தலைமை நிதி அதிகாரி (சி.எப்.ஓ) பணிக்கு அதிகாரியை நியமனம் செய்ய ரிசெர்வ் வங்கி அறிவித்துள்ளது. இவர் பட்ஜெட் வரவு செலவு மற்றும் வரி ஆகியவற்றை கவனிப்பார் என அறிவித்துள்ளது. இதற்க்கு தகுதியானவர் விபரம் பின்வருமாறு : 57 வயதிற்குள் இருக்க வேண்டும். ஏதேனும் சிறப்பு தகுதி இருக்கும்பட்சத்தில் வயதில் தளர்வு செய்யப்படும். மேலும், சி ஏ/ ஐ சி டபில்யூ ஏ/ எம் பி ஏ (நிதி) ஏதேனும் தகுதி இருக்க வேண்டும் குறைந்தபட்சம் 15 ஆண்டுகள் […]
தங்கம் இறக்குமதிக்கு நான்கு மற்றும் ஐந்து நட்சத்திர நிறுவனங்களுக்கு புதிய விதிமுறைகளை வகுத்துள்ளது. இனி நியமன ஏஜென்சி மூலம் தங்கம் இறக்குமதி செய்ய முடியாது என அறிவித்துள்ளது. இனி அந்நிறுவனங்கள் நேரடியாக மட்டுமே தங்கத்தை இறக்குமதி செய்யப்படும் என வர்த்தக அமைச்சகம் அறிவித்துள்ளது. வெளிநாட்டு வர்த்தக இயக்குனர் ஜெனரல் இதனை அறிவித்துள்ளது. நடப்பு நிதி ஆண்டில் 6 மாதத்தில் கடந்த ஆண்டை விட இரு மடங்காக உயர்ந்துள்ளதால் . இதன் மூலம் 1,695 கோடி ஈட்டி உள்ளது. […]
ஒடிஸா மாநிலம் மால்கின்கிரியில் வன உரிமைச் சட்டப்படி பழங்குடியினருக்கு நிலம் வழங்கக்கோரியும் கிராமங்களுக்கு மின்வசதி வழங்கக்கோரியும் பழங்குடியின மக்கள் ஆயிரக்கணக்கில் மார்க்சிஸ்ட் கட்சி (CPM) தலைமையில் இன்று நடந்த பேரணி நடத்தினர்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி வருடா வருடம் தீப திருநாளான “தீபாவளி”யை இந்திய ராணுவ வீரர்களுடன் தான் கொண்டாடுவார். அதேபோன்று இந்த வருடமும் எல்லையில் நாட்டை காக்கும் ராணுவ வீரர்களுடன் கொண்டாடினார்…. அதுவும் ராணுவ உடை அணிந்து கொண்டு
தாஜ் மஹால் துரோகிகளால் கட்டப் பட்டது என்று உத்திரபிரதேச பாரதீய ஜனதா தலைவர் சங்கீத் சோம் சொல்கிறார். ஆனால் உத்திர பிரதேச மாநில முதல்வரோ அது இந்திய உழைப்பாளிகளின் வியர்வையினால் உழைப்பாலும் கட்டப்பட்டது என்கிறார். உண்மையில் தாஜ் மகாலை யார்தான் கட்டியது?
ஜாதி மறுப்பு தம்பதியினர்களின் குழந்தைகளை “ஜாதியற்றவர்” என தனிப் பட்டியலில் சேர்த்து இடஒதுக்கீடு…! – கேரள இடது முன்னணி அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தக் கோரிக்கையை பல ஆண்டுகளாக கலப்புத்திருமணத்தம்பதியர் சங்கம் கோரி வருகிறது.இது அனைத்து மாநிலங்களிலும் கொண்டுவரப்பட வேண்டும்.அப்படி சாதியற்றவர்களாக அறிவிக்கப்படுபவர்களுக்கு தனி ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். கேரளாவை ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல்வர் பினராயி விஜயன் ஏற்கனவே அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் எனவும் “தலித்” […]
டாடா ஸ்டீல் நிறுவனம் வரும் 2020-க்குள் தனது பணியாளர்களில் 20% பெண்களை அமர்த்த திட்டமிட்டு இருகின்றது.தற்போது அந்த நிறுவனத்தில் இங்கு 11% பேர் பெண்கள் பணியில் உள்ளனர் என்பதும் குறுப்பிடத்தக்கது.
உலகில் உள்ள முக்கிய நகரங்களில் எந்த நகரங்கள் எல்லாம் பெண்கள் வாழ தகுதியற்ற நகரங்கள் என்பதை ஆராய்வதற்கான ஆய்வு ஒன்றை தாம்சன் ரியூட்டர்ஸ் பவுண்டேஷன் என்ற தனியார் நிறுவனம் நடத்தியது. ஜநா சபையால் குறிப்பிடப்பட்டுள்ள 10 மில்லியன் மக்களுக்கு மேல் உள்ள முதல் 19 நகரங்களின் பட்டியலை எடுத்துக் கொண்டு அந்த நகரங்களில் எல்லாம் இந்த நிறுவனம் ஆய்வு நடத்தியது.ஆய்வுக்கு பின் வெளிட்ட தகவல் இந்த நிறுவனம் ஒரு நகரத்தில் பெண்கள் எவ்வளவு பாதுகாப்பாக இருக்கிறார்கள், அவர்களின் […]
ரயிலில் வழங்கப்பட்ட உணவை சாப்பிட்ட பலருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவாவிலிருந்து மும்பைக்கு சென்ற தேஜாஸ் எக்ஸ்பிரஸில் பயணம் செய்த பயணிகளுக்கு ரெயில்வேயின் உணவு மற்றும் சுற்றுலா கழக (ஐ.ஆர்.சி.டி.சி) காண்டிராக்டர் மூலம் சைவம் மற்றும் அசைவ சிற்றுண்டி கொடுக்கப்பட்டது சாப்பிட்ட சிலருக்கு உடல் நலக்கோளாறு ஏற்பட்டது. சுமார் 26 பயணிகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த ரெயில் உடனடியாக நிறுத்தப்பட்டது. பாதிக்கப்பட்ட 26 பயணிகளும் மும்பையில் […]
பெங்களூரு, கர்நாடகாவில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்ததில் 6 பேர் பலியாகியுள்ளனர். கர்நாடகாவின் எஜிபுரா பகுதி அருகே குணேஷ் என்பருக்கு சொந்தமுடைய அடுக்கு மாடி கட்டிடம் ஒன்று உள்ளது. இது 20 வருடம் பழமை வாய்ந்தது. இங்கு 4 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை 7 மணியளவில் சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்று வெடித்துள்ளது என சந்தேகிக்கப்படுகிறது. இதில் அந்த கட்டிடம் இடிந்து விழுந்தது. இத்தகவல் அறிந்து […]
உத்தரபிரதேச மாநிலம்: லக்னோவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்தியாவின் எல்லைகள் அனைத்தும் முற்றிலும் பாதுகாக்கப்பட்டுள்ளது என்றும் இந்தியா தற்போது பலவீனமான நாடு அல்ல மிகவும் பலமான நாடு என்பதை சீனா உணர்ந்துள்ளது என்றும் கூறினார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையியில், இந்தியா திறன்மிக்க நாடாக முன்னேறி வருவதாகவும், உலக அளவில் இந்தியாவின் கெளரவம் உயர்ந்துள்ளதாகவும் கூறினார். ஒவ்வொரு நாளும் ஜம்மு காஷ்மீர் எல்லைப்பகுதியில் தீவிரவாதிகள் அத்துமிறி வருகின்றன அவர்களை நம் […]
பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ. சங்கீத் சோம், தாஜ்மஹால் குறித்து தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அக்டோபர் 16, 2017, 12:56 PM உலகின் ஏழு அதிசயங்களில் இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் அமைந்து உள்ள தாஜ்மகாலும் ஒன்றாகும். ஆனால் அந்த மாநிலத்தின் சுற்றுலா கையேட்டில் தாஜ்மஹால் பெயர் இடம் பெற வில்லை. உத்திரப்பிரதேசத்தில் சுற்றுலாப் பயணிகளை ஊக்குவிப்பதற்காக அச்சிடப்பட்டுள்ள இந்த சுற்றுலா கையேட்டில் புகழ் பெற்ற கங்கா ஆர்த்தியை அட்டைபடமாக கொண்டு உள்ளது. ஆனால் […]
பெட்ரோல் பொருள்கள் விலை உயர்வைக் கட்டுப்படுத்த தவறிய மத்திய, மாநில அரசுகள் கண்டித்து, கேரளாவில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணி, முழு அடைப்புப் போராட்டத்தை நடத்தி வருகிறது. இன்று காலை 6 மணி முதல் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. கடைகள், வர்த்தக நிறுவனங்கள், உணவு விடுதிகள், பெட்ரோல் பம்ப்கள் என அனைத்தும் அடைக்கப்பட்டிருக்கின்றன. பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு, இன்று நடைபெற இருந்த தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் இயல்பு வாழ்க்கை […]
டெல்லியில் இன்று தேர்தல் அலுவலகத்தில் நடைபெறும் விசாரனையில் இரட்டை இலை சின்னமானது யாருக்கு என்பது தெரியவரும். விசாரணையில் எடப்பாடி அணி சார்பில் அமைச்சர் c.v. சண்முகம் ,மைத்ரேயன், பி.ச்.பாண்டியன்,கே.பி.முனுசாமி ஆகியோரும் தினகரன் அணி சார்பில் சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யபட்ட 7 எம்.எல்.ஏ.க்கள் கலந்துகொள்கின்றனர் இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சி.வி. சண்முகம் இரட்டை இலை சின்னத்தை தினகரன் திட்டமிட்டு முடக்குவதாக அவர் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில் கூறினார்.
டெல்லி :மத்திய அரசு மக்கள் அனைவரும் வங்கிக்கணக்கு, தொலைபேசி எண் மற்றும் வருமான வரிக்கணக்குடன் ஆதார் எண்ணை டிசம்பர் 31ம் தேதிக்குள் இணைக்கவேண்டும் என அறிவித்துள்ளது. இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் கல்யாணி மேனன் என்ற சமூக ஆர்வலர் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளார் . அந்த மனுவில் மக்கள் தங்களைப் பற்றிய விவரங்களை பயோ மெட்ரிக் முறை மூலம் தெரிவிக்க வேண்டிய சூழலை உருவாக்கியிருப்பதாகவும், அவர்களின் தனிப்பட்ட விவரங்கள் பாதுகாக்க இயலாமல் போய்விடக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கல்யாணி மேனன் வங்கிக்கணக்கும் தொலைபேசி எண்ணும் ஒருவருடைய தனிப்பட்ட […]
ஹரியானா மாநிலத்தில் 12ம் வகுப்பு படிக்கும் மாணவன் தேர்வில் மதிப்பெண் குறைவாக எடுத்ததால் கணித ஆசிரியர் அந்த மாணவனின் வீட்டில் புகார் அளிக்க போவதாக கூறி உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த மாணவன் வகுப்பறையில் யாரும் இல்லாத நேரத்தில் ஆசிரியரை கூர்மையான ஆயுதத்தால் 10 கும் அதிகமான முறை தாக்கினான். இதை பற்றி அறிந்த போலிசார் அந்த மாணவனையும் அவனுக்கு உடந்தையாய் இருந்த சக மாணவனையும் கைது செய்தனர்.
Department of Post – IPPB ஆட்சேர்ப்பு அறிவித்தல் 2017 220 பல்வேறு காலிபணியிடங்கள் உள்ளன. தகுதி: பட்டப்படிப்பு பட்டம் சம்பளம் ரூ. 42020 – 51490/- PM More Details => http://bit.ly/2g1WBiu வேலையிடம்:சென்னை
பஞ்சாப் மாநிலம் குர்தாஷ்பூர் இடைதேர்தலில் பிஜேபி வேட்பாளரை 1,93,219 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார் காங்கிரஸ் வேட்பாளர் சுனில் ஜாக்கர்.
உத்திரபிரதேசத்தில் தாத்ரி என்ற ஊரில் மாட்டிறைச்சி வைத்திருந்ததாக குற்றம் சாட்டி முகமது இக்லக் என்ற வயோதிகரை பசு பாதுகாப்பு படையினர் 15 பேர் கொண்ட கும்பல் ஈவு இரக்கமின்றி அடித்து நொறுக்கி கொலைசெய்ததனர்.. கொலையாளிகள் கைது செய்யப்பட போதிலும் அடுத்த வாரமே ஜாமீனில் வெளி வந்து விட்டனர். அந்த வழக்கில் எந்த வித முன்னேற்றமும் இல்லை. இதற்கிடையில் அந்த கொலையாளிகள் 15 பேருக்கும் அரசு நிறுவனமான தேசிய அனல் மின் உற்பத்தி நிலையத்தில்உள்ளூர் பா.ஜ. க. எம்.எல்.ஏ […]
இந்தியாவின் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தனது ஆறாம் வயதில் குஜராத் மாநிலத்தில் உள்ள வாட்நகர் ரயில் நிலையத்தில் டீ விற்றதாக தனது தேர்தல் பிரச்சாரம் மற்றும் பல பொதுக்கூட்டங்களில் சொல்லிக்கொண்டு இருந்தார்.ஆனால் வாட்நகர் ரயில் நிலையம் திறக்கப்பட்டதே 1973 ஆம் ஆண்டுதான் ஆனால் பிரதமர் மோடி அவர்கள் பிறந்தது 1950 ஆம் ஆண்டு ஆகும்.. அப்படியானால் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு அப்போது 23 வயது ஆகியிருக்குமே! அப்போது அவர் ரயில் நிலையத்தில் தனது […]