குடியைச் சேர்ந்த ராணுவ வீரர் உடல் ராணுவ மரியாதையுடன் அடக்கம்…!

காஷ்மீரில் பனிச்சரிவில் சிக்கி இறந்த ராணுவ வீரர் உடல் இன்று அவரது சொந்த ஊரான தூத்துக்குடியில் ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. காஷ்மீர் மாநிலத்தில் பணியில் ஈடுபட்டிருந்தபோது பனிச் சரிவில் சிக்கி தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் இறந்தார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள சாத்தூரப்ப நாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவருடைய மகன் ராஜேஷ் கண்ணன்(33). இவர் கடந்த 14 ஆண்டுகளாக இந்திய ராணுவத்தில் காஷ்மீர் பகுதியில் பணியாற்றி வந்தார். கடந்த 3 […]

#Thoothukudi 3 Min Read
Default Image

மருத்துவர்கள் 105 பேருக்கு முதலமைச்சர் பழனிசாமி பணி நியமன ஆணை வழங்கினார்!

  பசுமை வழிச்சாலையில் உள்ள முதலமைச்சர் இல்லத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மருத்துவ தேர்வு வாரியம் நடத்திய தேர்வில் தேர்ச்சி பெற்ற 105 பேருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பணி நியமன ஆணைகளை வழங்கினார். பின்னர் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், மருத்துவர்கள் சேவை மனப்பான்மையுடன் செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். source: dinasuvadu.com

#ADMK 2 Min Read
Default Image

ஆளுநர் ஆய்வு நடைமுறையில் இல்லாத ஒன்று;ஆர்கே.நகர் எம்.எல்.ஏ  டிடிவி தினகரன்

ஆளுநர் ஆய்வு நடைமுறையில் இல்லாத ஒன்று.ஆனால் தமிழக முதலமைச்சர், துணை முதலமைச்சர் இருவரும் தங்களது பதவியை காப்பாற்றுவதிலேயே குறியாக உள்ளனர். இனி வரும் தேர்தலில் ஈபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் சொந்த தொகுதியில் கூட வெற்றி பெற முடியாது.மேலும் சட்டப்பேரவையில் கதிராமங்கலம், நெடுவாசல் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு குரல் கொடுப்பேன்.நடந்து முடிந்த ஆர்.கே.நகரில் திமுக முறையாக வாக்கு சேகரித்து இருந்தால் அதிமுக டெபாசிட் இழந்திருக்கும்.2ஜி வழக்கில் சிபிஐ சரியாக செயல்படாததால் ஆ.ராசா, கனிமொழி விடுதலையானார்கள் என செய்தியாளர்களிடம் தெரிவித்தார் ஆர்கே.நகர் எம்.எல்.ஏ  டிடிவி […]

#OPanneerselvam 2 Min Read
Default Image

சாகித்ய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர் யூமா வாசுகிக்கு பாராட்டு…!!

கவிஞர், ஓவியர், எழுத்தாளர், “குதிரை வீரன் பயணம் சிற்றிதழின் ஆசிரியர், மொழிபெயற்ப்பாளர் என பன்முக ஆளுமையான யூமா வாசுகிக்கு 2017 ஆம் ஆண்டின் சிறந்த மொழிபெயற்ப்பிற்க்கான சாகித்ய அகாதமி விருது ”கசாக்கின் இதிகாசம்” என்னும் நூலினை மொழிபெயற்ப்பு செய்தமைக்காக கிடைத்திருக்கிறது. பாரதி புத்தகாலயம் நடத்திய புத்தகங்களுடன் புத்தாண்டு கொண்டாட்டம் நிகழ்வில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் ஜி. ராமகிருஷ்ணனும், மூத்த எழுத்தாளர் சா. கந்தசாமியும் யூமாவை கவுரவித்தார்கள்.

sahithiya award 2 Min Read
Default Image

நெல்லையில் மு.க ஸ்டாலினுக்கு எதிராக அழகிரி ஆதரவாளர்கள் ஒட்டிய போஸ்ட்டர்களால் திமுகவினர் மத்தியில் பரபரப்பு…!!

நெல்லை மாவட்டம் பாவூர் சத்திரம் கீழ்ப்பாவூர் பகுதியில், மு.க ஸ்டாலினுக்கு எதிராக அழகிரி ஆதரவாளர்கள் ஒட்டிய போஸ்ட்டர்களால் திமுகவினர் மத்தியில் பரபரப்பு ஏற்ப்பட்டுள்ளது. கடந்த மாதம் நடைபெற்ற ஆர்கே.நகர் இடைத்தேர்தலில் திமுகவின் மிகப்பெரிய தோல்வியை  மு.கருணாநதியின் மூத்த மகனும்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் மு.க.அழகிரி மற்றும் அவரது பேரனும் முன்னாள் மத்திய அமைச்சருமான தயாநிதிமாறன் கடுமையாக விமர்சித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

#DMK 2 Min Read
Default Image

நீதிபதி ஆறுமுகசாமி கமிசன் முன்பு இளவரசியின் மகள் கிருஷ்ணபிரியா ஆஜர்!

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்திவரும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் முன்பு இளவரசியின் மகள் கிருஷ்ணப்பிரியா நேரில் ஆஜராகியுள்ளார். டி.டி.வி.தினகரன் ஆதரவளரான வெற்றிவேல் ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான வீடியோவை வெளியிட்ட போது அதற்கு கிருஷ்ணப்பிரியா கண்டனம் தெரிவித்தார். அந்த வீடியோவை எடுத்தது சசிகலா என்று தெரிவித்த கிருஷ்ணப்பிரியா, ஜெயலலிதா தனக்குப் பின்னால் இருக்கும் மருத்துவக் கருவிகளைப் பார்ப்பதற்காக அந்த வீடியோ எடுக்கப்பட்டதாகத் தெரிவித்தார். இன்னும் பல வீடியோக்கள் இருப்பதாகவும் அவர் கூறினார். கிருஷ்ணப்பிரியாவுக்கு வீடியோ குறித்தும் ஜெயலலிதா சிகிச்சை […]

#ADMK 2 Min Read
Default Image