ITBP Recruitment 2017 Name of Post: Constable Apply Link: https://goo.gl/SE5kHU Last Date: 13.11.2017
Union Bank of India Recruitment 2017 Total Vacancies: 200 Apply Online Link: https://goo.gl/waHGUZ Pay Scale: Rs. 31705-45950/- Mode of Application: Online Last Date: 21.10.2017
கேரளா மாநிலத்தில் ஹெல்மட் போடாமல் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு வித்தியாசமான தண்டனை அளித்துள்ளது….கேரளா காவல்துறை அதிகாரிகள். “இனி ஹெல்மட் போடாமல் வண்டி ஓட்டமாட்டேன்” என 50 முறை எழுதவைத்து அபராதமின்றி அனுப்பிய கேரள காவல்துறை
“டில்லியில் உள்ள மார்க்சிஸ்ட் தலைமை அலுவலகம் முன்பு அக் 16 வரை பாஜக காரர்கள் தினசரி போராட்டங்கள் நடத்துவார்கள் என்று அமித் ஷா அறிவித்திருப்பது அவரின் ரவுடித்தன அரசியலின் பிரதிபலிப்பு என்கிறது பீப்பிள்ஸ் டெமாக்ரசி ஏடு”. ( டிஒஐ ஏடு) மிரட்டல் வேலையில் இறங்கியிருக்கி றார் அமித்ஷா. டில்லி போலிஸ் தனது கையில் இருக்கிறது எனும் மமதை யில் இப்படி துள்ளி குதிக்கிறார். இவர் குஜராத்தில் உள்துறைஅமைச்சராக இருந்த போது எத்தகைய அக்கிரமங்களில் ஈடுபட்டார் என்பதை உலகம் […]
கேரள தேவஸ்வம் போர்டு வரலாற்றில் முதல் முறையாக தலித் சமூகத்தை சேர்ந்த ஆறு பேரை கோவில் மேல்ஷாந்தி யாக நியமித்து திருவிதாங்கூர் தேவஸ்வம் உத்தரவு வழங்கியுள்ளது.. கேரளாவில் உள்ள பிரபல கோவில்களில் காலியாக இருந்த பூசாரிகள் பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை மேற்கொண்ட பிணராய் விஜயன் தலைமையிலான அரசு தேவசம் பணியாளர் தேர்வாணையம் என்ற அமைப்பை உருவாக்கி தேர்வு நடத்தியது.. திருவிதாங்கூர் தேவசத்தில் காலியாக இருந்த 62 பணியிடங்களுக்கு நடைபெற்ற எழுத்து தேர்வு மற்றும் நேர்முக தேர்வில் எந்தவொரு […]
பிகார்: பிகாரின் லலித் நாராயண் மிதிலா என்ற பல்கலைகழகத்தில் முதலாம் ஆண்டு மாணவருக்கு வழங்கிய அனுமதி அட்டையில் மாணவரின் புகைப்படத்திற்கு பதிலாக பிள்ளையார் புகைப்படம் பதியப்பட்டு கொடுக்கப்பட்டுள்ளது. பிகாரின் லலித் நாராயண் மிதிலா பல்கலைகழகத்தின் கீழ் இயங்கும் ஜே.என். கல்லூரி என பரவலாக அழைக்கப்படும், ஜக்தேஷ் நந்தன் கல்லூரியில் இளங்கலை பொருளியல் பயிலும் முதலாம் ஆண்டு மாணவர் ஒருவருக்கு வழங்கப்பட்ட அனுமதி சீட்டினில் அவருடைய புகைப்படத்திற்கு பதிலாக பிள்ளையாரின் படம் இடம் பெற்றுள்ளது. பிள்ளையாருக்கு எப்போதுதான் பிகார் […]
புதுடில்லி : 2017 ம் ஆண்டிற்கான இந்தியாவின் டாப் 100 பணக்காரர்கள் பட்டியலை போப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது. இதில் ரியலைன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி தொடர்ந்து 10 வது ஆண்டாக முதலிடத்தில் இருந்து வருகிறார்.முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு ஏறக்குறைய ரூ.2.5 லட்சம் கோடி. கடந்த ஆண்டை விட இவரது சொத்து மதிப்ப 26 சதவீதம் அதிகரித்துள்ளது. ஆசியாவின் டாப் 5 பணக்காரர்கள் பட்டியலிலும் இவர் இடம்பிடித்துள்ளார். இந்த பட்டியலில் முகேஷ் அம்பானியின் சகோதரர் […]
தென் மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சியின் செல்வாக்கை உயர்த்த கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். குறிப்பாக கேரளாவில் பாரதிய ஜனதா கட்சியின் செல்வாக்கு அதிகரிப்பதற்காக அங்கு எம்.பி.க்கள் யாரும் இல்லாத போதும் கேரளாவை சேர்ந்த அல்போன்ஸ் கண்ணன்தானத்திற்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. இந்நிலையில், கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வன்முறைகளில் ஈடுபடுவதாகக் குற்றம்சாட்டி, அதைக் கண்டித்து அங்கு “மக்கள் யாத்திரை”(ஜன் ரக் ஷ யாத்திரா) என்ற பெயரில் 15 நாட்கள் […]
புதுடில்லி: லோக்சபா மற்றும் மாநில சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த தயாராக உள்ளதாக தேர்தல் கமிஷனர் ஓ.பி. ராவத் கூறியுள்ளார். யோசனை: லோக்சபா மற்றும் மாநில சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தலாம் என பிரதமர் மோடி யோசனை கூறியிருந்தார். மேலும் அவர்,ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதால், எங்கள் உட்பட அனைவருக்கும் இழப்பு உண்டு. ஆனால், அரசியல்சாயம் பூசி இந்த யோசனையை பார்க்க கூடாது. இதனால், அதிக பண செலவு குறைக்கப்படும் எனக்கூறியிருந்தார். தேவை என்ன? […]
ஜார்க்கண்ட்: ஜார்க்கண்ட் மாநிலத்தில் 2 சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சத்தர்பூர் மாவட்டம் பலாமுவில் நேற்று 2 சிறுமிகளை 3 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடந்தி வருகின்றனர்.
உத்தரப்பிரதேசம்: உத்தரப்பிரதேசத்தில் அடையாளம் தெரியாத மர்மநபர்களால் பாஜக தொண்டர் ஒருவர் நேற்று இரவு சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். மொரதாபாத் மாவட்டத்தில் பாஜக தொண்டரான தீபக் என்பவரை அடையாளம் தெரியாத 3 மர்மநபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கேரள மாநிலத்தில் பினராயி விஜயன் தலைமையிலான அரசு ஜிகாதி தீவிரவாத சூழலை ஊக்குவிக்கிறது என்று உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் குற்றச்சாட்டு கூறியுள்ளார். தென் மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சியின் செல்வாக்கை உயர்த்த கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். குறிப்பாக கேரளாவில் பாரதிய ஜனதா கட்சியின் செல்வாக்கு அதிகரிப்பதற்காக அங்கு எம்.பி.க்கள் யாரும் இல்லாத போதும் கேரளாவை சேர்ந்த அல்போன்ஸ் கண்ணன்தானத்திற்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. இந்நிலையில், கேரளாவில் மார்க்சிஸ்ட் […]
எரிபொருட்களுக்கான கலால்வரியை மத்திய அரசு நேற்றுமுன்தினம் குறைத்ததைத் தொடர்ந்து பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.50 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.25 காசுகளும் குறைத்து அரசு எண்ணெய் நிறுவனங்கள் நேற்று அறிவித்துள்ளன. இதையடுத்து, டெல்லியில் பெட்ரோல் விலை ரூ.70.88 லிருந்து, ரூ.68.38 காசுகளாகக் குறைந்தது. டீசல் விலை ரூ.59.14 லிருந்து ரூ.56.89 காசுகளாகக் குறைந்தது என்று இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் தெரிவித்துள்ளது.
கேரளா மாநிலத்தில் மக்கள் யாத்திரை என்ற பெயரில் 15 நாட்கள் பிரச்சார யாத்திரையை நடத்த பா.ஜ.க முடிவு செய்தது. இந்த யாத்திரை மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவரும், முதல்-மந்திரியுமான பினராயி விஜயனின் சொந்த ஊரான பையனூரில் இருந்து இன்று தொடங்கியது. பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா இந்த யாத்திரையை தொடங்கி வைத்தார். அதன்பிறகு பையனூர் வந்த அவர், அங்கு கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் பையனூரில் நடந்த விழாவில் பேசினார். அதன்பிறகு […]
எல்லா தேசிய ஊடகங்களும் விஜய்மல்லையாவையும் அவரது ஜாமீனையும் பேசிகொண்டிருக்கும் வேளையில் இராஜஸ்தான் விவசாயிகள் தங்களுடைய கோரிக்கைகளுக்காக மண்ணில் தங்களது உடலை புதைத்து கொண்டு ஆளும் பிஜேபி அரசின் மக்கள்,விவசாயிகள் விரோத போக்கிற்கு எதிராக அகில இந்திய விவசாயிகள் சங்கம் சார்பில் போராடி வருகின்றனர். இராஜஸ்தான் மாநிலம் நின்டார் மற்றும் சிகார் பகுதிகளில் இப்போராட்டம் நடைபெற்று வருகிறது.
கேரள நடிகை பாவனா கடத்தப்பட்டு, பலாத்காரம் செய்ய முற்ப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு 85 நாட்கள் சிறையில் இருந்த நடிகர் திலீப்புக்கு கேரள உயர் நீதிமன்றம் நேற்று ஜாமீன் வழங்கியது. இதுவரை 4 முறை ஜாமீனுக்காக மனு செய்தும் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், 5-வது முறையாக திலீப்புக்கு ஜாமீன் கிடைத்துள்ளது. இருமுறை அங்கமாலி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திலும், 2முறை உயர்நீதிமன்றத்திலும் இதற்கு முன் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. நடிகை பலாத்காரம் கடந்த பிப்ரவரி மாதம் 17-ந்ேததி […]
பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று தூய்மை இந்தியா சேவை இயக்கத்தில் இணைந்து அனுஷ்கா சர்மா போன்ற நடிகர்கள் சேவை செய்ததை அடுத்து அதில் இணைந்த மலையாள நடிகர் மோகன்லால், காந்தி ஜெயந்தி அன்று துடைப்பத்தை பிடித்து பள்ளிக்கூடத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டார். பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்தவுடன் அக்டோபர் 2-ந் தேதியில் தூய்மை இந்தியா திட்டத்தை தொடங்கினார். இதன்படி, நாட்டையும், வாழும் பகுதியையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்று மத்திய அரசு சார்பில் பிராசரம் செய்யப்பட்டு […]
அரசு பள்ளி மாணவர்களுக்கு பாடத் திட்டங்கள் மாற்றப்பட்டு வரும் சூழலில், மாணவர்களுக்கு எப்படி பாடம் நடத்துவது என்பது குறித்த கையேட்டினை ஆசிரியர்களுக்கு முதல்முறையாக தமிழக அரசு வழங்க உள்ளது. அடுத்த கல்வியாண்டு முதல், பாடங்கள் நடத்தும்போது, இந்த கையேட்டின் அடிப்படையில், ஆசிரியர்கள் வகுப்புகளை நடத்த வேண்டும். இந்த கையேட்டில் குறிப்பிட்டுள்ள வழிமுறைகளின்படி, ஒவ்வொரு பாடத்தையும் மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும். வரலாறு, கணிதம், அறிவியல், ஆங்கிலம், தமிழ் என அனைத்து பாடங்களுக்கும் இந்த கையேடு தரப்படும். இது குறித்து […]
ரேஷன் கார்டுடன் ஆதார் கார்டு இணைத்துள்ளதால் 27 கோடி போலி ரேஷன் கார்டுகள் கண்டு பிடிக்கப்பட்டு நீக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்து உள்ளார். மத்திய அரசு அனைத்து விதமான பரிவர்த்தனை மற்றும் ரேஷன் கார்டு, பான் கார்டு போன்றவற்றுடன் ஆதார் கார்டை இணைக்க உத்தரவிட்டிருந்தது. தற்போது வோட்டர் ஐடியுடனும் ஆதார் எண் இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதன் காரணாக போலி அட்டைகள் கண்டு பிடிக்க முடியும் என மத்திய அறிவித்திருந்தது. டில்லியில் நிகழ்ச்சி […]
மூத்த பெண் பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் படுகொலை தொடர்பாக, முக்கியமான துப்பு, சிறப்பு புலனாய்வு போலீசாருக்கு கிடைத்துள்ளதாகவும், கொலையில் தொடர்புடையவர்கள் யார் என்பதை கண்டறிந்துள்ளதாகவும் கர்நாடக உள்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி தெரிவித்துள்ளார்.பெங்களூருவைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் (55) செப்டம்பர் 5-ஆம் தேதி பெங்களூருவில் அவரது வீட்டு வாசலிலேயே, மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது வீட்டு சிசிடிவி-யில் 3 கொலையாளிகளின் படங்கள் பதிவாகி இருந்தன. ஆனால், அவர்கள் ஹெல்மெட்அணிந்திருந்ததால் உடனடியாக அடையாளம் காண […]