தமிழகத்தில் காச்சல் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், குமரி மாவட்டத்தில் வழக்கறிஞர் ஒருவர் பன்றிகாய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் அந்த மாவட்டத்தில் உள்ள ஏரிகள், அணைகள், குளங்கள் எல்லாம் நிரம்பி வருகிறது. பள்ளிகளுக்கு சென்ற குழந்தைகள் நனைந்து கொண்டே சென்றுள்ளனர். இந்நிலையில் திற்பரப்பு அருவியில் தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 5வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையயில் அந்த மாவட்டத்தில் உள்ள ஏரிகள், குளங்கள் மற்றும் அணைகள் நிரம்பி வருகிறது. தொடர்மழை காரணமாக நாகர்கோவிலில் 5 வீடுகள் இடிந்து விழுந்தனர். உயிர்சேதமின்றி மக்கள் தப்பித்து கொண்டனர்.
குமரி மாவட்டம் தமிழகத்தோடு இணைந்த நாளையொட்டி அரசு விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் நவ.1ம் தேதி தமிழகத்தோடு இணைந்த நாள். இதனையடுத்து நவ.1ம் தேதி அரசு விடுமுறை நாள் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் அனைத்து அணைகளிலும் நீர்வரத்து அதிகரித்து வருவதால், அணைகளின் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது. இதனால் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அணைகள் நிரம்பியதால் திற்பரப்பு அருவியில் குளிக்க மக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
தற்போது அநேக இடங்களில் மலை பெய்து வருவதால் நீர்நிலையை வேகமாக நிறைந்து வருகிறது.இந்நிலையில் கடந்த சில நாட்களாக மேற்குத்தொடர்ச்சி மழை பகுதியில் பெய்துவரும் மழையால் கன்னியாகுமரி மாவட்ட குழித்துறையில் உள்ள தாமிரபரணி ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.அதுமட்டுமில்லாமல் பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 72 அடியை நெருங்கி வருவதால் மக்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. DINASUVADU
தமிழகத்தில் 3 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியுள்ளது.இதனால் மக்கள் மழையால் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தமிழகத்தில் குமரி, நாகை, தர்மபுரி மாவட்டங்களில் நல்ல மழை பெய்துள்ள நிலையில், சேலத்தில் பெய்த கனமழையால் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது.இந்நிலையில் சேலத்தில் வெயில் வாட்டிய நிலையில் இரவு இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது.பல்வேறு பகுதிகளிலும் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. குடியிருப்புகளில் மழைநீர் புகுந்ததால் மக்கள் அவதிக்கு ஆளாகினர். மேலும் தர்மபுரிமாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் நேற்றுமாலை கனமழை பெய்தது. சுமரர் ஒருமணி நேரம் […]
மகளை காதல் திருமணம் செய்தவரையும், உறவினர்களையும் அரிவாளால் வெட்டி, மகளை கடத்திச் சென்றதாக நாம் தமிழர் கட்சி நிர்வாகி உட்பட 7 பேரை கன்னியாகுமரி போலீஸார் தேடி வருகின்றனர். கன்னியாகுமரியை அருகே உள்ள மயிலாடி பெருமாள்புரத்தைச் சேர்ந்தவர் ஜெயபால். பெயின்டிங் கான்ட்ராக்டரான இவர், நாம் தமிழர் கட்சியின் அகஸ்தீஸ்வரம் ஒன்றியச் செயலாளராக உள்ளார். அதே பகுதியைச் சேர்ந்த ஸ்டார்லின் (24) என்பவர் ஜெயபாலிடம் வேலைபார்த்து வந்தார். ஸ்டார்லினுக்கும், ஜெயபாலின் மகள் டிக்சோனாவுக்கும் (22) இடையே காதல் ஏற்பட்டது. இதையறிந்த […]
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில், பைக் ரேசில் ஈடுபட்டு, சிறுமிக்கு படுகாயம் ஏற்படுத்திய 2 இளைஞர்களை பொதுமக்கள் அடித்து உதைத்தனர். குளச்சலில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த இளைஞர்கள் சிலர், அதிகாலையில் பைக் ரேசில் ஈடுபடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளதாக புகார்கள் உள்ளது.இன்று காலை குளச்சல் கோடிமுனை பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர், 5 பைக்குகளில் பைக் ரேசில் ஈடுபட்டுள்ளனர். குளச்சல் பஸ் நிலையம் அருகே, எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது ரேஸ் பைக் மோதியதில், இருசக்கர வாகனத்தில் வந்த […]
கன்னியாகுமரி பகுதியில் மழை காரணமாக விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தபட்டுள்ளது மழை தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்த எச்சரிக்கையில், அக்டோபர் 7ஆம் தேதி தமிழகத்தில் வானிலை மிகவும்மோசமாக இருக்கும் .எனவே ‘ரெட் அலெர்ட்’ எச்சரிக்கை விடுகப்பட்டது.ரெட் அலர்ட்டை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக கன்னியாகுமரி ,நீலகிரி,மதுரை,கோவை மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்ப்புப்படையினர் சென்றனர். இன்று தமிழகத்தில் நாளை அதிகனமழைக்கு வாய்ப்பில்லை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக வானிலை ஆய்வு […]
பெட்ரோல் டீசல் விலை நாளுக்குநாள் உயர்ந்துகொண்டே போகிறது. இதனையடுத்து, மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளார்கள். இதனையடுத்து, பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாகர்கோவிலில் பாமக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்க்கு மாவட்ட செயலர் வி.ஜார்ச்கர்ணன் தலைமை வகித்தார்.
நாகர்கோவில், திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் கடந்த ஆண்டு தமிழ்நாடு உயர்கல்வி மன்ற அறிவிப்புக்கு மாறாக மாணவர்களின் தேர்வு கட்டணத்தை உயர்த்தியது. இதைக் கண்டித்தும், பல்வேறு வகைகளில் மாணவர்கள் மீது கல்வி கட்டண சுமையை ஏற்றுவதை கண்டித்தும், தமிழில் தேர்வு எழுத தடை விதிக்கப்பட்டுள்ளதை கண்டித்தும் கல்லூரி மாணவ-மாணவிகள் அடிக்கடி போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் நேற்றும் குமரி மாவட்டத்தில் சில கல்லூரி மாணவ-மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து அந்தந்த கல்லூரிகளின் முன்பு அமர்ந்து போராட்டம் நடத்தினார்கள். இந்திய […]
கன்னியாகுமாரி அருகே மாணவி ஒருவர் தன் காதலனை கொலை செய்ய தன் பெற்றோர் திட்டமிட்டுள்ளதாக பரபரப்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். சஜூ என்பவர் கன்னியாகுமரி மாவட்டம் கண்ணனூர் பகுதியை சேர்ந்தவர். இவர் அதே பகுதியை சேர்ந்த பெரில் என்ற மாணவியை காதலித்து வந்தார் .ஆனால் இந்த விவகாரம் கல்லூரியில் படித்து வரும் பெரிலின் பெற்றோருக்கு தெரிய வந்ததும் சஜூவை கொன்று விடுவதாக மிரட்டியுள்ளனர்.இந்த விவகாரம் தொடர்பாக பெரிலை தாக்கியதோடு அவரை உறவினர் ஒருவர் வீட்டில் தங்க வைத்துள்ளதாக வீடியோவில் தெரிவித்துள்ளார்.மேலும் தன் காதலனை கூலிப்படையை […]
பாஜக பற்றி விமர்சித்து கருத்து தெரிவித்த நபரை போலி முகநூல் கணக்கிலிருந்து இறந்துவிட்டதாக கூறி அவதூறு பரப்பிய பாஜக ஆதரவாளர் சவுதி அரேபியாவில் இருந்து ஊர் திரும்பியதுமே கைது செய்யப்பட்டார். கன்னியாகுமரி மாவட்டம் கூட்டமாவு பகுதியைச் சேர்ந்த கோபி என்பவர் சவுதி அரேபியாவில் கட்டிட வேலை செய்து வந்துள்ளார். பாஜக ஆதரவாளரான இவர், பூந்தோப்பு பகுதியை சேர்ந்த டூபஸ் பெலுடின் என்பவர் முகநூல் மூலம் அறிமுகமாகி உள்ளார்.காங்கிரஸ் பிரமுகரான பெலுடின் தொடர்ந்து பாஜக-வையும், பிரதமர் மோடியையும் விமர்சித்து […]
உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு குமரி மாவட்டத்தில் அரசு அருங்காட்சியகத்தில் புகைப்பட கண்காட்சி நடைபெற்றது. இதில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் இடம் பெற்றன. இக்கண்காட்சியை கன்னியாகுமரி அரசு உறுப்பு கல்லூரி ஆங்கிலத் துறை தலைவர் சகாய சுதா தொடங்கி வைத்தார். இக்கண்காட்சியை கன்னியாகுமரி அரசு உறுப்புக்கல்லூரி மாணவர், மாணவிகள் பார்வையிட்டனர்.
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே வெயில் வெளுத்து வாங்கியது.இந்நிலையில் நேற்று காலை முதலே வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. இதனை தொடர்ந்து நேற்று சில இடங்களில் இடியுடன் கூடிய சாரல் மழை பெய்தது. இதனையடுத்து குமரி மாவட்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநிலக்குழுக் கூட்டம், 2018 செப்டம்பர் 22-24 ஆகிய தேதிகளில் விழுப்புரத்தில் நடைபெற்று வருகிறது.இதில் கன்னியாகுமரி மாவட்ட காவல்துறையை கண்டித்து தீர்மானம் போடப்பட்டது.அதில் , கன்னியாகுமரி மாவட்டம் அருமனை வட்டார வாலிபர் சங்கத்தின் இடைக்கமிட்டி மாநாடு 23.9.2018 அன்று நடத்துவதற்கான காவல்துறை அனுமதி கோரப்பட்டது. காவல்துறை அனுமதி மறுத்ததைத் தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின் பெயரில் குறிப்பிட்ட இடத்தில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. பிரதிநிதிகள் மாநாடு முடித்து பொதுக்கூட்டம் நடைபெற்ற இடத்திற்கு வாலிபர் சங்கத்தினர் அமைதியாக எந்த பிரச்சனையுமின்றி கும்பலாக […]
நாகர்கோவில்: எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கன்னியாகுமாரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியில் சபாநாயகர் தனபால் முன்னிலையில் தற்போது நடந்துவரும் நிகழ்ச்சியில் முதல்வர் பழனிச்சாமி தற்போது பேசினார். அதில், எல்லைககளின் மறு சீரமைப்பு பணிகள் முடிவடைந்ததும் நகர்கோவில் மாநகராட்சியாக மாற்றப்படும் என்று கூறினார். ஏற்கனவே தமிழகத்தில் 12 மாநகராட்சிகள் உள்ள நிலையில் தற்போது 13 வது மாநகராட்சியாக நாகர்கோவில் ஆக்கப்படும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார். இன்று காலை மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் முதல்வர் பழனிச்சாமியை நேரில் சந்தித்து நாகர்கோவிலை மாநகராட்சியாக […]
நாகர்கோவில் நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என்று முதலமைச்சர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார். இன்று நாகர்கோவிலில் முதலமைச்சர் பழனிச்சாமியை சந்தித்தார். அதன் பின் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கூறுகையில்,கன்னியாகுமரி மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து முதலமைச்சர் பழனிச்சாமியின் பார்வைக்கு கொண்டு சென்றேன். நாகர்கோவிலை மாநகராட்சியாக்க வேண்டும் என முதலமைச்சர் பழனிச்சாமியிடம் கோரிக்கை வைத்தேன் என்றும் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். இந்நிலையில் நாகர்கோவிலில் சபாநாயகர் தனபால் தலைமையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடைபெற்று வருகிறது.இதில் முதலமைச்சர் பழனிச்சாமி பேசுகையில், எல்லைகள் மறுசீரமைப்பு பணி முடிந்ததும் கன்னியாகுமரி […]