தமிழ்நாடு நாளை அரசு விடுமுறையாக அறிவித்து அரசு விழாவாக சிறப்பிக்க வேண்டுதல் தொடர்பாக தமிழக முதல்வருக்கு சீமான் கடிதம் எழுதியுள்ளார். 1956-ஆம் ஆண்டு நவம்பர் 1-ஆம் தேதி இந்தியா மொழிவாரி மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டது.எனவே சென்னை மாகாணத்திலிருந்த மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகள் பேசிய பகுதிகளைக் கொண்டு, கேரளா, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா மாநிலங்கள் பிரிக்கப்பட்டது. சென்னை மாகாணத்தை மொழிவாரியாக பிரித்த நாளான நவம்பர் 1 ஆம் தேதியை தமிழ்நாடு நாளாக கொண்டாடுவதற்கான அரசாணையை தமிழக அரசு […]
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை முதலமைச்சர் பழனிசாமி சந்தித்துள்ளார்.7.5% உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ள நிலையில் ஆளுநரை சந்தித்துள்ளார். ஆளுநர் உடனான சந்திப்பில் தலைமைச் செயலாளர் சண்முகம், சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் பங்கேற்றுள்ளனர்.
7.5% இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு ஆளுநரின் ஒப்புதலால் பயனேதுமில்லை என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார். 7.5% உள் இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம் : அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5% உள் இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை கடந்த செப்டம்பர் மாதம் தமிழக அரசு இயற்றியது.இந்த சட்டம் அனைத்துக் கட்சி ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதனால் உடனடியாக ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. ஆளுநர் ஒப்புதல் தரவில்லை : ஆனால், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இதற்கு ஒப்புதல் […]
அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5% இட ஒதுக்கீட்டிற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளித்த நிலையில் சென்னை கிண்டில் உள்ள ராஜ் பவனில் இன்று மாலை ஆளுநரை சந்திக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி.
மருத்துவக் கனவுகளை நிறைவேற்றும் விதமாக அவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு அளிக்க அரசாணை வெளியிடப்படுகிறது என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கான , மருத்துவ கல்லூரி சேர்க்கையில் 7.5% இடஒதுக்கீட்டு மசோதாவை தமிழக அரசு சட்டபேரவையில் நிறைவேற்றியது .அதன் பின்பு தமிழக ஆளுநருக்கு அனுப்பட்டது. ஆனால் தமிழக ஆளுநர் இதுவரை இந்த மசோதா மீது எந்த முடிவும் எடுக்கவில்லை . மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்கக் கோரி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ,ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு […]
எய்ம்ஸ் நிர்வாகிகளாக தகுதியானவர்களை தான் மத்திய அரசு நியமனம் செய்து இருக்கிறது என்று அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா தெரிவித்துள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு பிரதமர் மோடி மதுரையை அடுத்த தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார்.மதுரையில் ரூ.1264 கோடி மதிப்பில் கட்டப்படவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைவராக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் பணியாற்றி வரும் டாக்டர் வி.எம்.கட்டோச் நியமனம் செய்யப்பட்டார். மேலும், இதில் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணை வேந்தர் சுதா சேஷையன் ,கீழ்ப்பாக்கம் மருத்துவக் […]
இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் தற்போது, இஸ்லாமிய பெருமக்களுக்கு மிலாது நபி வாழ்த்து தெரிவித்து செய்தி வெளியிட்டுள்ளார். இது குறித்து வாழ்த்து வெளியிட்டுள்ள அவர், முகமது நபி அவர்களின் பிறந்த நாள் மிலாது நபி என கொண்டாடப்படுகிறது. இந்த தருணத்தில் நாட்டு மக்களுக்கு குறிப்பாக நமது இஸ்லாமிய சகோதரர்களுக்கும், சகோதரிகளுக்கும் என் அன்பான வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். முகமது நபி அவர்கள், அன்பு மற்றும் சகோதரத்துவத்தின் செய்தியை அளித்து உலகத்தை மனித நேயத்தின் பாதையில் கொண்டு […]
வரும் நவம்பர் 1-ம் தேதி முதல் சமையல் எரிவாயு பெறுவதில் புதிய நடைமுறையை இந்திய எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. வீடுகளுக்கான சமையல் கேஸ் சிலிண்டரை வீட்டில் விநியோகம் செய்யும் போது ஒரு முறை கடவுச்சொல் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி சமையல் எரிவாயுவை விநியோகம் செய்யும் நபரிடம் ஓ.டி.பி எண்ணை கொடுத்தால் மட்டுமே கேஸ் சிலிண்டர் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சமையல் கேஸ் சிலிண்டரை அலைபேசி மூலம் பதிவு செய்யும் போதே அந்த எண்ணுக்கு ஓ.டி.பி வந்து விடும். […]
காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் மாவட்ட பாஜக கட்சியின் இளைஞரணி பொதுச்செயலாளர் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொலை. குல்ஹம் மாவட்டம் ஒய்கே பூரா பகுதியை சேர்ந்த உமர் ரஷித் பேக் குல்ஹம் மாவட்ட பாஜக கட்சியின் இளைஞரணி பொதுச்செயலாளராக உள்ளார். அதேபோல் அப்பகுதியை சேர்ந்த உமர் ரம்சன் ஹஜீம் மற்றும் பிடா ஹசன் யாதூ ஆகிய இருவரும் மாவட்ட பாஜக நிர்வாகிகளாக இருந்துள்ளனர். இந்நிலையில், இவர்கள் 3 பேரும் இன்று இரவு 8 மணியளவில் ஒய்கே பூரா பகுதியில் ஒரு காரில் […]
ஏற்கனவே கொரோனா வைரஸ் தொற்றின் பரவலால் பிரான்ஸ் நாடு நிலைகுலைந்து உள்ள நிலையில் தற்போது அங்கு ஒரு துயர சம்பவம் அரங்கேறியுள்ளது. நேற்று அங்குள்ள நைஸ் நகரில் உள்ள நோட்ரே டேம் தேவாலயத்தில் பயங்கரவாதி ஒருவன் கையில் கத்தியுடன் நுழைந்தான்.பின், அவன் அங்கிருந்தவர்களை கத்தியால் சரமாரியாக குத்தினான். கத்திக்குத்துக்கு ஆளானவர்கள் ரத்த வெள்ளத்தில் சரிந்தனர். இதனால் அங்கிருந்தவர்கள் பதற்றமுடன் நாலாபுறமும் சிதறி ஓடினர். இந்நிலையில் இது குறித்து தகவலறிந்த காவல் அதிரடி படையினர் அங்கு மின்னல் வேகத்தில் […]
உலகம் முழுவதும் கொரோனா பெருந்தொற்றின் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் உள்ள பள்ளிகள் மூடப்பட்டன. இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் முதல் பல்வேறு கட்டங்களாக தளர்வுகளை மத்திய அரசு அறிவித்து வரும் நிலையில், கடந்த மாதம் முதல் பள்ளிகளைத் திறக்க அனுமதி அளித்தது. எனினும் இவ்விவகாரத்தில் மாநில அரசுகள் இறுதி முடிவு எடுத்துக்கொள்ளலாம் என உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியது. இதனால் பல மாநிலங்கள் பள்ளிகள் திறப்பு குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகின்றன. இதற்கிடையே, ஆந்திராவில் நவம்பர் 2-ம் […]
மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் வகையில் தமிழக சட்டசபையில் மசோதா நிறைவேற்றப்பட்டு கவர்னர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் இந்த மசோதாவிற்கு கடந்த 45 நாட்களாக ஆளுநர் ஒப்புதல் வழங்கவில்லை. இந்நிலையில், சட்ட விதி 162ஐ பயன்படுத்தி தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவை அடிப்படையாகக் கொண்டு, மருத்துவப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதாவுக்கான அரசாணையை […]
இன்று மிலாடி நபி திருநாளை முன்னிட்டு தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இது குறித்து செய்தி வெளியிட்டுள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி: மானுடம் தழைக்க இறைத்தூதர் நபிகள் நாயகம் அருளிய போதனைகளை மக்கள் அனைவரும் தங்கள் வாழ்வில் கடைப்பிடித்து வாழ்ந்தால், வாழ்வில் ஏற்றம் பெறலாம். இறைத்தூதர் நபிகள் நாயகம் பிறந்த இந்த இனிய நாளில், உலகில் அன்பும், அமைதியும், சமாதானமும், சகோதரத்துவமும் தவழட்டும் என்று வாழ்த்தி, இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் எனது […]
மருத்துவ படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு அளிக்க அரசாணை வெளியிட்டது தமிழக அரசு. தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கான , மருத்துவ கல்லூரி சேர்க்கையில் 7.5% இடஒதுக்கீட்டு மசோதாவை கடந்த மாதம் 15 ம் தேதி தமிழக அரசு சட்டபேரவையில் அனைத்து கட்சிகளின் ஆதரவோடு ஒருமனதாக நிறைவேற்றியது .அதன் பின்பு தமிழக ஆளுநருக்கு அனுப்பட்டது. ஆனால் ஆளுநரோ இன்றுவரை இந்த மசோதா மீது எந்த முடிவும் எடுக்கவில்லை . இந்நிலையில் தமிழக அரசு அரசியலமைப்பு […]
“முதலமைச்சரும், உள்ளாட்சித்துறை அமைச்சரும் காட்டிய அலட்சியத்தால் – ஒருநாள் மழைக்கே வெள்ளக்காடாகக் காட்சியளிக்கிறது சென்னை ” என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாகவே லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், தற்போது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. அதிலும் சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில் நேற்று இரவு இடியுடன் கூடிய கனமழை பெய்தது. சென்னையில் நேற்று விடிய […]
‘தமிழகம் மீட்போம்’ என்ற தலைப்பில் நவம்பர் 1 முதல் கானொலி காட்சி வாயிலாக சட்டமன்ற தேர்தல் சிறப்பு பொதுக்கூட்டங்கள் நடைபெறுகிறது. தமிழகத்தில் அடுத்த ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது.இதற்காக தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் தயாராகி வருகின்றது. இந்நிலையில் ‘தமிழகம் மீட்போம்’ என்ற தலைப்பில் நவம்பர் 1 முதல் கானொலி காட்சி வாயிலாக சட்டமன்ற தேர்தல் சிறப்பு பொதுக்கூட்டங்கள் நடைபெறும் என்று திமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதாவது அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலிக்காட்சி […]
சமூக வலைதளத்தில் பரவும் அறிக்கை என்னுடையது இல்லை என்று ரஜினி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அரசியல் நிலைப்பாடு குறித்து அறிவிக்கலாம் என்று நினைத்திருந்தேன் ஆனால் அதற்குள் கொரோனா பிரச்னையால் கடந்த பல மாதங்களாகவே யாரையும் சந்திக்க முடியவில்லை என்று நடிகர் ரஜினிகாந்த் பெயரில் அறிக்கை ஒன்று வெளியானது.மேலும் அரசியலில் ஈடுபடுவதைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுரை கூறியதாகவும் அந்த அறிக்கையில் தகவல் இருந்தது. ஆகவே கடந்த சில தினங்களாக ரஜினிகாந்த் அரசியல் நிலைப்பாடு […]
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் நிர்வாகக் குழுவில் இடம்பெற்றுள்ள மருத்துவர் சுப்பையா சண்முகத்தை நீக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு பிரதமர் மோடி மதுரையை அடுத்த தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார்.மதுரையில் ரூ.1264 கோடி மதிப்பில் கட்டப்படவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைவராக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் பணியாற்றி வரும் டாக்டர் வி.எம்.கட்டோச் நியமனம் செய்யப்பட்டார். மேலும், இதில் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணை வேந்தர் சுதா சேஷையன் ,கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவர் […]
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இயங்கும் அரசுஅலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் அதிரடி சோதனை ஈடுப்பட்டனர்.கணக்கில் வராத பல லட்ச ரூபாய் ஒரே நாளில் பறிமுதல் செய்யப்பட்டது. லஞ்ச ஒழிப்பு துறையினர் மதுரை விழுப்புரம்,திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசு அலுவலகங்களில் அதிரடியாக சோதனை செய்ததில் ₹7லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிரடி சோதனையானது மதுரை பழங்காநத்தம் இணை சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்சம் வாங்கி கொண்டு பத்திரப்பதிவு நடப்பதாக புகார் எழுந்த நிலையில் அங்கு லஞ்ச […]