இரயில்வேயில் காலியாகும் காவல் துணை ஆய்வாளர்கள், காவலர்கள் பணியிடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்படும் என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் இது தொடர்பாக கூறுகையில்,ரயில்வே பாதுகாப்புப் படையில் காலியாகும் 9,000க்கும் அதிகமான பணியிடங்களில் 50% பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும். காவல் துணை ஆய்வாளர்கள், காவலர்கள் பணியிடங்களில் 50% பெண்களுக்கு ஒதுக்கப்படும் என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
என் இறுதி மூச்சு இருக்கும் வரை டிடிவி தினகரன் மட்டும் தான் எனக்கு தலைவர் என்று அமமுக தலைமை நிலைய செயலர் பழனியப்பன் தெரிவித்துள்ளார். நேற்று அமமுகவில் இருந்து விலகி தங்க தமிழ்செல்வன் திமுகவில் இணைந்தார். இதனையடுத்து அமமுக தலைமை நிலைய செயலர் பழனியப்பன் திமுகவில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. இதன் காரணமாக அவர் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்துள்ளார்.அதில், என் இறுதி மூச்சு இருக்கும் வரை டிடிவி தினகரன் மட்டும் தான் எனக்கு தலைவர். அமமுகவில் […]
அமமுகவில் உள்ள எம்ஜிஆர், ஜெ. விசுவாசிகள் அதிமுகவில் இணைய வேண்டும் என்று சட்டப் பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்துள்ளார். சட்டப் பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில்,, அமமுகவில் உள்ள எம்ஜிஆர், ஜெ. விசுவாசிகள் அதிமுகவில் இணைய வேண்டும். மாற்று கட்சிக்கு சென்றவர்கள் மீண்டும் வந்தால் ஓபிஎஸ், ஈபிஎஸ் ஏற்றுக்கொள்வர் .கட்சியில் இருந்து விலகி வேறு கட்சிக்கு செல்பவர்களால் அதிமுகவிற்கு எந்த பாதிப்பும் இல்லை என்று சட்டப் பேரவை துணை […]
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. அந்த கட்சி தனியாக இந்தியாவில் மொத்தம் 52 தொகுதிகளில் மட்டுமே வெற்றி அடைந்தது. காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது சொந்த தொகுதியான அமேதியில் தோல்வியடைந்தார். இருந்தாலும் கேரளா வயநாட்டில் முதன்முதலாக போட்டியிட்டு வெற்றி அடைந்தார். இதனால் தோல்விக்கு பொறுப்பேற்று ராகுல் காந்தி தலைவர் பதவியை ராஜினாமா செய்வார் என்று செய்தி அதிகம் உலாவி வந்தது.மேலும் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்திலும் பதவியை ராஜினாமா […]
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்பது தாய்மடி அல்ல பேய் மடியே என்று அமமுக முன்னாள் கொள்கை பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத் அவர்கள் தெரிவித்துள்ளார். அமமுக வில் இருந்து விலகிய தங்க தமிழ்ச்செல்வன் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் தன்னை திமுகவில் இன்று இணைத்துக் கொண்டார். இது தொடர்பாக, அமமுக முன்னாள் கொள்கை பரப்பு செயலாளராக இருந்து விலகிய நாஞ்சில் சம்பத் கூறுகையில், இன்று டிடிவி தினகரன் தலைமையில் இருக்கும் அமமுக கட்சியானது தாய்மடி அல்ல […]
தங்க தமிழ்ச்செல்வன் திமுகவில் இணைந்தால் ஜீரோ என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தங்க தமிழ்ச்செல்வன் இணைந்தார்.இது தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், , திமுகவில் இணைந்தால் ஒரு நாள் ஹீரோ, அதிமுகவில் இருந்தால் ஒவ்வொரு நாளும் ஹீரோ.குடிநீர் தட்டுப்பாட்டை போக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.பொதுமக்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய அரசு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
ஜம்மு – காஷ்மீரில் குடியரசு தலைவர் ஆட்சியை மேலும் 6 மாதங்கள் நீட்டிக்க மக்களவையில் தீர்மானம் கொண்டு வந்தார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா . ஜம்மு – காஷ்மீரில் குடியரசு தலைவர் ஆட்சியை மேலும் 6 மாதங்கள் நீட்டிக்க மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்வைத்தார்.இதன் பின் குடியரசு தலைவர் ஆட்சியை மேலும் 6 மாதங்கள் நீட்டிக்க மக்களவையில் தீர்மானம் கொண்டு வந்தார்.மேலும் இந்த ஆண்டு இறுதிக்குள் ஜம்மு-காஷ்மீரில் சட்டப்பேரவை தேர்தலை நடத்த தேர்தல் […]
தன்மானத்தை இழந்து அதிமுகவில் சேர விரும்பவில்லை என்று திமுகவில் இணைந்த தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார். இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தங்க தமிழ்ச்செல்வன் இணைந்தார்.இதன் பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில், திமுக தலைவர் ஸ்டாலினால் மட்டுமே தமிழகத்துக்கு நல்லது செய்ய முடியும் என தேர்தல் முடிவு வந்துள்ளது. அதை ஏற்று நான் திமுகவில் இணைந்துள்ளேன்.மாற்றான் தோட்டத்து மல்லிக்கைக்கும் மணம் உண்டு என்ற அண்ணாவின் கொள்கையை கடைப்பிடிப்பவர் மு.க.ஸ்டாலின்.அதிமுகவில் இருந்த பலரும் திமுக வந்த […]
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் தங்க தமிழ்ச்செல்வன். அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் இடையே மோதலானது ஒரு ஆடியோ மூலம் வெளிச்சத்திற்கு வந்தது. வெளியான அந்த ஆடியோவில் ,டிடிவி தினகரனை பற்றி கடுமையாக விமர்சித்தார் தங்க தமிழ்செல்வன் .டிடிவி தினகரன், கட்சியை பற்றி தங்கதமிழ்ச்செல்வன் பேசிய ஆடியோ வைரலான நிலையில் விளக்கம் அளித்தார்.அதில், கட்சியை பற்றி நான் பேசியது உண்மைதான். என்னை பற்றி அவதூறு பரப்புவது ஏன்? […]
செந்தில்பாலாஜியை தொடர்ந்து தங்கதமிழ்ச்செல்வனும் அமமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைய உள்ளார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது . குறிப்பாக திமுகவின் தேனி மாவட்ட பொறுப்பாளர்கள் அண்ணா அறிவாலயம் வந்துள்ளனர். தங்கதமிழ்செல்வன் திமுகவில் இன்று இணைய உள்ளதாக கூறப்படும் நிலையில் திமுகவின் தேனி மாவட்ட நிர்வாகிகள் அண்ணா அறிவாலயத்தில் முகாமிட்டுள்ளனர். அமமுகவில் முக்கிய பொறுப்பில் இருந்த தங்க தமிழ்செல்வன், தினகரனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கட்சியில் […]
சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை வலியுறுத்த மாட்டோம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார் . இன்று தொடங்கிய தமிழக சட்டப்பேரவை மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டு தமிழக சட்டப்பேரவை ஜூலை 1ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.இதன் பின்னர் திமுக மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில், சபாநாயகர் தனபால் மீது கொடுத்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை எடுக்க வலியுறுத்த மாட்டோம்.அன்றைய சூழலில் தீர்மானம் கொண்டுவர வலியுறுத்தினோம், தற்போது அதை வலியுறுத்தப்போவதில்லை.மேலும் சபாநாயகர் மீது கொடுத்த நம்பிக்கை இல்லா […]
இன்று தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது. தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் சபாநாயகர் தனபால் தலைமையில் தொடங்கியது. மறைந்த சூலூர் அதிமுக எம்எல்ஏ கனகராஜ், விக்கிரவாண்டி திமுக எம்எல்ஏ ராதாமணிஆகியோருக்கு இன்று பேரவையில் இரங்கல் தெரிவித்த பின் அவை ஒத்திவைக்கப்படும். சனி, ஞாயிறு விடுமுறை நாட்களுக்குப் பின் மீண்டும் ஜூலை 1ஆம் தேதி பேரவை மீண்டும் கூடுகிறது.
நாடு நன்றாக இருக்க வேண்டும் என்று பிராத்தனை செய்வதில் என்ன தவறு இருக்க முடியும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்போது அவர் கூறுகையில், மழைக்காக அனைத்து மதத்தினரும் பிரார்த்தனை செய்கின்றனர்.நாடு நன்றாக இருக்க வேண்டும் என்று பிராத்தனை செய்வதில் என்ன தவறு இருக்க முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.தமிழக சுகாதாரத்துறை பின்னுக்கு சென்றதற்கு தற்போதைய அரசை மட்டும் குறை சொல்லாமல், திமுகவும் சேர்ந்து பொறுப்பு […]
இந்தியாவின் பொருளாதாரத்தில் வெளிநாடு வாழ் இந்தியர்களின் பங்கு அளப்பரியது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஜப்பானில் ஜி-20 மாநாடு நடைபெறவுள்ளது.இதில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி ஜப்பான் சென்றார்.அங்கு இந்தியர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசினார்.அப்போது அவர் பேசுகையில், இந்தியாவின் பொருளாதாரத்தில் வெளிநாடு வாழ் இந்தியர்களின் பங்கு அளப்பரியது . பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்திருப்பதால் பன்னாட்டு உறவுகளை வலுப்படுத்த முடியும் என்று பிரதமர் மோடி பேசினார்.
104 எண்ணெய் கிணறுகள் அமைப்பதற்கான சுற்றுச்சூழல் அனுமதியை மத்திய அரசு வழங்கக் கூடாது என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறுகையில்,காவிரி டெல்டாவில் மேலும் 104 எண்ணெய் கிணறுகள் அமைப்பதற்கான சுற்றுச்சூழல் அனுமதியை மத்திய அரசு வழங்கக் கூடாது .மக்களின் உணர்வுகளை மத்திய அரசுக்கு எடுத்துக்கூறி இத்திட்டத்தை தடுக்க தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் […]
முரசொலி மாறன் காலத்திற்கு பிறகு பெரிதாக உற்பத்தி திட்டங்கள் எதுவும் வரவில்லை என்று திமுக எம்.பி. டி.கே.எஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் டி.கே.எஸ் இளங்கோவன் பேசினார்.அப்போது அவர் பேசுகையில், தமிழக நலன்களை மத்திய அரசு கருத்தில் கொள்ள வேண்டும், முரசொலி மாறன் காலத்திற்கு பிறகு பெரிதாக உற்பத்தி திட்டங்கள் எதுவும் வரவில்லை.இந்த அரசு ஏராளமான அவசர சட்டங்களை கொண்டு வருகிறது என்று திமுக எம்.பி. டி.கே.எஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை பற்றி பொதுமக்கள் கருத்து தெரிவிக்க குடுக்கப்பட்டிருந்த கால அவகாசமானது நீட்டிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் புதிய கல்வி கொள்கையை அமல்படுத்த மத்திய பாஜக அரசு திட்டமிட்டது. இதற்கு பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு தயாரித்த புதிய கல்விக் கொள்கையின் வரைவானது கடந்த மாதம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. புதிய கல்விக் கொள்கை பற்றி கருத்து தெரிவிக்க […]
முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் , தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில துணை தலைவருமான குமாரதாஸ் அவர்கள் சற்று முன் மாரடைப்பால் காலமானார். கன்னியாகுமாரி மாவட்டம் கிள்ளியூர் தொகுதியில் இருந்து 1984,1991,1996 மற்றும் 2001 என்று தொடர்ந்து நான்கு முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர குமாரதாஸ். ஆரம்ப கால அரசியலில் ஜனதா தளம் கட்சியில் இருந்து இவர் காங்கிரஸ் கட்சியில் இணைந்து சட்டமன்ற உறுப்பினர் ஆனார். பிளவு, காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி தமிழ் மாநில […]
தங்க தமிழ்செல்வன், நாளை காலை திமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . பன்னீர்செல்வம் பிரிந்து சென்று எடப்பாடி பழனிச்சாமியுடன் ஒன்றாக இணைந்த பின் சசிகலா மற்றும் தினகரனை கட்சியை விட்டு நீக்கியது,கட்சியையும் சின்னத்தையும் பெற்று ஆட்சியை நடத்தி வருகிறது அதிமுக . இதனால் தினகரன் தானக்கென எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்பி -க்களை வைத்துகொண்டு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியைத் தொடக்கி அதற்கு டிடிவி.தினகரன் பொதுச்செயலாளராக இருந்து வருகிறார்.சமீபத்தில் தினகரன் கட்சியில் இருந்து செந்தில்பாலாஜி […]