ரூ.5,52,73,825 கடன் பாக்கிக்காக தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு சொந்தமான சொத்துக்கள் ஏலத்துக்கு விடப்படுவதாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அறிவித்தது. இந்த நிலையில் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் துவரங்குறிச்சியில் பேசினார் .அப்போது அவர் பேசுகையில்,ஊழல் செய்த பணத்தில் பிரச்சனை வரவில்லை.உழைத்த பணத்தை வைத்து மாணவர்களுக்கு கல்வி சேவை வழங்கியதில் பிரச்சனை வந்துள்ளது, நிச்சயம் இதை சரிசெய்வோம். நான் வந்ததை வாரிசு அரசியல் என்கிறார்கள், தேமுதிக உற்சாகமான நேரத்தில் வரவில்லை, சோதனை காலத்தில் தான் வந்துள்ளேன் என்று பேசினார்.
பிரதமர் நரேந்திர மோடி நிதி ஆயோக் கூட்டம் நடைபெற்றது.இதில் பல்வேறு மாநில முதல்வர்கள் பங்கேற்றனர். இந்நிலையில் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில், நிதி ஆயோக் கூட்டத்தில், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்குவது தொடர்பாக நாடாளுமன்றத்தில் சட்டவரைவை கொண்டு வர வேண்டுமென பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளோம் என்று முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
பூஜை, யாகத்தை மட்டுமே நம்பி இருக்க கூடாது என்று காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் கூறுகையில்,தமிழ்நாடு முழுவதும் குடிநீர் பிரச்னை உள்ளது, ஆனால் தண்ணீர் பிரச்னை இல்லை என்று கூறுவது மக்களுக்கு வெறுப்பை உண்டாக்கும். பூஜை, யாகம் நடத்தினால் நல்லது, அதற்காக பூஜை, யாகத்தை மட்டுமே நம்பி இருக்க கூடாது. நிதியை ஒதுக்கி தண்ணீர் பிரச்னையை தீர்க்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் நிதி அமைச்சகம் சார்பில் நாட்டிற்கான மொத்த பட்ஜெட் தயாரிப்பது பெரும் சவாலாக இருக்கும் என்று நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளார். நிதி அமைச்சகம் சார்பில் மத்திய அரசின் பட்ஜெட் தயாரிப்பு நேற்று தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. வரும் ஜூலை 5ம் தேதியன்று நாடாளுமன்ற அவையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. பட்ஜெட் தயாரிப்பு குறித்து நிர்மலா சீதாராமன் கூறுகையில், முந்தைய அமைச்சரவையில் பாதுகாப்பு துறையின் அமைச்சராக இருந்த பொழுது எதிர்கொண்ட சவால்களை […]
சென்னையில் குளம், ஏரிகளை தூர் வாரி வரும் ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகளை கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான நல்லகண்ணு அவர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். சென்னை நங்கநல்லூர்,சிட்லபாக்கம் உட்பட்ட பகுதிகளில் இருக்கும் குளம் மற்றும் ஏரிகளை காஞ்சிபுரம் மாவட்டம் மற்றும் தென் சென்னை மாவட்ட பகுதிகளை சேர்ந்த ரஜினி ரசிகர் மற்ற நிர்வாகிகள் சுத்தப்படுத்தினர். இதனை அறிந்த நல்லகண்ணு அவர்கள் அவர்களை நேரில் சென்று சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். இதனை குறிப்பிட்டு கருத்து தெரிவித்துள்ள […]
தண்ணீர் பிரச்னை பற்றி நாடாளுமன்றத்தில் பேச போதிய அவகாசம் தரவில்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும்,எம்.பியுமான திருமாவளவன் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களை திருமாவளவன் சந்தித்தார் .அப்போது அவர் கூறுகையில்,தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பிரச்னையை மத்திய அரசு தீர்க்க வேண்டும் .தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பிரச்னை பற்றி நாடாளுமன்றத்தில் பேச போதிய அவகாசம் தரவில்லை. தண்ணீர் பிரச்னைக்கு தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக தினமும் 10 மில்லியன் லிட்டர் தண்ணீர் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார். இந்த நிலையில் முதலமைச்சரின் கருத்துக்கு திமுக பொருளாளர் துரைமுருகன் கருத்து தெரிவித்தார்.அவர் கூறுகையில், ஜோலார்பேட்டையில் இருந்து ரயில் மூலம் காவிரி கூட்டு குடிநீரை கொண்டு சென்றால் போராட்டத்தை சந்திக்க நேரிடும் என்று கூறியதாக தகவல் வெளியானது. ஆனால் தற்போது அந்த தகவலை துரைமுருகன் மறுத்துள்ளார்.அவர் கூறுகையில், ஜோலார்பேட்டையில் இருந்து தண்ணீர் […]
இறைவன் அருளால் மழை பெய்து வறட்சி நீங்கும் என்ற நம்பிக்கை உள்ளது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில், பருவமழை பொய்த்துள்ள நிலையில் தமிழ்நாடு முழுவதும் வறட்சி நிலவுகிறது. இறைவன் அருளால் மழை பெய்து வறட்சி நீங்கும் என்ற நம்பிக்கை உள்ளது. மழைநீர் சேகரிப்பு திட்டத்தை விரிவுபடுத்தி அதனை கட்டாயமாக்குவோம். காங்கிரஸ் கட்சி 1967 க்குப்பிறகு யார் தோளிலாவது ஏறி சவாரி செய்வது வழக்கம் எதிர்க்கட்சியாக நாங்கள் திமுகவை பார்க்கிறோம். ஆனால் […]
மக்களுக்கு தேவையான அளவு குடிநீர் வினியோகம் செய்யப்படுகின்றது என்று துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். சென்னையில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில், தமிழகத்தில் பருவ மழை பொய்த்துவிட்டதால், குடிநீர் பற்றாக்குறை தான் ஏற்பட்டுள்ளதே, தவிர குடிநீர் பஞ்சம் ஏற்படவில்லை.மக்களுக்கு தேவையான அளவு குடிநீர் வினியோகம் செய்யப்படுகின்றது . டெல்டா பகுதிகளில் நீர் நிலைகளை தூர்வார மத்திய அரசிடம் ரூ17,600 கோடி கேட்கப்பட்டுள்ளது. இதனை பரிசீலித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுமென்று மத்திய அரசு கூறியுள்ளது என்று […]
ஜோலார்பேட்டையில் இருந்து ரயில் மூலம் காவிரி கூட்டு குடிநீரை கொண்டு சென்றால் போராட்டத்தை சந்திக்க நேரிடும் என்று திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்தார். இந்நிலையில் இது தொடர்பாக அமைச்சர் சி.வி.சண்முகம் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், தமிழகத்தில் இருந்து கொண்டு, மற்றொரு ஊருக்கு தண்ணீர் தர மாட்டேன் என்று கூறுபவர்களுக்கு, சமுதாயம் மீது என்ன அக்கறை உள்ளது? என்று துரைமுருகனுக்கு, அமைச்சர் சி.வி.சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார்.மேலும் இவர்களே இப்படி கூறினால், கர்நாடகத்தில் இருந்து மட்டும் எப்படி தண்ணீர் தருவார்கள் என்றும் […]
ஊடகங்களில் நடுநிலை திரும்பும் வரை ஊடக விவாதங்களில் பாமக பிரதிநிதிகள் பங்கேற்க மாட்டார்கள் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்து உள்ளார் இது தொடர்பாக அவர் பேசுகையில் செய்தித் தொலைக்காட்சிகளில் நடத்தப்படும் விவாதங்களில் நடுநிலையையும், அறத்தையும் தேட வேண்டியிருக்கிறது. ஊடகங்களில் நடுநிலை திரும்பும் வரை ஊடக விவாதங்களில் பாமக பிரதிநிதிகள் பங்கேற்க மாட்டார்கள் என்று தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் குடிநீர் பற்றாக்குறை தான் ஏற்பட்டுள்ளது .குடிநீர் பஞ்சம் ஏற்படவில்லை என்று துணைமுதல்வர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பேசுகையில் தமிழகத்தில் குடிநீர் பற்றாக்குறை தான் ஏற்பட்டுள்ளது, குடிநீர் பஞ்சம் ஏற்படவில்லை என்று தெரிவித்தார்.மேலும் மழை வேண்டியாகம் நடத்தியது கட்சி சார்பில் தான் அரசின் சார்பாக நடைபெறவில்லை என்றும் தெரிவித்தார்.
அரசு அதிகாரிகள் முதல் எம்.எல்.ஏ,அமைச்சர்கள் மற்றும் முதல்வர்கள் உட்பட அனைவரும் ஒவ்வொரு கிரமங்களுக்கே சென்று மக்களின் குறைகளை கேட்டறிய “கிராம வஸ்தா” திட்டத்தை கர்நாடக மாநில முதல் குமாரசாமி அவர்கள் இன்று தொடங்கி வைத்துள்ளார். கர்நாடக மாநிலம் யாத்திர் மாவட்டம் குட் மிட்கல் கிராமத்திற்கு சென்ற முதல்வர் அங்கு மக்களிடையே இருக்கும் குறைகளை கேட்டறிந்து அதற்கான நடவடிக்களை உடனடியாக எடுத்தார். பின்னர் பேசிய முதல்வர், எங்களுக்கு களப்பணிகள் தன முக்கியம் என்றும் மக்களுக்கு நன்மை பயக்கும் வகையிலே […]
தண்ணீர் பிரச்னையை கண்டித்து திருச்சியில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில் திமுகவின் கே.என்.நேரு பேசுகையில், காங்கிரசுக்கு இன்னும் எத்தனை காலம்தான் திமுக பல்லாக்கு தூக்குவது? என்றும் உள்ளாட்சித் தேர்தலில் திமுக தனித்துப் போட்டியிட வேண்டும் என்று பேசினார்.இவரது பேச்சு திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி இடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.மேலும் திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி முறிவா என்றும் கேள்வி எழுந்தது. இதன் பின்னர் இது தொடர்பாக கே.என்.நேரு விளக்கம் அளித்தார்.அப்போது கூறுகையில்,உள்ளாட்சி தேர்தலில் திமுக தனித்துப் […]
மத்திய அரசின் பட்ஜெட் தயாரிப்பிற்கு முன் நடக்கும் அல்வா குடுக்கும் நிகழ்வு புதுடில்லியில் இன்று நடைபெற்றது. இதில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் கலந்து கொண்டு அனைவருக்கும் அல்வா வழங்கினார். ஒவ்வொரு வருடமும் மத்திய அரசின் நிதி பட்ஜெட் தயாரிக்கும் செய்யும் முன்பு அல்வா குடுக்கும் வழக்கம் இருந்து வருகிறது.இந்திய கலாச்சாரம் படி எந்த ஒரு நல்ல விஷயம் தொடங்கும் முன்பு இனிப்பு வழங்கப்படும்.அதே போல், இந்த முறை புதிய அமைச்சரவை சார்பில் வரும் […]
சென்னையில் நிலவும் கடும் குடிநீர் தட்டுப்பாட்டை தீர்ப்பதற்காக தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது.இதில் பேசிய முதல்வர் தொடர்ந்து சில வருடங்களாக பருவமழை பொய்த்து போனதால் சென்னையில் நிலத்தடி நீரானது வெகுவாக குறைந்து விட்டது. இனி வரும் நாட்களில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கும் வகையில் தமிழக அரசு 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக தினமும் 10 மில்லியன் லிட்டர் தண்ணீர் கொண்டுவர நடவடிக்கை […]
சென்னையில் கூடுதலாக தண்ணீர் பிரச்சினை உள்ளது என்று அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார். கோவையில் அமைச்சர் வேலுமணி செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில், தமிழகம் முழுவதும் மழைவேண்டி சிறப்பு யாகம் நடந்து வருகிறது, நல்ல மழை வந்து மக்களை காப்பாற்றும்.சென்னையில் கூடுதலாக தண்ணீர் பிரச்சினை உள்ளது, அதை அரசு சமாளிக்கிறது. 198 நாட்கள் மழை பொழியவில்லை, தண்ணீர் பஞ்சம் இல்லை என்று நான் கூறவில்லை .காவிரி, கிருஷ்ணா போன்ற அணைகளில் இருந்து நீர் கேட்டு வருகிறோம் என்று அமைச்சர் வேலுமணி […]
உதயநிதி ஸ்டாலினுக்கு பதவி கொடுப்பது பற்றி திமுக தலைவர் ஸ்டாலின் முடிவு செய்வார் என்று திமுகவின் முன்னால் அமைச்சர் வெள்ளகோவில் சாமிநாதன் தெரிவித்துள்ளார். திமுகவை பொருத்தவரை கருணாநிதிக்கு பின்னர் அவரது மகன் மு.க.ஸ்டாலின் திமுக தலைவராக பதவி வகித்து வருகிறார்.அவருக்கு அடுத்து திமுக தலைமை பதவி யாருக்கு கிடைக்கும் என்று கேள்விக்கு முதலில் பரிந்துரையாவது ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் தான்.அந்த வகையில் சமீபத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு திமுக இளைஞரணி செயலாளர் பதவி வழங்கப்படும் என்ற தகவல் […]
சில நாட்களுக்கு முன் ஓமன் வளைகுடாவில் என்னை தங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது தெரியாத நபர்களால் தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்கு காரணம் ஈரான் நாடுதான் என சவுதி அரேபியா குற்றம்சாட்டியிருந்தது. ஆனால், ஓமன் வளைகுடாவில் எண்ணெய் டேங்கர்களை தாக்கியது நாங்கள் இல்லை என ஈரான் கூறியிருந்தது. இந்தக் கூற்றை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மறுத்திருந்தார். இது தொடர்பாக சவூதி அரேபிய நாட்டு இளவரசர் முகமது பின் சல்மான் கூறுகையில், ‘ நாங்கள் போரை விரும்பவில்லை. ஆனால், […]