சென்னை : தியாகராய நகர் (T.Nagar) ரங்கநாதன் தெருவில் உள்ள சோபா ஆடையகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த 3 தீயணைப்பு மற்றும் மீட்புப் படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தீ விபத்தால் பொதுமக்கள், பணியாளர்கள் அலறியடித்து ஓடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியது. கரும்புகையுடன் தீ பிடித்ததால் ஊழியர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்துள்ளனர். முதற்கட்ட தகவல்களின்படி, இந்த தீ விபத்து […]
சென்னை : சென்னை பரங்கிமலையில் கல்லூரி மாணவர்கள் இருவர் செல்போன் பேசியபடி தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி உயிரிழந்த சோகம் ஏற்பட்டுள்ளது. ரயில் மோதி இருவருமே சம்பவ இடத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த மாணவர்கள் பெரம்பலூர் முகமது பட்டினம் பகுதியை சேர்ந்த மமுகமது நஃபூல், சபீர் அகமது என தெரிய வந்துள்ளது. பின்னர், தகவல் அறிந்து வந்த ரயில்வே போலீசார் இறந்தவர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். […]
மதுரை : உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான, அழகர் வைகையாற்றில் இறங்கும் வைபவம், இன்று சிறப்பாக நடைபெற்றது. மதுரை வைகை ஆற்றில் தங்கக் குதிரை வாகனத்தில் பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் எழுந்தருளினார். லட்சக்கணக்கான பக்தர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து அழகரை குளிர்வித்து, விண்ணை முட்டும் ‘கோவிந்தா கோவிந்தா’ முழக்கத்துடன் வழிபாடு செய்தனர். இந்த கூட்டத்தில் கள்ளழகர் எழுந்தருளும் மண்டகப்படி பகுதியில் பக்தர் ஒருவர் மயங்கி விழந்து உயிரிழந்தார். நெல்லையை சேர்ந்த அவர் (பூமிநாதன்) […]
மதுரை : சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, இன்று பெருமாள் கள்ளழகர் வேடம்பூண்டு பூப்பல்லக்கில் பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. அதன்படி, பச்சை பட்டுடுத்தி தங்கக்குதிரையில் வந்த கள்ளழகரை மக்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து வரவேற்றனர். காலை 5.45 முதல் 6.05 மணிக்குள் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார். வண்டியூர் வீரராகவப்பெருமாள் முன்கூட்டியே அங்கு வந்திருந்து கள்ளழகரை வரவேற்றார். காலை 7.25 மணி வரை கள்ளழகர் வைகை ஆற்றில் பக்தர்களுக்கு காட்சி […]
செங்கல்பட்டு : மாவட்டம் திருவிடந்தை இடத்தில நேற்று பாமக சார்பில் சித்திரை முழு நிலவு, வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த மாநாட்டில் பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக தலைவர் அன்புமனி கட்சி தொண்டர்கள் என பலரும் கலந்து கொண்டார்கள். விழாவில் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ் கட்சியினரை கடுமையாக எச்சரித்த பேசியதுடன் கூட்டணி குறித்து நான் தான் முடிவு செய்வேன் எனவும் பேசினார். இது குறித்து பேசிய அவர் ” நம்மளுடைய கட்சியில் இருந்தவர்கள் […]
சென்னை : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது. நான்காவது நாளாக இன்றும் இரு நாடுகளும் மாறி மாறி தாக்குதலை தொடர்ந்து வருகின்றனர். இந்த நிலையில், தன்னுடைய இசைக் கச்சேரி வருவாய் மற்றும் மாநிலங்களவை உறுப்பினருக்கான ஒரு மாத ஊதியத்தை தேசிய பாதுகாப்பு நிதிக்கு வழங்குவதாக இசையமைப்பாளரும் எம்.பி.யுமான இளையராஜா அறிவித்துள்ளார். தாயகத்தின் எல்லைகளை பாதுகாக்கும் வீரர்களின் வீரத்தையும், தியாகத்தையும் பெருமையாக கருதுவதாக இளையராஜா தனது எக்ஸ் […]
சென்னை : பஹல்காம் தாக்குதல் , ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. தொடர்ந்து 3வது நாள் இரவாக நேற்று வரை பாகிஸ்தான் ராணுவம் ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்துவதை பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து வருகிறது. அதனை இந்திய ராணுவம் தொடர்ந்து முறியடித்து வருகிறது. அதேபோல பாகிஸ்தான் விமான தளங்களின் மீது இந்தியா ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தியா – பாகிஸ்தான் இடையே நிலவும் […]
சென்னை : சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்தினால் தாக்குதல் நடத்தப்படும் என்று இ- மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெடிகுண்டு மிரட்டல் என்பது அவ்வபோது வெளியாகும்ஒரு வதந்தியாக இருந்தாலும், ஏற்கனவே இந்தியா பாகிஸ்தான் போர் பதற்றம் தீவிரமடைந்துள்ள நேரத்தில் வெடிகுண்டு மிரட்டல் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், இந்த மிரட்டல் TNCA-க்கு மெயில் வந்ததை அடுத்து திருவல்லிக்கேணி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இதே போல டெல்லி கிரிக்கெட் வாரியத்திற்கும் […]
சென்னை : இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் அதிகரித்து கொண்டே செல்கிறது. பாகிஸ்தான் ராணுவம் மேற்கொள்ளும் தாக்குதல் நடவடிக்கைகளை இந்திய ராணுவம் தொடர்ந்து முறியடித்து வருகிறது. இதனால் பெரிய அளவில் சேதங்கள் ஏதும் ஏற்படவில்லை. இந்த தாக்குதல் நடவடிக்கைகள் காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள எல்லை பகுதிகளில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்படியான சூழலில் காஷ்மீரில் பள்ளி, கல்லூரிகள் பாதுகாப்பு கருதி காலவரையின்றி மூடுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இதனால் அங்குள்ள வெளிமாநில […]
சென்னை : தற்போது இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் இரு நாட்டு எல்லைகளிலும் ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டுள்ளனர். நேற்று இரவு பாகிஸ்தான் நடத்திய டிரோன் தாக்குதல்களை இந்திய ராணுவம் தடுத்து நிறுத்தி தாக்குதலை முறியடித்துள்ளது. போப் பிரான்சிஸ் மறைவை அடுத்து நேற்று புதிய போப் தேர்வு செய்யப்பட்டார். முதல் முறையாக அமெரிக்கவை சேர்ந்தவர் போப்-ஆக அறிவிக்கப்பட்டுள்ளார். ராபர்ட் பிரான்சிஸ் ப்ரீவோஸ்ட் புதிய போப்பாக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் […]
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம் ஆண்டு துவக்க நிகழ்வு நடைபெற்றது. இன்னும் தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலுக்கு ஓராண்டு இருக்கும் நிலையில், தற்போது திடீரென தமிழக அமைச்சரவையில் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் பொறுப்பானது தற்போது அமைச்சர் ரகுபதியிடம் இருந்து நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனுக்கு கூடுதல் பொறுப்பாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல அமைச்சர் துரைமுருகன் பொறுப்பில் இருந்த கனிமவள துறையானது […]
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று அசத்தியுள்ளனர். தேர்வு எழுதியதில் மாணவியர்கள் 96.7% பேரும், மாணவர்களில் 93.16% பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். 7,92,494 மாணவர்கள் தேர்வு எழுதியதில், 7,53,142 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். நேற்று இந்திய ராணுவம் பாகிஸ்தான் எல்லையில் பயங்கரவாதிகளுக்கு எதிராக நடத்திய ஆபரேஷன் சிந்தூர்-ஐ அடுத்து இரு நாடுகளுக்கு மத்தியிலும் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. ஆபரேஷன் சிந்தூரில் பாகிஸ்தான் மக்கள் […]
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன. சுமார் 7.80 லட்சம் மாணவ மாணவியர்கள் இப்பொதுத் தேர்வை எழுதினர். இந்த தேர்வு முடிவுகள் நாளை (மே 9) வெளியாகும் முன்னர் குறிப்பிட்டு இருந்த நிலையில் இன்று (மே 8) வெளியாகும் என சில தினங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியானது. அதேபோல, தற்போது பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், தமிழ்நாடு +2 பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளார். […]
மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை 8.35 மணி முதல் 8.59 மணிக்குள் கோலாகலமாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதேபோல திருக்கல்யாண வைபவம் தற்போது நடைபெற்றுள்ளது. இந்த திருக்கல்யாணத்தை காண லட்சக்கணக்கான பக்தர்கள் மதுரையில் குவிந்துள்ளனர். திருக்கல்யாணத்தை காண அமைச்சர் பழனிவேல் தியக்காரராஜன், முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்ட முக்கிய அரசியல் பிரபலங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டுள்ளனர். ஆன்லைனில் […]
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும் புதுச்சேரியிலும் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டது. சென்னையில் துறைமுக வளாக கட்டடத்திலும் புதுச்சேரி லாஸ்பேட்டை விமான நிலையம் அருகேயும் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டது. இதில், தேசிய பேரிடர் மீட்பு படையின் துணை கமாண்டன்ட் திரு வைத்தியலிங்கம் உத்தரவின் பேரில் துணை கமாண்டன்ட் ஸ்ரீதர் தலைமையில், சென்னை துறைமுகம் பகுதியில் தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் அவசரகால […]
சென்னை : மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி, சில முக்கிய நிறுவல்களில் சிவில் பாதுகாப்பு பயிற்சி மற்றும் ஒத்திகையை ஏற்பாடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கல்பாக்கம், மெட்ராஸ் அணுமின் நிலையம் மற்றும் சென்னை துறைமுக அறக்கட்டளையில் இன்று மாலை 4 மணிக்கு இந்த சிவில் பாதுகாப்பு பயிற்சியை நடத்தியது. போர்க் காலத்தின்போது அணுமின் நிலையம் தாக்கப்படும் சூழலில் நிலைமையைச் சமாளிப்பது குறித்து ஒத்திகை நடத்தப்பட்டது. இதில், மாவட்ட ஆட்சியர் தலைமையில் […]
சென்னை : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் நடத்திய தாக்குதலில் இதுவரை 80க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் உயிரிழந்திருக்கக் கூடும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மொத்தம் 9 இடங்களில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இப்படியான சூழலில் ஏற்கனவே இன்று திட்டமிடப்பட்டு இருந்த போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை நடவடிக்கைகள் நாடுமுழுவதும் பல்வேறு […]
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த 3,000 மாற்றுக்கட்சியினர் தங்களை கழகத்தில் இணைத்துக் கொண்டனர். மாற்றுக் கட்சியினர் திமுகவில் இணையும் நிகழ்வில் பேசிய முதல்வர், ”வெற்றிகரமாக 4 ஆண்டுகளை நிறைவு செய்து 5-ம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறோம். ஏற்கனவே நிறைவேற்றியுள்ள திட்டங்கள் எல்லாம் மக்களிடையே நன்றாக சென்று சேர்ந்திருக்கிறது. இன்னும் ஓராண்டில் என்ன திட்டங்களை நிறைவேற்றப்போகிறோம் என்பதை கடந்த நிதிநிலை அறிக்கையில் தெரிவித்திருக்கிறோம். […]
சென்னை : தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான பண்டிகை கால முன்பணம் ரூ.10,000-லிருந்து ரூ.20,000-ஆக உயர்த்தி சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தநிலையில், அதற்கான அரசாணை வெளியிடப்பட்டது. அந்த அரசாணையின் படி, 2025-2026 பட்ஜெட் கூட்டத்தொடரில், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதிகளின் விதி 110 இன் கீழ், தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சட்டமன்றத்தில் அரசு ஊழியர்களுக்கு பல்வேறு நலத்திட்ட அறிவிப்புகளை அறிவித்துள்ளார். அவற்றில் ஒன்று, அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள், அவர்களுடைய குடும்பத்தினருடன் பண்டிகைகளைச் சிறப்பாகக் கொண்டாடிடும் வகையில், […]