கொய்யா பற்றி நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான். கொய்யா இலையில் பல சத்துக்கள் உள்ளது. கொய்யா மரத்தில் உள்ள அனைத்து பாகங்களும் மருந்தாக பயன்படுகிறது. கொய்யா இலையில் உள்ள சத்துக்கள் : ‘கொய்யா இலையில் புரதம், வைட்டமின்கள் B 6, கோலைன், வைட்டமின் C, கால்சியம், இரும்பு, மெக்னீசியம், மாங்கனீசு, பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம், துத்தநாகம் போன்ற சத்துகளும், ஆன்டி-ஆக்ஸிடன்டுகள், ஆன்டி-பாக்டீரியல் போன்ற சத்துக்கள் உள்ளது. கொய்யா இலையில் துவர்ப்பு தன்மை உடையது. கொய்யா இலைகளில் […]
நம்மில் அனைவருக்கும் கத்தரிக்காயை பற்றி நன்கு தெரியும். இது நமது அருகாமையில் உள்ள சந்தைகளில் விலை மலிவாக, எப்போது வேண்டுமானாலும் கிடைக்க கூடிய காய்கறி தான். இந்த காயை பொறுத்தவரையில் இது நம் அனைவருக்கும் ஒரு சாதாரணமான காய்கறியாக தெரியலாம். ஆனால் இதில் பல நோய்களை குணப்படுத்தக்கூடியது. கத்தரிக்காய்களில் தசைக்கும், ரத்தத்திற்கும் ஊட்டம் தருகிற வைட்டமின்கள் உள்ளது. இதனால் வாய்வு, பித்தம், கபம் போன்ற பிரச்சனைகள் அகன்று விடும். சத்துக்கள் : நீர்சத்து அதிகம் கொண்ட கத்தரிக்காயில் […]
பண்ணை கீரை அநேகருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால் இது அதிகமாக கிராம பகுதிகளில் உள்ள காடுகளில் தான் கிடைக்கும். இதனால் நகர வாசிகளுக்கு பண்ணை கீரை பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. கீரைகளில் பல வகைகள் உள்ளது. கீரை வகைகள் நமது உடலுக்கு தேவையான அனைத்து ஆற்றல்களையும் கொண்டுள்ளது. மருத்துவ குணங்கள் : வெண்மை நிற பூக்களை தாங்கி நிற்பது பண்ணை கீரை. இது, புண்களை ஆற்றும் தன்மை உடையது. புரதம், இரும்பு சத்துக்களை உள்ளடக்கியது. பண்ணை கீரையின் மருத்துவ […]
இன்றைய காலகட்டத்தில் அதிகமானோர் சிறுநீரக பிரச்சனையால் பாதிக்கபடுகின்றனர். மனிதனின் உடல் நலத்தை பிரதிபலிக்கும் உறுப்புகளில் சிறுநீரகமும் ஒன்று. இந்த பாதிப்புக்கு “வருமுன் காப்பதே சிறந்தது” என சிறுநீரகவியல் மருத்துவர்கள் கூறுகின்றனர். சிறுநீரகம் செயலிழத்தலின் வகைகள் : சிறுநீரக செயல் இழப்பு என்பதைத் தற்காலிகமாக சிறுநீரகம் செயல் இழத்தல், நிரந்தரமாக சிறுநீரகம் செயல் இழத்தல் என இரண்டு வகையாகப் பிரித்து கொள்ளலாம். இந்த சிறுநீரக பாதிப்பு சிறு வயதினர் முதல் பெரியவர்கள் வரை பாதிக்கிறது. தற்காலிகமாக சிறுநீரகம் செயல் இழத்தல் […]
வெண்பூசணி பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட காய். இதற்க்கு சாம்பல் பூசணி, கல்யாண பூசணி என்ற பெயர்கள் உண்டு. இது, பொங்கல் காலகட்டத்தில் அதிக அளவில் விளையும். நுண்கிருமிகளை தடுக்க கூடிய தன்மையும் இதற்கு உண்டு. வெண்பூசணியின் அனைத்து பாகங்களிலும் மருத்துவ குணங்கள் உண்டு. கல்லீரல் : வெண்பூசணியை பயன்படுத்தினால் இதயத்தை பலப்படுத்தும், இரத்தத்தை சுத்தப்படுத்தும். மேலும், கல்லீரல் பலவீனமாவதை தடுத்து பலப்படுத்தும். வெண்பூசணியில், ஊட்டச்சத்து அதிகம் உள்ளது. வைட்டமின் சி, கால்சியம், நீர்சத்து மிகுதியாக உள்ளது. […]
நாம் அன்றாட வாழ்வில் காரசாரமான உணவிற்கு முக்கிய காரணமாய் இருப்பது மிளகாய் தான். மிளகாயில் ஊசி மிளகாய், குண்டு மிளகாய், குடை மிளகாய் என மூன்று வகைகளை கொண்டது. இவைகள் அனைத்தும் காரத்தன்மையால் வேறுபடுகின்றன. இவற்றில் செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள் காணப்படுகின்றன. இரத்த ஓட்டம் : மேலும் மிளகாய் இரத்த ஓட்டத்தினை அதிகரிக்கும், ஜீரண கோளாறு உள்ளவர்களுக்கும் அவற்றை சரி செய்து உடலுக்கு நன்மை தரக்கூடியது. பெரியவர்களுக்கு உண்டாகும் தசைவலி தசைக்குடைச்சல் போன்ற வழியை போக்கும் தன்மை […]
நம்மில் பலருக்கு காரமான உணவு என்றால் மிகவும் பிடிக்கும். தயிர் சாதத்திற்கு ஊறுகாய் சாப்பிடுவது நம் அனைவரது வழக்கமாக உள்ளது. மேலும் சீசனில் கிடைக்கும் காய்கள் அல்லது பழங்களை ஊறுகாய் போட்டு வைத்துக்கொண்டு பயன்படுத்துவது நம் அனைவரின் வழக்கம். நாம் சிறிதளவு மட்டுமே பயன்படுத்தும் ஊறுகாயில் உள்ள நன்மை, தீமைகள் பற்றி பார்ப்போம். ஆண்டி ஆக்சிஜென்ட் : ஊறுகாயில் அதிக அளவு ஆண்டி ஆக்சிஜெண்டுகள் நிறைந்துள்ளன. இது உடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் செல்களை எதிர்த்து போராடுகிறது. […]
காளான் நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான். இது நமது உடலுக்கு தேவையான ஆரோக்கியத்தை தரக்கூடியது. இதில் உள்ள சத்துக்கள் பல நோய்களை குணப்படுத்தக்கூடியதும் கூட. இப்போது காளானின் நன்மைகள் பற்றி பார்ப்போம். கொழுப்பு : காளான் இரத்தத்தில் கலந்துள்ள அதிகப்படியான கொழுப்பை கரைத்து இரத்தத்தை சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது. இதனால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் இரத்த நாளங்களில் உண்டாகும் கொழுப்பு அடைப்பை தடுக்கிறது. புண்களை ஆற்ற…! காளானில் உடலுக்கு அவசியமான பொட்டாசியம் சத்துக்கள் உள்ளது. […]
தூக்கம் என்பது மனித வாழ்வில் இன்றியமையாதது . இது நமது வாழ்வில் கலந்த ஒன்று. ஆனால் தூங்கும் விதமும், முறைகளும் சரியான முறையில் இருக்க வேண்டும். அப்போது தான் நாம் தூங்கும் போது அது உடலுக்கு ஆரோக்கியத்தையும் உற்சாகத்தையும் தரும். அதிக நேரம் தூங்குவதும் ஆபத்து….!! குறைந்த நேரம் தூங்குவதும் ஆபத்து….!! அதிக நேரம் தூங்குவதும், குறைந்த நேரம் தூங்குவதும் இதய நோய் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்நிலையில், தினமும் இரவு ஆறு மணி […]
சர்க்கரை என்றாலே சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவது வழக்கம். ஏதோ ஒரு விதத்தில் நாம் சர்க்கரை சாப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளோம். நாம் சாப்பிட கூடிய ஒரு சில தேவையற்ற உணவு பழக்கத்தை நிறுத்தி விட்டாலே, உடலுக்கு எந்தவித நோய்களும் ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை. இளமை குறையாமல் இருக்க வேண்டுமென்றால் அதற்கு சர்க்கரை சாப்பிடுவதை நிறுத்தினாலே போதுமானது. உடல் எடை : சர்க்கரை சாப்பிடுவதை நிறுத்தி விட்டால், கொஞ்சம் கொஞ்சமாக உங்கள் உடல் எடையை குறையும் என ஹார்வர்ட் பல்கலைக்கழக […]
இன்றைய தலைமுறையினரின் மிகப்பெரிய பிரச்சனையே உடல் எடை அதிகரிப்பு தான். இந்த உடல் எடையை குறைப்பதற்காக பலரும் பல முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த முயற்சிகள் பலரும் பல பக்க விளைவுகளை தான் சந்தித்துள்ளனர். நாம் எடுக்கின்ற முயற்சிகள் இயற்கையான முறையில் இருந்தால், நாம் முழுமையான பயனை பெற இயலும். செயற்கையான முறையில் நாம் எடுக்கிற முயற்சிகள் அதிகப்படியான பக்க விளைவுகள் தான் ஏற்படுகிறது. இதனால் நாம் இயற்கையான முறையில் எவ்வாறு உடல் எடையை குறைக்கலாம் என […]
பாகற்காய் என்றாலே கசப்பு என்று தான் அனைவரும் எண்ணுவதுண்டு. ஆனால் இந்த கசப்பு நிறைந்த பாகற்காயை ஜூஸ் செய்து குடிப்பதால் நம் உடலுக்கு நிறைய நன்மைகள் கிடைக்கின்றன. பாகற்காயை உணவில் சேர்த்து சாப்பிட விரும்பாதவர்கள் பாகற்காயை ஜூஸ்ஸாக செய்து குடிக்கலாம். வீட்டில் இருந்தபடியே சுலபமாக பாகற்காய் ஜூஸ் செய்வது எப்படி என்று பாப்போம். தேவையான பொருட்கள் : பாகற்காய் – 200 கிராம் மிளகு – 8 சீரகம் 1/2 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு […]
புடலங்காய் நாம் அனைவரும் அறிந்த ஒரு காய்கறி தான். புடலங்காய் நமது அருகாமையில் உள்ள சந்தைகளில் மலிவாக கிடைக்க கூடிய ஒரு காய்கறி தான். புடலங்காயில் நமது உடலுக்கு தேவையான அனைத்து வகையான சத்துக்களும் உள்ளது. இது உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பதுடன், அதிக ஆற்றலையும் தருகிறது. சத்துக்கள் : புடலங்காயில் அதிகமாக நீர்சத்துக்கள் உள்ளது. இதில் வைட்டமின்கள், புரோட்டின்கள், கால்சியம், மக்னீசியம், பாஸ்பரஸ் கரோடீன், தாதுக்கள் மற்றும் கால்சியம் போன்ற உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய பல சத்துக்கள் […]
நம்மில் பலர் நாம் இரவு உறங்குவதற்கு முன் பல வகை உணவுகளை சாப்பிடுவதுண்டு. சிலர் நீர் ஆகாரங்களை குடித்து விட்டு படுப்பதுண்டு. ஆனால் இந்த மூலிகை டீயை குடித்து விட்டு படுப்பதால் உடலில் பல ஆரோக்கியமான மாற்றங்கள் உருவாகிறது. மூலிகை டீ செய்யும் முறை : தேவையான பொருட்கள் : வெந்நீர் – 1 கப் இஞ்சி – சிறிய துண்டு இலவங்கப் பட்டை – சிறிதளவு கிராம்பு – சிறிதளவு செய்முறை : வெந்நீரில் இஞ்சி, […]
இன்றைய காலகட்டத்தில் நவீன உலகமாய் மாறிக்கொண்டிருப்பதால், கடினமாக உழைப்பவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. பலரின் கடினமான உழைப்பு அவர்களின் உடல் உறுப்புகளின் பல பகுதிகளை பாதிக்கிறது. இதனால் ஏற்படும் விளைவுகள் நம்மை பலவீனமாக்குகிறது. கடினமாக உழைப்பவர்கள் கால்கள் மற்றும் கைகள் மிகவும் கடினமாக இருக்கும். இந்த வகையில் உடலில் அதிகமாக பாதிக்கப்படும் பகுதி குதிகால் தான். அதிலிருந்து விடுபட சில வழிகள்…. தேவையான பொருட்கள் : மஞ்சள் தூள் – ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் – […]
இன்றைய இளம் சமூகத்தினரின் மிகப் பெரிய பிரச்சனையே உடல் எடை தான். வளர்ந்து வரும் நாகரீகம் நமது உணவு முறைகளிலும் பல மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. வெளிநாட்டு நாகரீகங்கள் வளர்ந்து நமது உணவு முறைகளில் பல மாற்றங்களை ற்படுத்தியுள்ளது. இந்த வெளிநாட்டு உணவு முறைகள் நமது உடலுக்கு ஒத்துக்கொள்வதில்லை. இதில் உள்ள அதிகப்படியான கொழுப்பு நமது உடல் எடை அதிகரிக்க முக்கிய பங்கு வகிக்கிறது. இதனால் உடல் எடை அதிகரிக்கிறது. இந்த உடல் எடையை குறைப்பதற்க்கு பல […]
தாய்மை அடையும் தாய்மாருக்கு ஒரு பக்கம் மனதில் மகிழ்ச்சி இருந்தாலும், மறு பக்கம் ஒரு விதமான பயமும் இருக்கும். பெண்களின் பிரசவம் என்பது மாரு பிறவி என்று பெரியவர்கள் கூறுவதுண்டு. இன்றைய காலகட்டத்தில் சுகப்பிரசவத்தை விட அதிகமாக அறுவை சிகிச்சை மூலமாக தான் பிரசவம் நடைபெறுகிறது. வளைகாப்பு : நமது இந்திய பாரம்பரியத்தில் சில பாரம்பரிய முறைகள் விஞ்ஞான பூர்வமாக நிரூபணம் செய்யப்பட்டவை. அதில் ஒன்று தான் வளைகாப்பு. வளைகாப்பு போடும் போது மூத்த சுமங்கலிகள் தான் […]
உஷ்ணமான காலங்களில் சிலருக்கு அம்மை நோய் போடுவதுண்டு. சிலருக்கு இதன் மூலம் சிறு சிறு பருக்கள் போன்று வரும், சிலருக்கும் பெரிய கொப்பளங்களாக வரும். இது வந்த பின் அந்த கொப்பளங்கள் மறைந்த பிறகும் அதனால் உண்டான தழும்புகள் மறையாமல் இருக்கும். இந்த தழும்புகள் முகத்தின் அழகை கெடுக்கிறது. இந்த தழும்புகளை போக்க இயற்கையான முறையில் சில வழிமுறைகள் உள்ளது. அவற்றை பற்றி பார்ப்போம். தேவையான பொருட்கள் : கசகசா – சிறிதளவு சிறிய மஞ்சள் துண்டு […]
மழைக்காலங்களில் நாம் உண்ணும் உணவு முறைகள் சரியாக இருக்க வேண்டும். நமக்கு விருப்பப்பட்ட உணவுகளையெல்லாம் சாப்பிட்டால் அது நமது உடலுக்கு பல சிக்கல்களை கொண்டுவர வாய்ப்புள்ளது. இதனால் நாம் மழைக்காலங்களில் உண்ணும் உணவு முறைகளில் கவனமாக இருக்க வேண்டும். நிலவேம்பு தூள் : மழைக்காலங்களில் வைரஸ் காய்ச்சல் மற்றும் மர்ம காய்ச்சல்கள் பரவாமல் இருக்க, நாம் வீட்டிலேயே நிலவேம்பு பொடியை வாங்கி வைத்து கொள்ள வேண்டும். இந்த பொடியை வெந்நீரில், சிறிதளவு பனங்கற்கண்டு சேர்த்து கொதிக்க வைத்து […]
இன்றைய கால கட்டத்தில் முதுகு மற்றும் இடுப்பு வலியால் அவதிப்படாத நபர்களே இருக்க முடியாது.பெரும்பாலும் பெண்களே இந்த நோயால் அதிகம் பாதிக்கப் படுகின்றனர்.அறுவை சிகிக்சைக்கு பிறகு L4,L5 என்னும் தண்டுவடம் பாதிக்க படுகிறது.முதுகு ,இடுப்பு வலியை சீராக்கும் முருங்கை கீரை கஞ்சி எப்படி செய்வது என்பதை பார்ப்போம். தேவையான பொருட்கள் : முருங்கை கீரை -3 கட்டு பச்சரிசி -1கிலோ ஏலக்காய்-சிறிதளவு மிளகு -சிறிதளவு செய்முறை : முருங்கை கீரையை சுத்தம் செய்து மிக்ஸியில் போட்டு அரைத்து இரண்டு […]