10-ஆம் வகுப் பொதுத் தேர்வுகள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தொடங்கியுள்ளன. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 12 ஆயிரத்து 337 பள்ளிகளில் இருந்து 9 லட்சத்து 64 ஆயிரத்து 491 மாணவ – மாணவிகள் மற்றும் 36 ஆயிரத்து 649 தனித்தேர்வர்கள் என மொத்தம் 10 லட்சத்து ஆயிரத்து 140 பேர் எழுதுகிறார்கள். தமிழகம் புதுச்சேரியில் மொத்தம் 3 ஆயிரத்து 609 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. முறைகேடுகளை தடுக்க 6,900 பறக்கும்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. வேலூர், கடலூர், சேலம், கோவை, […]
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகள் தமிழகம், புதுச்சேரியில் நாளை தொடங்குகின்றன. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 12 ஆயிரத்து 337 பள்ளிகளில் இருந்து 9 லட்சத்து 64 ஆயிரத்து 491 மாணவ – மாணவிகள் மற்றும் 36 ஆயிரத்து 649 தனித்தேர்வர்கள் என மொத்தம் 10 லட்சத்து ஆயிரத்து 140 பேர் எழுதுகிறார்கள். தமிழகம் புதுச்சேரியில் மொத்தம் 3 ஆயிரத்து 609 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. முறைகேடுகளை தடுக்க 6,900 பறக்கும்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. வேலூர், கடலூர், சேலம், கோவை, மதுரை, பாளையங்கோட்டை, […]
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட்டில் தமிழ் மொழி, பண்பாட்டை பாதுகாக்க தஞ்சை பல்கலையில் தமிழ் மொழி விரிவாக்க மையம் உருவாக்கப்படும் என்றும் மையத்திற்கு மானியமாக ஆண்டுக்கு ரூ.2 கோடியை தமிழக அரசு வழங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ரூ.1 கோடி ரூபாய் மானியத்தில் தமிழ் பண்பாட்டு மையமும் அமைக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தமிழக அரசின் 2018-19ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். தமிழக அரசின் வருவாய் ரூ. 1.81 லட்சம் கோடி,செலவு ரூ. 2. […]
தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் 2018-19ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்து வருகிறார். பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில், கல்வித்துறைக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயர்கல்வித் துறைக்கு ரு.4,620 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும், குமரி, நெல்லை, மதுரை, கோவை அரசு மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவ மாணவ சேர்க்கை இடங்கள் கூடுதலாக 345 இடங்கள் உயர்த்தப்படும், அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விளையாட்டு […]
நெல்லை : வள்ளியூரில் பள்ளி சுவரில் போதை விழிப்புணர்வு ஓவியம் வரைந்து அசத்திய நெல்லை மாவட்ட மாணவிகள் உட்பட பலரை நெல்லை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்துரி நேரில் சென்று பாராட்டினார்.
போலீசார் விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் நர்சிங் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த புகாரில் கல்லூரி தாளாளர் உள்பட 3 பேரை கைது செய்துள்ளனர். சாத்தூர் அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் சாத்தூரில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்துவருகிறார். திடீரென தனது மகளைக் காணவில்லை என அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த பெண்ணை சாத்தூர் பேருந்து நிலையம் அருகே கண்ட போலீசார் அவரை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். அப்போது, […]
போராட்டத்தில் ஈடுபட்ட டெல்லியில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள், டீன் உடன், கைகலப்பில் ஈடுபட்ட காட்சிகள் வெளியிடப்பட்டன. ஜே.என்.யூ. பல்கலைக்கழகத்தில் மாணவர் தங்கும் விடுதிக்கு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. தங்களிடம் கருத்துக் கேட்காமல் விடுதிக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டிய மாணவர்கள், பல்கலைக்கழக வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, மாணவர் பிரதிநிதிகள் சுமார் 15 பேரை அழைத்து டீன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அப்போது, திடீரென டீனை பார்த்து, உரத்தக் குரலில் பேசிய மாணவர்கள் சிலர், அவருடன் கைகலப்பில் ஈடுபட்டனர். சி.சி.டி.வி. காட்சிகளை […]
நீட் தேர்வால் மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்பை ஆய்வு செய்து, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர வேண்டும். ஏனெனில் தமிழகத்தில் நீட் தேர்வால் தமிழக மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேருவது குறைந்துவிட்டது என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
ஆந்திர மாநிலத்தின் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி திரு. ராமுலு என்பவரை தமிழக ஆளுநர் திரு. பன்வாரிலால் புரோகித் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தருக்கான தேடுதல் குழுவின் உறுப்பினராக நியமனம் செய்துள்ளார். முன்னாள் நீதிபதி ராமுலு அவர்கள் ஆந்திர பிரதேச உயர்நீதி மன்றத்தில் மூத்த வழக்கறிஞராகவும் பின்னர் உயர்நீதிமன்ற நீதிபதியாகவும் பணியாற்றியுள்ளார். தமிழக ஆளுநரால் தேர்வு செய்யப்பட்ட அந்த தேர்வு குழுவில் பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர், முனைவர் ஊ.தங்கமுத்து, பல்கலைக்கழக பேரவை பிரதிநிதியாகவும், திரு.எஸ்.பி.இளங்கோவன், இ.ஆ.ப., […]
3 ஆண்டுகளுக்குப்பின், 12ம் வகுப்பு படித்தாலே வேலை வாய்ப்பு உறுதி என்ற நிலை உருவாகும். தனியார் பள்ளியில் ஒரு மாணவருக்கு செலவாகும் தொகையைவிட அதிகளவு அரசு பள்ளி மாணவருக்கு தமிழக அரசு செலவு செய்கிறது. சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை விட தமிழக அரசின் பாடத்திட்டம் மேம்படுத்தப்படும் எனவும் அதேபோல் அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி., வகுப்புகள் நடத்த விரைவில் அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் பெறப்படும் : அமைச்சர் செங்கோட்டையன்
பள்ளி ஆசிரியர்கள் துப்பாக்கி அமெரிக்காவில் வைத்துக்கொள்ள ஆதரவளிப்பதாக கூறியுள்ள வெள்ளை மாளிகை, துப்பாக்கி வாங்குவதற்கான வயது வரம்பை உயர்த்தும் கருத்தில் இருந்து பின்வாங்கியுள்ளது. ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள மெஜாரிட்டி ஸ்டோன்மேன் என்ற பள்ளியில் முன்னாள் மாணவன் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில், 14 மாணவர்களும், 3 ஆசிரியர்களும் உயிரிழந்தனர். இதையடுத்து, மாணவர்களையும், தங்களையும் பாதுகாத்துக் கொள்ள ஆசிரியர்கள் கைத்துப்பாக்கிகள் வைத்துக் கொள்ளலாம் என கருத்து தெரிவித்த அதிபர் டிரம்ப், துப்பாக்கிகள் வாங்குவதற்கான வயதையும் உயர்த்த வேண்டும் என வலியுறுத்தினார். […]
உலகத்தில் எந்தெந்த நாடுகளில் டாக்டர் பட்டம் (PhD graduates),அதாவது முனைவர் பெற்ற பட்டதாரிகள் அதிகமாக உள்ளனர் என்ற பட்டியலை இன்று உலக பொருளாதார மையம் (World Economic Forum) அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. இப்பட்டியலில் அமெரிக்கா 67,449 பட்டதாரிகளுடன் முதல் இடத்திலும்,ஜெர்மனி 28,147 பட்டதாரிகளுடன் இரண்டாவது இடத்திலும், இங்கிலாந்து 25,020 பட்டதாரிகளுடன் மூன்றாவது இடத்திலும், இந்தியா 24,300 பட்டதாரிகளுடன் நான்காவது இடத்திலும், ஜப்பான் 16,039 பட்டதாரிகளுடன் ஐந்தாவது இடத்திலும், பிரான்ஸ் 13,729 பட்டதாரிகளுடன் ஆறாவது இடத்திலும்,தென்கொரியா 12,931 பட்டதாரிகளுடன் […]
மூன்றே கால் லட்சம் பேர் தமிழகத்தில் காவல்துறை, சிறைத்துறைகளில் காலியாக உள்ள 2-ஆம் நிலை காவலர் பணியிடங்கள் மற்றும் தீயணைப்பு வீரர் காலிப்பணியிடங்களுக்கான தேர்வை எழுதினர். இரண்டாம் நிலை காவலர்கள், தீயணைப்பு வீரர்கள் மற்றும் பின்னடைவு காலிப்பணியிடங்கள் என மொத்தம் ஆறாயிரத்து 140 காலிப் பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு குழுமம் கடந்த டிசம்பர் மாதம் தேர்வை அறிவித்தது. முதல்முறையாக ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, 3 லட்சத்து 26 ஆயிரம் பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. […]
இந்திய ரூபாயின் அடையாள வடிவில், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் 1717பேர் நின்று சாதனை படைத்துள்ளனர். எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளின் மருத்துவச் செலவுக்கு நிதி திரட்டுவதற்காக ரோட்டரி சங்கத்தின் சார்பில் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கின்னஸ் சாதனை முயற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் அண்ணா பல்கலைக்கழகம், ராணி மேரிக் கல்லூரி ஆகியவற்றைச் சேர்ந்த மாணவ மாணவியர் 1717பேர் இந்திய ரூபாய்க்கான அடையாள வடிவில் நின்றனர். இந்தச் சாதனையைப் படம்பிடித்துக் கின்னஸ் உலகச் சாதனைப் பதிவுக்கு அனுப்பப்பட உள்ளது. […]
மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பள்ளிகளில் விரைவில் கரும்பலகைகளுக்குப் பதிலாக டிஜிட்டல் பலகைகள் இடம் பெற உள்ளதாக தெரிவித்துள்ளார். அடுத்த 5 ஆண்டுகளுக்குள் இத்திட்டம் முழு அளவில் நிறைவேற்றப்படும் என்றும் அவர் உறுதியளித்தார். டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஜவடேகர், கல்வியை தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்த மத்திய அரசு தீர்மானித்துள்ளதாக கூறினார். கரும்பலகைகள் டிஜிட்டல் பலகைகளாக மாற்றப்படும் என்று நிதியமைச்சர் அருண்ஜேட்லீ தமது பட்ஜெட் உரையில் உறுதியளித்ததை ஜவடேகர் நினைவுகூர்ந்தார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் இந்தியாவில் இருந்து அதிக அளவில் மாணவர்கள் கல்வி பயில ஃபிரான்சுக்கு வரவேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார். டெல்லியில் உள்ள பைகானீர் (Bikaner) இல்லத்தில் மாணவர்களுடன் கலந்துரையாடிய அவர், இந்தியா வரும் பிரான்ஸ் மாணவர்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்க விரும்புவதாகத் தெரிவித்தார். உலகம் டிஜிட்டல் புரட்சிக்கும் பருவநிலை மாறுபாட்டுக்கும் மத்தியில் இருப்பதாகக் கூறிய மேக்ரான், மாறுபட்ட சிந்தனைகளும் செயல் வேகமும் அவசியம் என்றார். தொழில்முனைவோருக்கான வாய்ப்புகள் எளிமைப்படுத்தப்படவேண்டும் என்றும் சவால்களைச் சந்திக்கத் தயாராக இருப்போரின் […]
அமைச்சர் செங்கோட்டையன் இலங்கையில் தீ வைத்து எரிக்கப்பட்ட யாழ்ப்பாணம் நூலகத்திற்கு 1 லட்சம் புத்தகங்கள் அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். கோபிசெட்டிபாளையத்தில், சிறப்பு பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய போது, அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன் பின்னர், 355 பயனாளிகளுக்கு, நலத்திட்ட உதவிகளை அமைச்சர் செங்கோட்டையன் வழங்கினார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், சென்னையில் உள்ள அண்ணா நூலகத்திற்கு 6 கோடி ரூபாயும், மதுரை தமிழ்ச் சங்க நூலகத்திற்கு, 5 […]
உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் உயர்கல்வியில் 45.6 விழுக்காடு மாணவிகள் சேர்க்கை நடைபெற்றுள்ளதாக தெரிவித்தார். வேலூர் மாவட்டம் காட்பாடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் யாரும் டிடிவி தினகரன் அணிக்குச் செல்லமாட்டார்கள் எனக் கூறினார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
பெரம்பலூரில் உள்ள ஒரு தனியார் மகளிர் கல்லூரியில் மகளிர் தின விழா சிறும் சிறப்புமாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நெசவாளர்களின் வாழ்க்கையை பாதுகாக்கும் பொருட்டு நெசவாளர்களை பாதுகாப்போம்,கைத்தறி ஆடைகளை உடுப்போம், நெசவுக்கு உயிர் கொடுப்போம் என வாசகங்கள் கொண்ட ஒரு பெண் தறி நெய்வது போன்ற ஓவியத்தை வரைந்து மாணவிகள் உறுதியேற்றுக் கொண்டனர். இதனைதொடர்ந்து தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள்,போட்டிகள் உட்பட பல்வேறுபட்ட நிகழ்சிகள் நடைபெற்று வருகின்றன.
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு சென்னை வேப்பேரியில் அமைந்துள்ள குரு ஸ்ரீ சாந்திவிஜய் ஜெயின் பெண்கள் கல்லூரியில் ஏராளமான கல்லூரி மாணவிகள் கலந்து கொண்ட மகளிர் தின விழாவில், திருமதி.பிரேமலதா விஜயகாந்த் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி, சிறப்புரையாற்றினார்.