சென்னை: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தனியார் பள்ளி கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்து 4 வயது சிறுமி பலியானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. தனியார் பள்ளி வளாகத்தில் சிறுமி லியா லட்சுமி விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது கழிவுநீர் தொட்டியின் இரும்பு மூடி உடைய, அவர் உள்ளே விழுந்து உயிரிழந்தார். இதனை அடுத்து, பள்ளி நிர்வாகம் அலட்சியமாக செயல்பட்டதால் தனது குழந்தை உயிரிழந்தது எனக் கூறி குழந்தையின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில், தனியார் […]
சென்னை : மத்திய அரசு வசூல் செய்யும் ஜிஎஸ்டி வரித்தொகையானது, மாதந்தோறும் மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும். அவ்வாறு இன்று டிசம்பர் மாதம் வரிப்பகிர்வு தொகையை தற்போது மத்திய அரசு வெளியிட்டுள்ளது. மொத்தம், ரூ.1,73,030 கோடி ரூபாயனது 2025 ஜனவரி மாதத்திற்கு மாநில வாரியாக பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் 2024இல் இந்த வரிப்பகிர்வு ரூ.89,086 கோடியாக மட்டுமே இருந்தது. இந்த முறை மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் நலன் சார்ந்த திட்டங்களுக்கு செலவிட இந்த முறை அதிக தொகை ஒதுக்கீடு […]
வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்வான பரமபத வாசல் எனும் சொர்க்கவாசல் திறப்பு அனைத்து வைணவ ஆலயங்களிலும் கோலாகலமாக திறக்கப்பட்டது. சென்னை :தமிழ்நாடு முழுவதும் அனைத்து வைணவ ஆலயங்களில் வைகுண்ட ஏகாதசியான இன்று சொர்க்கவாசல் திறக்கப்பட்டது .குறிப்பாக பூலோக வைகுண்டம் என போற்றப்படும் 108 வைணவ தலங்களில் ஒன்றான திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதன் கோவிலில் அதிகாலை 4:15க்கு பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு காலை 5:15 மணிக்கு பரமபதம் என அழைக்கப்படும் சொர்க்கவாசலில் எழுந்தருளினார். பெருமாள் ரத்தின அங்கி […]
சென்னை : சமீபகாலமாக விளைநிலங்களில் கட்டு பன்றிகள் நுழைந்து சேதம் ஏற்படுத்தி வருவதால் அதற்கு தகுந்த நடவடிக்கைகளை அரசு எடுத்துக்கொள்ளவேண்டும் என மக்கள் கோரிக்கைகளை வைத்து வந்தனர். இதனையடுத்து, இன்று நடைபெற்ற 5-வது நாள் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இதனை வலியுறுத்தி எம்எல்ஏக்கள் நடவடிக்கை எடுக்க கோரி பேசினார்கள். குறிப்பாக, தமிழக வாழ்வுரிமைக் கட்சி எம்.எல்.ஏ. வேல்முருகன் சட்டப்பேரவையில் பேசும்போது ” விளைநிலங்களில் கடும் சேதத்தை ஏற்படுத்தும் காட்டுப் பன்றிகளை வேட்டையாட அனுமதிக்க வேண்டும்” என கேட்டுக்கொண்டார். இதனையடுத்து, காட்டுப்பன்றிகளை […]
சென்னை : சட்டப்பேரவையின் 5-வது நாள் கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், அதில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான சட்டதிருத்த முன்வடிவை இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். குறிப்பாக, பெண்களை பின்தொடர்ந்தால் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். அது மட்டுமின்றி, பிணையில் கூட அவர்கள் வெளிவர முடியாத அளவுக்கு சட்ட திருத்தும் கொண்டு வரப்பட்டுள்ளது. அதைபோல, குறிப்பிட்ட சில குற்றங்களில் பாதிக்கப்பட்டோரின் அடையாளத்தை வெளிப்படுத்தினால் 3 முதல் 5ஆண்டு வரை சிறை […]
சென்னை: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், கட்சி மற்றும் கட்சியின் அடுத்தக்கட்ட நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக, வருகின்ற 2026 சட்டமன் தேர்தலை இலக்காக கொண்டு தமிழக வெற்றிக் கழகத்தின் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில், சென்னை பனையூரில் இன்று நடந்த தவெக மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டத்தில் விஜய் பங்கேற்கவில்லை. அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள் நியமனம், கட்சி உட்கட்டமைப்பு […]
டெல்லி: நடிகை தீபிகா படுகோன் சினிமாவில் நடிப்பது மட்டும் இல்லாமல், பல்வேறு சமூக நிகழ்வுகள், சர்ச்சை பேச்சுகள், சில நேரங்களில் சமூக அவலங்களுக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார். இந்த நிலையில், “வாரத்திற்கு 90 மணி நேரம் வேலை பார்க்க வேண்டும்” என ஊழியர்களுக்கு அறிவுறுத்திய L & T தலைவரை, பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் விமர்சித்துள்ளார். அதாவது, L&T (லார்சன் அண்ட் டூப்ரோ) நிறுவனதலைவர் எஸ்.என்.சுப்ரமணியன் “ஒரு வாரத்துக்கு 90 மணிநேரம் நீங்கள் வேலை […]
சென்னை : சட்டப்பேரவையின் 5-வது நாள் கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், அதில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான சட்டதிருத்த முன்வடிவை முதல்வர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்துள்ளார். “2025 தமிழ்நாடு பெண்ணிற்கு துன்பம் விளைவித்தலைத் தடை செய்கின்ற திருத்தச் சட்டம்” இன்று சட்டப்பேரவையில் அறிமுகம் செய்யப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். பெண்களுக்கு எதிராக நடைபெற்று வரும் பிரச்சினைகளை கருத்தில் கொண்டு அதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதற்காக தண்டனைகளை கடுமையாக்குவது தொடர்பான மசோதாவை முதல்வர் ஸ்டாலின் தாக்கல் […]
சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையின் இன்றயை நிகழ்வுகளில் பங்கேற்க வந்த திமுக சட்டமன்ற உறுப்பினர்கள், ‘இவன்தான் அந்த சார்’ என அண்ணா நகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான அதிமுக நிர்வாகி சதீஷ் படத்துடன் வருகை தந்துள்ளனர். எனினும், சட்டப்பேரவைக்குள் செல்வதற்கு முன்பு, கோஷமிட்ட அவர்கள் இந்த போஸ்டரை அவைக்குள் எடுத்துச்செல்லவில்லை. தொடர்ந்து 3 நாட்களாக தமிழக சட்டமன்றத்திற்கு கருப்பு நிற சட்டை அணிந்து வந்த அதிமுகவினர், அண்ணா பல்கலைகழக மாணவி வன்கொடுமை வழக்கில் ‘யார் அந்த […]
சென்னை: விஜயின் தமிழக வெற்றிக்கழக மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் சென்னை பனையூர் அலுவலகத்தில் இன்று நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்க மாவட்டத் தலைவர்கள் மற்றும் அணித் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்டச் செயலாளர்கள் குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ள நிலையில், பொதுச் செயலாளர் ஆனந்த் தலைமையில் நிர்வாகிகள் கூட்டத்தை நடத்த ஏற்பாடு முடிவு செய்துள்ளது. வருகிற 2026 சட்டமன் தேர்தலை இலக்காக கொண்டு தமிழக வெற்றிக் கழகத்தின் பணிகள் […]
சென்னை: பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சில கருத்துகளை தெரிவித்து இருந்தார். இது தற்போது அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பியுள்ளது. இந்நிலையில், சீமான் பேச்சுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், பெரியார் குறித்து அவதூறாகப் பேசிய சீமான் மீது 11 மாவட்டங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக தி.க., தபெதிக, விசிகவினர் அளித்த புகார்களின் அடிப்படையில், கடலூர், தென்காசி, சேலம், மதுரை, நெல்லை, திண்டுக்கல், கரூர், நாகை, […]
சென்னை : 2025ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த திங்கட்கிழமை முதல் தொடங்கி நடந்து வருகிறது. இன்று 5-ஆம் நாள் கூட்டம் நடைபெறுகிறது. இன்று, ஆளுநர் உரை மீதான விவாதம் தொடர்ந்து நடைபெற உள்ளது. நாளை 11-ம் தேதி முதல்வர் பதிலுரை அளிப்பார். அத்துடன் சட்டப்பேரவை கூட்டம் நிறைவு பெறுகிறது. தந்தை பெரியார் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்ததாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது 2 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திராவிடர் […]
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்பெரியார் குறித்து சர்ச்சையாக பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பியுள்ளது. பெரியார் குறித்து சர்ச்சை பேச்சுக்கு கடலூர் மாவட்டம் வடலூர் காவல் நிலையத்தில் சீமான் மீது புகார் அளிக்கப்பட்ட நிலையில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், சீமான் பேச்சுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், அமைச்சர் துரைமுருகன் கடுமையான கண்டனத்தை முன் வைத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ” மனித […]
நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்டு டொனால்ட் டிரம்ப் வெற்றிபெற்ற நிலையில், வரும் ஜனவரி 20-ஆம் தேதி பதவியேற்கவுள்ளார். இந்த சூழலில், தற்போதைய அதிபராக இருக்கும் ஜோ பைடன் USA Today எனும் அமெரிக்க செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் பேசியபோது “அமெரிக்க அதிபர் தேர்தலில் 2வது முறை போட்டியிட்டிருந்தால் டிரம்பை தோற்கடித்திருப்பேன்” என வெளிப்படையாக தெரிவித்துள்ளார். இந்த அளவுக்கு இவர் உறுதியுடன் இதை கூறியதற்கு காரணமே ஏற்கனவே, ஜோ பைடன் டிரம்ப்பை வீழ்த்தி அதிபராக […]
திருப்பதி : ஆந்திர பிரதேச மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் (ஜனவரி 10) முதல் ஜனவரி 19ஆம் தேதி வரை 10 நாட்கள் சொர்க்க வாசல் தரிசனத்திற்கான டோக்கன் நேற்று அதிகாலை திருப்பதியில் 7 இடங்களிலும் திருமலையில் ஒரு இடத்திலும் கொடுக்கப்பட இருந்தது. இதனை வாங்க நேற்று முன்தினம் இரவில் இருந்தே மக்கள் கூட்டம் அலைமோதியது. திருப்பதி எம்ஜிஎம் பள்ளிக்கு அருகே உள்ள கவுண்டரில் அளவுக்கு அதிகமான பக்தர்கள் கூட்டத்தால் முண்டியடித்துக்கொண்டு வரையில் முன்செல்ல முற்பட்டனர். அப்போது […]
ஈரோடு : காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, எந்த தேதியில் தேர்தல் நடைபெறும் என்பது பற்றிய விவரத்தையும் தேர்தல் ஆணையம் கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்திருந்தது. அதன்படி வரும் பிப்ரவரி 5ஆம் தேதி அங்கு தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஜனவரி 10ஆம் தேதி முதல் ஜனவரி 17ஆம் தேதி வரையில் தேர்தலில் போட்டியிடவேட்பாளர்களிடம் இருந்து வேட்புமனுக்கள் பெறப்படும் என்றும், ஜனவரி 18இல் வேட்புமனு […]
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்பெரியார் குறித்து சர்ச்சையாக பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பியுள்ளது. சமீபத்தில் கடலூர் மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களில் செய்தியாளர்களை சந்தித்த சீமான் ” தாய்மொழி தமிழை சனியன், காட்டுமிராண்டி மொழி என கூறியவர் பெரியார். திருக்குறளை மலம் என்று கூறியவர் பெரியார். வள்ளலாரை தாண்டி பெரியார் என்ன சமூக சீர்திருத்தம் செய்தார்? பெரியார் பேசினார் என்றால் பரவாயில்லை. பெரியார்தான் எல்லாம் செய்தார் என்று சொன்னால் அது எப்படி?அம்பேத்கர், பெரியாரை […]
காஞ்சிபுரம் : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரருமான ரவிச்சந்திரன் அஷ்வின் இன்று காஞ்சிபுரத்தில் தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அப்போது பேசிய அஷ்வின், முதலில் ஆங்கிலத்தில் பேச தொடங்கினார். பின்னர் இங்கு எத்தனை பேர் ஆங்கிலம் தெரிந்தவர்கள் இருக்கிறீர்கள் என கேட்டார் . அப்போது குறைவான சத்தம் எழுந்தது. பிறகு, தமிழ் என கூறினார். அப்போது அரங்கத்தில் அதிகமானோர் சத்தம் எழுப்பினர். […]
திருப்பதி : ஆந்திர பிரதேச மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை (ஜனவரி 10) முதல் ஜனவரி 19ஆம் தேதி வரை 10 நாட்கள் சொர்க்க வாசல் தரிசனத்திற்கான டோக்கன் இன்று அதிகாலை திருப்பதியில் 7 இடங்களிலும் திருமலையில் ஒரு இடத்திலும் கொடுக்கப்பட இருந்தது. இதனை வாங்க நேற்று கவுண்டர்களில் அளவுக்கு அதிகமான பக்தர்கள் கூட்டம் இருந்தது. திருப்பதி எம்ஜிஎம் பள்ளிக்கு அருகே உள்ள கவுண்டரில் அளவுக்கு அதிகமான பக்தர்கள் கூட்டத்தால் முண்டியடித்துக்கொண்டு வரையில் முன்செல்ல முற்பட்டனர். […]
சத்தீஸ்கர்: சத்தீஸ்கரின் முங்கேலி மாவட்டத்தில் இரும்பு ஆலையில் புகைபோக்கி இடிந்து விழுந்ததில் சில தொழிலாளர்கள் காயமடைந்தனர் என்றும், பலர் விபத்தில் சிக்கியுள்ளதாக அஞ்சப்படுகிறது. இது குறித்து தகவல் கிடைத்ததும், போலீசார் மற்றும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். முங்கேலி மாவட்டத்தின் சரகான் பகுதியில் அமைந்துள்ள இந்த ஆலையில் கட்டப்பட்டு வரும் மின் உற்பத்தி நிலையத்தில் சிம்னியை நிறுவும் பணிகள் நடைபெற்றன. அப்போது எதிர்பாராத விதமாக சிம்னி கவிழ்ந்ததில் 30-க்கும் மேற்பட்டோர் அடியில் […]