சென்னை : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்த ஆண்டு மதுரை மாவட்டத்தில், அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் போன்ற இடங்களில் ஜனவரி 14 முதல் 16 வரை ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுகின்றன.அவனியாபுரத்தில் வரும் 14-ந்தேதி , 15-ந்தேதி பாலமேடு, 16-ந்தேதி அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறவிருக்கிறது. ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறவுள்ள நாட்கள் நெருங்கியுள்ள நிலையில், அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்து கொள்ளும் மாடுபிடி வீரர்கள் போட்டியில் பங்கேற்பதற்கான விண்ணப்பங்கள் தொடங்கி நேற்று நிறைவடைந்தது. மதுரை மாவட்ட நிர்வாகம் […]
டெல்லி : கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடரின் போது ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டது. “ஒரே நாடு, ஒரே தேர்தல்” என்ற திட்டம், தேர்தலுக்கான உழைப்பு மற்றும் செலவினங்களை குறைக்க உதவும் என ஆதரவாளர்கள் ஒரு பக்கம் தெரிவிக்கின்றார்கள். மற்றோரு பக்கம் அரசியல் தலைவர்கள் பலரும் இந்த திட்டம் செயல்படுத்தபட்டால் இடைத்தேர்தல்களின் அவசியம் குறைவடையும், இதனை செயல்படுத்துவது சாத்தியமில்லாத ஒன்று என இதற்கு எதிர்ப்புகளை தெரிவித்து இருந்தார்கள். இந்த திட்டத்திற்கான மசோதா […]
நேபாளம் : மற்றும் திபெத் எல்லைப் பகுதியில் ஜனவரி 7, 2025 அன்று காலை 6:35 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கம், நேபாளத்தின் லாபுசே நகரிலிருந்து 93 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டது எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. திடீரென நிலநடுக்கம் ஏற்பட்ட காரணத்தால் நேபாளத்தின் காத்மாண்டு நகரில் மக்கள் அச்சமடைந்து வீடுகளை விட்டு வெளியேறினர். இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் இந்தியாவின் டெல்லி, பீகார், அசாம் உள்ளிட்ட பகுதிகளிலும் உணரப்பட்டன […]
சென்னை : இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் (இஸ்ரோ) புதிய தலைவராக கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த வி. நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் வரும் ஜனவரி 14, -ஆம் தேதி பதவியேற்க உள்ளார். அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு இஸ்ரோ தலைவராகப் பணியாற்றுவார். இஸ்ரோவின் தற்போதைய தலைவர் திரு சோம்நாத் அவர்களின் பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ள நிலையில், அவருக்கு அடுத்ததாக ஒரு தலைவர் நியமிக்கப்படவேண்டும் என்பதால் தற்போது, வி. நாராயணன் அடுத்த தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். அவரின் […]
டெல்லி : நேற்று (ஜனவரி 6) மைக்ரோசாஃப்ட் தலைமை செயல் அதிகாரி சத்யா நாதெல்லா, பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது இந்தியாவில் AI (செயற்கை நுண்ணறிவு) தொழில்நுட்ப முன்னேற்றம், பொதுவான தொழில்நுட்ப முன்னேற்றம் குறித்து பல்வேறு ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்பட்டது. இதனை அடுத்து இன்று சத்யா நாதெல்லா இந்தியாவில் AI தொழில்நுட்பம் சார்ந்து சுமார் 30 பில்லியன் அமெரிக்கா டாலர் (இந்திய ரூபாய் மதிப்பில் 25,718 கோடி) முதலீடு செய்ய […]
ஈரோடு : காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. அத்தொகுதிக்கு இன்று தேர்தல் வாக்குப்பதிவு தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி வரும் பிப்ரவரி 5ஆம் தேதி அங்கு தேர்தல் நடைபெற உள்ளது. ஜனவரி 10ஆம் தேதி முதல் ஜனவரி 17ஆம் தேதி வரையில் தேர்தலில் போட்டியிடவேட்பாளர்களிடம் இருந்து வேட்புமனுக்கள் பெறப்படும் என்றும், ஜனவரி 18இல் வேட்புமனு பரிசீலனை நடைபெறும் என்றும், ஜனவரி 20 ஆம் தேதி வேட்புமனு வாபஸ் பெற […]
நேபாளம்: நேபாளத்தில் லாபுசே நகரில் இன்று (ஜன,7) நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 6.35 மணியளவில், நேபாள், திபெத் எல்லையில் 7.1 ரிக்டர் அளவுகோளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதில், 93 கிலோமீட்டர் தொலைவில் ஏற்ப்பட்ட காரணத்தால் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்தனர். இந்த நிலநடுக்கத்தால் இந்தியா, நேபாளம், பூடான் ஆகிய நாடுகளில் பல இடங்களில் கட்டிடங்கள் குலுங்கின. தற்பொழுது, நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 95ஆக அதிகரித்தூள்ளது. மேலும் 130 பேர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலநடுக்கத்தால் நேபாளம், திபெத் பகுதிகளில் சேதமடைந்த […]
சென்னை : ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ இவிகேஎஸ்.இளங்கோவன் மறைவை அடுத்து அத்தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனை தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை அடுத்து தேர்தல் விதிகள் இன்று முதல் ஈரோடு கிழக்கு தொகுதியில் அமலானது. தேர்தல் வேலைகளிலும் பிரதான அரசியல் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த தொகுதியில் திமுக கூட்டணி சார்பாக காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களாக திருமகன் ஈவேரா, […]
சென்னை : ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ இ.வி.கே.எஸ்.இளங்கோவன் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உடல் நலக்குறைவால் உயிரிழந்ததை அடுத்து அத்தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து இன்று டெல்லி மாநில சட்டப்பேரவை தேர்தல் அறிவிப்பு வெளியானது. அதோடு, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அறிவிப்பும் வெளியானது. டெல்லி தேர்தல் நடைபெறும் அதே நாளான பிப்ரவரி 5ஆம் தேதியன்று ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொத்தி இடைத்தேர்தல் நடைபெறும் என்றும் பிப்ரவரி 8ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை […]
மதுரை: டங்ஸ்டன் திட்டத்தை முழுமையாக ரத்து செய்யக்கோரி, நரசிங்கம்பட்டியிலிருந்து மதுரை தபால் நிலையம் வரையில் முல்லை பெரியார் ஒருபோக பாசன விவசாயிகள் மற்றும் வியாபாரிகள், வணிகர்கள் சங்கம் மற்றும் 40 கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் சார்பில் பேரணி எழுச்சியோடு நடைபெற்றது. மேலும், மேலூரில் இருந்து தமுக்கம் அருகே அமைந்துள்ள மத்திய அரசின் தலைமை தமிழ் தபால் அலுவலகம் வரை பேரணியாக சென்றனர். இதனால் தல்லாகுளம் வழியாக தமுக்கம், கோரிப்பாளையம் செல்லும் சாலையில் சாலை முழுவதும் வாகனம் […]
டோக்கியோ: திபெத், நேபாளத்தை தொடர்ந்து, ஜப்பானிலும் 6.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. தெற்கு ஜப்பானில் உள்ள டோரிஷிமா தீவுப் பகுதியில் இன்று 6.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்நாட்டு வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. அந்நாட்டு உள்ளார் நேரப்படி மாலை 5:32 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம், டோரிஷிமா தீவுகளின் அருகிலுள்ள கடலில் உணரப்பட்டுள்ளது. ஜப்பானிய நில அதிர்வு அளவு 7 இல் 2 ஆக இருந்தது என்று ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவனம் (ஜேஎம்ஏ) […]
ஈரோடு : இந்திய தேர்தல் ஆணைய தலைமை அதிகாரி ராஜீவ் குமார் தற்போது 70 சட்டப்பேரவை தொகுதிகள் கொண்ட டெல்லி மாநில தேர்தல் தேதி விவரங்களையும், உ.பி மாநிலத்தில் ஒரு தொகுதி மற்றும் தமிழ்நாட்டில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தேதிகளையும் அறிவித்துள்ளார். அதன்படி, டெல்லி மாநில சட்டப்பேரவை தேர்தல் பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற உள்ளது. அதே தேதியில் இடைத்தேர்தல் வாக்குப்பதிவும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி முக்கிய தேர்தல் தேதி விவரங்கள் இதோ… வேட்புமனு […]
டெல்லி : தலைநகர் டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மியின் ஆட்சி காலம் அடுத்த மாதம் நிறைவடைய உள்ள நிலையில், டெல்லியில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் தேதிகள் இன்று அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, தற்போது இந்திய தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்தார். டெல்லி மாநில 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் பிப்ரவரி 5ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. தேர்தல் வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 8ஆம் தேதி […]
நீலகிரி : சீனாவில் 14 வயதுக்குட்பட்டோரை அதிகம் பாதித்துள்ள HMP வைரஸ் தொற்றானது இந்தியாவிலும் சிலருக்கு உறுதியாகியுள்ளது என தகவல்கள் வெளியாகின. கர்நாடகாவில் 2 குழந்தைகளுக்கும், குஜராத்தில் ஒரு குழந்தைக்கும் இந்த HMPV தொற்று முதலில் உறுதிசெய்யப்பட்டது. அதனை தொடர்ந்து, நேற்று சென்னையில் சேத்துப்பட்டு மற்றும் கிண்டி தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சல், சளி உள்ளிட்ட உடல்நல குறைவால் பாதிக்கப்பட்ட இரு குழந்தைகளுக்கு HMPV தொற்று இருப்பது உறுதியானது. இது சீனாவில் இருந்து பரவிய தொற்று அல்ல என்றும், இந்த […]
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘கூலி’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது, இப்படத்தின் பெரும்பகுதி அண்மையில் சென்னை மற்றும் விசாகப்பட்டினத்தில் முடிக்கப்பட்டது. இந்த நிலையில், கூலி படத்திற்காக ரஜினிகாந்த் சென்னையில் இருந்து தாய்லாந்து புறப்பட்டுச் சென்றார். இதையொட்டி, சென்னை விமான நிலையம் சென்ற அவரிடம் தமிழ்நாடு அரசியல் நிலவரம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப, “அரசியல் கேள்விகள் கேட்க வேண்டாம் என ஆல்ரெடி சொல்லிருக்கேன்” ஓகே, […]
நேபாளம்: இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், மீண்டும் நிலநடுக்கம் ஏற்ப்பட்டுள்ளது. இமயமலையின் அடிவாரத்தில் உள்ள நேபாளம் – திபெத் எல்லையில், இன்று (ஜன.7) காலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர், 60-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இன்று காலை நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.1ஆக பதிவாகி இருந்தது. ஏற்கெனவே, நிலநடுக்கம் ஏற்பட்ட அதே இடத்தில் மீண்டும் நில அதிர்வு ரிக்டரில் 4.5ஆக பதிவாகியுள்ளது. அதன்படி, […]
சென்னை : வரும் ஜனவரி 15, 16 தேதிகளில் மத்திய அரசின் தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் யுஜிசி – நெட் தேர்வு 30 பாடங்களுக்கு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனையடுத்து, பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவிருப்பதன் காரணமாக அந்த தேதியில் தேர்வு நடத்தக்கூடாது வேறு தேதிக்கு தள்ளி வைக்கவேண்டும் என தமிழகத்தை சேர்ந்த அரசியல் தலைவர்கள் பலரும் வேண்டுகோளை முன் வைத்து வருகிறார்கள். குறிப்பாக, சு.வெங்கடேசன் எம்.பி, தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் ஆகியோர் வேண்டுகோள் […]
சென்னை : சீனாவில் பாதிக்கும் HMPV தொற்றானது, தற்போது தமிழகத்திலும் பரவ தொடங்கியுள்ளது. சேலம் மாவட்டத்தை சேர்ந்த ஒருவருக்கும், சென்னையை சேர்ந்த ஒருவருக்கும் இந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட நிலையில், அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்து அளித்த பேட்டியில் பரவி வரும் HMPV தொற்று பாதிப்பு குறித்து பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” பரவி வரும் HMPV வைரஸ் குறித்து யாரும் அச்சமடைய வேண்டாம். இந்த வைரஸ் […]
சென்னை : சமீபத்தில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்ற சிந்துவெளி பண்பாட்டு கண்டுபிடிப்பு நூற்றாண்டு விழாவில் கருப்பு நிற துப்பட்டா அணிந்திருந்த மாணவிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக வெளியான தகவல் அரசியல் வட்டாரத்தில் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது. இந்த நிலையில், இதற்கு அரசியல் தலைவர்கள் பலரும் எதிர்ப்புகளை தெரிவித்து கண்டனங்களை பதிவு செய்து வருகிறார்கள். ஏற்கனவே, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனத்தை பதிவு செய்திருந்தார். அவரை தொடர்ந்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னையில் […]