திமுகவின் இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நாளை அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. முரசொலி பத்திரிக்கையின் நிர்வாக இயக்குநராக உள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு முதல்முறையாக கட்சியில் பொறுப்பு வழங்கப்பட உள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது திமுக விற்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் தீவீர தேர்தல் பிரச்சாரங்களை செய்து வந்தார். திமுக மாபெரும் வெற்றி பெற்றதற்கு அவருக்கு பங்கும் இன்றியமையாதது என்று பலரும் தெரிவித்தனர். எதிர்காலத்தில் திமுகவின் பெரும் தலைவராக வருவார் என்று யூகித்த நிலையில் […]
துணை முதல்வர் மற்றும் 11 எம் எல் ஏக்கள் மீதான தகுதி நீக்க வழக்கு வரும் 30 ம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. சட்டசபையில் முதல்வர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை கடந்த 2017ம் ஆண்டு திமுக கொண்டு வந்தது. அப்போது, அதிமுக கட்சியினர் ஓபிஎஸ் – இபிஎஸ் என்று இரண்டு பிரிவாக இருந்து வந்தனர். சட்டசபையில் நடந்த வாக்கெடுப்பின் போது முதல்வருக்கு எதிராக வாக்களித்தனர். பின்னர் இரண்டு தரப்பினரும் ஒன்றாக இணைந்தனர். முதல்வருக்கு […]
சட்டமன்றத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களிடம் எழுப்பும் கேள்விகளுக்கு பதில் அளிப்பதை கண்டு நானே பலமுறை அசந்து போய் உள்ளதாக சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்தது என்று சபாநாயகர் அறிவித்ததும் குறுக்கிட்டு பேசிய துரைமுருகன் அவையில் கேள்வி நேரம் குறைக்க வேண்டும் என்று நன் கேட்டேன், நீங்கள் முடியாது என்று கூறினீர். ஆனால் , அந்த நீண்ட நேர கேள்வியின் பொது முதல்வரின் சம்பத்தப்பட்ட துறைகளுக்கு மட்டும் […]
அதிமுக தலைமை மீது அதிருப்தியில் இருந்த சட்டமன்ற உறுப்பினர் கலைச்செல்வன் இன்று முதல்வர் அவர்களை சந்தித்து தன்னை மீண்டும் அதிமுக வில் இணைத்துக் கொண்டார். கடந்த மாதம் வரை அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனின் ஆதரவாளராக இருந்து வந்தார். இதனால் சட்டமன்ற சபாநாயகர் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், எம்.எல்.ஏ பதவியை பறிக்கவும் திட்டமிட்டார். அதற்கு தடைகோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் கலைச்செல்வன். இது ஒருபுறம் இருக்க, நடந்து முடிந்த நாடாளுமன்றத்தில் அமமுக படுதோல்வி அடைந்தது. இதைக் […]
காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவராக மோதிலால் வோரா நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைத்துள்ளது.ஆனால் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்துள்ளது.எனவே காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு நான் தான் பொறுப்பு என்று கூறி அக்கட்சியின் தலைவராக இருந்த ராகுல் காந்தி தனது பதவியை ஏற்கனவே ராஜினாமா செய்துவிட்டதாக கூறினார்.மேலும் உடனடியாக புதிய தலைவரை தேர்வு செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். இந்த […]
கடந்த சில நாட்களாக தினகரனின் அமமுக கட்சியில் இருந்து முக்கிய நிர்வாகிகளான செந்தில் பாலாஜி ,தங்க தமிழ்செல்வன் உள்ளிட்டோர் மாற்று கட்சியில் இணைந்தனர்.மேலும் அமமுகவில் இருந்து விலகி இசக்கி சுப்பையாவும் அதிமுகவில் இணையவுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த நிலையில் அமமுக பொதுச்செயலாளர் தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், அமமுகவில் இருந்து சென்றவர்கள் எல்லாம் தளபதிகள் இல்லை.அவர்கள் நிர்வாகிகள்தான் அதிமுகவுக்கு போக முடிவு எடுத்த பிறகுதான் அமமுகவில் இருந்து விலகியுள்ளார் இசக்கி சுப்பையா என்று தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவரை உடனடியாக தேர்வு செய்ய வேண்டும் என்று ராகுல் காந்தி கோரிக்கை விடுத்துள்ளார். நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது.காங்கிரஸ் கட்சி தனியாக இந்தியாவில் மொத்தம் 52 தொகுதிகளில் மட்டுமே வெற்றி அடைந்தது. காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது சொந்த தொகுதியான அமேதியில் தோல்வியடைந்தார். இருந்தாலும் கேரளா வயநாட்டில் முதன்முதலாக போட்டியிட்டு வெற்றி அடைந்தார். இதனால் தோல்விக்கு பொறுப்பேற்று ராகுல் காந்தி தலைவர் பதவியை ராஜினாமா […]
தமிழகத்தில் எந்த ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கும் அனுமதி இல்லை என்று பேரவையில் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் உறுதியளித்துள்ளார். இன்று தமிழக சட்டப்பேரவை நடைபெற்று வருகிறது.இன்று பேரவையில் திமுக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தது .இந்த தீர்மானத்திற்கு சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் பதில் அளித்தார்.அதில் தமிழகத்தில் எந்த ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கும் அனுமதி இல்லை .எந்த நிறுவனத்திற்கும் தமிழகத்தில் அனுமதி வழங்கப்படவில்லை. ஓ.என்.ஜி.சி அனுமதி கோரியும் தமிழக அரசு ஒப்புதல் தரவில்லை என்று சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் […]
விழுப்புரம் தொகுதி எம்.பி.ரவிக்குமார் உச்சநீதிமன்றத் தீர்ப்புகளைத் தமிழிலும் வழங்க கோரிக்கை விடுத்து நோட்டீஸ் ஒன்றை மக்களவையில் அளித்துள்ளார். விழுப்புரம் தொகுதி எம்.பி.ரவிக்குமார் வெளியிட்ட அறிவிப்பில்,உச்சநீதிமன்றத் தீர்ப்புகளைத் தமிழிலும் வழங்க கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வரக்கோரி மக்களவையில் நோட்டீஸ் அளித்துள்ளேன்.மேலும் வெளிய கவன ஈர்ப்புத் தீர்மானம் உச்சநீதிமன்றத் தீர்ப்புகளை இந்தி, அசாமி, ஒடியா, தெலுங்கு, கன்னடம் ஆகிய மாநில மொழிகளிலும் வெளியிடுவதென்று உச்சநீதிமன்றம் முடிவெடுத்துள்ள நிலையில் செம்மொழியான தமிழ் இந்தப் பட்டியலில் விடுபட்டிருப்பது அநீதி என்றும் தெரிவித்துள்ளார். […]
மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,சசிகலா, தினகரனை தவிர வேறு யார் வந்தாலும் அதிமுகவில் சேர்த்துக் கொள்வோம்.தனிமரம் தோப்பு ஆகாது என்பது தினகரன் விவகாரத்தில் நிரூபணம் ஆகியுள்ளது. மக்கள் விரும்பாத திட்டங்களுக்கு தமிழக அரசு ஆதரவு அளிக்காது .தமிழகம் குறித்து புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கூறிய கருத்துக்களை திரும்பப்பெற வேண்டும் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கக் கோரும் வழக்கை உச்சநீதிமன்றம் இன்று விசாரிக்கிறது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான அணியில் இருந்த ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் அரசு தலைமை கொறடாவின் உத்தரவை மீறி நம்பிக்கை தீர்மானத்துக்கு எதிராக வாக்கு அளித்தனர். இந்த விவகாரம்தொடர்பாக திமுக சார்பில் திமுக கொறடா சக்கரபாணி மற்றும் தங்க தமிழ்செல்வன் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். ஆனால் இந்த வழக்கு நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ளதால், விரைந்து விசாரிக்க வேண்டும் என்று […]
தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் பேசினார்.அப்பொழுது அவர் கூறுகையில், நீட் தேர்வு தரவரிசைப்பட்டியல் திட்டமிட்டு தாமதம், இது மாணவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளது நீட் தேர்வு. சமூக நீதியின் தொட்டிலான தமிழகத்தில், 69% இடஒதுக்கீட்டை நீர்த்துப்போகச்செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது . மருத்துவ படிப்புகளில் 25% இடங்களை உயர்த்திக்கொள்ளலாம் என மத்திய அரசு வெளியிட்டுள்ள கவர்ச்சியை நம்பி தமிழக அரசு ஏமாந்து விடக்கூடாது. பொருளாதாரத்தில் முன்னேறிய வகுப்பினருக்கு 10% இடஒதுக்கீடு என்பதில் அரசின் நிலைப்பாடு என்ன? […]
திமுக தலைவர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ. மாநிலங்களவை தேர்தலில் மதிமுக சார்பில் வைகோ போட்டியிடுவார் என உயர்நிலை குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றார் வைகோ. இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார் வைகோ.அப்பொழுது அவர் கூறுகையில்,மாநிலங்களவை தேர்தலில் எனக்கு வாய்ப்பு வழங்கிய திமுக தலைவர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தேன். பிரதமர் மோடியின் தமிழக வருகைக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம் நடத்துவது பற்றி சிந்திக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
17 வது மாநிலங்கவை தேர்தலில் கேரளாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே பெண் உறுப்பினர் ரம்யா ஹரிதாஸ் இவர் மார்க்கிஸ்ட் கமினிஸ்ட் கட்சியின் 36 ஆண்டு கால கோட்டையாக கருதப்பட்ட ஆலத்தூர் தொகுதியை காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தனது 32 வயதில் நாடாளுமன்ற உறுப்பினராக அடியெடுத்து வைத்த இவருடைய பின்னணி குறித்து நோக்கினால் கோழிக்கூட்டை சேர்ந்தவர் கடந்த 2011 ஆண்டு முதல் தனது அரசியல் பயணத்தை தொடங்கியவர். காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி நடத்திய […]
திமுக தலைவர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பெற்றார். மாநிலங்களவை தேர்தலில் மதிமுக சார்பில் வைகோ போட்டியிடுவார் என உயர்நிலை குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து திமுக தலைவர் மு க ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தொலைக்காட்சிகளிலும் விவாத நிகழ்ச்சிகளில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் இனி யாரும் கலந்து கொள்ள மாட்டார்கள் என்று பாஜக தமிழ் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் அவர்கள் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நடக்கும் அன்றாட அரசியல் நிகழ்வுகள் பொதுமக்களை பாதிக்கும் திட்டங்களை மையமாக கொண்டு தினமும் விவாதம் செய்யப்படுவது வழக்கம். ஆனால், சமீப காலங்களாக நடைபெறும் விவாத நிகழ்ச்சிகளில் சமநிலையும் மற்றும் சமவாய்ப்பும் வழங்காமல் ஒரு தரப்புக்கு சாதகமாகவே தொலைக்காட்சி நிறுவங்கள் செயல்படுவதாக தமிழிசை குற்றம் […]
இன்று முதல் அதிமுகவில் தொடர்ந்து செயல்படுவேன் என்று சட்டமன்ற உறுப்பினர் ரத்தினசபாபதி தெரிவித்துள்ளார். ரத்தினசபாபதி உள்ளிட்ட 3 எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.இன்று அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் ரத்தினசபாபதி முதலமைச்சர் பழனிசாமியை சந்தித்தார். தினகரன் ஆதரவாளர் என கருதப்பட்ட ரத்தினசபாபதி முதலமைச்சரை தலைமை செயலகத்தில் சந்தித்தார்.பின்னர் சபாநாயகர் தனபாலை சந்தித்தார். முதல்வர், சபாநாயகரை சந்தித்தபின் சட்டமன்ற உறுப்பினர் ரத்தினசபாபதி செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில், தடுமாறிப்போய் இருந்த என்னை மீண்டும் அதிமுகவில் இணைத்த பெருமை அமைச்சர் விஜயபாஸ்கரைத்தான் சேரும். […]
அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் ரத்தினசபாபதி முதலமைச்சர் பழனிசாமியை சந்தித்துள்ளர். ரத்தினசபாபதி உள்ளிட்ட 3 எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.இந்த நிலையில் அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் ரத்தினசபாபதி முதலமைச்சர் பழனிசாமியை சந்தித்துள்ளர். தினகரன் ஆதரவாளர் என கருதப்பட்ட ரத்தினசபாபதி முதலமைச்சரை தலைமை செயலகத்தில் சந்தித்தார்.
ஜூலை 18-ஆம் தேதி தமிழகத்தில் காலியாக உள்ள 6 இடங்களுக்கு மாநிலங்களவை தேர்தல் நடைபெறுகிறது.இதனால் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். திமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு வழக்கறிஞர் வில்சன் ,தொ.மு.ச சண்முகம் போட்டியிடுகிறார்.திமுக போட்டியிடும் மூன்று தொகுதிகளில் ஒரு தொகுதி மதிமுகவிற்கு ஒதுக்கப்பட்டது.மதிமுக சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ போட்டியிடுகிறார். இந்த நிலையில் மாநிலங்களவை தேர்தலுக்கான திமுக வேட்பாளர்கள் சண்முகம், வில்சன் வருகின்ற 6-ஆம் தேதி வேட்பு மனுத்தாக்கல் செய்ய உள்ளனர் […]
தமிழக சட்டப்பேரவை இன்று நடைபெற்றது.இதில் ஒரே நாடு ஒரே அட்டை விவகாரம் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார் திமுக சட்டமன்ற உறுப்பினர் எ.வ. வேலு . அதன் பின்னர் அவர் பேசுகையில்,ரேஷன் பொருட்கள் விநியோகத்தில் மாநிலத்துக்கு மாநிலம் வேறுபாடு உள்ளது. ஒரே நாடு ஒரே அட்டை திட்டத்தை அமல்படுத்தினால் அரசுக்கு பண சுமை ஏற்படும். பொது விநியோக திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த முடியாது என்று திமுக சட்டமன்ற உறுப்பினர் எ.வ. வேலு பேசினார்.