தங்க தமிழ்செல்வன் உட்பட யாரையும் பின்னால் இருந்து பாஜக இயக்கவில்லை என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில், இன்று ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஸ்டாலின் அன்று மீத்தேன் திட்ட பரிசோதனைக்கு ஏன் கையெழுத்திட்டார்? என்று கேள்வி எழுப்பியுள்ளார் .ஆளும் கட்சியாக இருந்தால் ஒரு நிலைப்பாடு, எதிர்க்கட்சியாக இருந்தால் ஒரு நிலைப்பாடா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். தங்க தமிழ்செல்வன் உட்பட யாரையும் […]
நாடு முழுவதும் ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்கிக்கொள்ள ஒரே நாடு : ஒரே ரேஷன் அட்டை திட்டம் என்று மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் தெரிவித்துள்ளார். டெல்லியில் இன்று மத்திய உணவுத்துறை அமைச்சகம் சார்பில் உணவுத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் தலைமையில் உயர் அதிகாரிகளுடன் விரிவான கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் ஒரே நாடு ; ஒரே ரேஷன் அட்டை என்ற திட்டம் செயல்படுத்த […]
காங்கிரஸ் கட்சியிலிருந்து ஏன் நீக்கினார்கள் என தெரியவில்லை என்று கராத்தே தியாகராஜன் தெரிவித்துள்ளார். கட்சிக்கு எதிராக செயல்பட்டதால் ஒழுங்கு நடவடிக்கை அடிப்படையில் தென் சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் கராத்தே தியாகராஜன் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். இதன் பின்னர் கராத்தே தியாகராஜன் கூறுகையில், காங்கிரஸ் கட்சியிலிருந்து ஏன் நீக்கினார்கள் என தெரியவில்லை. ப.சிதம்பரம் உள்ளிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர்களை சந்திக்க உள்ளேன். ராகுலை எதிர்த்து நான் பேசவில்லை’ ராகுலை எதிர்த்து நான் பேசவில்லை. பலமுறை என்னை காங்கிரஸில் […]
டெல்லியில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மன்மோகன் சிங்கை சந்தித்தார். காங்கிரஸ் ஆட்சிகாலத்தின் போது மத்திய நிதி அமைச்சராக மன்மோகன் சிங் பதவி வகித்தார்.17வது மக்களவையின் முதல் பட்ஜெட் ஜூலை 5ஆம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது.இதனை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். இந்நிலையில் இன்று நிர்மலா சீதாராமன் முன்னாள் பிரதமரும் ,காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங்கை சந்தித்தார். இந்த சந்திப்பு டெல்லியில் உள்ள மன்மோகன் சிங்கின் இல்லத்தில் நடைபெற்றது.
ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு அனுமதியளிக்கும் முடிவை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். ”காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவுகளின்படி 40.43 டி.எம்.சி தண்ணீரை திறந்துவிட கர்நாடக அரசுக்கு ஆணையிடுவதோடு – தமிழகத்தை பாலைவனமாக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு அனுமதியளிக்கும் முடிவையும் பாஜக அரசு கைவிட வேண்டும்”https://t.co/3goyNvCnpt – கழக தலைவர் @mkstalin அறிக்கை.#DMK4TN pic.twitter.com/tiiYft14KG — DMK (@arivalayam) June 27, 2019 திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் […]
கராத்தே தியாகராஜனை கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்வதாக காங்கிரஸ் அறிக்கை வெளியிட்டுள்ளது . தென் சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்து வருபவர் கராத்தே தியாகராஜன். இவர் அதிமுகவில் இருந்து விலகி காங்கிரஸ் இணைந்தார். சமீபத்தில் இவர் அளித்த பேட்டி ஓன்று திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு கராத்தே தியாகராஜன் பேட்டி அளித்தார்.அதில் மக்களவை தேர்தலில் காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றிபெற்றதால் உள்ளாட்சி தேர்தலில் 35 % இடங்கள் வழங்க […]
காஞ்சிபுரம் மாவட்டம் நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் 2 வது நிலையத்திற்கு, அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் பழனிசாமி. இந்த 2வது ஆலை நாள் ஒன்றுக்கு 150 மில்லியன் லிட்டர் கடல் நீரை குடிநீராக்கும் திறன் கொண்டது ஆகும். இதன் பின்னர் முதலமைச்சர் பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார் .அப்போது அவர் கூறுகையில்,பேரூரில் தினமும் 400 மில்லியன் லிட்டர் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தையும் செயல்படுத்த அரசு தீவிர நடவடிக்கை எடுக்கப்படும்.நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் 2வது ஆலை பணி 2021ல் முடிக்கப்பட்டு நீர் […]
வரும் ஜூலை 5ம் தேதியன்று நாடாளுமன்ற அவையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இதை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்.நிதி அமைச்சகம் சார்பில் மத்திய அரசின் பட்ஜெட் தொடர்பான கூட்டம் நடைபெற்றது. இந்த நிலையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூட்டிய பட்ஜெட் ஆலோசனைக் கூட்டத்தில் இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறைக் கூட்டமைப்பு தங்களின் பரிந்துரைகள் குறித்து கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளது .அதில், ஒவ்வொரு நிறுவனமும் தங்களின் ஊழியர்களுக்கான மருத்துவப் பரிசோதனை மற்றும் மருத்துவச் செலவுகளுக்கு வருடம் […]
காவிரி மேலாண்மை ஆணைய தலைவரின் உத்தரவு கண்டனத்திற்குரியது என்று அமமுக பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் தினகரன் கூறுகையில்,மழை பெய்வதை பொறுத்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டுமென்ற என்று காவிரி மேலாண்மை ஆணைய தலைவரின் உத்தரவு கண்டனத்திற்குரியது.கர்நாடக அரசு மேற்கொள்ளும் எதேச்சதிகார நடவடிக்கையை தடுத்து நிறுத்த காங்கிரஸ் தலைமையுடன் திமுக தலைவர் ஸ்டாலின் பேச வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.
ட்விட்டரில் அஜித் -விஜய் ரசிகர்கள் இடையே காரசார விவாதங்கள் மற்றும் கருத்துகள் வாகுவாதங்கள் நடைபெறும்.ஆனால் தற்போது காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சிகளை சேர்ந்த நடிகை இருவர் ட்விட்டரில் தங்களது கருத்துகளால் மோதிக்கொண்டுள்ளனர். இந்நிலையில் ட்விட்டரில் பாஜக கட்சியை சேர்ந்த நடிகை காயத்ரி மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த குஷ்பு இவர்கள் இருவருக்கும் இடையே ட்விட்டரில் சர்ச்சையான முறையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் குஷ்பு மற்றும் காயத்ரி ரகுராம் ஆகியோரின் வாக்குவாதம் நெட்டிசன்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமமுகவில் இருந்து ஒவ்வொருவராக விலகிச் செல்வது கட்சிக்கு நல்லதுதான் என்று தினகரன் தெரிவித்துள்ளார். இது குறித்து டிடிவி தினகரன் தெரிவிக்கையில் அமமுகவில் இருந்து ஒவ்வொருவராக விலகிச் செல்வது கட்சிக்கு நல்லது தான் தங்க தமிழ்ச்செல்வனை கட்சியில் இருந்து நீக்குவதாக ஏற்கனவே அறிவித்துவிட்டேன் இனி அவர் கூறுவதற்கெல்லாம் பதில் கூற முடியாது மற்றும் நாஞ்சில் சம்பத், செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் கட்சியில் இருந்து விலகியது நல்லது என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் தண்ணீர் பிரச்சினையை போக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்று அதிமுக எம்.பி.ரவீந்திரநாத் குமார் தெரிவித்துள்ளார். மக்களவையில் அதிமுக எம்.பி ரவீந்திரநாத் குமார் பேசினார்.அப்போது அவர் பேசுகையில், தமிழகத்தில் தண்ணீர் பிரச்சினையை போக்க, பல்வேறு நடவடிக்கைகள் மற்றும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன .எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தவறான தகவல்களை பரப்புகின்றனர் என்று அதிமுக எம்.பி.ரவீந்திரநாத் குமார் தெரிவித்துள்ளார்.
ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ரயிலில் குடிநீர் கொண்டுவருவது தொடர்பாக தெற்கு ரயில்வேக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது. ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு 6 மாத காலத்துக்கு குடிநீர் கொண்டு வருவதற்கான வேகன்களை வழங்குமாறு சென்னை ரயில்வேக்கு தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது மேலும் இது தொடர்பாக கடிதம் எழுதியுள்ளது.
திமுக, அதிமுகவில் சேரும் திட்டம் தற்போதைக்கு இல்லை என்று தங்க தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார். அமமுக பொதுச்செயலாளரும் டிடிவி தினகரனுக்கும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் இடையே மோதலானது ஒரு ஆடியோ மூலம் வெளிச்சத்திற்கு வந்தது.இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் தங்க தமிழ்செல்வன் ;செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில், திமுக, அதிமுகவில் சேரும் திட்டம் தற்போதைக்கு இல்லை.அமமுக தொடங்கியதில் எனக்கு உடன்பாடு கிடையாது, அதிமுக, இரட்டை இலை ஆகியவற்றை மீட்க வேண்டும் […]
குடிநீர் பிரச்சனை குறித்து தமிழகம் முழுவதும் ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது என்று அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது.இதனால் தமிழக மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.குறிப்பாக தலைநகர் சென்னை தடுமாறி வருகிறது. இதனிடையே அமைச்சர் வேலுமணி செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில், குடிநீர் பிரச்சனை குறித்து தமிழகம் முழுவதும் ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது,மழைநீர் சேகரிப்பு மிக முக்கியமான திட்டம், இது குறித்தும் ஆய்வு செய்யப்படுகிறது என்று அமைச்சர் வேலுமணி […]
ஜவுளித்துறைக்கு ரூ.76 கோடி ஊக்க தொகை வழங்குவதாக ஸ்மிரிதி இரானி உறுதி அளித்துள்ளார் என்று அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார். டெல்லியில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் மத்திய அமைச்சர் க ஸ்மிரிதி இரானியை சந்தித்தார்.இதன் பின்னர் அவர் கூறுகையில், தமிழக ஜவுளித்துறைக்கு ரூ.76 கோடி ஊக்க தொகை வழங்க கோரினோம்.பட்ஜெட் கூட்டத்தொடர் முடிந்த பிறகு வழங்குவதாக ஸ்மிரிதி இரானி உறுதி அளித்துள்ளார். தினகரனை தவிர வேறு யார் வேண்டுமானாலும் அதிமுகவுக்கு வரலாம் என்று அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூல் நகராட்சியில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டிருந்த கட்டிடங்களை இடிக்க நகராட்சி அலுவலர் உத்தரவிட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த இந்தூர் தொகுதி எம்.எல்.ஏ நகராட்சி அலுவலரை தாக்கியுள்ளார். இந்தூர் தொகுதி எம்.எல்.ஏ ஆக இருப்பவர் பாஜக மூத்த தலைவரான கைலாஷ் விஜய்வர்கியாவின் மகன் ஆகாஷ் விஜய்வர்கியா. நகராட்சியின் உத்தரவால் தனது ஆதரவாளர்களுடன் அங்கு வந்து ரகளையில் ஈடுபட்டுள்ளார். இதில் கோபமடைந்த ஆகாஷ் விஜய்வர்கியா அருகில் இருந்த கிரிக்கெட் மட்டையால் நகராட்சி அலுவலரை தாக்கியுள்ளார். […]
123.82 கோடி பேருக்கு, ஆதார் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். மக்களவையில் அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பேசினார்.அப்போது அவர் பேசுகையில், நாடு முழுவதும் மே 31 வரை 123.82 கோடி பேருக்கு, ஆதார் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் 7 கோடியே 37 லட்சத்து 57 ஆயிரத்து 492 ஆதார் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
சிறையில் உள்ள குர்மித் ராம் ரஹீம் சிங்கிற்கு விவசாயம் செய்வதற்காக 42 நாட்கள் பரோல் வழங்கப்பட்டுள்ளது. பலாத்கார வழக்கில் தேரா சச்ச சவுதா அமைப்பின் நிறுவனரான ராம் ரஹீம் சிங் குற்றவாளி என ஹரியானாவின் பஞ்ச்குலா சிபிஐ நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்தது. பலாத்கார வழக்கில் தேரா சச்ச சவுதா அமைப்பின் நிறுவனரான ராம் ரஹீம் சிங் குற்றவாளி என ஹரியானாவின் பஞ்ச்குலா சிபிஐ நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்தது. மேலும் பத்திரிக்கையாளர் கொலை வழக்கிலும் சுனோரியா சிறையில் தண்டனை […]
பாஜக அரசு மீது மக்கள் மிகப்பெரிய நம்பிக்கை வைத்துள்ளனர் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் பிரதமர் மோடி பேசினார்.அப்போது அவர் பேசுகையில், தாங்கள் வெற்றி பெறாவிட்டால் , இந்தியா தோல்வி அடைகிறது என காங்கிரஸ் நினைக்கிறது. காங்கிரஸ் கட்சியும் இந்தியாவும் ஒன்றா ? என்றும் நாங்களும் தோல்வி அடைந்திருக்கிறோம். ஆனால் வாக்குப் பதிவு இயந்திரத்தை குறை கூறியதில்லை. காங்கிரஸ் குறை கூறுவதை பார்க்கும் போது அவர்கள் மீது அவர்களுக்கு நம்பிக்கை இல்லை என தெரிகிறது. மக்கள் […]