டெல்லி : தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக சென்னையில் வரும் 22 ஆம் தேதி திமுக சார்பில் ஆலோசனைக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு ஆதரவு பெரும் நோக்கில் திமுக பிரதிநிதிகள் குழு, ஒடிசா முன்னாள் முதல்வர் நவீன்பட்நாயக், ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஆகியோரை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தது. அதன் தொடர்ச்சியாக இன்று தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கும் நேரில் அழைப்பு விடுக்கப்பட்டது. அமைச்சர் கே.என்.நேரு, திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் கனிமொழி உள்ளிட்டோர் டெல்லியில் சந்தித்து […]
டெல்லி : இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம் (ICMR) இந்த ஆண்டு நடத்திய மருத்துவ ஆய்வில் நதிகள் மற்றும் திறந்த வடிகால்கள் அருகில் வாழும் மக்கள் புற்றுநோயால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாக தெரியவந்துள்ளது. இந்த ஆய்வுக்கான விவரத்தை மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் மூலம் மார்ச் 11, 2025 அன்று மாநிலங்களவையில் (Rajya Sabha) வெளியிடப்பட்டது. இது குறித்து மத்திய அரசு என்னென்ன நடவடிக்கைகள் எடுத்துள்ளது? ஆய்வில் என்னென்ன ஆபத்துகள் இருப்பது தெரியவந்தது […]
போர்ட் லூயிஸ் : கிழக்கு ஆப்பிரிக்க நாடான மொரிஷியஸ் நாட்டில் பிரதமர் நரேந்திர மோடிக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக மொரிஷியஸ் சென்றடைந்த பிரதமர் மோடி, நாளை (மார்ச் 12 ஆம் தேதி) நடைபெறும் மொரீஷியஸின் 57வது தேசிய தினக் கொண்டாட்டங்களில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்கிறார். இந்தியப் பாதுகாப்புப் படைகளின் ஒரு குழுவும் இந்த நிகழ்வில் கலந்து கொள்ள உள்ளது. இந்நிலையில், இன்று அதிகாலை மொரீஷியஸ் சென்றடைந்த இந்திய பிரதமர் […]
பீகார் : இன்று பட்டப்பகலில் பீகார் மாநிலம் போஜ்பூர் மாவட்டத்தில் உள்ள அர்ரா பகுதி காவல் நிலைய எல்லைக்கு உட்பட பகுதியில் உள்ள பிரபல நகை கடையில் புகுந்த கொள்ளையர்கள் துப்பாக்கி காட்டி பணியாளர்களை மிரட்டி கோடி கணக்கான ரூபாய் மதிப்புள்ள தங்க, வைர நகைகளை கொள்ளையடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அர்ரா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பிரபல தனியார் நகைக்கடை கோபாலி சௌக் கிளையில் இன்று காலை 10 மணியளவில் துப்பாக்கிகளுடன் ஒரு […]
டெல்லி : இந்த ஆண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு இன்று (திங்கட்கிழமை) தொடங்கியது. இதில் கலந்து கொண்டு மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியது அரசியல் வட்டாரத்தில் ஹாட் டாப்பிக்காகவும் மாறியுள்ளது. அவர் திமுக குறித்து பேசிய விஷயம் அக்கட்சியை சேர்ந்தவர்கள் கண்டனம் தெரிவிக்க காரணமாகவும் அமைந்துள்ளது. கூட்டத்தொடரில் திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் பேசும்போது புதிய கல்விக் கொள்கையை பின்பற்றாததால் தமிழகத்தை மத்திய அரசு பழிவாங்குகிறது என பேசியிருந்தார். […]
டெல்லி : மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொண்டால் தான் தமிழ்நாட்டுக்கு நிதி கொடுக்கப்படும் என கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியது அரசியல் வட்டாரத்தில் பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்த நிலையில், தமிழகத்தை ஆளும் திமுக கட்சி இது இந்தி திணிப்பு என கண்டனங்களை தெரிவிக்க தொடங்கிவிட்டார்கள். இன்னும் இந்த விவகாரம் முடிவு பெறாமல் இருக்கும் சூழலில், கண்டன ஆர்ப்பாட்டங்களும் நடைபெறவுள்ளது. இந்த சூழலில், இன்று டெல்லி நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு தொடங்கியது. […]
டெல்லி : நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. ஏற்கனவே, முதற்கட்ட பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி கடைசியில் தொடங்கி பிப்ரவரி மாதம் தொடக்கத்தில் நடைபெற்ற நிலையில், பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து இன்று இரண்டாம் கட்ட அமர்வு நடைபெறுகிறது. இன்று நடைபெறவுள்ள இரண்டாம் கட்ட பட்ஜெட் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் இந்தி திணிப்பு, தொகுதி மறுசீரமைப்பு உள்ளிட்ட முக்கியமான பிரச்சினைகளை எழுப்பவும் திட்டமிட்டுள்ளன. மும்மொழி கொள்கை விவகாரம் பற்றி மத்திய அரசு […]
குஜராத் : மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தி குஜராத்திற்கு இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். தனது சுற்றுப்பயணத்தின் இரண்டாவது நாளான இன்று அகமதாபாத்தில் காங்கிரஸ் தொண்டர்களிடையே ராகுல் காந்தி உரையாற்றினார். கட்சித் தொழிலாளர்களிடம் உரையாற்றிய அவர், 2027 குஜராத் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்பதால், பாஜகவுக்கு மறைமுகமாக வேலை செய்யும் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் மற்றும் தொழிலாளர்களை அடையாளம் கண்டு நீக்குமாறு எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக பேசிய […]
கர்நாடகா : 2025-26 ஆம் ஆண்டுக்கான கர்நாடக பட்ஜெட்டிற்காக மொத்தம் ரூ. 4.095 லட்சம் கோடி ஒதுக்கப்பட்ட நிலையில். கர்நாடக முதல்வர் சித்தராமையா வெள்ளிக்கிழமை தனது 16வது பட்ஜெட்டை தாக்கல் செய்தார். மேலும், கர்நாடக பட்ஜெட்டில், காங்கிரஸ் அரசு வாக்குறுதி அளித்த ஐந்து உத்தரவாதத் திட்டங்களுக்கு ரூ.51,034 கோடி ஒதுக்கப்பட்டும் இருக்கிறது. பட்ஜெட்டின் முக்கிய அம்சமாக கோயில் பூசாரிகளின் ஆண்டு சம்பளம் உயர்த்தப்பட்டது முதல் கர்நாடகா முழுவதும் உள்ள மல்டிபிளெக்ஸ் திரையரங்குகளில் டிக்கெட் விலை நிர்ணயம் செய்யப்பட்டது […]
டெல்லி : தேசிய கல்விக் கொள்கையில் ஹிந்தி திணிக்கப்படுவதாக தமிழ்நாடு எதிர்ப்பு தெரிவித்து வருவது நாடு முழுக்கப் பேசுபொருளாகியுள்ளது. தமிழ்நாட்டுக்கு இருமொழிக் கொள்கையே போதுமானது என்கிற நிலைப்பாட்டில் தமிழ்நாட்டை ஆளும் திமுக மட்டுமின்றி பெரும்பாலான அரசியல் கட்சிகள் ஒரே கோட்டில் உள்ளன. இப்படி இருக்கையில், ஆந்திராவில் 10 மொழிகளை கற்றுத்தரப்போகிறேன் என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறிருக்கிறார். டெல்லி சென்றுள்ள ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, மாநிலத்தில் உள்ள பிரச்சனைகள் குறித்து மத்திய அமைச்சர்களை சந்தித்து பேச்சு […]
டெல்லி : மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதி மறுசீரமைப்பு என்பது இறுதியாக 1971-ல் நடைபெற்றது. அதற்கு பிறகு 2026-ல் மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு நடைபெறும் என கூறப்படுகிறது. இதற்கு திமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில், தமிழ்நாட்டில் நேற்று (மார்ச் 5) தொகுதி மறுசீரமைப்பிற்கு எதிராக அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்ற நிலையில், அதில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் “தமிழ்நாடு மிகப்பெரிய உரிமைப் போராட்டத்தை நடந்த வேண்டிய சூழலுக்கு […]
குஜராத் : ஜாம்நகர் மாவட்டத்தில் உள்ள ஆனந்த் அம்பானியின் விலங்கு மீட்பு, பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு மையமான வந்தாராவை இன்று பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்த நேரத்தில், பிரதமர் மோடி சிங்கம் மற்றும் சிறுத்தை குட்டிகளுக்கு பால் ஊட்டினார், மேலும் பல்வேறு சம்பவங்களில் இருந்து மீட்கப்பட்ட பல விலங்குகளையும் சந்தித்தார். ஒரு காலத்தில் இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் காணப்பட்ட கராகல், இப்போது மிகவும் அரிதாகிவிட்டது. அவை வந்தாராவில் ஒரு சிறைப்பிடிக்கப்பட்ட இனப்பெருக்கத் திட்டத்தின் கீழ், வளர்க்கப்பட்டு […]
குஜராத் : உலக விலங்குகள் தினமான மார்ச் 3, 2025, அன்று பிரதமர் நரேந்திர மோடி, குஜராத்தின் ஜிர் வனவிலங்கு பாதுகாப்பகத்தில் (Gir Wildlife Sanctuary) சிங்க சஃபாரியில் (Lion Safari) பங்கேற்றார். ஜிர் காடு ஆசிய சிங்கங்களின் ஒரே தாயகம் என்பதால், அங்கு மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு முயற்சிகளை நேரில் பார்வையிட்டு புகைப்படமும் எடுத்தார். ஒருகாலத்தில், ஆசிய சிங்கங்கள் இந்தியா முழுவதும் காணப்பட்டன. ஆனால், காற்றில் இருக்கும் மற்ற விலங்குகள் வேட்டையாடுகிறது என்பதாலும், காட்டுப்பகுதிகள் குறைதல் போன்ற […]
உத்தரகாண்டு : மாநிலம் சாமோலி மாவட்டத்தில் உள்ள மனா கிராமத்தில் பிப்ரவரி 28ஆம் தேதி அதிகாலை ஏற்பட்ட பனிச்சரிவில் 57 தொழிலாளர்கள் சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த பனிச்சரிவில் சிக்கிய அந்த தொழிலாளர்கள் எல்லை சாலைகள் அமைப்புத் திட்டத்தின் கீழ் பணியாற்றி வந்தனர். அப்போது, திடீரென பனிச்சரிவு ஏற்பட அவர்கள் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அறிந்து உடனடியாக மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணிகள் தொடங்கப்பட்டு, இதுவரை 46 […]
நாகர்கர்னூல் : தெலுங்கானா மாநிலம் நாகர்கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசைலம் இடது கரை கால்வாய் (SLBC) சுரங்கப்பாதையில் கடந்த சனிக்கிழமை (பிப்ரவரி 22) காலை டோமலபெண்டா அருகே கட்டுமானத்தில் உள்ள SLBC சுரங்கப்பாதையின் ஒருபகுதி இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 2 பொறியாளர்கள் உட்பட மொத்தம் 8 தொழிலாளர்கள் சுரங்கத்தினுள் சிக்கினர். இந்த சுரங்க விபத்தில் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணியானது 8வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த மீட்பு பணியில் இந்திய ராணுவம், […]
மும்பை : மாதந்தோறும் 1ம் தேதி எல்பிஜி சிலிண்டரின் விலையில் மாற்றம் ஏற்படும். அந்த வகையில், இன்று சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.5.50 உயர்ந்துள்ளது. இதனால், ரூ.1,965க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேநேரம் வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றமின்றி ரூ.818.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த மாதம் 1ஆம் தேதி வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.7 குறைக்கப்பட்டிருந்த நிலையில், இம்மாதம் மீண்டும் உயர்வை கண்டுள்ளது. மற்ற மாநிலங்களின் நிலவரம் இந்தியன் ஆயிலின் சமீபத்திய விலைகளைப் […]
டெல்லி : வக்பு வாரியம் என்பது இஸ்லாமிய மக்களால் தானமாக வழங்கப்பட்ட சொத்துக்களை நிர்வகிக்கும் ஒரு இஸ்லாமிய அமைப்பு ஆகும். இந்த சொத்துக்கள் மூலம் கிடைக்கும் வருவாய் இஸ்லாமிய மக்கள் நலனுக்கு பயன்படுத்தபடுகிறது என கூறப்படுகிறது. இந்த வக்பு வாரிய விதிமுறைகளில் திருத்தம் கொண்டு வர மத்திய அரசு ஒரு குழுவை (JPC) கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் நியமனம் செய்தது. இந்த குழுவில் பாஜக மற்றும் NDA கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த 16 எம்.பி.க்களும், எதிர்க்கட்சிகளைச் […]
கோவை : ஆண்டுதோறும் மஹா சிவராத்திரி விழா அன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் விழாவில் கலந்து கொன்டு அடுத்த நாள் காலை 6 மணி வரை தியானம் மேற்கொள்வார். அப்படி தான் இந்த முறை ஈஷா யோகா மையத்தில் நேற்று (பிப்ரவரி 26, 2025) மஹா சிவராத்திரி விழா தொடங்கி இன்று அதிகாலை 6 மணி வரை கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக நேற்று முன்தினம் இரவே […]
கோவை : ஈஷா யோகா மையத்தில் இன்று (பிப்ரவரி 26, 2025) மஹா சிவராத்திரி விழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக நேற்று இரவே 8:50 மணிக்கு கோவை பீளமேடு விமான நிலையத்திற்கு வருகை தந்தார். அங்கு வருகை தந்த அவருக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்து அவரை உற்சாகமாக வரவேற்றனர். ஈஷா […]
டெல்லி : கும்பமேளா நிகழ்வு என்பது கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய ஆறுகள் ஒன்றாக கூடும் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் நிகழ்வாகும். அவ்வாறு 12 ஆண்டுகள் என 12வது முறை அதாவது 144வது ஆண்டான இந்த ஆண்டு மகா கும்பமேளா நிகழ்வானது கடந்த ஜனவரி 13ஆம் தேதி தொடங்கி இன்றுடன் (பிப்ரவரி 25) நிறைவடைகிறது. இதுவரை சுமார் 65 கோடி பேர் உத்திர பிரதேசம் மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிராக்யராஜில் உள்ள திரிவேணி […]