லண்டன் : லண்டனில் நடந்த பேச்சுவார்த்தையில், அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான புதிய வர்த்தக ஒப்பந்தம் முடிவடைந்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இந்த ஒப்பந்தத்திற்கு டிரம்ப் ஒப்புதல் அளித்த பிறகு, ஒப்பந்தத்தை இறுதி செய்ய சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் ஒப்புதல் காத்திருக்கிறது. ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, சீனா அமெரிக்காவுக்கு காந்தங்கள், அரிதான தனிமங்களை வழங்கும் என்றும், சீன மாணவர்களுக்கான விசாக்களை அமெரிக்கா அனுமதிக்கும் என்றும் ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்த ஒப்பந்தத்தை சீன அதிபரும், தானும் […]
கீழடி ஆய்வு முடிவுகளை போதிய ஆய்வு முடிவுகள் வந்த பிறகும் மத்திய அரசு அங்கீகரிக்கவில்லை என்று தமிழக அரசு குற்றம்சாட்டி வரும் நிலையில், நேற்று முன் தினம் மத்திய அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத்,” இன்னும் அதிகமான அறிவியல்பூர்வமான முடிவுகள் வந்த பிறகே அங்கீகாரம் வழங்க முடியும்” எனத் தெரிவித்திருந்தார். தற்பொழுது, அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் கிடைத்தால், தாங்களும் பெருமை கொள்வோம் என்றும் ஆனால் இன்றைய அறிவியல் உலகிற்கு வலுவான தரவுகள் தேவை எனவும் கூறியுள்ளார். இது அரசியல் […]
நோஜென்ட் : பிரான்ஸ் நாட்டில் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக வலைதளங்களை பயன்படுத்துவதை தடுக்க விரைவில் சட்டம் கொண்டு வரப்படவுள்ளது. இதற்கான விதிகள் விரைவில் அமல்படுத்தப்படும் என அந்நாட்டு அதிபர் இம்மானுவேல் மேக்ரான் அறிவித்துள்ளார். வரும் மாதங்களில் ஐரோப்பிய ஒன்றியம் (EU) இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால், பிரான்சே இந்த திசையில் கடுமையான சட்டங்களை இயற்றும் என்று அவர் கூறினார். கிழக்கு பிரான்சின் நோஜென்ட் நகரத்தில் உள்ள ஒரு நடுநிலைப் பள்ளியில் 14 வயது […]
சென்னை : வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி […]
சேலம் : மேட்டூர் அணையில் இருந்து இன்று (ஜூன் 12) டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட உள்ளது. முதல்வர் ஸ்டாலின் மேட்டூர் அணை பகுதிக்கு வந்து தண்ணீரை திறந்துவிட உள்ள நிலையில், முன்னதாக அணை பகுதியை சேலம் ஆட்சியர் பிருந்தா தேவி ஆய்வு செய்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சேலம் மற்றும் ஈரோடு மாவட்டங்களுக்கு இரண்டு நாள் பயணம் மேற்கொண்டுள்ளார். அதன்படி, சேலம் மாவட்டத்திற்கு வருகை தரும் முதலமைச்சர் ஸ்டாலின், 11 கி.மீ. தொலைவிற்கு ரோடு ஷோ நடத்தி, […]
சென்னை : தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கனமழை வெளுத்து வாங்கி கொண்டு இருக்கிறது. குறிப்பாக சென்னை மாவட்டத்தில் மிதமான மழையும் நீலகிரி மாவட்டத்தில் கனமழையும் பெய்து வருகிறது. இப்படியான சூழலில் நாளை பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது. அதன்படி, 12-06-2025 தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் […]
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஒரு பக்கம் திமுகவை விமர்சித்தும் மற்றொரு பக்கம் திமுகவை சேர்ந்த அமைச்சர்கள் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசி வருகிறார்கள். அந்த வகையில் இன்று மக்களிடம் இருந்து வாங்கும் மனுக்களில் கூட விளம்பரம் தேடும் முதல்வருக்கு கண்டனம் என கூறி தற்போது பொதுத்தேர்தல் நெருங்கி வருவதை மனதில் கொண்டு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் மனுக்களைப் பெறும் நாடகத்தை அரங்கேற்ற உள்ளதாக தெரிகிறது” எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது புகார் பெட்டி மூலம் […]
தேனி : ஆண்டிப்பட்டி திமுக சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன், பெண்கள் இலவச பேருந்து பயணத்தை “ஓசி” என்று குறிப்பிட்டு பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் மண்ணூத்து மலை கிராமத்தில் சமுதாயக் கூடம் திறப்பு விழாவில் அவர் இவ்வாறு பேசியதாக கூறப்படும் அந்த வீடியோ வைரலாகி வருகிறது. இதற்கு முன்பு, அமைச்சர் பொன்முடி இதேபோல் “ஓசி” என்று பேசி சர்ச்சையில் சிக்கியிருந்தார், மேலும் அவரது கட்சி பதவி பறிக்கப்பட்டது. மகாராஜனின் பேச்சு குறித்து பொதுமக்கள் மத்தியில் அதிருப்தி […]
டெல்லி : இந்திய ரயில்வே துறை, ஜூலை 1, 2025 முதல் தட்கல் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய ஆதார் அங்கீகாரத்தைக் கட்டாயமாக்குவதாக அறிவித்துள்ளது. அதாவது, நீங்கள் IRCTC இணையதளத்திலோ அல்லது ரயில் நிலைய முன்பதிவு கவுண்டரிலோ டிக்கெட் எடுக்க, உங்கள் ஆதார் எண்ணைக் கொடுத்து, அதை உறுதிப்படுத்த வேண்டும். இது, தட்கல் டிக்கெட்டுகளை தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்கவும், உண்மையான பயணிகளுக்கு டிக்கெட் கிடைப்பதை உறுதி செய்யவும் எடுக்கப்பட்ட ஒரு முடிவு எனவும் ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. […]
மேகாலயா : இந்திய முழுவதும் கடந்த சில நாட்களாகவே அதிர்வலைகளை ஏற்படுத்தி பேசப்படும் ஒரு சம்பவம் மத்தியப் பிரதேசத்தின் இந்தூரைச் சேர்ந்த ராஜா ரகுவன்ஷி (28) என்ற இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கு தான். ராஜாவும் சோனமும் மே 11, 2025 அன்று திருமணம் செய்து, மே 20 அன்று மேகாலயாவுக்கு தேனிலவு சென்றனர். மே 23 அன்று, சோஹ்ரா (செர்ராபுஞ்சி) பகுதியில் உள்ள வெய்சாவ்டாங் நீர்வீழ்ச்சி அருகே இருவரும் மாயமானார்கள். ஜூன் 2 அன்று, ராஜாவின் […]
கடலூர் : இன்று கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் செய்தியாளர்களை சந்தித்த விசிக தலைவர் திருமாவளவன் எல்.முருகன் பேசிய கருத்துக்கும் பதில் அளிக்கும் விதமாக பேசினார். செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் ” ஊடகங்கள் தொடர்ச்சியாகவே திமுகவிடம் நாங்கள் கூடுதல் தொகுதி கேட்போமா? என கேள்விகளை எழுப்பிக்கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்காக நான் பதில் சொல்ல விரும்புகிறேன். கூடுதலாக நாங்கள் கொடுத்த பெற்றுக்கொள்வோம் இல்லை..குறைவாக கொடுத்தால் பெற்றுக்கொள்வோம் என்று சொல்ல முடியாது. எங்களுக்கு ஒவ்வொரு தேர்தல் நடைபெறும்போது கூடுதல் தொகுதி வேண்டும் […]
சென்னை : அண்ணா பல்கலைக்கழக மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவத்தில், மாநில பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையை அவதூறு கருத்துகள் பரப்பியதாகக் குற்றச்சாட்டி, பல்கலைக்கழகத்தின் முன்னாள் மக்கள் தொடர்பு அலுவலர் (பி.ஆர்.ஓ) நடராஜன் சார்பில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அண்ணாமலை தனது சமூக வலைதளப் பதிவுகள் மூலம் இந்த விவகாரத்தில் தவறான தகவல்களைப் பரப்பியதாகவும், இது நடராஜனின் மானத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தியதாகவும் நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது. நடராஜன் அனுப்பிய வக்கீல் நோட்டீஸில், அண்ணாமலை உடனடியாக சமூக வலைதளங்களில் […]
கேரளா : கோழிக்கோடு மாவட்டம், பேய்ப்பூர் கடற்கரையில் இருந்து சுமார் 14 கடல் மைல் தொலைவில், சிங்கப்பூர் கொடியுடன் இயக்கப்படும் சரக்கு கப்பலான MV Wan Hai 503கடந்த ஜூன் 9-ஆம் தேதி அன்று காலை 10:30 மணியளவில் திடீரென தீப்பிடித்தது. இந்தக் கப்பலில் குளோரோ பார்மேட், டைமெத்தில் சல்பேட், ஹெக்ஸாமெதிலீன் டிசோசைனேட், பைரிடியம் உள்ளிட்ட ஆபத்தான ரசாயனங்கள் இருந்ததால், வெடிப்பு ஏற்படலாம் என்ற அச்சம் எழுந்தது. இந்திய கடற்படை, கடலோர காவல்படை மற்றும் மீனவர்கள் உடனடியாக […]
மேகாலயா : இந்திய முழுவதும் கடந்த சில நாட்களாகவே அதிர்வலைகளை ஏற்படுத்தி பேசப்படும் ஒரு சம்பவம் மத்தியப் பிரதேசத்தின் இந்தூரைச் சேர்ந்த ராஜா ரகுவன்ஷி (28) என்ற இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கு. இவர் தனது மனைவி சோனம் ரகுவன்ஷியுடன் (24) தேனிலவுக்காக மேகாலயாவுக்கு சென்றபோது கொலை செய்யப்பட்டார். ராஜாவும் சோனமும் மே 11, 2025 அன்று திருமணம் செய்து, மே 20 அன்று மேகாலயாவுக்கு தேனிலவு சென்றனர். மே 23 அன்று, சோஹ்ரா (செர்ராபுஞ்சி) பகுதியில் உள்ள […]
சென்னை : ஈரோட்டில் இன்று வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கத்தை திறந்து வைப்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகை தந்திருந்தார். வருகை தந்த பிறகு கருதரங்கத்தை திறந்து வைத்துவிட்டு சில விஷயங்களையும் பேசினார். விழாவில் பேசிய அவர் ” வேளாண்மையும் உழவர் நலனும் நம்முடைய முதன்மையான கவனத்துக்கு உரியவை. அதனாலதான் வேளாண் துறையோட பெயரை ‘வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை’னு மாத்தியிருக்கோம். இது வெறும் பெயர் மாற்றம் இல்லை; நம்ம உழவர்களுக்கு மேம்பட்ட சேவைகளை, ஆதரவை கொடுக்கணும்ங்கிற நோக்கத்தோட செய்யப்பட்ட […]
சென்னை : தேமுதிக கட்சியின் மண்டல பொறுப்பாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் மாவட்டச் செயலாளர்கள், தேர்தல் பொறுப்பாளர்கள் பங்கேற்றனர். இந்த ஆலோசனை கூட்டத்தில், 2026 சட்டப்பேரவைத் தேர்தலை மனதில் வைத்து நிர்வாகிகள் செயல்பட வேண்டும். கிளைக்கழகம் வரை நேரடியாக களத்திற்கு சென்று அனைவரும் பணியாற்ற வேண்டும்” பிரேமலதா கூறியுள்ளார். மேலும், ஆலோசனை கூட்டம் முடிந்த பிறகு, செய்தியாளர்களை சந்தித்து பேசிய […]
வாஷிங்டன் : அமெரிக் அதிபர் டொனால்ட் டிரம்புக்கும், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் தலைவர் எலான் மஸ்க்குக்கும் இடையே ஏற்பட்ட மோதல் போக்கு, தற்பொழுது முடிவுக்கு வந்துள்ளதாக தெரிகிறது. அதாவது, ட்ரம்ப் நிர்வாகத்தில் இருந்து விலகுவதாக அறிவித்த மஸ்க், ட்ரம்பை கடுமையாக விமர்சித்தார். இதற்கு பதிலடியாக ட்ரம்பும் மஸ்க்கை கடுமையாக விமர்சித்ததால், இருவருக்கும் இடையே மோதல் தீவிரமடைந்தது. இதனை தொடர்ந்து, மஸ்க்குடனான உறவு முற்றிலும் முறிந்துவிட்டதாகவும், இனி அவருடன் பேச விரும்பவில்லை என்றும் ட்ரம்ப் திட்டவட்டமாக அறிவித்தார். […]
லாஸ் வேகாஸ் : அமெரிக்காவில் சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்கும் டிரம்ப் அரசின் நடவடிக்கைக்கு எதிராக, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் மக்கள் போராட்டம் வலுத்து வருகிறது. அதிகரித்து வரும் அமைதியின்மையைத் தொடர்ந்து, லாஸ் ஏஞ்சல்ஸ் மேயர் கரேன் பாஸ் இரவு நேர ஊரடங்கு உத்தரவை அறிவித்தார். இந்த நிலையில், டிக்டாக் பிரபலம் காபி லேம், விசா காலத்தையும் தாண்டி அமெரிக்காவில் தங்கி இருந்ததாக லாஸ் வேகாஸில் குடிவரவு மற்றும் சுங்க அமலாக்க (ICE) அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, பிறகு […]
நெல்லை: கடந்த ஏப்ரல் 11ம் தேதி அன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்னையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக மற்றும் பாஜக இணைந்து தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) கீழ் போட்டியிடும் என அறிவித்தார். இந்தக் கூட்டணி தமிழ்நாட்டில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி (ஈபிஎஸ்) தலைமையில் செயல்படும், மேலும் தேசிய அளவில் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் இருக்கும் என்று அவர் தெரிவித்தார். அதே நேரம், […]
டெல்லி : டெல்லியில் உள்ள சட்டவிரோத குடிசைப்பகுதிகளை அகற்றும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மதராசி முகாம் உட்பட பல இடங்களில் குடிசைப்பகுதிகள் இடிக்கப்பட்ட பிறகு, கோவிந்த்புரி பகுதியில் உள்ள கல்காஜியின் பூமிஹீன் முகாமில், அமைந்துள்ள குடிசைப்பகுதிகளும் அகற்றப்பட்டு வருகின்றன. பலத்த போலீஸ் படை நிறுத்தப்பட்ட பிறகு, புல்டோசர்கள் மூலம் குடிசைப்பகுதிகள் இடிக்கப்படுகின்றன. நேற்றைய தினம், ஜூன் 10 ஆம் தேதிக்குள் இந்த இடத்தை காலி செய்யுமாறு டிடிஏ முன்னதாக ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தது. ஆனால், குடியிருப்புக்களை […]