மெட்ரோவில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெயர் புறக்கணிப்பு.? இபிஎஸ் கடும் கண்டனம்.!
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பெயரை புறக்கணிப்பதாக கூறி, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு தனது கண்டனத்தை பதிவு செய்து அதனை அறிக்கை வாயிலாக அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ஜெயலலிதா அவர்கள் 2011-ல் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு, Chennai Metro Rail Limited (CMRL) என்று அழைக்கப்படும், சென்னை மெட்ரோ ரயில் திட்டம், கட்டம் 1-ன் பணிகளை விரைவாக நடத்தி முடிக்க ஆணையிட்டார். […]