ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி கடல்பகுதியில் அதிகளவில் கரை ஒதுங்கும் கடல்புற்களை, கால்நடைகளுக்காக விவசாயிகள் எடுத்து செல்கின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியை அடுத்த மாரியூர் மற்றும் முந்தல் கடல் பகுதிகளில், கடந்த சில தினங்களாக பலத்த காற்று வீசுவதால் கடல்சீற்றம் அதிகமாக காணப்படுகிறது. இதனால் இந்த பகுதிகளில் வழக்கத்தைவிட அதிகளவில் கடல்புற்கள் கரை ஒதுங்குகின்றன.பவளப்பாறைகள் அதிகம் உள்ள இந்த பகுதிகளில் இருந்து அதிக அளவில் ஒதுங்கும் கடல்புற்களை ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளுக்கு உணவாக, விவசாயிகள் எடுத்துச் செல்கின்றனர். […]
இலங்கை கடற்படையின் அட்டூழியத்தை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் 4 ஆயிரம் பேர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 28-ம் தேதி மீன்பிடிக்கச் சென்ற ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்களை 4 பேரை கைது செய்த இலங்கை கடற்படையினர், ஒரு படகையும் மூழ்கச் செய்தனர். இந்தச் சம்பவம் தமிழக மீனவர்களிடையே பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இலங்கையின் இந்த கொடூரச் செயலைக் கண்டித்தும், சிறையில் உள்ள 4 மீனவர்களையும் விடுவிக்க வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தில் […]
இலங்கை கடற்படையினரின் தொடர் அட்டூழியங்களை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராமேஸ்வரம் மீனவர்கள் கடந்த 28ம் தேதி நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, இலங்கை கடற்படையினர், கப்பலைக் கொண்டு மோதி விசைப்படகை மூழ்கடித்தனர். படகில் இருந்து குதித்து நீந்திய மீனவர்கள் 4 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் மீனவர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இதையடுத்து, ராமேஸ்வரத்தில் மீனவர் சங்க நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் இலங்கை கடற்படையின் செயலுக்கு மத்திய, மாநில அரசுகள் கண்டனம் […]
கஜா புயலுக்கு பிறகு ராமநாதபுரம் மாவட்டம் வாலிநோக்கம் பகுதியில் போதிய சீலா மீன் கிடைக்கவில்லை என மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள மேலமுந்தல், கீழமுந்தல், வாலிநோக்கம், மாரியூர் போன்ற கடற்கரைப்பகுதியில் கரைவலை மீன்பிடிப்பில் மீனவர்கள் அதிக அளவில் ஈடுபட்டிருந்தனர். ருசிமிகுந்த சீலாமீன் கிடைத்ததால் நல்ல வருவாய் கிடைக்கும் என்ற நிலையில், கஜா புயலுக்குப் பிறகு கடலில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் கரைவலை மீன்பிடிப்பில் சீலா மீன் கிடைக்கவில்லையென மீனவர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர். […]
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரத்தில் மழை பெய்து வருவதால் இதன் காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுவதாக ஆட்சியர் வீரராகவ ராவ் அளிவித்துள்ளார். DINASUVADU
கஜா புயல் முன்னெச்சரிக்கையாக இன்று மாலை 5 மணியிலிருந்து தனுஷ்கோடிக்கு செல்ல அனுமதி மறுப்பு என்று ஆட்சியர் வீரராகவ ராவ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ராமநாதபுரம் ஆட்சியர் வீரராகவ ராவ் கூறுகையில், கஜா புயல் முன்னெச்சரிக்கையாக இன்று மாலை 5 மணியிலிருந்து தனுஷ்கோடிக்கு செல்ல அனுமதி கிடையாது. காற்றின் வேகத்தை பொறுத்து பாம்பன் பாலத்தில் போக்குவரத்துக்கு அனுமதிக்கலாமா என்பது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது.அதேபோல் இந்திய கடலோர காவல் படை வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர், கடற்பரப்பில் 2 ஹெலிகாப்டர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது என்றும் ராமநாதபுரம் ஆட்சியர் […]
ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் மறு உத்தரவு வரும்வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என்று மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் மறு உத்தரவு வரும்வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என்று மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது.மேலும் ராமேஸ்வரம் , பாம்பன்,மண்டபம்,கீழக்கரை உள்ளிட்ட துறைமுகங்களில் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கஜா புயலாக மாறியுள்ள நிலையில் இந்த புயல் வடமேற்கு திசையைநோக்கி நகர்ந்து2 அல்லது 3 நாட்களில் தமிழகத்தை நோக்கி நகர வாய்ப்பு இருப்பதாகவும்,வட […]
தூத்துக்குடி, நெல்லை, ராமநாதபுரம் மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மிதமான மழை பெய்யும் தூத்துக்குடி, நெல்லை, ராமநாதபுரம் மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேலும் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. DINASUVADU
ராமநாதபுர மாவட்டங்களில் கடலோர பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் அந்த பகுதியில் பலத்த சூறைக்காரு வீசியது. இந்நிலையில் வடக்கு கடல் பகுதியில், கடலை ஆளப்படுத்தக்கூடிய தனியார் நிறுவனத்தை சேர்ந்த சரக்கு கப்பல் மற்றும் மிதவை கப்பல் நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் அந்த பகுதியில் வீசிய சூறை காற்றால், அங்கு நின்ற மிதவை கப்பல் சேதமடைந்து கடலில் மூழ்கியுள்ளது.
பல கோடி மதிப்பிலான மரகத நடராஜர் சிலையை திருடமுயற்சி செய்த கொள்ளையர்களுடன் சண்டையிட்ட காவலாளியை அரிவாளால் கொள்ளையர்கள் வெட்டிய நிலையிலும் போராடியுள்ளார். இராமநாதபுரம் அருகே திருஉத்திரகோசமங்கையில் பிரசிதிபெற்ற நடராஜர் ஆலயத்தில் மிகவும் பழமை வாய்ந்த மரகத நடராஜர் சிலை அமைந்துள்ளது.உலகிலே பெரிய மரகத கல்லால் வடிவமைக்கப்பட்ட சிரித்த முகம் கொண்ட 5 1\2 அடி சிலை இதுவாகும்.இத்தகைய சிலையை கொள்ளையடிக்க முயற்சித்தது கொடூரத்தின் உச்சமாகும். எப்பொழுதும் சந்தனம் பூசப்பட்ட நிலையில் காட்சி தரும் இந்த சிலைய நேற்று […]
ராமநாதபுரம் அடுத்த பேரையூர் பகுதில் கண்மாய் அருகே பிறந்து சில மணி நேரமே ஆன ஆண் குழந்தை கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியில் உறைந்த பொது மக்கள் போலிஸாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார் குழந்தையை மீட்டனர். குழைந்தை இரவு முழுவதும் மலையில் நனைந்து இருந்ததாலும், உடலில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாலும், குழந்தையை அரசு மருத்துவமனையில் தீவீர சிகிச்சை பிரிவில் வைத்துள்ளனர். மேலும், குழந்தையை இவ்வாறு வீசி சென்றது யார் என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடிக்கு சுற்றுலாப் பயணிகள், வாகனங்கள் செல்ல 3 நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மழை தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள எச்சரிக்கையில், அக்டோபர் 7ஆம் தேதி தமிழகத்தில் வானிலை மிகவும் மோசமாக இருக்கும் .எனவே ‘ரெட் அலெர்ட்’ எச்சரிக்கை விடுகப்பட்டுள்ளது.அதனால் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைய வேண்டும். பெரும்பாலான பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்படும் .தமிழகத்தில் 25 சென்டிமீட்டருக்கு மேல் மழை பெய்யும் ,அதேபோல் கடல் அதிக சீற்றத்துடன் காணப்படும் ,இதனால் மீனவர்கள் […]
5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை மறுநாள் முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்திற்கு கடலோர மாவட்ட மீனவர்களுக்கு அழைப்புவிடுத்துள்ளனர். ராமநாதபுரத்தில் நடைபெற்ற அனைத்து மீனவசங்க கூட்டத்தில் பல்வேறு பகுதியை சேர்ந்த மீனவர்கள் பங்கேற்றனர்.கூட்டத்தில், நாளுக்கு நாள் டீசல் விலை அதிகரிப்பதை கட்டுப்படுத்த வேண்டும், மானிய டீசலின் அளவை அதிகரித்து வழங்க வேண்டும். இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்களை விடுவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை மறுநாள் முதல் காலவரையற்ற […]
டீசல் விலை உயர்வைக் குறைத்தல், மீன்களுக்கு உரிய விலை கிடைக்கச் செய்தல் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி ராமேஸ்வரம் பாம்பன் பகுதி மீனவர்கள் நான்காவது நாளாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், 120க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் பாம்பன் தெற்குவாடி துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. கோரிக்கைகள் நிறைவேறும் வரை கடலுக்கு செல்லப் போவதில்லை என அப்பகுதி மீனவர்கள் தெரிவித்துள்ளனர். DINASUVADU
பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நாளை நடைபெற உள்ள இமானுவேல் சேகரன் நினைவு நாளை ஒட்டி 5000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இமானுவேல் சேகரனுக்கு அஞ்சலி செலுத்த பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்புகளை சேர்ந்தவர்கள் வருவதால் பாதுகாப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பரமக்குடி சந்தைப்பேட்டை பகுதியில் அமைந்துள்ள இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் நாளை அவரது 61வது நினைவு தினம் அனுசரிக்கப்படவுள்ளது. தேவேந்திரர் பண்பாட்டுக் கழகம் சார்பில் நடைபெறவுள்ள அஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நாடு முழுவதிலும் இருந்து ஏராளமானோர் […]
ராமநாதபுரம் மாவட்டத்தில் நள்ளிரவு முதல் அக்.31ம் தேதி வரை 144 தடை உத்தரவு அமல் என்று ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் உத்தரவு பிறப்பித்துள்ளார். இது தொடர்பாக ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் வெளியிடட அறிவிப்பில், சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பு காரணமாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது . அதேபோல் இன்று முதல் முதல் செப்டம்பர் 15 வரையும் அக்டோபர் 20 முதல் 31 வரையும் வாடகை வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இமானுவேல் ஜெயந்தி, தேவர் ஜெயந்தி உள்ளிட்டவைகள் வரவுள்ள நிலையில், சட்டம் ஒழுங்கு […]
இரண்டு மாத காலத்திற்கு 144 தடை உத்தரவு பிறப்பித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் உத்தரவிட்டுள்ளார். இமானுவேல் ஜெயந்தி, தேவர் ஜெயந்தி உள்ளிட்டவைகள் வரவுள்ள நிலையில், சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு காரணமாக, 9.9.2018 முதல் இரண்டு மாத காலத்திற்கு 144 தடை உத்தரவு பிறப்பித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று நள்ளிரவு முதல் அக்.31ம் தேதி வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என்று […]
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் அமைந்துள்ள அதானிக்கு சொந்தமான சோலார் மின் நிலையத்தில், மாவட்ட ஆட்சியர் வீரராகவன் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் திடீரென ஆய்வு மேற்கொண்டனர். 5 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள, இந்த மின் நிலையம் 4 ஆயிரத்து 536 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 648 மெகாவாட் சூரிய மின் ஒளியை உற்பத்தி செய்து வருகிறது. அதிகாரிகள் அதானி சோலார் மின்நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.தற்போது தான் மதுரை ஆட்சியராக இருந்த வீரராகவன் ராமநாதபுர ஆட்சியராக நியமிக்கப்பட்டார் […]
இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே எம்.சாலைகிராமத்தை சேர்ந்தவர் கந்தசாமி (43) இவர் அப்பகுதியில் விவசாயம் செய்து வருகின்றார்.நேற்று முன்தினம் இரவு அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் புகுந்து 3 வயது பெண் குழந்தையை தூக்கி கொண்டு மறைவான பகுதிக்கு தூக்கி சென்று குழந்தையை பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். உடனே குழந்தையின் அலறல் சத்தத்த கேட்ட பெற்றோர் மற்றும் அப்பகுதி மக்கள் கந்தசாமியை பிடித்து கமுதி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.கந்தசாமி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து போலீசார், கந்தசாமியை கைது […]
இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அருகே வன்னிவயல் கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளியின் மகள் தனியார் நர்ஸிங் கல்லூரியில் படித்து வருகிறார். இவரை காவனூரை சேர்ந்த பிரதாப் (24)என்பவர், தினமும் கல்லூரிக்கு சென்று வரும்போது பின் தொடர்ந்து காதலிப்பதாக கூறியுள்ளார். மனம் வேதனையடைந்த மாணவி கல்லூரிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். கடந்த 24ம் தேதி வீட்டிலிருந்து அரண்மனை அருகே வந்தபோது பின்னால் வந்த பிரதாப், மாணவியை வழிமறித்து தன்னை காதலிக்குமாறு டார்ச்சர் செய்துள்ளார். இதுபற்றி மாணவி தந்தை, ராமநாதபுரம் […]