தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பிரச்சினை மக்களவையில் விவாதிக்க தி.மு.க. நோட்டீஸ் அளித்துள்ளது இந்நிலையில் இது குறித்து தெரிவித்த பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா வள்ளுவர் கோட்டம், மதுரை உயர்நீதிமன்ற கட்டிடம் தாலுகா அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், பஸ் நிலையம் எல்லாம் ஏரிகளை ஆக்கிரமித்து கட்டியதால் தண்ணீர் பற்றாக்குறை என்று டெல்லியில் உள்ளவர்களுக்கு தெரியாது என்பதால் அங்கு விவாதமா?என்று திமுவிற்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
2014 தேர்தலில் கொடுத்த பல வாக்குறுதிகளை மத்திய அரசு நிறைவேற்றவில்லை என்று திமுக எம்.பி டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார். மக்களவையில் திமுக எம்.பி டி.ஆர்.பாலு பேசினார்.அப்போது அவர் பேசுகையில், எதிர்க்கட்சிகளின் பலவீனத்தாலேயே பாஜக ஆட்சிக்கு வர முடிந்தது . 2014 தேர்தலில் கொடுத்த பல வாக்குறுதிகளை மத்திய அரசு நிறைவேற்றவில்லை. 12-ம் வகுப்பில் மாநில பாடத்திட்டத்தில் பயின்ற ஒரு மாணவன், எப்படி சிபிஎஸ்இ கல்வி முறையில் அமைக்கப்பட்ட நீட் தேர்வை எழுத முடியும். நீட் தேர்வை அறவே ஒழிக்க மத்திய […]
கர்நாடக விவசாயிகளே தண்ணீர் கேட்டு ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர் என்று கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் சிவக்குமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் சிவக்குமார் கூறுகையில், தற்போது வரை கர்நாடக அணைகளில் நீர்வரத்து அதிகரிக்கவில்லை. இதை இன்று நடைபெறும் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தெரிவிப்போம். கர்நாடக விவசாயிகளே தண்ணீர் கேட்டு ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தண்ணீர் திறப்பது முடியாத காரியம் என உறுதி பட தெரிவிப்போம் என்று கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
கிராம புறங்களிலும் குறைந்த விலையிலான மருந்தகங்களை திறக்க வேண்டும் என்று ரவீந்திரநாத் எம்.பி. தெரிவித்துள்ளார். மக்களவையில் ரவீந்திரநாத் எம்.பி. பேசினார் .அப்போது அவர் பேசுகையில், நாட்டில் பெரிய சவாலாக இருப்பது வேலைவாய்ப்பின்மை.கிராம புறங்களிலும் குறைந்த விலையிலான மருந்தகங்களை திறக்க வேண்டும்.தமிழகத்தில் கல்வி உரிமை சட்டம் சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது. பருவமழை பொய்த்ததால் தமிழகத்தில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது
பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி இனி அனைத்து தேர்தல்களிலும் எமது கட்சி தனித்தே போட்டியிடம் என்று தெரிவித்துள்ளார். இது குறித்து மாயாவதி தெரிவிக்கையில் அடுத்து வரும் தேர்தல்களில் தனித்து தேர்தலை எதிர்கொள்ள இருப்பதாக அறிவித்துள்ளார்.அதே போல் எதிர்காலத்திலும் தனது கட்சி தனித்தே போட்டியிடும் என்று தெரிவித்துள்ளார். அண்மையில் நடந்த மக்களவை தேர்தலில் உ.பியில் பரம எதிரி கட்சியாக இருந்து வந்த சமாஜ்வாதி கட்சியுடன் பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்நோக்கியது ஆனால் தேர்தலில் […]
உடனடிக் கவனம் பெற வேண்டிய பிரச்சினைகளை மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவிக்கையில் குடிநீர் பஞ்சம் ஆரம்பித்து தற்பொழுது உள்ள வேலையில்லாத் திண்டாட்டங்கள் வரை தமிழ்நாட்டில் நிலவுகின்ற ஒவ்வொரு அவலமும் பற்றி வருகின்ற சட்டமன்றக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் ஸ்டாலின் தெரிவித்தார். மேலும் மக்களின் உடனடிக் கவனம் பெற வேண்டிய பிரச்சினைகள் எனக் கருதுவதை VoiceofTN@dmk.in என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள் என்று திமுக தலைவர் ஸ்டாலின் பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்
குஜராத் மாநில ராஜ்யசபா வேட்பாளரை பாஜக அறிவித்துள்ளது. பாஜகவில் இணைந்த வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை குஜராத் மாநில ராஜ்யசபா வேட்பாளராக பாஜக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளார்.இவர் அண்மையில் மத்திய அமைச்சரவையில் பதவி வகித்து வரும் நிலையில் தற்போது வேட்பாளாராக களமிறங்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஜெய்சங்கர் நாளை மனு தாக்கல் செய்ய உள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் தொடர்பாக கொறடா சக்கரபாணி இது குறித்து அவர் தெரிவித்துள்ளது ஜூன் 28ஆம் தேதி மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறும். சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் காலை 11 மணிக்கு இந்த கூட்டம் தொடங்குகிறது.இதில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று கொறடா சக்கரபாணி அறிவித்துள்ளார்.
அமமுக பொதுச்செயலாளரும் டிடிவி தினகரனுக்கும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் இடையே மோதலானது ஒரு ஆடியோ மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அமமுக கொள்கை பரப்பு செயலாளராக இருப்பவர் தங்க தமிழ்செல்வன். டிடிவி தினகரனுக்கு நெருக்கமான நட்பு வட்டாரத்தில் இருந்து வந்த இவர் கடந்த சில நாட்களாக விரக்தியில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் டிடிவி தினகரன் உதவியாளருடன் பேசும் ஆடியோ ஆனது வெளியாகியுள்ளது. வெளியான அந்த ஆடியோவில் ,டிடிவி தினகரனை பற்றி கடுமையாக விமர்சித்துள்ளார். டிடிவி தினகரன் […]
மேகதாது குறுக்கே அணை கட்ட துடிக்கும் கர்நாடக மாநில அரசின் அனுமதி கடிதத்தை நிராகரிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திரமோடி அவர்களுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் கடிதம் எழுதியுள்ளார். மேலும், தமிழக அரசு மற்றும் காவேரி வடிகால் வாரியம் ஒப்புதல் இல்லாமல் அனுமதி அளிக்க கூடாது என்று கோரிக்கையும் வைத்துள்ளார். மேலும், காவேரியின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்ட முயல்வது நடுவர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது என்றும் தெரிவித்துள்ளார். […]
விங் கமாண்டர் அபிநந்தனின் மீசையை தேசிய மீசையாக அறிவிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்டு துணிச்சலாக இருந்து மீண்டு வந்தவர் விமானப்படை வீரர் அபிநந்தன் ஆவர். கடந்த பிப்ரவரி மதம் நடந்த புல்வாமா தாக்குதலுக்கு பதிலடிக்க இந்திய ராணுவம் பாகிஸ்தான் ராணுவ எல்லையை பதன்கோட் பகுதியில் புகுந்து தாக்குதல் நடத்தினர். பின்னர் இந்திய எல்லையில் நுழைந்த பாகிஸ்தான் ராணுவ விமானங்களை விமானப்படை வீரர்கள் […]
அபிநந்தன் மீசையை மீசையை ‘தேசிய மீசை’யாக அறிவிக்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி.ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்துள்ளார். பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி காஷீமீர் புல்வாமா பகுதியில் நடைபெற்ற தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை அடுத்து இந்திய ராணுவம் விமானப்படையின் மூலம் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலின் போது, இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன், பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கி கொண்டார். பிறகு இவரை 58 மணிநேரம் கழித்து பாகிஸ்தான் […]
பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில், அக்கட்சியில் இணைந்தார் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர். தமிழகத்தை சேர்ந்த ஜெய்ஷங்கர் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டார்.இந்த நிலையில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர், பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் முறைப்படி அக்கட்சியில் இணைந்தார்.
ஜூலை 31 ஆம் தேதி வரை தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடைபெறுகிறது. தலைமை செயலகத்தில் சபாநாயகர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. அலுவல் ஆய்வுக்கூட்டத்தில் முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள், எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன், திமுக கொறடா சக்கரபாணி பங்கேற்றனர். சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராமசாமி, விஜயதாரணி, ஐயூஎம்எல் எம்எல்ஏ அபுபக்கர் ஆகியோரும் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் ஜூலை 31 ஆம் தேதி வரை சட்டப்பேரவை கூட்டத்தொடரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.வருகின்ற […]
உத்திரபிரதேச மாநிலத்தில் பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் சமாஜ்வாதி கட்சிகள் இணைந்து மக்களவை தேர்தலை சந்தித்தது.ஆனால் எதிர்பார்த்த வெற்றி இந்த கூட்டணிக்கு கிடைக்கவில்லை. இதற்கு ஏற்ற வகையில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.அதில், உத்தரபிரதேசத்தில் நடைபெறவுள்ள 11 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தனித்து போட்டி என்று அறிவித்துள்ளார்.மேலும் தனித்துப் போட்டியிட்டாலும் அகிலேஷ் உடனான நட்பு தொடரும் என்றும் தெரிவித்தார். மாயாவதி அறிவிப்பு தொடர்பாக லக்னோவில் செய்தியாளர்களை சந்தித்தார் சமாஜ்வாதி கட்சித் தலைவர் […]
குடம் இங்கே!தண்ணீர் எங்கே? என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தண்ணீர் பிரச்னைக்கு தீர்வு காண வலியுறுத்தி சென்னை சேப்பாக்கத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் போராட்டம் நடைபெற்றது.இந்தபோராட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.தண்ணீர் பிரச்னைக்கு தீர்வு காண வலியுறுத்தி சேப்பாக்கத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது அவர் கூறுகையில், குடம் இங்கே!தண்ணீர் எங்கே? என ஏற்பட்டுள்ள தண்ணீர் பிரச்னையை தமிழக அரசு தீர்க்க வேண்டும்.மழைக்காக அதிமுகவினர் யாகம் நடத்தவில்லை. தங்களது பதவியை காப்பாற்றவே யாகம் நடத்துகின்றனர்.தேர்தல் […]
கவிஞர் கண்ணதாசனின் 93வது பிறந்த நாளையொட்டி சென்னை தியாகராய நகரில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சர்கள் ஜெயக்குமார், மாஃபா பாண்டியராஜன், கடம்பூர் ராஜூ உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். இதன் பின்னர் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்போது அவர் கூறுகையில்,குடிநீர் பிரச்சனையை தீர்க்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக திமுகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வந்த பின்னர் கூட்டணி கட்சிகள் பேசுவோம் என்று காங்கிரஸ் எம்.பி., திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். சென்னையில் காங்கிரஸ் எம்.பி., திருநாவுக்கரசர் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில், பெருவெள்ளம், மழை போன்றவற்றை தேசிய பேரழிவாக அறிவிப்பது போல் மழையில்லாமல் ஏற்பட்டுள்ள தண்ணீர் பஞ்சமும் தேசிய பேரிடர் தான். தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பிரச்சினையை தேசிய பேரிடராக அறிவித்து பேரிடர் நிதியில் இருந்து தேவையான நிதியை ஒதுக்க வேண்டும். உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வந்த பின்னர் கூட்டணி […]
வேலை செய்யவில்லை என்றால் தான் வாக்களிப்பீர்களா…? என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் பேசுகையில் கோவையில் பல திட்டங்களை செயல்படுத்தியும் அதிமுகவுக்கு மக்கள் வாக்களிக்காதது புதிராக உள்ளது மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்று தேர்தல் முடிவுகளை ஏற்றுக்கொள்கிறோம்.வேலை செய்யவில்லை என்றால் தான் வாக்களிப்பீர்களா.?என்று மக்களிடம் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கேள்வி எழுப்பினார்.
முதலமைச்சரின் கருத்துக்கு திமுக பொருளாளர் துரைமுருகன் கருத்து தெரிவித்தார்.அவர் கூறுகையில், ஜோலார்பேட்டையில் இருந்து ரயில் மூலம் காவிரி கூட்டு குடிநீரை கொண்டு சென்றால் போராட்டத்தை சந்திக்க நேரிடும் என்று கூறியதாக தகவல் வெளியானது. இது தொடர்பாக பாஜக தேசியச் செயலர் ஹெச்.ராஜா கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில் , ‘துரைமுருகன் எனக்கு மிகவும் நெருங்கிய நண்பர். அவர் இவ்வளவு கொடூரமாக இருப்பார் என்று நான் நினைக்கவில்லை’ என்று தெரிவித்துள்ளார்.