ஜெயலலிதா மரணம் குறித்து தற்போது விசாரணை ஆணையம் விசாரணை நடத்திவருகிறது. இதில் ஜெயலலிதாவுக்கு எம்பார்மிங் செய்த மருத்துவர் சுதா சேஷய்யனுக்கு சம்மன் அனுப்பபட்டதன் அடிப்படையில் அவர் நேற்று ஆஜாராகி விளக்கமளித்தார். இதில் அவர் எனக்கு டிசம்பர் 5 ம் தேதி இரவு 10.30 மணியளவில் போன் கால் வந்தது. ஜெயலலிதா இறந்த தகவலை சொல்லி உடல் கெட்டுப்போகாமல் இருக் எம்பார்மிங் செய்ய சொன்னார்கள். இதனால் நான் இரவு 11.40 மணிபோல மருத்துவமனைக்கு சென்றேன். அவருக்கு இரவு 12.20 […]
பொங்கல் பண்டிகை வருவதை ஒட்டி மாட்டு சந்தை தருமபுரி மாவட்டத்தில் மாட்டு வியாபார சந்தை நடந்தது. இந்த சந்தை அரூர் அருகே உள்ள கொபிநாதம்பட்டி கூட்டு ரோட்டில் வாரசந்தை நடைபெற்றது. இந்த சந்தையில் சுமார் 1500 மாடுகள் விற்பனைக்கு வந்ததாகவும், அவை அனைத்தும் நல்ல விலைக்கு விற்பனையானதாகவும், இந்த சந்தையில் 1 கோடி ரூபாய்க்கு மேல் வியாபாரம் ஆனதாகவும் வியாபாரிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். source : dinasuvadu.com
கன்னியாகுமரியில் கடந்த ஆண்டு கடைசியில் வந்த ஒகி புயலால் மக்கள் பெரிய பாதிப்புக்குள்ளகினர்.இதனால் குமரி மக்கள் இன்னும் அந்த தாக்கத்தில் இருந்து மீளவில்லை .எனவே கன்னியாகுமரி மாவட்டம் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கவும்,மீனவர்களின் கோரிக்கைகளுக்கு மத்திய,மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் பத்மநாபபுரம் சட்ட மன்ற உறுப்பினர் மனோதங்கராஜ் தலைமையில் தக்கலை அருகே புலியூர்க்குறிச்சி பகுதியில் 3வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர் .நிவாரணம் கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் எனவும் அறிவித்துள்ளார். source: dinasuvadu.com
ஆர்.கே. நகர் இடைதேர்தலில் தினகரன் வெற்றிபெற்றதில் இருந்து பல்வேறு கருத்துகள் உலாவி வருகின்றனர் .இந்நிலையில் தற்போது கமல்ஹாசன் அவரை குறித்து கருத்து கூறியிருந்த நிலையில் அமைச்சர் ஜெயக்குமாரும் கருத்து கூறியுள்ளார். கடன் சொல்லி ஓட்டு கேட்ட வரலாறு எங்கும் நடந்தது இல்லை என ஆர்.கே.நகரில் வெற்றி பெற்ற தினகரனை, அமைச்சர் ஜெயக்குமார் சாடியுள்ளார். ஆர்.கே.நகர் மக்கள் ரூ.10 ஆயிரம் கேட்டு தினகரனை தேடி வருவதாகவும் கூறினார். மக்களை நம்பியே நாங்கள் உள்ளோம், பணத்தை நம்பி இல்லை என்ற […]
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தாலுகாவிற்கு உட்பட்ட ஆத்தூரில் பிரபல மாதவன் காய்கறிகடையில் இன்று விற்பனைக்கு வைத்திருந்த காய்கறிகளில் விநாயகர் தோற்றம் கொண்ட கத்தரிக்காய் ஒன்று அதிசயமாக காணப்பட்டது. விநாயகரின் தோற்றம் இயற்கையாக அமைந்ததை வாடிக்கையாளர்கள் வியப்பாக பார்த்து செல்கின்றனர்.அதிசய விநாயகரை பொதுமக்கள் பார்வைக்கு வைத்திருப்பதாக மாதவன் கூறியுள்ளார்.ஏற்கனவே இவர் விநாயகர் பக்தர் என்பதும் குறிப்பிடத்தக்கது .
தஞ்சை சென்னம்பட்டியில் உள்ள போதை மறுவாழ்வு மைய காப்பக காவலாளி ஜோதிராமன் என்பவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.இந்த கொலையில் சம்மந்தப்பட்டவர்களாக காப்பகத்தில் அனுமதிக்கப்பட்டிருந்த அருண் பாலாஜி, அஜித்குமார், கார்த்திக், அர்ஷத் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் கரூர் மாவட்டம் இந்தியாவில் மிகவும் சுத்தமான மாவட்டங்களில் ஒன்று எனவும்,மாசில்லாத மாவட்டம் எனவும் மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டமான SwachhBharatஆல் அறிவிக்கப்பட்டுள்ளது
பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தமிழகத்தில் லோக் ஆயுக்தாசேவை பெறும் உரிமைச் சட்டம் கொண்டுவர தமிழக அரசை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்பாட்டத்தில் பேசிய பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் “லோக் ஆயுக்தா சிறப்பாக செயல்படும் ஒரே மாநிலம் கர்நாடகா.ஊழலை பெருக்குவது மட்டும் தான் தமிழக பினாமி அரசின் காதுகளில் விழும்.தமிழ்நாடு ஊழலின் வேட்டைக்காடாக மாறி வருகிறது” எனப் தமிழக அரசை விமர்சித்து பேசியுள்ளார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றிப்பெற்ற டிடிவி தினகரன் வாக்காளர்களுக்கு கடந்த இரண்டு நாட்களாக நன்றி சொல்லி வருகிறார். இன்று ஆர்.கே.நகரில் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரனிடம் கமல்ஹாசன் விமர்சனம் குறித்து கேட்கப்பட்டது. அப்போது அவர் கூறியதாவது: “வென்றவர்களை குறைச்சொல்கிறேன் என்கிற போர்வையில் கமல்ஹாசன் மக்களை சாடுகிறார். அவர் ஒரு நடிகராக இருக்கிறார். அரசியல் களம் தன்மை புரிந்து பேசுகிறாரா? புரியாமல் பேசுகிறாரா? எனத் தெரியவில்லை. விஷால் துணிச்சலாக தேர்தலில் குதித்தார். அவரை சதி செய்து போட்டியிடவிடவில்லை. இவர் கட்சி […]
நடிகர் சிம்புவின் மீது தொடர்ந்த வழக்கு மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது. தி பிளான்டிப் பாஸ்சன் மூவி மக்கேர்ஸ் சிம்புவிற்கு ரூ.50 லட்சம் குடுத்து ஒரு படத்திற்காக முன்பதிவு செய்துள்ளார்களாம். அப்படத்தில் அவர் நடிக்க தவறியதாகவும் பணத்தையும் திருப்பி கொடுக்க தவறியதாகவும் அவர் மேல் வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டது. இதற்காக அவர் வட்டியுடன் சேர்த்து ரூ.83.50லட்சத்தை திரும்பி கொடுக்கவேண்டும் என்று மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதை தவறினால் பணத்திற்கு ஈடான பாதுகாப்பை வழங்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர். இந்த வழக்கை வரும் […]
சென்னை : வண்ணாரப்பேட்டை தியாகராயா கல்லூரி வளாகத்தில், போட்டித் தேர்வுகள் பயிற்சி மையம் துவக்க விழாவை அமைச்சர் ஜெயக்குமார் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். 3 மாதத்திற்கு 500 மாணவர்கள் என்ற அடிப்படையில் இந்த பயிற்சி மையத்தில் ஆண்டுக்கு 2000 மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். இந்த மையத்தில் பயிற்சி பெரும் ஒவ்வொரு மாணவர்களுக்கு ரூ.1000 மதிப்பிலான பயிற்சி கையேடு இலவசமாக வழங்கப்படும். இவ்வகுப்பானது திங்கள் முதல் வெள்ளி வரை, பயிற்சி நேரம் தினமும் மாலை 2 மணி முதல் […]
அதிமுகவில் இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடர் வரும் 8ந்தேதி தொடங்க உள்ளது. இந்நிலையில் அவை முன்னவராக தற்போது பதவி வகிக்கும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனுக்குப் பதில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அந்த பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார். பேரவையில் தீர்மானங்களை முன்மொழிவது, எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு அரசு தரப்பில் விளக்கம் அளிப்பது உள்ளிட்ட பணிகளை செய்வது அவை முன்னவரின் பணியாகும். ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது அவை முன்னவராக இருந்த ஓ.பன்னீர் செல்வம் தற்போது மீண்டும் அந்த பதவிக்கு […]
அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில் (ஏஐசிடிஇ) அங்கீகாரம் பெற்ற 3,325 தனியார் பொறியியல் கல்லூரிகள் நாடு முழுவதும் இயங்கி வருகின்றன. அதிகபட்சமாக தமிழகத்தில் மட்டும் 526 தனியார் பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன.இதில், கடந்த கல்வியாண்டில் 177 தனியார் பொறியியல் கல்லூரிகளில் 30 சதவீதத்துக்கும் குறைவான மாணவர்களே சேர்ந்துள்ளனர் என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் இ.பாலகுருசாமி, திறமையான ஆசிரியர்கள், சரியான கட்டமைப்பு வசதிகள் இல்லாத தரம் குறைந்த […]
போக்குவரத்தை ஒழுங்கு படுத்துவதற்காக போலீசார் வைத்திருக்கும் தற்காலிக தடுப்புகளையே இருசக்கர வாகனத்தில் செல்லும் இளைஞர்கள், நெருப்புப் பொறி பறக்க இழுத்துச் செல்லும் அதிரவைக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. காவல் துறை எவ்வளவு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டாலும் இந்த பைக் ரேஸ் தொடர்ந்து நடந்து கொண்டு தான் உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர், புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது, கடற்கரையை ஒட்டி உள்ள காமராஜர் சாலையில், இதேபோல் அட்டகாசத்தில் ஈடுபட்ட 90க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மீது போலீசார் […]
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகாவில் உட்பட்ட பகுதியான குருவிகுளம் அருகே அனுமதியின்றி மணல் அள்ளிய பாலமுருகன் என்பவருக்கு சொந்தமான டிராக்டர் காவல்துறையால் பறிமுதல் செய்யப்பட்டு பின்னர் ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். மேலும் இது குறித்து குருவிகுளம் போலீசார் தீவிர விசாரணை செய்துவருகின்றனர்.
சிலை கடத்தல் தடுப்பு தொடர்பாக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை முழுமையாக செயல்படுத்தாதது ஏன்? – தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி.. சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவுக்கு தேவையான வசதியை அரசு தராவிடில் சிபிஐ விசாரிக்க உத்தரவிட நேரிடும் என உயர் நீதிமன்றம் உத்தரவு .மேலும் 2017 ஜூலையில் பிறப்பித்த 21உத்தரவுகளை ஏன் இன்னும் அறநிலையத்துறை ஆணையர் செய்யவில்லை? என கேள்வி … சிலைக்கடத்தல் வழக்கில் நீதிமன்ற உத்தரவுகளை நிறைவேற்றாத அரசு செயலிழந்து விட்டதா? எனவும் உயர்நீதிமன்றம் கேள்வி […]
கோவை : மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டியில் பகுதியில் யானைகள் நலவாழ்வு முகாம் தொடங்கியது. இந்த முகமை தமிழக அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், சேவூர் ராமச்சந்திரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். நலவாழ்வு முகாமில் தமிழகத்தில் இருந்து 31, புதுச்சேரியில் இருந்து 2 யானைகள் பங்கேற்றுள்ளன. இம்முகாமில் யானைகளுக்கு மருத்துவ சிகிச்சை, பயிற்சிகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோவில் தாலுகா அருகே உள்ள கரிவலம்வந்த நல்லூரில் தனியார் வங்கியின் ATM மையத்தில் பணமெடுத்த வாடிக்கையாளர் தங்கபழம் என்பவரிடம் நூதன முறையில் பணம் திருடிய ஆனந்தகுமார் என்பவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.மேலும் அவர் திருடிய பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
கடந்த ஆர்கே.நகர் இடைதேர்தல் வாக்களிப்பு நடைபெறும் நாளுக்கு ஒரு நாளுக்கு முன்னால் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் டிடிவி தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் தொடர்ந்த ஜாமின் மனுவானது கடந்த முறை வழக்கு விசாரனைக்கு வந்து ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் இந்நிலையில் இந்த வழக்கானது உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.
தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் “மலைப்பகுதிகளில் போக்குவரத்து வசதியின்மையால் ஏற்படும் ஆற்றல் இழப்பு” என்கிற தலைப்பில் ஆய்வுக்கட்டுரை சமர்பித்து, “இளம் விஞ்ஞானி” விருது வென்றிருக்கும் ஈரோட்டைச் சேர்ந்த மாணவர் சின்னகண்ணனுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள் என அம்மாணவனை பாராட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் திமுக செயல்தலைவரும்,எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின். தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் “மலைப்பகுதிகளில் போக்குவரத்து வசதியின்மையால் ஏற்படும் ஆற்றல் இழப்பு” என்கிற தலைப்பில் ஆய்வுக்கட்டுரை சமர்பித்து, “இளம் விஞ்ஞானி” விருது வென்றிருக்கும் ஈரோட்டைச் […]