செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா – சென்னை வருகிறார் தல தோனி!

MS Dhoni

செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் கலந்து கொள்ளும் கேப்டன் தோனி.

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஜூலை 28-ஆம் தேதி தொடங்கியது, செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்கவிழா மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது.

இந்த விழாவில், பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த நிலையில், நாளை செஸ் ஒலிம்பியாட் போட்டியின் நிறைவு விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில், முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி கலந்துகொள்ள உள்ளார்.

பாஜக ஆளும் மாநிலங்களுக்கு அள்ளிக்கொடுத்த மத்திய அரசு.? 608.. 503… தமிழகத்துக்கு வெறும் 33 கோடி.!

மத்திய அரசு, மாநிலங்களில் விளையாட்டு மேம்பாட்டிற்காக நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதில், 33 மாநிலங்களுக்கு மொத்தமாக 2754.28 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதில் பாஜக ஆளும் மாநிலங்களான உத்திரபிரதேசதிற்க்கு 503.02 கோடியும், குஜராத்திற்கு 608.37 கோடியும், அருணாச்சல பிரதேசம் 183.72 கோடியும், கர்நாடகாவுக்கு 128.52 கோடியும், மகாராஷ்டிராவுக்கு 110.80 கோடியும், ஹரியானாவுக்கு 88.89 கோடியும், மத்திய பிரதேசத்திற்கு 85.64 கோடியும், மணிப்பூருக்கு 80.45 கோடியும், பீகாருக்கு 50.83 கோடியும்,

அசாமுக்கு 47.68 கோடியும், திரிபுராவுக்கு 38.35 கோடியும், ஹிமாச்சல பிரதேசதிற்கு 38.10 கோடியும், உத்தரகாண்ட்டிற்கு 23.78 கோடியும், கோவாவுக்கு 19.10 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த மாநிலங்கள் பாஜக ஆளும் மாநிலங்கள் ஆகும்.

ஏனைய மற்ற மாநிலங்களான தமிழகத்திற்கு 33.00 கோடியும், புதுச்சேரிக்கு 16.02 கோடியும், கேரளாவுக்கு 62.74 கோடியும், ஆந்திராவுக்கு 33.80 கோடியும், அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு 7.23 கோடியும், சத்தீஸ்கருக்கு 20.65 கோடியும், டெல்லிக்கு 89.36 கோடியும், ஜம்மு காஷ்மீருக்கு 27.89 கோடியும், ஜார்கண்ட்டிற்கு 10.38 கோடியும், லடாக்கிற்கும் 14.28 கோடியும், லட்சத்தீவுவுக்கு 9.00 கோடியும்,

மேகாலயாவுக்கு 28.00 கோடியும், மிசோரமுக்கு 39.00 கோடியும், நாகாலாந்திற்கு 45.00 கோடியும், ஒடிசாவுக்கு 28.00 கோடியும் பஞ்சாப்பிற்கு 93.71 கோடியும், ராஜஸ்தானுக்கு 112.26 கோடியும், சிக்கிமுக்கு 25.83 கோடியும், தெலுங்கானாவுக்கு 24.11 கோடியும், மேற்கு வங்காளதிற்கு 26.77 கோடியும் என மொத்தமாக 27,54.28 கோடி ரூபாய் நிதி விளையாட்டு துறை மேம்பாட்டிற்கு மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.

JustNow : தமிழக ஆளுநரை சந்தித்த ரஜினிகாந்த்…!

ravi- rajini

சென்னை கிண்டியில் உள்ள ராஜ் பவனில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்  – ஆளுநர் ஆர்.என்.ரவி சந்திப்பு. 

சென்னை கிண்டியில் உள்ள ராஜ் பவனில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள், ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து பேசி வருகிறார். இந்த சந்திப்பானது, மரியாதையினிமித்தமான என ஆளுநர் அலுவலகம் தகவல் அளித்துள்ளது.

மக்களவை தேர்தலில் அதிமுக தலைமையில் தான் கூட்டணி – செல்லூர் ராஜூ

sellurraju

வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் விடியா அரசு தடுமாற்றம் என செல்லூர் ராஜூ விமர்சனம்.

மதுரையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ , 2024 மக்களவை தேர்தலில் அதிமுக தலைமையில் தான் கூட்டணி அமையும் என்றும் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி என்பதை தேர்தல் நேரத்தில் அதிமுக முடிவு செய்யும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் விடியா அரசு தடுமாற்றத்தில் உள்ளது. வருமானவரி, அமலாக்கத்துறை சோதனைக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் அஞ்சுகிறார். மக்களுக்கான நலத்திட்டங்களை நிறைவேற்றாத விடியா அரசுக்கு கண்டனம் என்றும் கூறியுள்ளார்.

துணை ஜனாதிபதி வெங்கைய்யா நாயுடுவை பாராட்டி பேசிய பிரதமர் மோடி…!

வெங்கையா நாயுடுவின் வாதங்களில் நேர்மையும் இருக்கும்,கம்பீரமும் இருக்கும் என பிரதமர் மோடி பாராட்டு.

நாளை மறுநாளுடன் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் முடிவடைகிறது. இதனை அடுத்து மாநிலங்களவையில் அவருக்கு பிரியா விடை நிகழ்வு நடைபெற்றது.

அப்போது பேசிய பிரதம நரேந்திர மோடி அவர்கள், வெங்கையா நாயுடுவின் வாதங்களில் நேர்மையும் இருக்கும்,கம்பீரமும் இருக்கும்; அவரின் சாமர்த்தியத்திற்கு நான் வாழ்த்துகளை தெரிவிக்கிறேன்.

இளைஞர்களுக்கு உத்வேகமூட்டுவதாக உள்ளது வெங்கையா நாயுடுவின் வாழ்க்கை. சிறந்த தலைமை பண்பு மிக்கவர், பல்வேறு பொறுப்புகளில் சிறப்பாக செயல்பட்டவர். அவருக்கு பிரியாவிடை அளிக்க நாம் இங்கு கூறியுள்ளோம். மிகவும் உணர்ச்சிமிக்க தருணமாக இது உள்ளது என தெரிவித்துள்ளார்.

“எதிர்பார்ப்பு : வீட்டுக்கு வீடு வேலைவாய்ப்பு! உண்மை : வீட்டுக்கு வீடு வேலையின்மை!” – ராகுல் காந்தி

எதிர்பார்ப்பு : வீட்டுக்கு வீடு வேலைவாய்ப்பு! உண்மை : வீட்டுக்கு வீடு வேலையின்மை! என ராகுல் காந்தி ட்வீட். 

காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி அவர்கள் அவ்வப்போது, மத்திய அரசின் கொள்கை குறித்தும், பிரதமர் மோடி குறித்தும் விமர்சித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்துக்களை பதிவிட்டுள்ளார்.

அந்த வகையில், தற்போது ராகுல்காந்தி அவர்கள் வேலையின்மையை சுட்டிக்காட்டும் வண்ணம் தனது ட்விட்டர் பக்கத்தில், “எதிர்பார்ப்பு : வீட்டுக்கு வீடு வேலைவாய்ப்பு! உண்மை : வீட்டுக்கு வீடு வேலையின்மை!” என ட்வீட் செய்துள்ளார்.

இது தமிழ்நாட்டிற்கே பெருமையான தருணம் – செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்திற்கு முதல்வர் வாழ்த்து..!

cmmkstalin

செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து. 

செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த் உலக செஸ் கூட்டமைப்பின் துணை தலைவராக தேர்தெடுக்கப்பட்டுள்ளார். இதற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.

அந்த ட்விட்டர் பதிவில், ‘செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த் உலக செஸ் கூட்டமைப்பின் துணைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதற்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இது தமிழ்நாட்டிற்கே பெருமையான தருணம் என பதிவிட்டுள்ளார்.

பாஜக கூட்டணியில் இருந்து விலகுகிறதா? ஐக்கிய ஜனதா தளம்!

nithishkumar

பாஜக கூட்டணியில் தொடர்வதா என்பது குறித்து முடிவு எம்பிக்கள், எம்எல்ஏக்கள் கூட்டத்தில் ஐக்கிய ஜனதா தளம் முடிவு.

பாஜகவுடன் கருத்து வேறுபாடு அதிகரித்துள்ள நிலையில், ஐக்கிய ஜனதா தளம் நாளை அவரச ஆலோசனை கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளது. பாட்னாவில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க எம்பி, எம்எல்ஏக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பாஜகவில் இருந்து வெளியேறி ஆர்.ஜே.டியுடன் சேர்ந்து ஆட்சியில் தொடர நிதிஷ் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாஜக தனிப்பெரும் கட்சியாக விளங்கும் பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ் குமார் முதலமைச்சராக இருக்கிறார். எம்பிக்கள், எம்எல்ஏக்கள் கூட்டத்தில் கூட்டணியில் தொடர்வதா என்பது குறித்து முடிவு எடுக்கப்பட உள்ளது. அதுமட்டுமில்லாமல், பாஜகவுடன் கருத்து வேறுபாடு காரணமாக, சமீப காலமாக பிரதமர் மோடி தலைமையிலான நிதி ஆயோக் கூட்டம் உள்ளிட்ட  மத்திய அரசின் பல்வேறு நிகழ்ச்சிகளை நிதிஷ் குமார் புறக்கணித்து இருந்தார்.

பீகாரில் கடந்த சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதாவை விட ஐக்கிய ஜனதா தளம் குறைந்த இடங்களை பிடித்து இருந்தது. இருப்பினும், கூட்டணியில் உள்ளதால் நிதிஷ் குமார் முதலமைச்சராக உள்ளார். பாஸ்வான் கட்சி உடைந்தது போல ஐக்கிய ஜனதா தளத்தை உடைக்க பாஜக முயற்சிப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் எந்த நேரமும் வெளியேறக்கூடும் என்று தேசிய அரசியலில் பரபரப்பாக பேசப்படுகிறது.

பிரதமர் தலைமையில் நாளை நிதி ஆயோக் கூட்டம்..!

குடியரசு தலைவர் மாளிகையில், நாளை பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் நடைபெறுகிறது. 

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தலைமையில் நாளை நிதி ஆயோக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டம் குடியரசுத் தலைவர் மாளிகையில் வைத்து நடைபெறுகிறது.

இக்கூட்டத்தில் தேசிய கல்விக் கொள்கை, நகராட்சி நிர்வாகம் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக காணொளி வாயிலாக கூட்டம் நடைபெற்ற நிலையில், 2 ஆண்டுகளுக்கு பின் நாளை நேரடியாக கூட்டம் நடைபெற உள்ளது.

நல்லகண்ணுக்கு தகைசால் தமிழர் விருது – சு.வெங்கடேசன் எம்.பி ட்வீட்

S. Venkatesh

தகைசால் தமிழர் விருது பெறவுள்ள நல்லகண்ணுவுக்கு வாழ்த்து தெரிவித்து சு.வெங்கடேசன் எம்.பி ட்வீட். 

தமிழக அரசின் தகைசால் தமிழர் விருதுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு தேர்வு செய்யப்பட்டுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. தகைசால் தமிழர் விருது சுதந்திர தின விழாவில் வழங்கப்பட உள்ளது. அதன்படி, சுதந்திர தின விழாவில் ஆர்.நல்லக்கண்ணுக்கு விருது வழங்கி முதலமைச்சர் முக ஸ்டாலின் கவுரவிக்க உள்ளார்.

இதுகுறித்து சு.வெங்கடேசன் எம்.பி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘சுதந்திர போராட்ட வீரரும் – தமிழக கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்த தலைவர்களில் ஒருவருமான அன்புத் தோழர் இரா.நல்லகண்ணு அவர்களுக்கு தகைசால் தமிழர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. புரட்சி வாழ்த்துக்கள் தோழர்’ என பதிவிட்டுள்ளார்.