நாளை ராகுல் காந்தியின் பபுரட்சி பயணத்தை தொடங்கி வைக்க கன்னியாகுமரி பயணம் மேற்கொள்கிறார் முதலமைச்சர். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி நாளை கன்னியாகுமரியில் தொடங்கி காஷ்மீர் வரை 3,500 கிலோ மீட்டர் 150 நாட்கள் இந்திய ஒற்றுமை நடை பயணத்தை மேற்கொள்ள இருக்கிறார். அதற்காக, இன்று மாலை சென்னை வருகிறார் ராகுல்காந்தி. நாளை (புதன்கிழமை) காலை ஸ்ரீபெரும்புதூர் வரும் ராகுல் காந்தி, அங்கு ராஜீவ்காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகிறார். இதன்பின் கன்னியாகுமரி சென்று தனது பாதயாத்திரியை […]
கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறியை சேர்ந்த 4 பேருக்கு குரங்கு அம்மை அறிகுறி இருப்பதாக தகவல். கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறியை சேர்ந்த 4 பேருக்கு குரங்கு அம்மை நோய் அறிகுறி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. குரங்கு அம்மை பாதிப்பு போன்று உடலில் வீக்கம் இருந்ததால் 4 பேரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தனி வார்டில் சிகிச்சை பெறும் வில்லுக்குறி பகுதியை சேர்ந்த 4 பேரின் ரத்த மாதிரிகள் புனேவிற்கு பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் […]
நாகர்கோவில் அரசு மேல்நிலைப்பள்ளியில், மதிய உணவு சாப்பிட்ட 26 மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயிலில் உள்ள மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட சுமார் 20க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. பள்ளியில் இன்று மத்திய சாப்பாடு, பருப்புக்குழம்பு மற்றும் முட்டை பரிமாறப்பட்டதாக கூறப்படுகிறது. இதை சாப்பிட்ட சுமார் 20க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து சுகாதாரத்துறை மற்றும் காவல்துறைக்கு பள்ளி நிர்வாகம் தரப்பில் தகவல் […]
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோவிலின் கும்பாபிஷேகம் இன்று(ஜூலை 6 ஆம் தேதி) நடைபெற்று வருகிறது. இதனை முன்னிட்டு,கல்வி நிறுவனங்கள் மற்றும் மாவட்ட அரசு அலுவலங்களுக்கு இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.எனினும்,அவசர கால பணிகளுக்காக மட்டும் மாவட்டத்தில் உள்ள தலைமை அலுவலகம் வழக்கம் போல இயங்கும். மேலும்,இன்றைய உள்ளூர் விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக வருகின்ற ஜூலை 23 ஆம் தேதியன்று சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக அரசாணையையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோவிலின் கும்பாபிசேகமானது […]
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோவிலின் கும்பாபிஷேகம் வரும் 6 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.இதனையடுத்து அன்று மாவட்ட அரசு அலுவலங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கும்பாபிசேகமானது 418 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.
கன்னியாக்குமரி மாவட்டத்தில் கண்னாட்டுவிளை அரசு மேல்நிலைப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியை பியட்றிஸ் தங்கம்,பள்ளி மாணவர்களை மதமாற்றம் செய்ய முயன்றதாக ஆறாம் வகுப்பு மாணவி ஒருவர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இதனைத் தொடர்ந்து,சம்மந்தப்பட்ட ஆசிரியர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருந்தார். அதன்படி,ஆசிரியை பியட்றிஸ் தங்கத்திடம் கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.இந்நிலையில்,மதமாற்ற புகாரில் சிக்கிய தையல் ஆசிரியயை பியட்றிஸ் தங்கம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். […]
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உள்ள குளக்கட்சி எனும் பகுதியை சேர்ந்த கார்த்திகா எனும் 21 வயது பெண்ணுக்கு சஞ்சனா எனும் மூன்றரை வயது பெண் குழந்தையும், சரண் எனும் ஒன்றரை வயது ஆண் குழந்தையும் உள்ளது. திடீரென குழந்தை சரண் மயக்கமடைந்ததாக தாய் கார்த்திகா கூறவே, அருகிலிருந்தவர்கள் குழந்தையாய் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர். சந்தேகமடைந்த போலீசார் சிறுவனின் உடலை பிரேத பரிசோதனை செய்ததில் விஷம் […]
கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் நினைவுப் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலையை இணைக்கும் வகையில் ரூ.37 கோடியில் கடல்சார் நடைபாலம் அமைக்க தமிழ்நாடு அரசு ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ளது. இது தொடர்பாக,அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: கன்னியாக்குமரியில் விவேகானந்தர் பாறை மற்றும் அய்யன் திருவள்ளுவர் சிலையை இணைக்கும் கடல் பாலம் கட்டுவதற்கான ஒரு திட்டத்தைச் செயல்படுத்த,டெண்டர் 04.05.2022 14.00 மணி வரை ஆன்லைன் மூலம் மட்டுமே திருநெல்வேலி வட்டத்தின் கண்காணிப்புப் பொறியாளர் (H), C&M மூலம் பெறப்படும். பணிகளின் விவரங்கள்,பணிகளின் […]
கன்னியாக்குமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் விழாவையொட்டி அம்மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள நிலையில்,இந்த கோயிலின் மாசி கொடை திருவிழா கடந்த மாதம் இறுதியில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இக்கோயிலுக்கு தமிழகம் மட்டுமில்லாமல் கேரளாவிலிருந்தும் அதிக அளவில் பக்தர்கள் வந்து அம்மனை தரிசித்து செல்வது வழக்கம். குறிப்பாக,பெண்கள் தலையில் இருமுடி கட்டை சுமந்து வந்து பொங்கலிட்டு அம்மனை வழிபட்டு செல்வதால் […]
நாகர்கோவில் மாநகராட்சியின் துணை மேயர் பதவிக்கு திமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் மேரி பிரின்சி வெற்றி பெற்றுள்ளார். திமுகவின் அதிகாரபூர்வ வேட்பாளர் மேரி பிரின்சி 28 வாக்குகளும், போட்டி வேட்பாளர் ராமகிருஷ்ணன் 24 வாக்குகளும் பெற்றனர். இதில் 4 வாக்குகள் வித்தியாசத்தில் திமுகவின் வேட்பாளர் மேரி பிரின்சி வெற்றி பெற்றுள்ளார். மாநகராட்சி மேயர், துணை மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் மற்றும் துணை தலைவர் ஆகிய பதவிகளுக்கு இன்று மறைமுகத் தேர்தல் தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் நிலையில், […]
இன்று முதல் குமரியிலுள்ள விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு சுற்றுலா படகு சேவை தொடங்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்கும் விதமாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் பொதுமக்கள் கடற்கரை மற்றும் சுற்றுலாத் தலங்களுக்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து கடந்த 7ஆம் தேதி முதல் கன்னியாகுமரி கடற்கரை பகுதியில் உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு செல்வதற்கான சுற்றுலா பயணிகள் படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. இதனால் […]
கன்னியாக்குமரி:கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்கள்,அரசு அலுவலகங்களுக்கு இன்று(டிச.24 ஆம் தேதி) உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் வரும் டிச.25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ளது.இதனை முன்னிட்டு இன்று இரவிலிருந்தே தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.அந்த வகையில்,தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகளுடன் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. பொதுவாக,மற்ற மாவட்டங்களை விட கன்னியாக்குமரியில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் வெகு சிறப்பாக நடைபெறும்.இதனால்,டிச.25 ஆம் தேதி அரசு விடுமுறை […]
நாகர் கோவிலில் குறவர் குடும்பத்தினரின் உடமைகளை வெளியில் போட்டு, பேருந்திலிருந்து இறக்கி விடப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த செல்வம் எனும் மீன் விற்கும் தாயாரை கடந்த இரு தினங்களுக்கு முன்னதாக பேருந்தில் இருந்து இறக்கி விட்ட சம்பவம் பெருமளவில் பேசப்பட்டது. தாயார் தனது மனக்குமுறலை பேருந்து நிலையத்தில் கதறலாக கூறிய வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகிய நிலையில் முதல்வர் உள்ளிட்ட பலர் இதற்கு கண்டனம் தெரிவித்து இருந்தனர். மேலும் இந்த நடவடிக்கையில் ஈடுபட்ட பேருந்து […]
பேருந்திலிருந்து என்னை இறக்கி விட்டவர்களை தண்டிக்க வேண்டாம், குழந்தைகள் பாதிக்கப்படுவார்கள் என பாதிக்கப்பட்ட செல்வமேரி அம்மா கூறியுள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குளைச்சலில் மீன் விற்பனை செய்து வரக்கூடிய செல்வம் எனும் மூதாட்டி மீன் விற்று விட்டு வீட்டுக்கு செல்வதற்காக வானியக்குடி செல்லும் அரசு பேருந்தில் ஏறியுள்ளார். அப்பொழுது மூதாட்டியின் உடலில் துர்நாற்றம் வீசுவதாக கூறி பேருந்து நடத்துனர் அவரை கீழே இறங்கி விட்டுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த மூதாட்டி அந்த பேருந்து நிலையத்தில் நின்று அழுது கூச்சலிட்டுள்ளார். […]
பேருந்திலிருந்து மூதாட்டியை இறக்கிவிட்ட ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குளைச்சலில் மீன் விற்பனை செய்து வரக்கூடிய செல்வம் எனும் மூதாட்டி மீன் விற்று விட்டு வீட்டுக்கு செல்வதற்காக வானியக்குடி செல்லும் அரசு பேருந்தில் ஏறியுள்ளார். அப்பொழுது மூதாட்டியின் உடலில் துர்நாற்றம் வீசுவதாக கூறி பேருந்து நடத்துனர் அவரை கீழே இறங்கி விட்டதாக கூறப்படுகிறது. ஆத்திரமடைந்த மூதாட்டி அந்த பேருந்து நிலையத்தில் நின்று அழுது கூச்சலிட்டுள்ளார். தான் நடந்து சென்று வீட்டை […]
கன்னியாகுமாரியில் மீன் வாங்கி வந்து சமைக்க சொல்லி தந்தையை தொந்தரவு செய்துள்ளார் மகன். அப்போது ஏற்பட்ட தகராறில் தந்தை தள்ளிவிட்டு மகன் உயிரிழந்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் புத்தேரியில் ஆட்டுப்பட்டி காலனியில் வசித்து வருபவர் தங்கவேல். இவரது மகன் பெயர் கோலப்பன். கோலப்பன், தனது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தந்தையுடன் வசித்து வந்துள்ளார். கோலப்பன் அடிக்கடி மது குடிக்கும் பழக்கம் உள்ளவர் என கூறப்படுகிறது. சம்பவத்தன்று கோலப்பன் மீன் வாங்கி வந்துள்ளார். அந்த மீனை சமைத்து […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் அதி கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் சிவப்பு எச்சரிக்கை விடுப்பு. கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று ஒருசில இடங்களில் அதி கனமழை பெய்யக்கூடும் என்றும் இதனால் அம்மாவட்டத்துக்கு ரெட் அலர்ட் விடுக்கப்படுகிறது எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் மேலும் 5 நாட்களுக்கு கனமழை தொடரும் என்றும் தெரிவித்துள்ளது. நீலகிரி, தேனி, திண்டுக்கல், திருப்பூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், வங்கக்கடலில் தெற்கு அந்தமான் பகுதியில் உருவான காற்றுழத்த […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் ரயில் பாதையில் நிலச்சரிவு காரணமாக ரயில்கள் சேவைகள் ரத்து என்று தெற்கு ரயில்வே அறிவிப்பு. கன்னியாகுமரி மாவட்டத்தில் ரயில் பாதையில் நிலச்சரிவு காரணமாக 3 முக்கிய ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், 8 ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கன்னியாகுமரி – நாகர்கோவில் – திருவனந்தபுரம் இடையே ரயில்பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டதால் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நாகர்கோவில் – கன்னியாகுமரி – நாகர்கோவில் ரயில் (06426) இன்று இரு […]
போலீசாரிடம் அந்த சிறுமி அவருக்கு எய்ட்ஸ் இருக்கிறது எனக்கு ஏற்கனவே தெரியும். என்னிடம் சொல்லி இருக்கார். பார்க்க பரிதாபமாக இருந்தது அதனால்தான் இறக்கப்பட்டு காதலித்தேன். கன்னியாகுமரியை சேர்ந்த 17 வயதேயான சிறுமி, நாகர்கோவிலில் உள்ள ஒரு கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். இவர் சில நாட்களுக்கு முன்பதாக காணாமல் போன நிலையில், வீட்டிலுள்ளவர்கள் தேடிச் சென்றுள்ளனர். இதனையடுத்து, பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் விசாரணை தொடங்கிய போலீசாருக்கு, அப்பெண் அப்பகுதியில் ஆட்டோ ஓட்டும் 22 […]
கன்னியாகுமரி மாவட்டத்தின் உதவி ஆய்வாளராக பணியாற்றிய வில்சன் கொலை செய்யப்பட்ட வழக்கில், தற்போது மேலும் ஒரு தீவிரவாதி என என்பவர் அதிகாரிகள் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த வில்சன் அவர்கள் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் தேதி களியக்காவிளை சோதனை சாவடி அருகே சுட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை உண்டாக்கிய நிலையில், இந்த வழக்கில் காஜா, மொய்தீன், […]