குஜராத் : நேற்று (ஜனவரி 10) குஜராத் மாநிலம் அகமதாபாத் தனியார் பள்ளியில் எடுக்கப்பட்ட ஒரு சிசிடிவி காட்சிகள் காண்போரை பதற வைத்து வருகிறது. அதில் 8 வயது பள்ளி சிறுமி ஒருவர் தனது வகுப்பறைக்கு செல்லும் போது பள்ளி வளாகத்திலேயே மயங்கி விழுந்து அதன் பிறகு உயிரிழந்துள்ளார். அகமதாபாத்தில் தால்தேஜ் பகுதியில் உள்ள சபர் (Zebar) பள்ளியில் 3வது வகுப்பு பயின்று வருகிறார் 8 வயது சிறுமி கார்கி ரன்பரா. இச்சிறுமி நேற்று வழக்கம் போல […]
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக வரும் நாட்களில் சில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது. எனவே, எந்த தேதிகளில் எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்கிற தகவலை பற்றி பார்ப்போம். வானிலை ஆய்வு மையம் கொடுத்த தகவலின் படி இன்று (11-01-2025), மற்றும் நாளை (12-01-2025) கடலோர […]
சென்னை : கடந்த 2021 தேர்தல் பிரச்சாரத்தின் போது ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வைக் கண்டிப்பாக ரத்து செய்வோம் என கூறிவிட்டு தற்போது அதனை செய்யாமல் திமுக அரசு மக்களை ஏமாற்றிவிட்டதாக த.வெ.க தலைவர் விஜய் குற்றம்சாட்டியிருந்தார். தன்னுடைய எக்ஸ் வலைத்தள பக்கத்தில் அவர் தெரிவித்திருந்ததாவது ” கடந்த 2021 தேர்தல் பிரச்சாரத்தின் போது, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வைக் கண்டிப்பாக ரத்து செய்வோம், நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் எங்களுக்குத் தெரியும் என்று […]
சென்னை : சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் பெஞ்சல் புயல் பாதிப்புக்கு இதுவரை எந்த நிதியும் மத்திய அரசு வழங்கவில்லை என்கிற குற்றச்சாட்டை முன் வைத்து பேசினார். இது குறித்து பேசிய அவர் ” பெஞ்சல் புயல் மீட்பு பணிகளுக்கு ரூ. 6,675 கோடி என மதிப்பீடு செய்யப்பட்டு, மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது. ஆனால் இதுவரை எந்த நிதியும் கொடுக்கவில்லை. எங்களுடைய ஆட்சி காலத்தில் சில திட்டங்களை நிறைவேற்றி இருக்கிறோம். அதே சமயம் சில திட்டங்களை நிறைவேற்றமுடியாமலும் இருக்கிறோம். […]
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆளுநர் உரை மீதான விவாதத்தின்போது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி “நீட் தேர்வை ரத்து செய்யப்படும் என்ற வாக்குறுதியில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?” என்கிற கேள்வியை எழுப்பியிருந்தார். அதற்கு பதில் அளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின் ” I.N.D.I.A. கூட்டணி ஆட்சிக்கு வந்திருந்தால் என்றால் நிச்சியமாக நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற்று இருப்போம்.இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது. அதைப்போல, திமுக ஆட்சி இருந்த வரை தமிழ்நாட்டுக்குள் நீட் தேர்வு […]
சென்னை : சட்டப்பேரவை கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் பதிலுரையாற்றி வருகிறார். அப்போது சட்டப்பேரவைக்கு கருப்பு உடை அணிந்து கொண்டு வருகை தந்த அதிமுக குறித்து பேசியதோடு அவர்களை நோக்கி தன்னுடைய கேள்விகளையும் ஆதங்கத்தோடு எழுப்பினார். இது குறித்து பேசிய அவர் ” எதிர்கட்சியான அதிமுக சார்பில் கருப்பு உடை அணிந்து வந்த போது எனக்கு உண்மையில் கோபம் வரவில்லை. சிரிப்புதான் வந்தது. அதனை பார்த்துவிட்டு இப்படியாவது கருப்பு சட்டை […]
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த திங்கள்கிழமை முதல் தொடங்கிய நிலையில், நேற்று ஐந்தாவது நாளில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான சட்டதிருத்த முன்வடிவை இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். குறிப்பாக, பெண்களை பின்தொடர்ந்தால் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். அது மட்டுமின்றி, பிணையில் கூட அவர்கள் வெளிவர முடியாத அளவுக்கு சட்ட திருத்தும் கொண்டு வரப்பட்டுள்ளது. அதைபோல, குறிப்பிட்ட சில குற்றங்களில் பாதிக்கப்பட்டோரின் அடையாளத்தை வெளிப்படுத்தினால் 3 முதல் 5ஆண்டு […]
சென்னை : நேற்று முன்தினம் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவிய வளி மண்டல கீழடுக்கு சுழற்சி, நேற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் வரும் நாட்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது. அதன்படி, கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் […]
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது தந்தை பெரியார் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் கருத்துக்களை பதிவிட்டார். அதிலும், தந்தை பெரியார் உடல் இச்சை பற்றி கூறியதாக சீமான் கூறிய கருத்துக்கள் அரசியல் வட்டாரத்தில் கடும் எதிர்வினைகளை உண்டாக்கியுள்ளது. சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பல்வேறு அரசியல் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல்வேறு காவல் நிலையங்களில் […]
ஈரோடு : காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வருகின்ற பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்திருந்தது. இதனையடுத்து, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பாக திமுக போட்டியிடுவதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டு இருந்தது. ஸ்டாலின் கேட்டுக் கொண்டதற்கு இணங்க தீவிர ஆலோசனைக்குப் பின் அத்தொகுதியை திமுகவுக்கு வழங்கியதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் […]
சென்னை : நாம் தமிழா் கட்சி மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியவற்றை அங்கீகாரம் பெற்ற மாநில கட்சிகளாக இந்திய தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இது குறித்து இரண்டு கட்சி தலைமைக்கும் கடிதம் ஒன்றையும் அளித்துள்ளது. அதில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு அளிக்கப்பட்ட நோட்டிஸில் ” 2024 மக்களவைத் தேர்தலின் முடிவுகளின் அடிப்படையில், தமிழ்நாட்டில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை மாநிலக் கட்சியாக அங்கீகரித்துள்ளது. கட்சியின் கோரிக்கையை கருத்தில் கொண்டு, பானை சின்னம் தமிழ்நாட்டில் அடையாளமாக விசிக கட்சிக்கு […]
ஈரோடு : காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வருகின்ற பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்திருந்தது. ஜனவரி 10ஆம் தேதி முதல் ஜனவரி 17ஆம் தேதி வரையில் தேர்தலில் போட்டியிட வேட்பாளர்களிடம் இருந்து வேட்புமனுக்கள் பெறப்படும் என்றும், ஜனவரி 18இல் வேட்புமனு பரிசீலனை நடைபெறும் என்றும், ஜனவரி 20 ஆம் தேதி வேட்புமனு […]
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரருமான ரவிச்சந்திரன் அஷ்வின் ஜனவரி 9-ஆம் தேதி காஞ்சிபுரத்தில் தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டபோது முதலில் ஆங்கிலத்தில் பேச தொடங்கினார். பின்னர் இங்கு எத்தனை பேர் ஆங்கிலம் தெரிந்தவர்கள் இருக்கிறீர்கள் என கேட்டார் . அப்போது குறைவான சத்தம் எழுந்தது. பிறகு, தமிழ் என கூறினார். அப்போது அரங்கத்தில் அதிகமானோர் சத்தம் எழுப்பினர். அதன் பிறகு, இந்தி […]
சென்னை : சீமான் தலைமையில் 2010ஆம் ஆண்டு மே மாதம் ஆரம்பிக்கப்பட்ட கட்சி ‘நாம் தமிழர் கட்சி’. அப்போது முதல் இக்கட்சி பல்வேறு தேர்தல் களங்களை கண்டு குறிப்பிட்ட அளவு வாக்கு சதவீதத்தை பெற்று வருகிறது. இருந்தும் மாநில கட்சி அங்கீகாரம் பெரும் அளவுக்கு வாக்கு சதவீதத்தை எட்டாது இருந்தது. இந்நிலையில், கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தலிலும் தனித்து போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி 8.22 விகித வாக்கு சதவீதத்தை ஒட்டுமொத்தமாக பெற்றது. தேர்தல் ஆணைய விதிப்படி […]
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை நடிகர் விஜய் தொடங்கி வரும் பிப்ரவரி மாதத்தோடு ஓராண்டு நிறைவு பெற உள்ளது. இன்னும் அக்கட்சி மாவட்ட செயலாளர்கள், பொறுப்பாளர்கள் உள்ளிட்ட பதவிகள் குறித்து அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியாகாமல் உள்ளது. தவெக கட்சி முதலாம் ஆண்டு விழா நடைபெறும் போது கட்சி நிர்வாகிகளை அக்கட்சி தலைவர் விஜய் அதிகாரபூர்வமாக அறிமுகம் செய்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்று மாவட்ட செயலாளர்கள் நியமனம் தொடர்பான ஆலோசனை கூட்டம் அக்கட்சி […]
டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை ஸ்பேஸ் டாக்கிங் (Space Docking) செயல்முறை மூலம் இணைக்கும் நோக்கத்திற்காக ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து கடந்த டிசம்பர் 30ஆம் தேதி பிஎஸ்எல்வி சி60 ராக்கெட் மூலம் ஸ்பேடெக்ஸ் ஏ, ஸ்பேடெக்ஸ் பி ஆகிய 2 செயற்கைகோள்கள் விண்ணில் ஏவப்பட்டன. 400 கிலோ எடை கொண்ட 2 செயற்கைகோள்களை விண்ணில் 700 கிமீ தொலைவில் நிலை நிறுத்தும் முயற்சி வெற்றிகரமாக முடிந்தது. இரண்டு செயற்கைகோளும் 20 […]
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் – எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடந்தது. அண்ணா பல்கலைகழக சம்பவம் குறித்து காரசார விவாதம் நடைபெற்றது. மேலும், பொள்ளாச்சி விவகாரத்தில் சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விடுத்த சவாலுக்கு எடப்பாடி பழனிசாமி மௌனம் காத்தார். எதிர்க்கட்சித் தலைவர் ஈபிஎஸ்: யார் அந்த சார் என கேட்டால் எதற்கு பதற வேண்டும்? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: குற்றவாளிக்கு தகுந்த தண்டனை வாங்கி கொடுப்போம். சபாநாயகர்: ஏற்கெனவே இந்த […]
மதுரை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது தந்தை பெரியார் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் கருத்துக்களை பதிவிட்டார். அதிலும், தந்தை பெரியார் உடல் இச்சை பற்றி கூறியதாக சீமான் கூறிய கருத்துக்கள் அரசியல் வட்டாரத்தில் கடும் எதிர்வினைகளை உண்டாக்கியுள்ளது. சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பல்வேறு அரசியல் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல்வேறு காவல் நிலையங்களில் […]
சீனா : கார் ஒட்டிக்கொண்டு சாலையில் வேகமாக செல்லும் போது சில சமயங்களில், சாலைகளில் இருக்கும் மேடு பள்ளங்களை கவனிக்காமல் அதற்குள் கார் செல்வதால் தடுமாறும் நிலையோ, அதிக சஸ்பென்ஷன் திறன் இருந்தாலும் அந்த மேடு பள்ள தடைகளை எதிர்கொண்டு தான் ஆக வேண்டும். இதனை கருத்தில் கொண்டு, சீனா கார் தயாரிப்பு நிறுவனமான BYD நிறுவனம் புதிய கார் ஒன்றை தயாரித்துள்ளது. Yangwang U9 எனும் பெயரிடப்பட்ட இந்த மாடலின் சிறப்பம்சம் என்னவென்றால், காரில் சென்று […]
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்வான பரமபத வாசல் எனும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இந்த சொர்க்கவாசல் தரிசனத்தில் கலந்து கொள்ள திருப்பதி சீனிவாசம் தங்கும் விடுதி வளாகத்தில் உள்ள கவுண்டர்களில் இலவச தரிசன டோக்கன் வாங்குவதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒரே நேரத்தில் குவிந்ததால் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி சேலத்தைச் சேர்ந்த பெண் உட்பட 6 பக்தர்கள் பலியாகியிருக்கிற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், திருப்பதி வைகுண்ட வாசலில் தரிசன டோக்கன் பெறுவதற்காக […]