அரசுப் பள்ளியில் சிறுமிக்கு கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே பாலியல் தொல்லை அளித்த ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். குளச்சலை அடுத்த இலப்பவிளையில் உள்ள அரசுப்பள்ளியில், 4ம் வகுப்பு பயிலும் 9 வயது சிறுமியிடம் வகுப்பாசிரியரான பொன்ராஜதுரை பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சிறுமி பெற்றோரிடம் கூறியதால் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டனர். தகவலறிந்து பள்ளிக்குச் சென்ற போலீஸார் ஆசிரியர் பொன்ராஜதுரையை காவல்நிலையம் அழைத்துச் செல்ல முயன்ற […]
சூறை காற்றுடன் பெய்து வரும் தொடர் மழையால், கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மின் கம்பங்கள் அறுந்து விழுந்ததில் இரண்டு பேர் பலியாகினர். பாறையில் சறுக்கி விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார். கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை பெய்து வருகிறது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி உள்ளிட்ட அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில், ஐந்துளி பகுதியைச் சேர்ந்த அகஸ்டின் என்ற இளைஞர் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டு இருந்த போது, மின்கம்பி அறுந்து விழுந்ததில் சம்பவ இடத்திலேயே […]
விவசாயிகள், கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை அணையில் நடைபெற்று வரும் சீரமைப்புப் பணிகளோடு சேர்த்து அணையை தூர்வாரும் பணியையும் மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தில் கோதையாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பேச்சிப்பாறை அணையின் நீர், கன்னியாகுமரி மற்றும் நெல்லை மாவட்டங்களிலுள்ள சுமார் 75 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. பல ஆண்டுகளாக பேச்சிப்பாறை அணை தூர்வாரப்படாமல் கிடப்பதால், பத்து அடிக்கு மேல் சகதி, மணல், மழை வெள்ளத்தில் இழுத்துவரப்பட்ட மரங்கள் உள்ளிட்டவை நிறைந்து […]
தமிழக அரசு கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை பார்வையிட செல்லும் படகு போக்குவரத்து கட்டணத்தை உயர்த்தியுள்ளது. சர்வதேச சுற்றுலாத்தலங்களில் ஒன்றான கன்னியாகுமரிக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். கன்னியாகுமரி கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையையும் கண்டுகளிக்க அரசு பூம்புகார் கப்பல் போக்குவரத்து சார்பில் சுற்றுலா படகு இயக்கப்படுகிறது. இந்நிலையில் படகு போக்குவரத்திற்கான கட்டணத்தை உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி சாதரண கட்டணம் 34 […]
குஜராத் கடற்பகுதியில் மீன்பிடித்துவிட்டு திரும்பிய போது, படகு கவிழ்ந்ததில் கன்னியாகுமரி மீனவர்கள் 2 பேர் மாயமாகியுள்ளனர். பூதுரை மீனவ கிராமத்தை சேர்ந்த 6 பேர், குஜராத் கடற்பகுதியில் மீன்பிடிப்பதற்காக கடந்த 3 ஆம் தேதி அங்கு சென்றனர். மீன்பிடித்துவிட்டு விசைப்படகில் கடந்த 15 ஆம் தேதி திரும்பிய இவர்களது படகு, இன்று காலை கர்நாடகாவில் உள்ள கார்வார் துறைமுகம் அருகே சூறைக்காற்றில் கவிழ்ந்தது. கடலில் தத்தளித்த 4 மீனவர்களை அங்கு மீன்பிடித்துக் கொண்டிருந்தவர்கள் மீட்டனர். புஷ்பராஜ், அருள்ராஜ் […]
நாகர்கோவில் கோட்டார் வட்டவிளையைச் சேர்ந்தவர் சுதாகர் (வயது 32). இவர் நாகர்கோவில் செட்டிகுளம் சந்திப்பு பகுதியில் பொதுப்பணித்துறை அலுவலக சாலையில் பிரபல செல்போன் நிறுவனம் ஒன்றின் செல்போன்கள் விற்பனை செய்யும் ஷோரூமை நடத்தி வருகிறார். அதில் ரூ.6500 முதல் அதிகபட்சமாக ரூ.50 ஆயிரம் வரை விலைகொண்ட ஸ்மார்ட் போன்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்தன. நேற்று முன்தினம் இரவு சுதாகர் வழக்கம் போல் ஷோரூமை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார். நேற்று காலையில் திறக்க வந்தபோது ஷோரூமின் […]
தமிழகம் முழுவதும் கடந்த 23-ந் தேதி முதல் சாலை பாதுகாப்பு வாரவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதேபோல் குமரி மாவட்டத்திலும் சாலை பாதுகாப்பு வாரவிழாவையொட்டி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் நாகர்கோவில் வட்டார போக்குவரத்து துறை, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் சாலை பாதுகாப்பு வாரவிழா நேற்று நாகர்கோவில் கோணத்தில் உள்ள அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் நடைபெற்றது. விழாவுக்கு என்ஜினீயரிங் கல்லூரி முதல்வர் சிவசுப்பிரமணியபிள்ளை தலைமை தாங்கினார். நாகர்கோவில் வட்டார போக்குவரத்து அதிகாரி முருகன், தமிழ்நாடு […]
பூதப்பாண்டியை அடுத்த அழகியபாண்டியபுரம் அருகே உள்ள எட்டாமடை பகுதியை சேர்ந்தவர் இளையபெருமாள் (வயது 48). ரப்பர் பால் வெட்டும் தொழிலாளி. இவருடைய மனைவி லலிதா (37). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்தநிலையில் கடந்த ஜனவரி மாதம் 5-ந் தேதி அதிகாலை வீட்டில் தனியாக இருந்த லலிதா கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக பூதப்பாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே அவருடைய கணவர் இளையபெருமாளும் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். […]
நாகர்கோவில் நகராட்சிக்கு உள்பட்ட பகுதியில் அனுமதியின்றி சாலையில் சிலர் இறைச்சி கடைகள் நடத்தி வருவதாகவும், அந்த கடைகளில் சுகாதாரமற்ற முறையில் மாடு மற்றும் பன்றி வெட்டப்பட்டு இறைச்சி விற்கப்படுவதாகவும் நகராட்சி அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன. அதைத்தொடர்ந்து, சட்டவிரோதமாக சாலையில் அனுமதியின்றி அமைக்கப்பட்ட கடைகளை அகற்றவும், சுகாதாரமற்ற முறையில் இறைச்சியை விற்கும் கடை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் நகராட்சி ஆணையாளர் சரவணக்குமார் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன்படி, நகர்நல அலுவலர் கின்சால் தலைமையில், சுகாதார ஆய்வாளர்கள் பகவதிபெருமாள், மாதேவன் […]
குலசேகரம் அருகே உள்ள பொன்மனை, இடைக்கட்டான் கரையை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் சுஜித் (வயது20). இவர் ஐ.டி.ஐ. படித்துவிட்டு வேலை தேடி வந்தார். சரியான வேலை கிடைக்காததால் தற்போது கட்டிட தொழிலாளியாக வேலை செய்து வந்தார். நேற்று வேலைக்கு செல்வதற்காக வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் குலசேகரம் நோக்கி புறப்பட்டார். மங்கலம் பகுதியில் சென்ற போது, எதிரே குலசேகரத்தில் இருந்து பொன்மனை நோக்கி ஒரு லாரி வந்து கொண்டிருந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் லாரியும், மோட்டார் சைக்கிளும் […]
தக்கலை:சுந்தர்சிங் இவர் அடுத்த தொலையாவட்டம் காஞ்சிரங்காட்டுவிளை பகுதியில் வசித்துவருகிறார். அரசு போக்குவரத்து கழக குழித்துறை பணிமனையில் மேலாளராக உள்ளார். இவர் சக ஊழியர்களுடன் நேற்று முன்தினம் காலை , தடம்மாறி இயக்கப்படும் மினி பஸ்களை கண்டறிந்து அவற்றை பிடித்து, கோழிப்போர்விளையில் உள்ள மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஒப்படைத்தார். அப்போது மினி பஸ் உரிமையாளர்களான சுந்தர்ராஜ், சுரேஷ்குமார், டான் சர்ச்கேணி ஆகியோர், சுந்தர்சிங்கை தடுத்து நிறுத்தி தகாத வார்த்தைகள் பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து சுந்தர்சிங் […]
கன்னியாகுமரியில் பல்வேறு கிராமங்களில் கடல்சீற்றத்தால் குடியிருப்புகளுக்குள் நீர் புகுந்தது ராட்சத கடல் அலையால் அழிக்கால், பிள்ளைதோப்பு, முட்டம் குடியிருப்பு பகுதிகளில் நீர் புகுந்தது கடல்நீர் புகுந்ததால் நூற்றுக்கணக்கான மீனவர்கள் வெளியேறினர். கடலோரத்தில் வசிக்கும் மீனவர்கள்,கன்னியாகுமரி மாவட்டத்தில் கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் அச்சத்தில் உள்ளனர். வழக்கத்திற்கு மாறாக கடல் அலைகள் சீறிப்பாய்ந்து வருவதால் கடலோரம் நிறுத்திவைக்கப்பட்டிருந்த படகுகள் சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. மீன்பிடித்த தடைக் காலம் அமலில் இருப்பதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவில்லை. இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் […]
மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்,பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தை மறைக்கவே ஆளுநர் மீது குற்றம் சாட்டப்படுவதாக கூறியுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நிர்மலா தேவி பேசும் விதத்திலிருந்தே அவர் தொழிலில் எந்த அளவுக்கு கைதேர்ந்தவர் என்பது தெரியவருவதாகவும், அவரிடம் முறையாக விசாரணை நடத்தினால், எந்தெந்த கட்சியினருடன் அவருக்கு தொடர்பு உள்ளது என்பது தெரியவரும் என்றும் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
குளச்சல் : குளச்சல் அண்ணாசிலை சந்திப்பில்குளச்சல் நகர தி.மு.க. சார்பில் செயலாளர் நசீர் தலைமையில் எச்.ராஜா உருவ பொம்மை எரிக்கும் போராட்டம் நடந்தது. இதில், முன்னாள் கவுன்சிலர் சாதிக், கிளை செயலாளர் சாதிக், ரீத்தாபுரம் பேரூர் செயலாளர் கோபாலதாஸ், குருந்தன்கோடு ஒன்றிய பிரதிநிதி கிறிஸ்டோபர் ஜெகன், மாவட்ட மீனவர் அணி துணை செயலாளர் மரிய ரூபன் மற்றும் வக்கீல் முருகன், ஆல்பின், கண்ணன், சாகுல் அமீது, மனோ, ஷாஜகான், சேக் முகம்மது, நூர்தீன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.எரிக்கப்பட்ட உருவ […]