Jaggery– வெல்லத்தில் கலப்படம் கண்டுபிடிப்பது எப்படி எனவும் சீனியை விட வெல்லம் சிறந்ததா என்பதை பற்றி இப்பதிவில் காணலாம். நம்மில் பலரும் சீனியை விட வெல்லம் தான் சிறந்தது என்று டீ காபிகளில் பயன்படுத்தி வருகிறோம். அது மட்டுமல்லாமல் சர்க்கரை நோயாளிகள் வெல்லம் சாப்பிடலாமா என்றும் தெரிந்து கொள்ளவோம் . வெல்லம் தயாரிக்கும் முறை; கரும்பிலிருந்து சாறு எடுத்து அந்த சாறு கொப்பரையில் ஊற்றி கொதிக்க வைக்கப்படுகிறது. கொதிக்கும்போது வரும் அழுக்குகள் நீக்கப்படுகிறது .அந்த அழுக்கு நீக்கப்படுவதற்கு […]
castor oil -விளக்கெண்ணையில் உள்ள மருத்துவ நன்மைகளை இப்பதிவில் தெரிந்து கொள்வோம். விளக்கெண்ணெயின் நன்மைகள் ; விளக்கெண்ணெய் சிறந்த மலமிளக்கியாக செயல்படும் மலச்சிக்கலை தடுக்கக்கூடிய ஆற்றலை கொண்டுள்ளது .மலச்சிக்கலால் பாதிக்கப்பட்டவர்கள் 15லிருந்து 30 எம் எல் அளவு காலை வெறும் வயிற்றில் வெது வெதுப்பான சுடு தண்ணீரிலோ அல்லது பாலிலோ கலந்து எடுத்துக் கொள்ளலாம். ஒரு மணி நேரத்திலே உங்களுக்கு மலச்சிக்கலில் இருந்து நல்ல தீர்வை கொடுக்கும். மேலும் பத்து நாட்களுக்கு ஒரு முறை எடுத்துக் கொள்வதால் […]
Sinus problem -சைனஸ் வருவதற்கான காரணங்களும் மற்றும் நிரந்தர தீர்வுகளை பற்றியும் இப்பதிவில் காணலாம். நம் முகத்தில் மூக்குப்பகுதிக்கு அருகிலும் மேல் பகுதியிலும் நான்கு ஜோடி காற்று பைகள் உள்ளது. இதுதான் சைனஸ் பகுதியாகும். இதன் முக்கிய வேலை என்னவென்றால் பேசும்போது நம்முடைய குரலை ஒலிக்கச் செய்யும் .இந்த சைனஸ் பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு குரலில் வித்தியாசம் காணப்படும். மேலும் நம் சுவாசிக்கும் காற்றை உடலின் வெப்ப நிலைக்கு ஏற்றவாறு சூடாக்கி நுரையீரலுக்கு அனுப்பும் பணியையும் செய்கிறது. நம் […]
Thyroid Symptoms-தைராய்டு வர காரணங்களும் அறிகுறிகளையும் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். தைராய்டு சுரப்பி ; முன் கழுத்தின் மேல் பகுதியில் வண்ணத்துப்பூச்சி போல் இருக்கும் அமைப்புதான் தைராய்டு சுரப்பியாகும் .இது நம் உடலுக்கு தேவையான பல ஹார்மோன்களை உற்பத்தி செய்கிறது. அது மட்டுமல்லாமல் நம் உடலில் உள்ள பல்வேறு உறுப்புகளை கட்டுப்படுத்தி அவற்றின் இயக்கத்தை தூண்டக்கூடியதுமாகவும் இருக்கிறது .ஆண் ,பெண் என இருபாலருக்கும் வரக்கூடியதாகும் . காரணங்கள் ; இந்த சுரப்பி பாதிக்கப்பட பல காரணங்கள் […]
Stomach Ulcer-அல்சர் வர காரணமும் குணமாக்கும் உணவு முறை பற்றியும் இப்பதிவில் தெரிந்து கொள்வோம். நவீன வாழ்க்கை முறையில் நேரத்திற்கு சாப்பிடுவதற்கு கூட நேரம் இல்லாமல் ஆகிவிட்டது .அதனால்தான் அல்சர் போன்ற நோய்கள் வர காரணமாகிறது. நம் உணவுக் குழாய், இரைப்பை, சிறுகுடல் போன்றவற்றில் ஏற்படும் புண்கள் தான் அல்சர் என கூறப்படுகிறது. இரைப்பை புண்களை கேஸ்ட்ரிக் அல்சர் எனவும் உணவுப் பாதையில் ஏற்படும் புண்களை ஈசோபேஜியல் அல்சர் எனவும் சிறுகுடலின் முன் ஏற்படும் புண்களை டியோடினல் […]
Nuts-கொழுப்புச்சத்து நிறைந்துள்ள பருப்பு வகைகளை ஒரு நாளைக்கு எவ்வளவு எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதைப் பற்றி இங்கே காணலாம். என்னதான் நட்ஸில் நல்ல கொழுப்பு இருந்தாலும் அது உயர் ரத்த அழுத்தம் மாரடைப்பு உடல் பருமன் போன்றவற்றை ஏற்படுத்தும். நட்ஸ் வகைகளை ஒரு நாளைக்கு 30 கிராம் அளவு எடுத்துக் கொள்வது போதுமானது அதிலும் எண்ணெய் மற்றும் நெய்யை அதிகம் சேர்த்துக் கொள்பவர்கள் 30 கிராமை விட குறைவாக தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.பொதுவாகவே நட்ஸ் வகைகள் […]
White pumpkin juice-வெண்பூசணி சாறின் நன்மைகள் மற்றும் தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். நம்மில் பலரும் உணவை பசிக்காகவும் ,ருசிக்காகவும் தான் சாப்பிடுவோம். ஆனால் எத்தனை பேர் ஆரோக்கியத்திற்காக உணவை எடுத்து கொள்கிறோம் என்பது கேள்விக்குறி தான். அந்த வகையில் வெண்பூசணியை பலரும் உணவில் பயன்படுத்துவதில்லை ஆனால் அதில் உள்ள சத்துக்களோ ஏராளம். வெண்பூசணியின் நன்மைகள்; அறிவு ஆற்றலை மேம்படுத்தும்; தினமும் ஒரு டம்ளர் வெண்பூசணி சாறை எடுத்துக் கொள்வதால் இதில் உள்ள போலைட் […]
Vitamin B12-விட்டமின் பி 12 சத்து குறைபாட்டால் ஏற்படும் அறிகுறிகள் மற்றும் தீர்வுகளைப் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். வைட்டமின் பி 12; விட்டமின் பி12 சத்து ரத்த சிவப்பு அணுக்களின் உற்பத்திக்கும் ,டி என் ஏ வின் செயல்பாட்டிற்கும் மிக அவசியமானது .இந்த பி12 சத்து 50 வயது அதிகமானவர்களுக்கும், செரிமான தொந்தரவு உள்ளவர்களுக்கும், இரைப்பை அறுவை சிகிச்சை செய்தவர்கள், சர்க்கரை நோயாளிகள் மற்றும் நெஞ்செரிச்சலுக்கு மருந்து உட்கொள்பவர்கள் ஆகியோருக்கு அதிகம் ஏற்படும். இந்த விட்டமின் […]
Menopause-மெனோபாஸ் பற்றியும் மெனோபாஸின் அறிகுறிகள் மற்றும் தீர்வுகள் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். மெனோபாஸ் என்றால் என்ன? மெனோபாஸ் என்பது ஒரு பெண்ணின் மாதவிடாய் சுழற்சியின் முடிவு காலம் ஆகும். இது ஒரு இயற்கையான நிகழ்வாகும் .இதை தவிர்க்க முடியாது. 40 வயதை கடந்த அனைத்து பெண்களுமே சந்திக்க வேண்டிய ஒரு நிகழ்வாகும். அறிகுறிகள்; 40 வயதை நெருங்கும் பெண்கள் மற்றும் 40 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பல மாற்றங்கள் ஏற்படும். […]
Poppy seeds-கசகசாவின் ஆரோக்கிய நன்மைகள் மற்றும் பக்க விளைவுகள் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். கசகசா என்ற பெயரைக் கேட்ட உடனே நம் நினைவுக்கு வருவது அசைவ சாப்பாடு தான். அசைவ உணவுகளில் சுவைக்காகவும் ஜீரணத்திற்காகவும் சேர்க்கப்படுகிறது.அதில் உள்ள ஓபியம் என்கிற போதை தன்மை காரணமாக பல நாடுகளில் கசகசாவை விதைக்க தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவில் இருந்து பல நாடுகளுக்கு இது எடுத்து செல்லவும் தடை செய்யப்பட்டுள்ளது .ஆனால் இதில் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளது […]
Weight Gain-இயற்கையான முறையில் உடல் எடையை அதிகரிப்பது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம். ஒரு சிலருக்கு என்னதான் சாப்பிட்டாலும் உடல் எடை அப்படியே இருக்கும். இது வாத வகை உடல் கொண்டவர்களுக்கு தான் இதுபோல் இருக்கும். வாத உடல் என்றால் பஞ்சபூதங்களில் காற்று தேகம் என கூறப்படுகிறது. இவர்களுக்கு ஆஸ்துமா ,வீசிங் பிரச்சனை, அலர்ஜி மலர்ச்சிக்கல் ,போன்ற பிரச்சனைகள் பொதுவாகவே இருக்கும். மேலும் குடல் சுத்தம் இல்லாமல் இருப்பது, தேவையான சத்துக்களை உங்களது குடல் உறிஞ்சாமல் […]
Finger millet -ராகியின் நன்மைகள் மற்றும் சாப்பிடும் முறை பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். ராகியை கேழ்வரகு, கேப்பை என்ற பெயரில் அழைப்பதுண்டு .இது அரிசி மற்றும் கோதுமைக்கு மாற்றாக அதிக மக்கள் விரும்பி சாப்பிடும் சிறு தானியமாகும் . ஆறு மாத குழந்தை முதல் 80 வயது வயதானவர்கள் வரை எளிதாக சாப்பிடக்கூடிய சிறந்த சிறுதானியமாகும். அதனால்தான் மேஜர் மில்லட் வரிசையில் முதலிடம் பிடித்துள்ளது. நிறைந்துள்ள சத்துக்கள்; மற்ற தானியங்களை விட ராகியில் அதிக அளவு […]
கிவி பழம் : பசலிப்பழம் என்றழைக்கப்படும் ‘கிவி பழம்’ பலவிதமான ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளது, குறிப்பாக அதிக அளவிலான விட்டமின் சி, ஈ, கே மற்றும் பொட்டாசியம். இந்த ஊட்டச்சத்துக்கள் உடலின் ஆரோக்கியத்திற்கு மிகவும் உதவுகின்றன. இதனை சைனீஸ் நெல்லிக்காய் (யாங் டாவோ) என்றும் அழைக்கப்படுகின்றன. கிவி பழம் சீனாவில் குழந்தைகளுக்கும், புதியதாக குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு மருந்தாகவும் பயன்படுத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது. கிவி பழத்தின் விலை கொஞ்சம் அதிகம் என்றாலும், தினம் நாம் உண்ணும் நொறுக்கு தீவனம் மற்றும் […]
Jack fruit seeds-பலாக்கொட்டையின் சத்துக்கள்,ஆரோக்கிய நன்மைகள் மற்றும் தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் காணலாம். கோடை காலத்தில் கிடைக்கின்ற பழங்களில் பலாப்பழமும் ஒன்று. பலாப்பழம் மிகுந்த ஊட்டச்சத்துக்கள் கொண்டது ஆனால் அதைவிட அதன் கொட்டை பகுதிகளில் அதிக சத்துக்கள் நிறைந்துள்ளது. அந்தந்த பருவ காலத்தில் கிடைக்கும் பழங்கள் அந்த சமயத்தில் வரும் நோய்களை தடுக்கும் ஆற்றல் கொண்டது. பலாக்கொட்டைகளில் உள்ள சத்துக்கள்: இரும்புச்சத்து, புரோட்டின், துத்தநாகம் ,பாஸ்பரஸ், பொட்டாசியம், தயமின் ,மாங்கனிசு, சிங், காப்பர், விட்டமின் ஏ […]
Mutton bone soup-ஆட்டுக்கால் சூப் குடிப்பதால் நமக்கு ஏற்படும் ஆரோக்கிய நன்மைகளைப் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். ஆட்டுக்கால் சூப்பை நாம் சுவைக்காகவும் அல்லது சளி இருமல் போன்ற தொந்தரவு இருந்தால் குடிப்போம். ஆனால் இதில் பலருக்கும் தெரியாத பல ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ளது. ஆட்டுக்கால் சூப்பின் நன்மைகள்: ஆட்டுக்கால் சூப்பில் கொலாஜின் என்ற சத்து அதிக அளவில் உள்ளது . இந்த சத்து தசை நார்கள், தசைகள் ,நரம்பு மண்டலம், எலும்புகள் போன்றவற்றிற்கு மிக அவசியமான […]
Late night food dangerous -இரவில் தாமதமாக உணவு எடுத்துக் கொள்வதால் ஏற்படும் பின் விளைவுகளைப் பற்றி இங்கே காணலாம். நவீன வாழ்க்கை முறை மற்றும் இரவு நேர வேலை போன்ற காரணங்களால் இரவு நேரம் கடந்து சாப்பிடுவது பலருக்கும் வழக்கமாகிவிட்டது. இரவில் தாமதமாக உணவு எடுத்துக் கொள்ளக் கூடாது என மருத்துவர்கள் தொடர்ந்து அறிவுறுத்தினாலும் பலரும் அதைப் பின்பற்றுவதில்லை. அது சற்று ஒரு படி மேல் சென்று தற்போது நகரங்களில் மிட் நைட் உணவு என்ற […]
Back pain-முதுகு வலி ஏற்பட காரணங்களும் அதனை சரி செய்யும் முறை பற்றியும் இப்பதிவில் தெரிந்து கொள்வோம். நம் உடலில் உள்ள அனைத்து தசைகளின் அழுத்தமும் முதுகுத்தண்டில் சேர்வதன் மூலம் அங்கு வலி ஏற்படுகிறது. தினசரி வாழ்வில் நாம் செய்யும் சிறு சிறு தவறுகள் தான் முதுகுவலி வர காரணமாக உள்ளது. முதுகு வலி ஏற்பட காரணங்கள்: இறுக்கமான ஜீன்ஸ் மற்றும் உள்ளாடைகள் அணிவது முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இந்த இறுக்கமான ஆடைகளை அணியும் போது தசைகளுக்கு […]
Leg cramps-இரவில் கால் நரம்புகள் இழுப்பதற்கான காரணங்களும் அதற்கான உணவு முறை பற்றியும் இப்பதிவில் தெரிந்து கொள்வோம். நம்மில் பலரும் அடிக்கடி சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று தான் கால் நரம்புகள் சுண்டி இழுப்பது .இது குறிப்பாக இரவில் தூங்கும் போது தான் ஏற்படுகிறது. காரணங்கள்: நம் உண்ணும் உணவில் எலெக்ட்ரோலைட்ஸ் என்று சொல்லக்கூடிய சோடியம், மெக்னீசியம் ,கால்சியம், பாஸ்பரஸ், குளோரைடு போன்றவை தினமும் நம் உண்ணும் உணவில் இருக்க வேண்டும். இதில் குறைபாடு இருப்பது மற்றும் விட்டமின்ஸ் […]
Oil benefits -தொப்புளில் எந்த எண்ணெய் வைத்தால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். தினமும் தூங்குவதற்கு முன் தொப்புளில் எண்ணெய் தேய்ப்பதால் பல நோய்கள் வராமல் தடுக்கலாம். ஒவ்வொரு எண்ணெய்களுக்கும் ஒவ்வொரு மருத்துவ குணங்கள் உள்ளது. தினமும் தூங்குவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு ஏதேனும் ஒரு எண்ணெயை இரண்டு சொட்டு வீதம் தொப்புளில் விட்டு மசாஜ் செய்து தூங்கினால் பல்வேறு நன்மைகளை நம்மால் பெற முடியும். தொப்புளில் எண்ணெய் வைப்பதால் […]
கழிப்பறைகள் -நம் உடல் ஆரோக்கியத்திற்கு எந்த வகை கழிப்பறைகள் சிறந்தது என்பதை பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். இன்றைய காலகட்டத்தில் கழிப்பறை அனைவரது இல்லங்களிலும் இன்றியமையாததாக உள்ளது. அதனால்தான் அரசே அதற்கான மானியத்தை வழங்கி அனைவருக்கும் கழிப்பறை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் பெரும்பாலான மக்கள் மேற்கத்திய நாடுகளின் கழிப்பறை தான் விரும்புகிறார்கள். இந்தியன் கழிப்பறை: இந்திய கழிப்பறை குந்துதல் முறையில் மலம் கழிப்பதாக அமைந்திருக்கும். இதன் மூலம் நீங்கள் உடற்பயிற்சி செய்த பலனையும் பெறலாம். இது […]