நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில், தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட் எனும் நேர்காணல் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது அவரிடம் நெறியாளர் பல்வேறு சந்தேகங்களுக்கான பதில்களை கேட்டறிந்தார். அதில் வாட்ஸ்அப் செயலியில் அனுப்பப்படும் செய்திகள் பற்றியும் கேட்டறிந்தார். அதற்கு பதில் அளித்த மார்க், வாட்ஸ்அப்பில் பயனர்கள் அனுப்பும் செய்திகளை பாதுகாப்பு தேவை ஏற்பட்டால் அமெரிக்க புலனாய்வு அமைப்பான CIA கண்காணிக்க முடியும் முடியும் என்ற தகவலை கூறினார். பயனர்கள் […]
புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ ராணுவ தளபதியாக 1949ஆம் ஆண்டு ஜனவரி 15இல் பீல்ட் மார்ஷல் கே.எம். கரியப்பா நியமனம் செய்யப்பட்டார். அதனை குறிப்பிடும் வகையில் ஆண்டுதோறும் ஜனவரி 15இல் ராணுவ தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று ராணுவ தினத்தை முன்னிட்டு, மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் BEG & சென்டர் பரேட் மைதானத்தில் ராணுவ அணிவகுப்பு நடைபெற்றது. இந்த ராணுவ அணிவகுப்பில் […]
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று திருவள்ளுவர் தினத்தன்று (ஜனவரி 15) வழங்கினார். திருவள்ளுவர் விருது, அம்பேத்கர் விருது, பெரியார் விருது, கலைஞர் விருது , பாரதியார் விருது என 10 விருதுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தன. திருவள்ளுவர் தினத்தன்று தமிழ்நாடு அரசின் விருதுகளை பெறுவோருக்கு ரூ.5 லட்சம் அல்லது ரூ.2 லட்சம் பரிசுத்தொகை மற்றும் ஒரு சவரன் மதிப்புள்ள தங்க பதக்கம் […]
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா கும்பமேளா நிகழ்வு நேற்று தொடங்கியது. நேற்று (ஜனவரி 13) முதல் பிப்ரவரி 26ஆம் தேதி வரை 45 நாட்கள் இந்த கும்பமேளா நிகழ்வு நடைபெறும். இதனை காண பல்வேறு மாநிலங்களில் இருந்து கோடிக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். குறிப்பாக, கங்கை, யமுனை, சரஸ்வதி ஆறுகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் குளிக்கும் நிகழ்வு மிக முக்கிய ஆன்மீக நிகழ்வாக […]
மதுரை : தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அதிலும் குறிப்பாக மதுரையில் உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு, பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகள் மிக பிரபலம். இதில் ஆயிரக்கணக்கான ஜல்லிக்கட்டு காளைகளும், அதனை பிடிக்க மாடுபிடி வீரர்களும் களமாடுவர். இந்த ஜல்லிக்கட்டு மாடுபிடி வீரர்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருப்பது உயிரை பணயம் வைத்து விளையாடும் வீரர்களுக்கு அரசு வேலை கிடைக்குமா என்பது தான். […]
சென்னை : இன்று பொங்கல் தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுதுவம் இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய தினங்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களுக்கு இந்த வாரம் முழுக்க விடுமுறை அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தொடர் விடுமுறையை அடுத்து சென்னையில் தங்கி வேலை பார்க்கும் நபர்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோர் வசதிக்காக சென்னையில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு குறிப்பாக தென்னக பகுதிவாசிகளுக்கு சிறப்பு ரயில்கள், பேருந்துகள் இயக்கபட்டது. அதே […]
சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் […]
சென்னை : இன்று மக்கள் பொங்கல் பண்டிகையை மக்கள் கொண்டாடி வரும் நிலையில் அரசியல் தலைவர்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை சமூக வலைதள பக்கங்களில் தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் தனது எஸ் வலைதள பக்கத்தில் பொங்கல் வாழ்த்தினை தெரிவித்துள்ளனர். மு.க.ஸ்டாலின் உழவே தலை என உழுதுண்டு உலகத்தார்க்கு உண்டி கொடுக்கும் உழவர் பெருமக்களுக்கும் – உலகெங்கும் வாழும் தமிழ் உடன்பிறப்புகளுக்கும் […]
சென்னை : தேசிய தேர்வு முகமை கடந்த ஆண்டு இறுதியில் ஜனவரி 15, 16 தேதிகளில் மத்திய அரசின் தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் யுஜிசி – நெட் தேர்வு 30 பாடங்களுக்கு நடத்தப்படும் என அறிவித்து இருந்தது. இதனையடுத்து, பொங்கல் தினத்தன்று தேர்வா? என சில மாணவர்கள் அதிர்ச்சியடைந்ததை போல அரசியல் தலைவர்களுமே அதிர்ச்சியடைந்து இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பாக, சு.வெங்கடேசன் எம்.பி, தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் […]
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஏற்கனவே, மத்திய அரசு நிதி சரியாக வழங்கவில்லை என முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியிருந்த நிலையில், தற்போது மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உத்தரவாதத் திட்டத்தின் கீழ் பணியாற்றும் கிராமப்புற குடும்பங்களுக்கு ஊதிய நிலுவைத் தொகையை வழங்கும் பொருட்டு நிதியை விடுவிக்கக் கோரி பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அவர் எழுதியுள்ள அந்த கடிதத்தில் ” தமிழ்நாட்டில் 76 இலட்சம் குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 91 இலட்சம் தொழிலாளர்கள் மகாத்மா […]
சென்னை : நாளை தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், அரசியல் தலைவர்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். குறிப்பாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, விசிக தலைவர் திருமாவளவன், கேரளா முதல்வர் பினராயி விஜயன், பசுமைத்தாயகம் தலைவர் முனைவர் சௌமியா அன்புமணி உள்ளிட்ட பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள். அவர்களை தொடர்ந்து த.வெ.க தலைவர் விஜய் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பொங்கல் வாழ்த்தை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது […]
ஜப்பான் : தெற்கு ஜப்பானில் உள்ள கைஷூ பகுதியில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கம் மக்களை பதட்டத்தில் ஆழ்த்தியுள்ளது. 6.8 என்ற ரிக்டர் அளவில் இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இதனையடுத்து, அந்த பகுதியில் சுனாமி எச்சரிக்கை விடப்படுவதாகவும் ஆங்கில ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளது. மேலும், இந்த நிலநடுக்கம் கியூஷி பகுதியில் இருந்து 37 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் உருவாகி உள்ளது. இதனால் ஜப்பானின் கியூஷி உள்ளிட்ட நகரங்கள் அதிர்வுகளை உணர்ந்தன. திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டதன் காரணத்தால் மக்கள் […]
நியூ யார்க : அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் வரும் ஜனவரி 20ஆம் தேதி பதவி ஏற்க போகிறார். அந்த நாளை எதிர்நோக்கி அமெரிக்கா வாழ் இந்தியர்களும், அமெரிக்காவில் குடியேற விரும்பும் இந்தியர்களும் சற்று கலக்கத்தில் உள்ளனர் என பல்வேறு தனியார் செய்தி நிறுவனங்களில் தகவல்கள் வெளியாகி வருகின்றன. அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற குடியரசு கட்சி வேட்பாளர் டிரம்ப் முன்வைத்த முக்கிய வாக்குறுதியை இனி அமெரிக்க வேலைவாய்ப்புகளில் அமெரிக்கர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படும் என்பதும், அமெரிக்க […]
சென்னை : பொங்கல் விடுமுறையை முன்னிட்டு பயணிகள் பலரும் மெட்ரோ ரயில்களை புக்கிங் செய்து வருகிறார்கள். இந்த சூழலில், பொங்கல் நாளான நாளை ஜனவரி 14, மற்றும் 15 மற்றும் 16ம் தேதிகளில் ஞாயிறு/விடுமுறை நேர அட்டவணையின் படி மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும் என அட்டவணை ஒன்றை மெட்ரோ நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இது குறித்து நிர்வாகம் வெளியிட்டுள்ள பதிவில் ” பொங்கல் விடுமுறையை முன்னிட்டு 2025 ஆம் ஆண்டு ஜனவரி 14 (செவ்வாய்க்கிழமை), 15 (புதன்கிழமை) மற்றும் […]
சென்னை: நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது தந்தை பெரியார் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் கருத்துக்களை பதிவிட்டார். அதிலும், தந்தை பெரியார் உடல் இச்சை பற்றி கூறியதாக சீமான் கூறிய கருத்துக்கள் அரசியல் வட்டாரத்தில் கடும் எதிர்வினைகளை உண்டாக்கியுள்ளது. சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பல்வேறு அரசியல் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல்வேறு காவல் நிலையங்களில் அவர் மீது […]
திருவனந்தபுரம் : நாளை முதல் பொங்கல் பண்டிகைகள் தொடங்க உள்ள நிலையில் தமிழகத்தில் நாளை (ஜனவரி 14) பொங்கல் தினம, நாளை மறுநாள் (ஜனவரி 15) மாட்டு பொங்கல், ஜனவரி 16 காணும் பொங்கல் ஆகிய தினங்கள் மட்டுமின்றி ஜனவரி 17ஆம் தேதியும் விடுமுறை அளித்து ஒருவார காலம் விடுமுறை அளித்துள்ளது தமிழக அரசு. தமிழகத்தைப் போல, அண்டை மாநில எல்லையோர பகுதிகளிலும் உள்ள தமிழ்நாட்டை சேர்ந்த தமிழ் பேசும் மக்களுக்கு அங்கும் உள்ளூர் விடுமுறை விடுவது […]
சென்னை : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் முடிந்து வீரர்கள் மற்றும் பார்வையாளர்கள் தயாராகிவிட்டார்கள் என்று தான் சொல்லவேண்டும். நாளை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளது. அவனியாபுரம் திருப்பரங்குன்றம் சாலையில் உள்ள பத்திரகாளியம்மன் கோயில் அருகே உள்ள ஜல்லிக்கட்டு திடலில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளது. ஜல்லிக்கட்டு காளைகளை அவிழ்த்து விடும் வாடிவாசல் பகுதி, காளைகளை அடக்கும் பகுதியில் தேங்காய் நார் கொட்டும் பணி விறுவிறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் […]
காஷ்மீர் : ஜம்மு மற்றும் காஷ்மீரின் சோனாமார்க் மற்றும் காகங்கீர் இடையிலான ‘இசட்-மோர்’ (Z-Morh) சுரங்கப்பாதையை இன்று பிரதமர் மோடி திறந்துவைத்தார். இந்த சுரங்கப்பாதை குளிர்காலங்களில் சோனாமார்க் பகுதிக்கு பாதுகாப்பான மற்றும் தொடர்ச்சியான அணுகலை உறுதிசெய்கிறது. பனிமூட்டம் காரணமாக சாலைகள் மூடப்படும் பிரச்சினையை தீர்க்கும் என்ற நம்பிக்கையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. சோனாமார்க் சுரங்கப்பாதையின் பணிகள் மே 2015ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆனால் பொருளாதார சவால்கள் காரணமாக 2018ஆம் ஆண்டு இந்த பணிகள் நிறுத்தப்பட்டதால் திட்டம் அந்த சமயம் நிறைவேற […]
சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,13-01-2025 தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை 14-01-2025: தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் […]
மதுரை : பொங்கல் திருநாள் வந்துவிட்டாளே மதுரை மாவட்டம் ஜல்லிக்கட்டு திருவிழாவால் விழாக்கோலம் பூண்டுவிடும். இந்த ஜல்லிக்கட்டு போட்டிகளை காண பல்வேறு ஊர்களில் இருந்து பார்வையாளர்கள் இங்கு வருவார்கள். உலகபுழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு, பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகள் நாளை முதல் தொடங்க உள்ளது. நாளை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளது. அவனியாபுரம் திருப்பரங்குன்றம் சாலையில் உள்ள பத்திரகாளியம்மன் கோயில் அருகே உள்ள ஜல்லிக்கட்டு திடலில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளது. ஜல்லிக்கட்டு காளைகளை […]