கொழுகொழு கண்ணம் – பார்ப்பதற்கு முத்துக்கள் போன்று இருக்கும் இந்த ஜவ்வரிசி மரவள்ளி கிழங்கில் இருந்து தான் தயாரிக்கப்படுகிறது. இந்த ஜவ்வரிசி தமிழ்நாட்டு விருந்தில் முக்கிய இடம் பிடித்துள்ளது. குறிப்பா கல்யாண விருந்தில் எவ்வளவு தான் விதவிதமான உணவுகள் இருந்தாலும் கடைசியாக இந்த ஜவ்வரிசியில் செய்த பாயாசத்தை உண்டால்தான் அந்த விருந்து முழுமை அடையும். அந்த வகையில் இதில் உள்ள சத்துக்கள் மற்றும் எந்தெந்த வகையில் நம் உணவில் சேர்த்துக் கொள்ளலாம் என்பது பற்றியும் இந்த பதிவில் […]
liver protection-நம் உடலின் முக்கிய உறுப்புகள் செயல்பட கல்லீரல் ஆரோக்கியமாக இருப்பது மிக அவசியம். பெரும்பான்மையான மக்களுக்கு இந்த கல்லீரல் பாதிப்பு உள்ளது இது பல காரணங்களால் ஏற்படுகிறது. அந்த காரணங்கள்மற்றும் எவ்வாறு கல்லீரலை பாதுகாப்பாக வைத்துக் கொள்வது பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். கல்லீரல் பாதிப்பு ஏற்பட காரணங்கள்: கல்லீரல் பிரச்சனைக்கு முக்கிய காரணமாக இருப்பது மது அருந்தும் பழக்கம் உள்ளவர்களுக்கு அதிகமாக ஏற்படுகிறது. மேலும் குறைவான உடல் உழைப்பு உள்ளவர்கள், குழந்தைகள் முதல் […]
வெற்றிலை குழம்பு – வெற்றிலை என்றாலே நாம் தாத்தா பாட்டிக்கு தொடர்புடையது என்று ஒதுக்கி விடுகிறோம். ஆனால் இதில் ஒளிந்திருக்கும் நன்மைகளோ ஏராளம். வெற்றிலைப் போட்டால் பற்கள் கரையாகிவிடும் என பலரும் அதை ஒதுக்கி விடுகிறார்கள் இனிமேல் அந்தப் பிரச்சினை இல்லை .வெற்றிலை வைத்து குழம்பு சூப்பரா செய்யலாம்.. அது எப்படி என்று இந்த பதிவில் பார்ப்போம். தேவையான பொருட்கள்: எண்ணெய் =4 ஸ்பூன் சின்ன வெங்காயம் =1 கைப்பிடி பூண்டு =10 பள்ளு தக்காளி =2 […]
Cooker rice-நம் பரபரப்பான வாழ்க்கை முறையில் வாழ்ந்து கொண்டிருகிறோம், நாம் வேலைகளை எளிதாக்க பல நவீன பொருள்களும் வந்துவிட்டது. அதில் ஒன்றுதான் குக்கர். இந்த குக்கரை பயன்படுத்துவதால் ஏற்படும் பின் விளைவுகளை இப்பதிவில் தெரிந்து கொள்வோம். முந்தைய காலங்களில் நாம் அரிசியை வேகவைத்து அதில் உள்ள அதிகப்படியான தண்ணீரை வடித்து பிறகு சாப்பிட்டு வந்தோம், இதுவே நம் பண்பாடாகவும் இருந்தது. ஆனால் இன்று ஆண் பெண் என இருவருமே வேலை செய்கின்றனர் இதனால் நேரம் குறைவாக உள்ளது […]
மாறிவரும் இந்த நவீன உலகில் அனைத்துமே டிஜிட்டல் மையமாகிவிட்டது. அதிகம் நேரம் நம் கண்கள் செல்போன், கணினி, டிவி போன்றவற்றை தான் பார்க்கிறோம். இதனால் மிகச் சிறிய வயதிலேயே கண் கண்ணாடி போடும் நிலை வந்துவிட்டது. இதனை சரி செய்ய இந்தப் இரண்டு குறிப்புகளை பயன்படுத்தினாலே போதும் அது என்னென்னவென்று இப்பதிவில் தெரிந்து கொள்வோம். தேவையான பொருட்கள்: பாதம் பருப்பு =20 சோம்பு =1 ஸ்பூன் கட்டி கற்கண்டு =1 ஸ்பூன் [சிறிய கற்கண்டு பயன்படுத்த வேண்டாம் […]
ஞாபக சக்தி என்பது அனைத்து வயதினருக்குமே மிகத் தேவையான ஒன்று. குறிப்பாக படிக்கும் குழந்தைகளுக்கும் வேலை செய்பவர்களுக்கும் அதிக தேவை உள்ளது. நம் மூளையை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளும் உணவுகள் மற்றும் மூளையின் செயல் திறனை குறைக்கும் உணவுகள் பற்றி இப்பதிவில் பார்ப்போம். சிட்ரஸ் பல வகைகள்: சிட்ரஸ் பழங்களான நெல்லிக்காய், ஆரஞ்சு, திராட்சை போன்ற பழங்களை தினமும் எடுத்துக்கொள்ள வேண்டும் .ஏனெனில் இதில் உள்ள வைட்டமின் சி மற்றும் பிளேவனாய்ட்ஸ் மூளையின் நியூரான் செல்களை பாதுகாத்து […]
உடல் எடை குறைப்பதற்காக பலவிதமான புதிய குறிப்புகளையும் சிலர் பயன்படுத்தி வருகின்றனர் .ஆனால் அது நல்லதா கெட்டதா என தெரியாமல் எடையை குறைத்தே ஆக வேண்டும் என்ற நோக்கத்தில் செய்கின்றனர்.அதில் மிக ஆபத்தான முறைகளும் உள்ளது அது என்னவென்று இப்பதிவில் தெரிந்து கொள்வோம். தேன் மற்றும் எலுமிச்சை : சமூக வலைதளங்களில் காணும் குறிப்புகளில் பலரும் பயன்படுத்துவது தேன் மற்றும் எலுமிச்சை தான். ஆய்வு அறிக்கையின்படி இந்த முறை 90 சதவீதம் வேலை செய்வதில்லை என்றும் இதை […]
நம் அனைவரது சமையலறையிலும் சர்க்கரை உள்ளதோ இல்லையோ ஆனால் அனைவரது இல்லங்களிலும் சர்க்கரை வியாதி உள்ளவர்கள் நிச்சயம் இருப்பார்கள் அந்த அளவுக்கு சர்க்கரை நோய் பரவி விட்டது. இந்த சர்க்கரையை கட்டுக்குள் வைக்க வெந்தயத்தை எப்படி பயன்படுத்துவது பற்றி இப்பதிவில் பார்ப்போம். நம் தென்னிந்திய உணவுகளில் வெந்தயம் நீங்கா இடம் பிடித்துள்ளது. பல ஆய்வுகளின் அறிக்கையில் சர்க்கரையை கட்டுக்குள் வைக்கவும், குறைக்கவும் வெந்தயம் முக்கிய பங்காற்றுகிறது என கூறுகிறது. வெந்தயத்தின் பயன்கள்: வெந்தயத்தில் கரையும் நார் சத்துக்கள் […]
தேங்காய் பால் அற்புதமான மருத்துவ குணங்களை கொண்டது. நிறைய பேருக்கு இது தெரிந்திருந்தாலும் பயன்படுத்த தவறியிருப்போம். தேங்காய் பாலில் அப்படி என்ன நோயை குணப்படுத்துகிறது அதை எவ்வாறு பயன்படுத்தலாம் மற்றும் அதில் உள்ள சத்துக்கள் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். தேங்காயை நாம் சமையலில் பயன்படுத்தியிருப்போம் , ஆனால் அதன் பாலை தனியாக பயன்படுத்தி வந்தால் அது பல நோய்களை குணப்படுத்துகிறது என ஆராய்ச்சிகள் கூறுகின்றது. தேங்காய் பாலில் உள்ள சத்துக்கள் சாச்சுரேட்டடு ஃபேட் மற்றும் […]
தற்போதைய காலகட்டத்தில் காபி டீ பிரியர்களை விட க்ரீன்டி பிரியர்கள் தான் அதிகமாக உள்ளனர். அப்படி இந்த கிரீன் டீயில் என்னதான் இருக்கு என்பதைப் பற்றியும் அதனால் ஏற்படும் பக்க விளைவுகள் பற்றியும் இப்பதிவில் பார்க்கலாம்.. கிரீன் டீயின் நன்மைகள் பல ஆய்வுகளில் கிரீன் டீ குடிப்பதால் மிக ஆரோக்கியமாக இருக்கலாம் எனவும் உடல் எடையை கணிசமாக குறைக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதனால் உடற்பயிற்சி செய்பவர்கள் மற்றும் உடல் எடை அதிகமாக இருப்பவர்கள் க்ரீன்டியை அதிகமாக எடுத்துக் […]
விக்கல் வந்த உடனே அனைவரும் கூறுவது யாரோ நினைக்கிறார்கள் என்று தான் அல்லது அந்த விக்கலை நிறுத்துவதற்கு முயற்சி செய்வோம். ஆனால் இந்த விக்கல் ஏன் வருகிறது, விக்கலை நிறுத்த என்ன செய்வது என்றும் இப்பதிவில் தெரிந்து கொள்வோம். சில நேரங்களில் மார்பு பகுதிகளில் இருக்கும் நரம்புகள் மூளை கட்டுப்பாட்டை மீறி தன்னிச்சையாக சுருங்கி விடுகிறது, இதனால் வழக்கமாக நாம் சுவாசிக்கும் காற்று குறுகிய நிலையில் செல்லும் போது தொண்டையில் ஒலி எழுப்புகிறது இதைத்தான் விக்கல் எனக் […]
உடல் எடையை குறைக்க இந்த எளிய உணவு மாற்றத்தை பின்பற்றுங்கள். தற்போது பலரும் உடல் எடை அதிகரித்து அதனை குறைக்க முயல்கின்றனர். இருந்தபோதிலும் சரியான முறையில் பயிற்சி எடுக்காமலும், உணவில் ஒரு கட்டுப்பாடு இல்லாமலும் இருப்பதனால் உடல் எடை குறைவதற்கு வாய்ப்பு குறைவு. உடல் எடையை குறைக்க நாம் கடைபிடிக்க வேண்டிய மிக எளிமையான உணவு மாற்றத்தை குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள். புரதசத்து தினமும் உங்களது உணவில் புரத சத்து உணவை அதிகரிக்கவும். உங்கள் […]
வெயில் காலத்தில் மிகப் பிரபலமான பானம் என்றால் அது இளநீர் தான் இளநீரில் பல சத்துக்கள் இருந்தாலும் அதை ஒரு சில எடுத்துக்கொள்ளக் கூடாது, அது யாரெல்லாம் என்பது பற்றியும் இளநீரின் நன்மைகள் பற்றியும் இப்பதிவில் தெரிந்து கொள்வோம். இளநீரில் உள்ள சத்துக்கள் இளநீரில் 90 சதவீதம் நீர் சத்து உள்ளது மேலும் நுண் சத்துக்களும், சோடியம், பொட்டாசியம் மெக்னீசியம் போன்ற தாது சத்துக்களும் அமினோஅமிலங்களும் அதிகம் காணப்படுகிறது. பயன்கள் லாரிக் ஆசிட் அதிகமாக இருப்பதால் பூஞ்சை […]
நம் ஆரோக்கியத்திற்கு அடிப்படையே நம் உடல் சொல்வதை கேட்பதுதான் நம் ஆரோக்கியத்தில் ஏதேனும் குறை இருந்தால் அதை நமது உடலிடம் எவ்வாறு பேச வேண்டும் என்பது பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். உடல் பேசும் மொழி ஆரோக்கியமாக இருக்க உணவு முறை மட்டுமே காரணமாக இருக்க முடியும் என்று கூற முடியாது நம் உடலும் மனமும் அதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அதில் குறிப்பாக நம் உடல் .நம் உடலுக்கும் புரிந்து கொள்ளும் தன்மை உள்ளது என […]
நம் வீட்டில் குறிப்பாக வயதில் பெரியவர்களாக இருந்தால் நெஞ்சக் கரிப்பு, எதுக்களிப்பு போன்ற பிரச்சனைகளால் அவதிப்படுவார்கள். இதை வீட்டிலேயே எளிமையான முறையில் சரி செய்வது எப்படி என்று பதிவில் பார்ப்போம். பலரது வீடுகளிலும் அஜீரணக் கோளாறு ஏற்படுவதற்கு முன்பே ஆங்கில மருந்துகளையும் சிரப்களையும் வாங்கி வைத்துக்கொண்டு அதை பயன்படுத்துவோம், அதனால் பல பக்க விளைவுகளும் ஏற்படலாம். கசாயம் தயாரிக்கும் முறை: தேவையான பொருட்கள் ஓமம் =1 ஸ்பூன் சீரகம் =1ஸ்பூன் இஞ்சி =சிறிதளவு ஓமம் ஒரு ஸ்பூன், […]
அசைவ வகையில் மட்டன் என்றாலே கொழுப்பு அதிகம் என்று ஒதுக்கிவிடுவார்கள்,இருந்தாலும் கூட மட்டன் பிரியர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் , அந்த வகையில் மட்டனில் செம்மறியாடு, வெள்ளாடு இவற்றுள் எது சிறந்தது மற்றும் மட்டன் எவ்வாறு சமைத்தால் உடலுக்கு நல்லது என்றும் மட்டன் எடுத்துக் கொள்ளும்போது நாம் சேர்த்துக் கொள்ள வேண்டிய உணவுகள் பற்றியும் இப்பதிவில் பார்ப்போம். மட்டனில் வெள்ளாடு மற்றும் செம்மறியாடு என இரு வகைகள் உள்ளது . செம்மறி ஆட்டில் உள்ள சத்துக்கள் செம்மறி ஆட்டில் […]
தற்போது உள்ள சூழ்நிலைகளில் தீங்கு விளைவிக்காத உணவுகள் பற்றிய விழிப்புணர்வு நம்மிடம் உள்ளது, ஆனால் உணவுகள் எந்த அளவிற்கு முக்கியமோ அதே அளவிற்கு இந்த உணவை எந்த பாத்திரத்தில் சமைக்கிறோம் என்பது மிக முக்கியம். எந்தெந்த பாத்திரத்தில் சமைத்தால் என்னென்ன நன்மைகள் மற்றும் தீமைகள் ஏற்படும் என்பது பற்றி இப்பதிவில் பார்ப்போம். நம் எந்த பாத்திரத்தில் சமைக்கின்றோமோ அதன் உலோகங்கள் அந்த உணவுகளில் கலைக்கிறது அது நம் உடலுக்கு சில பாதிப்புகளையும் ஏற்படுத்துகிறது ,நல்ல பலனையும் கொடுக்கிறது. […]
உடலுக்கு வலிமை தரும் இந்திய பயிர்களில் உளுந்து முக்கியமானதாகும். இந்த உளுந்தை வைத்து களி, இட்லி மாவு, வடை போன்ற உணவுகள் செய்ய பயன்படுகிறது. ஆனால் கை கால் வலி மற்றும் முதுகு வலி போன்றவற்றைப் போக்க கஞ்சி எவ்வாறு செய்வது என்று இப்பதிவில் பார்ப்போம் . தேவையான பொருட்கள் உளுந்து =1 டம்ளர் பச்சரிசி =1/2 டம்ளர் தேங்காய் பால் =1 கப் பெருங்காய தூள் =1/2ஸ்பூன் பூண்டு =3 பள்ளு உப்பு தேவையான அளவு […]
கீரை வகைகளை நாம் அதிகம் உணவில் சேர்த்துக் கொண்டால் மருத்துவரை அணுக வேண்டி இருக்காது. ஆனால் அதுவே இரவில் எடுத்துக் கொண்டால் மருத்துவரை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட வாய்ப்புள்ளது. ஆகவே இரவில் ஏன் கீரை எடுத்துக் கொள்ளக் கூடாது என்றும் கீரையை எப்படி சாப்பிட வேண்டும் , எதனுடன் சேர்த்து சாப்பிடக்கூடாது என்பது பற்றி இப்பதிவில் பார்ப்போம் . இதனால் தான் இரவில் கீரை சாப்பிட கூடாதா ? கீரையில் நிறைய வகைகள் உள்ளது. இதில் […]
எப்சம் உப்பு என்பது மெக்னீசியம் மற்றும் சல்பேட் கலந்த கலவையாகும் இந்த உப்பை எவற்றிக்கெல்லாம் பயன்படுத்தலாம் மற்றும் யாரெல்லாம் பயன்படுத்தக்கூடாது என்பது பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.. எப்சம் உப்பு இங்கிலாந்தில் உள்ள எப்சம் என்ற ஊரில் கண்டுபிடிக்கப்பட்டதால் இப்பெயர் வந்தது. இதை உப்பு என்று சொல்வதைவிட மருந்து என்று தான் கூற வேண்டும். எப்சம் உப்பின் பயன்கள் அழகு நிலையங்களில் பாதங்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சையில் இந்த உப்பு பயன்படுத்தப்படுகிறது. இதை நாம் வீட்டிலே கூட செய்து […]