ராமநாதபுரம்

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிப்பு…!!

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி கைது செய்யப்பட்டு சிறைபிடிக்கப்பட்டுள்ளனர்… நேற்று ராமேஸ்வரத்தில் இருந்து 2படகுகளுடன் மீன்பிடிக்க சென்ற 12 தமிழக மீனவர்கள் இந்திய பெருங்கடலில் உள்ள நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அங்கு வந்த இலங்கை கடற்படையினரால் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி கைது செய்யப்பட்டனர்.

#Rameswaram 1 Min Read
Default Image

இலங்கை கடற்படையால் 16 ராமேஸ்வரம் மீனவர்கள் கைது !

ராமேஸ்வரம் மீனவர்கள் 16 பேரை இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர். ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று 400-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். இவர்கள் கச்சத்தீவு மற்றும் நெடுத்தீவிற்கு இடைப்பட்ட பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்தபோது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்களை மீன் பிடிக்க விடாமல் விரட்டியடித்துள்ளனர். பின்னர் எல்லை தாண்டி வந்ததாகக் கூறி, 4 விசைப்படகுகளை மறித்த இலங்கை கடற்படையினர், அதிலிருந்த 16 […]

#Rameshwaram 3 Min Read
Default Image

தமிழக அரசு கட்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்கும் என ஓ.பன்னீர்செல்வம் உறுதி!

ராமேஸ்வரத்தில்  நேற்று ஓ.பன்னீர்செல்வத்தை, அனைத்து மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள் சந்தித்து, மீனவர்கள் பிரச்சனை தீர்க்குமாறு கேட்டுக்கொண்டனர். இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களையும், படகுகளையும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும், கச்சதீவை மீட்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனு அளித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு, கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்கும் என்றார். source: dinasuvadu.com

#ADMK 2 Min Read
Default Image

கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரம் 12 பேர் கைது!

ராமேஸ்வரத்திலிருந்து, மீன்பிடிப்பதற்காக சென்ற மீனவர்கள், கச்சத்தீவு அருகே, இந்திய கடல் எல்லையில் மீன் பிடித்துக்கொண்டிந்தனர். அப்போது, 3 ரோந்து கப்பல்களில் வந்த இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்களின் படகுகளில் உள்ள மீன்பிடி சாதனங்களை சேதப்படுத்தியும், வலைகளை அறுத்தெரிந்தும், அட்டூழியத்தில் ஈடுபட்டனர். பின்னர், தமிழக மீனவர்களைத் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதனால், சர்வதேச கடல் எல்லையில் தமிழக மீனவர்கள் தவித்து வருவதாக பாதிக்கப்பட்ட மீனவர் சுரேஷ், நியுஸ் 7 தமிழுக்கு தொலைபேசி வாயிலாகத்  தெரிவித்தார். source: dinasuvadu.com

#Arrest 2 Min Read
Default Image

ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் உள்ள 22 தீர்த்த கிணறுகளும் முன்னறிவிப்பின்றி மூடல்!

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வருகையை முன்னிட்டு ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் உள்ள 22 தீர்த்த கிணறுகளும் முன்னறிவிப்பின்றி மூடல் ராமேஸ்வரத்தில் ஏடிஜிபி தலைமையில், 10 மாவட்ட எஸ்.பி-க்கள் உட்பட 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.. source: dinasuvadu.com

india 1 Min Read
Default Image
Default Image

ராமேஸ்வரம் கடற்பகுதியில் இலங்கை மீன்பிடிகப்பல் கவிழ்ந்தது

ராமேஸ்வரம் அருகே உள்ள சேரன்கோட்டையில் இலங்கையை சேர்ந்த ஒரு மீனவ கப்பல் ஒன்று கவிழ்ந்து கிடந்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த மீனவர்கள் அருகில் சென்று பார்த்தபோது அதில் யாரும் இல்லை. பின்னர் இதுகுறித்து கடற்படை காவல் படை அந்த படகை கைப்பற்றி அதனை கண்டு மீனவர்கள் யாரும் பயப்பட வேண்டாம் எனவும் கூறிவிட்டு சென்றனர். இதன் விசாரணை நடந்து வரகின்றனர்.

#Rameswaram 1 Min Read
Default Image

இராமநாதபுரம் மாவட்டத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்!

இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வருகிற 23–ந்தேதி ராமேசுவரம் வருகை தர உள்ளார். விமானம் மூலம் மதுரை வரும் அவர் அங்கிருந்து ஹெலிகாப்டரில் மண்டபம் முகாமில் உள்ள ஹெலிபேட் தளத்தில் வந்திறங்குகிறார். பின்னர் தேசிய நெடுஞ்சாலை வழியாக காரில் ராமேசுவரம் செல்கிறார். ஜனாதிபதியின் வருகையையொட்டி மாவட்ட கலெக்டர் நடராஜன், போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ் மீனா ஆகியோர் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக ராமேசுவரம் வந்தனர். அப்போது மண்டபம் முகாம் ஹெலிகாப்டர் தளம், அப்துல் கலாம் நினைவிடம், […]

india 4 Min Read
Default Image

ராமேஸ்வரம் மீனவர்களை கற்கள், பாட்டில்களை கொண்டு தாக்கி விரட்டியடித்த இலங்கை கடற்படை!

இராமேஸ்வரத்திலிருந்து நேற்று 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சுமார் 2,000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு சென்றனர். அவர்கள், கச்சத்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருக்கும் போது அங்கு 5 ரோந்து படகுகளில் வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் விரட்டியடித்ததோடு கற்கள் மற்றும் பாட்டில்கள் கொண்டு தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி மீனவர்களின் படகில் ஏறி மீன்பிடி வலைகளை வெட்டி கடலில் வீசி அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடிக்க முடியாமல் வெறுங்கையுடன் திரும்பியுள்ளனர். […]

india 2 Min Read
Default Image
Default Image

மீண்டும் மீண்டும் ‘தமிழக’ மீனவர்கள் மீது தாக்குதல்

 கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் பகுதிவாழ் மீனவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை விரட்டியடித்தனர். மேலும்  மீனவர்களின் மீன்பிடி வலை உள்ளிட்ட மீன்பிடி சாதனங்களையும்  இலங்கை கடற்படையினர்  சேதப்படுத்தி உள்ளனர். இதனால் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்துள்ளதாக  கூறப்படுகிறது. இலங்கை கடற்படையினரின் இந்த தொடர் தொந்தரவால் மீனவர்கள் பெரும் நஷ்டத்துடன் கரை திரும்பியுள்ளனர்.

#Rameswaram 2 Min Read
Default Image

ஆப்பனூர் கோயிலில் மாட்டுவண்டி பந்தயம்

ராமநாதபுரம் :  கடலாடி அருகே ஆப்பனூர் கருப்பணசாமி கோயில் பொங்கல் திருவிழாவையொட்டி பெரியமாடு, சின்னமாடு இரண்டு பிரிவுகளாக மாட்டுவண்டி பந்தயம் நடந்தது. இந்த மாட்டு வண்டி பந்தயத்தயமானது பெரியமாடுகள் போட்டியில் ஆப்பனூர் முதுகுளத்தூர் சாலையில் சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் வரையிலான போட்டியில் 15 மாட்டுவண்டிகள் கலந்துகொண்டது. இதில் மருகால்குறிச்சி பழனி முதலிடத்தையும், தூத்துக்குடி மாவட்டம், மூலக்கரை முருகன் இரண்டாம் இடத்தையும், வெலாங்குளம் கண்ணன் மூன்றாம் இடத்தையும் பெற்றனர். சின்ன மாடுகள் பந்தயத்தில் அரியநாதபுரம் முதல் தேவர்குறிச்சி வரை […]

#Ramanathapuram 3 Min Read
Default Image