மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அனைத்து பொதுமக்களும் உற்சாகமாக தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில், குமரி மாவட்டம் தூத்தூர் கிராமத்தில் 60% மீனவர்களுக்கு வாக்குரிமை மறுக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. பொன் ராதாகிருஷ்ணனுக்கு எதிராக வாக்களிக்கக் கூடும் என்பதால் இவ்வாறு செய்திருப்பதாக கூறியுள்ளனர். இதனையடுத்து, 60% மீனவர்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் விடுப்பதாக காரணம் என்ன?, வாக்களிக்க அனுமதிக்காவிட்டால், போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக பொதுமக்கள் அறிவித்துள்ளனர்.
தமிழகத்தில் மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது.இந்நிலையில் அனைத்து காட்சினரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணனை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர் ஸ்டாலின் சட்டப் பேரவைக்கு முறையாக வருவதில்லை , அப்படியே வந்தாலும் பொறுமையாக இல்லாமல் வெளிநடப்பு செய்து விடுவார் என சரத்குமார் விமர்சனம் செய்தார். மேலும் கடந்த கால காங்கிரஸ் […]
நாகர்கோவில் அருகே முன்விரோதம் காரணமாக சகோதரர்கள் மூவருக்கு ஆயுள் தண்டனை. நாகர்கோவில் அருகே, தம்மத்து கோணத்தில் முன்விரோதம் காரணமாக செல்வகுமார் என்பவரை கொலை செய்துள்ளனர். இந்த கொலை தொடர்பாக, சகோதரர்கள் மணிகண்டன்(31), அய்யப்பன் (32), பாபு (34) ஆகியோருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரியில் வாகனம் மற்றும் பைக் மோதியதில் 2 பேர் சம்பவ இடத்துலே உயிரிழந்தனர். விபத்தை ஏற்படுத்திய டிரைவர் தப்பியோடியதால் போலீசார் தீவிர விசாரணை நடத்தி தேடிவருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியின் அருகே இருசக்கர வாகனம் மற்றும் சொகுசு கார் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். நாகர்கோவில் அருகே உள்ள பார்வதிபுரம் மேம்பாலத்தில் அருகே 3 பேர் இருசக்கர வாகனத்தில் சென்றனர்.அப்போது அந்த வழியாக வந்த கார் இருசக்கர வாகனம் மீது நேருக்கு நேர் மோதியது.இதில் […]
நாகர்கோவில் அரசு கல்லூரி மருத்துவமனை மருத்துவமனையில் கடந்த ஆண்டு மட்டும் 1019 பேர் அவசர சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்த அதிர்ச்சி தகவல் அம்பலமாகியுள்ளத. நாள் ஒன்றுக்கு 2,000 பேர் வரை சிகிச்சை பெற்றுவரும் நாகர்கோவில் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் முறையாக வருவது இல்லை.இதனால் நோயாளிகளுக்கு பயிற்சி மருத்துவர்களை கொண்டு சிகிச்சை அளிக்கும் நிலை உள்ளது இதனால் உயிரிழப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவர் சரியான சிகிச்சை […]
நாகர்கோவில் பார்வதிபுரம் நாடாங்குளத்தில் ஒரு டாஸ்மாக் கடை ஓன்று நடத்தப்பட்டு வருகிறது. இந்த கடையின் பின்பக்க சுவரை துளைபோட்டு மர்பநபர்கள் கொள்ளை அடித்துள்ளனர். பின்னர் அந்த துளை வழியாக உள்ளே புகுந்த கொள்ளையர்கள் கடையில் விற்பனைக்காக வைத்திருந்த விலை உயர்ந்த மதுபானங்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர். மேலும் அவர்கள் கடையில் இருந்த 63 மதுபாட்டில்களை திருடிச்சென்றுள்ளதாக போலீசார் விசாரணையின் போது தெரியவந்துள்ளது. மேலும் அவற்றின் மதிப்பு ரூ.24 ஆயிரம் இருக்கும் என்று விசாரணையின் போது தெரியவந்துள்ளது. இந்த மர்ம நபர்களை போலீசார் […]
கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை அருகே தவிட்டவிளையை சேர்ந்தவர் ரகுராஜன். இவருடைய மனைவி ரூபினி இவர்களுக்கு திருமணமாகி 2 வருடம் ஆகிறது. இவர்களுக்கு 10 மாத கைக்குழந்தை ஒன்று உள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் ரகுராஜனும், ரூபினியும் ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்று பிறகு வீடு திரும்பியுள்ளனர். அதன் பின்பு ரூபினிக்கும், ரகுராஜனுக்கும் இடையே ஒரு சிறிய தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனம் உடைந்த ரூபினி அவரது வீட்டில் உள்ள மின் விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். […]
தமிழக – கேரள எல்லையில் பேருந்து சேவைகள் மீண்டும் இயக்கப்பட்டது. கேரளாவில் நடைபெற்ற முழு கடை அடைப்பு போராட்டம் காரணமாக கடந்த 2 நாட்களாக எல்லையில் போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தமிழக – கேரள எல்லைப்பகுதியில் நிறுத்தப்பட்ட பேருந்துகள் மீண்டும் இயக்கப்படுகிறது.
கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் 3 பேர் ஈரான் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கன்னியாகுமரி மீனவர்கள் 3 பேர் சவுதியில் இருந்து மீன் பிடிக்க சென்றுள்ளனர். இவர்கள் எல்லை தாண்டி போனதாக ஈரான் கடற்படையினர் கன்னியாகுமரி மீனவர்கள் 3 போரையும் கைது செய்துள்ளனர். இவர்கள் 3 பரையும் மீட்டு தாயகம் கொண்டுவருவதற்கு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குமரி மாவட்டத்தில் வங்கியில் நகை திருடிய ஊழியர் போலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குமரி மாவட்டத்தில் வங்கியில் நகை திருடிய ஊழியர் போலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் அழகப்பாபுரம் டி.எம்.பி வங்கிக்கிளையில் நகை திருடபட்டிருந்த நிலையில், போலீசார் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி குற்றவாளியை தேடி வந்துள்ளனர். இந்நிலையில், டி.எம்.பி வங்கியில் உதவியாளராக பணிபுரிந்த ஊழியரே நகை திருடியதாக தெரியவந்துள்ளது. இதனையடுத்து போலீசார் நகையை திருடிய ஊழியரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கன்னியாகுமரியில் கடல் சீற்றம் காரணமாக படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. படகு போக்குவரத்து ரத்து : குமரியில் விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு செல்லக் கூடிய படகு போக்குவரத்து, கடல் சீற்றம் மற்றும் சூறைக்காற்றால் கடந்த 3 நாட்களாக நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று காலை 8 மணி முதல் படகு போக்குவரத்து தொடங்கியது. நேரம் செல்ல செல்ல கடல் சீற்றம் அதிகமாக காணப்பட்டதால், படகு சேவை மீண்டும் நிறுத்தப்பட்டது. இதனால் படகு பயணம் செய்வதற்காக […]
குமரி மாவட்டத்தில் கல்குவாரிகளை ஆய்வு செய்து அறிக்கை அளிக்குமாறு குமரி மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 16 குவாரிகளை பயன்படுத்துவோர் நீர்வழி பாதைகளை ஆக்கிரமித்துள்ளதாக உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இதனையடுத்து,கல்குளம், பேயன்குளம் உழைத்த 16 கிராம கல்குவாரிகளை ஆய்வு செயுமாறும், ஆய்வு செய்து உயர்நீதிமன்றத்திற்கு அறிக்கை அளிக்குமாறும் குமரி மாவட்ட ஆட்சியருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நேற்று புத்தாண்டை பலரும் பல விதமாக கொண்டாடினர். இதனையடுத்து கன்னியாகுமரி கடற்கரையில் புத்தாண்டை கொண்டாட மக்கள் கூட்டம் திரண்டது. முக்கடல் சங்கமிக்கும் கடற்கரை பகுதியான சங்கிலித்துறையில் மக்கள் கூட்டம் திரண்டது. புத்தாண்டு கொண்டாட்டம் : இரவு 12 மணியளவில் புத்தாண்டு பிறந்தவுடன் அனைவரும் ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்து, கேக் வெட்டி புத்தாண்டை வரவேற்றுள்ளனர். அதிகாலை சூரியன் அஸ்தமிக்கும் போது அனைரும் கைகூப்பி வணங்கியுள்ளனர். மேலும் சிலர் செல்பி எடுத்து புத்தாண்டை கொண்டாடியுள்ளனர். திருவள்ளுவர் சிலைக்கு சுற்றுலாப்பயணிகள் படகு […]
கடந்த ஆண்டில் கன்னியாகுமரிக்கு 20 லட்சத்து 49 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு இந்தியாவின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி உலக அளவில் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்து செல்கின்றனர். இங்கு சூரிய உதயம் மற்றும் அஸ்தமனம் இரண்டும் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது. கடலின் நடுவில் உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை ஆகியவையும் பயணிகளை கவரும் […]
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில், விதிமீறி வைக்கப்பட்டிருந்த டிடிவி தினகரனின் விளம்பர பேனர்கள் காவல்துறையினர் உதவியுடன் அகற்றப்பட்டன. நாகர்கோவிலில் பல்வேறு பகுதிகளில் டிடிவி தினகரனுக்கு விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. விபத்துக்குள் ஏற்படும் என்பதைக்கூட பொருட்படுத்தாமல், சாலையை மறித்து அலங்கார வளைவுகளும் அமைக்கப்பட்டிருந்தன. நீதிமன்ற உத்தரவுகளை மீறி பேனர்கள் வைக்கப்பட்டிருந்தையடுத்து, நகராட்சி ஊழியர்கள் பேனர்களை அகற்ற முயன்றனர். அப்போது, அங்கு வந்த அமமுகவினர், ஊழியர்களை தடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த காவல்துறையினர், நீதிமன்ற உத்தரவுப்படி ஊழியர்கள் நடவடிக்கை எடுப்பதாக, […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளையும் டிச..,24 தேதியும் விடுமுறை அளித்து ஆட்சியர் அறிவித்துள்ளார். கன்னியகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள சுசீந்திரம் ஸ்தாணுமாலையன் கோவில் மார்கழி திருவிழா தேரோட்டத்தை முன்னிட்டு நாளையும் மற்றும் கிறிஸ்துமஸ் ஈவ் விழாவிற்காக திங்கட்கிழமையும் உள்ளூர் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
தேங்காய் பட்டினம் துறைமுகத்தில் தடை செய்யப்பட்ட மீன்களை ஏற்றிச்சென்ற லாரியை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். குமரி மாவட்டம் தேங்காய்ப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து தடை செய்யப்பட்ட மீன்கள் பிடிக்கப்பட்டு வெளி மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது. கடலில் இருந்து அழுகிய நிலையில் கொண்டுவரப்படும் இந்த மீன்கள் உரம் தயாரிப்பதற்காக பிளாஸ்டிக் பெட்டிகளில் நிரப்பப்பட்டு கண்டெய்னர்கள் மூலம் வெளியே எடுத்துச்செல்லப்படுகிறது. இந்த நிலையில், அந்த மீன்கள் அதிக துர் நாற்றம் வீசுவதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் […]
கன்னியாகுமரியில் உள்ள தாணுமாலயன் கோவிலில் மார்கழி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. சுசீந்திரம் பகுதியில் அமைந்துள்ள தாணுமாலயன் சுவாமி திருக்கோவில், சிவன் பிரம்மா, விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகளும் ஒன்றாக காட்சியளிக்கும் கோவிலாகும். இந்த கோவிலில் ஆண்டு தோறும் நடைபெறும் மார்கழி தேர் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஆகம முறைப்படி கேரளா பாரம்பரிய மேள தாளங்களுடன் நடைபெற்ற கொடியேற்ற நிகழ்ச்சியில் தமிழகம் மட்டும் இன்றி கேரளா மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். […]
பிரதமர் மோடியின் ஆட்சியால் அம்பானி மற்றும் அதானிகளுக்கு தான் பலன்என்று சட்டமன்ற உறுப்பினர் வசந்தகுமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நாகர்கோவிலில்சட்டமன்ற உறுப்பினர் வசந்தகுமார் கூறுகையில்,கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி நடந்தாலும், மேகதாது அணை விவகாரத்தை பொறுத்தவரை, தமிழக காங்கிரஸ் கட்சிக்கு தமிழக நலன் தான் முக்கியம் . பிரதமர் மோடியின் ஆட்சியால் அம்பானி மற்றும் அதானிகளுக்கு தான் பலன் . மக்களுக்கு பயனுள்ள திட்டங்களை கொண்டு வந்தால் தான், மத்திய அரசு திட்டங்களை மக்கள் வரவேற்பார்கள் என்றும் வசந்தகுமார் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரியில் புகழ்பெற்ற தூய அலங்கார உபகாரமாதா கோயில் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியுள்ளது. கன்னியாகுமரியில் உள்ள தூய அலங்கார உபகாரமாதா தேவாலயத்தில் ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ் விழாவையொட்டி, டிசம்பர் மாதத்தில் 10 நாட்கள் திருவிழா கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது.இதையொட்டி திருப்பலி, நேர்ச்சை, கொடிகள் பவனி உள்ளிட்டவை நடைபெற்றன. திருக்கொடியை ஆயர் நசரேயன் சூசை ஏற்றி வைத்து உரையாற்றினார். இந்த கொடியேற்றத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர். dinasuvadu.com