இந்தியாவிலேயே முதன்முறையாக பள்ளிக்குச் செல்லும் மாணவிகள் தங்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் குறித்த புகார்களை தெரிவிக்க 14417 என்ற இலவச எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறியுள்ளார். 14417 என்ற எண் மூலம் கொடுக்கப்படும் புகார்கள் மீது 24 மணி நேரத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், புகார் தெரிவிக்கும் மாணவிகளின் விபரங்கள் பாதுகாக்கப்படும் என்றும் கூறினார். DINASUVADU
அரசு பள்ளிக்கு பூட்டு போட்டு மாணவர்கள் போராட்டம் காஞ்சிபுரம் அடுத்த நீர்வள்ளூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப் பள்ளியில் 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் பள்ளிக்கு பூட்டு போட்டு வகுப்புகளை புறகணித்து போரட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். DINASUVADU
கோவை: கனமழை காரணமாக வால்பறையில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று(ஆக.14)விடுமுறை அளித்து ஆட்சியர் த.ந ஹரிஹரன் உத்தரவிட்டுள்ளார்.வால்பறை பகுதிகளில் கடந்த சில தினங்களாகவே கனமழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது. DINASUVADU
மதுரை காமராஜர் பல்கலைகழக துணைவேந்தர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதற்கு எதிரான செல்லதுரை மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம். மேலும் உச்ச நீதிமன்றம் அளித்த விளக்கத்தில் செல்லதுரை மீது கிரிமினல் குற்ற வழக்குகள் இருப்பதால் பதவி நீக்கம் சரியானதுதான். உயர்ந்த பதவியில் இருப்போர் மீது குற்ற வழக்குகள் இருப்பதை நீதிமன்றம் விரும்பவில்லை என்றும் தெரிவிதுள்ளது. DINASUVADU
கனமழை காரணமாக, கோவை பொள்ளாச்சி, வால்பாறை, ஆனைமலையில் ஆகிய பள்ளிகளுக்கு இன்று விடுமுறை. DINASUVADU
அண்ணா பல்கலை கழக விடைத்தாள் மறுமதிப்பீட்டில் முறைக்கேடு தொடர்பான முக்கிய ஆவணங்களை லஞ்ச ஒழிப்பு துறையினர் கைப்பற்றி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.அதே நேரம் தேர்வு எழுதிய 3 லட்சம் மாணவர்களின் தேர்வு தாள்கள் அழிக்கப்பட்டுவிட்டதாக தெரிகிறது. தேய்வு கட்டுப்பட்டாளர் உமாவை விசாரணைக்கு அழைக்கப்பதற்கான சம்மன் விரைவில் அனுப்பபடும் என தெரிகிறது. DINASUVADU
தமிழகத்தில் உள்ள 2,448 அரசு பள்ளிகளில், 49 கோடி ரூபாய் செலவில், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார். DINASUVADU
1 மாணவர் கூட 100-க்கும் மேற்பட்ட தனியார் பொறியியல் கல்லூரிகளில் சேரவில்லை என்று அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது. ஜூலை மாதம் 25ஆம் தேதி பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் கலந்தாய்வு தொடங்கியது. இன்னும் இரண்டு சுற்று கலந்தாய்வுகள் மட்டுமே நடைபெற உள்ள நிலையில், ஒரு லட்சத்து 34 ஆயிரத்து 502 இடங்கள் காலியாக உள்ளது . மூன்று சுற்றுகள் முடிவில் அண்ணா பல்கலைக்கழகம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் 1 மாணவர் கூட 100-க்கும் […]
2ஆம் வகுப்புவரை வீட்டுப்பாடம் கூடாது என்ற உத்தரவை சிபிஎஸ்இ பள்ளிகள் ஆகஸ்ட் 17க்குள் நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் அமல்படுத்தாவிட்டால் நாடு முழுவதும் உள்ள பள்ளி கல்வித்துறை செயலர் ஆஜராக நேரிடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் செய்திகளுக்கு DINASUVADU-டன் இணைந்திருங்கள்.
அண்ணா பல்கலைகழகத்தின் பொறுப்பு பதிவாளராக ஜெ.குமாரை நியமித்து துனைவேந்தர் உத்தரவு பிறப்பித்துள்ளார். கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி அண்ணா பல்கலைக்கழக முன்னாள் தேர்வு கட்டுப்பாட்டாளர் உமா உட்பட 10பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.2017 ஏப்ரலில் நடைபெற்ற தேர்வில் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தோரிடம் லஞ்சம் பெற்றதாக வழக்கு தொடரப்பட்டது. பின்னர் இவரிடம் நடத்திய விசாரணையில், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி உமா, 2016 மே மாதம் முதல் 2018 ஏப்ரல் மாதம்வரை துணைவேந்தர் இல்லாத காரணத்தினால் அனைத்து பொறுப்புகளையும் […]
டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப் 2 தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.குரூப் 2 தேர்வு 1,199 பணி இடங்களுக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நவம்பர் 11ஆம் தேதி குரூப் 2 தேர்வு நடைபெறும்.இன்று முதல் செப்டம்பர் 9 ஆம் தேதி வரை இணையத்தில் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் செய்திகளுக்கு DINASUVADU-டன் இணைந்திருங்கள்.
அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ்., – பி.டி.எஸ்., படிப்புகளுக்கான முதற்கட்ட கவுன்சிலிங் முடிந்து வகுப்புகள் துவக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இரண்டாம் கட்ட கவுன்சிலிங் இன்று முதல் 12ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கவுன்சிலிங் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மருத்துவ தேர்வு குழு செயலர் செல்வராஜன் வெளியிட்ட அறிவிப்பில் தமிழகத்தில் இரண்டாம் கட்ட கவுன்சிலிங் நாளை முதல் 13ம் தேதி வரை நடைபெறும். கவுன்சிலிங் தொடர்பான விரிவான அட்டவணை www.tnhealth.org, www.tnmedicalselection.org என்ற […]
உயர்நீதிமன்றத்தில் விடைத்தாள் மறுமதிப்பீடு விவகாரத்தில் அண்ணா பல்கலைகழக பேராசிரியை உமா, உதவிப்பேராசிரியர் அன்புச்செல்வன் ஆகியோர் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர். சென்னை உயர்நீதிமன்றம் வரும் 14ம் தேதிக்குள் பதிலளிக்க லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
தமிழக அரசு, நேற்றுவிடுமுறை அறிவித்ததால், இன்ஜினியரிங் ஆன்லைன் கவுன்சிலிங் தேதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இதன்படி,மூன்றாம் சுற்று கவுன்சிலிங்கில், ஆன்லைனில் ஒதுக்கப்பட்ட இடங்களுக்கு,ஒப்புதல் தருவதற்கான அவகாசம், இன்றுபகல், 12:00 மணி வரைநீட்டிக்கப்பட்டுள்ளது. இறுதி இட ஒதுக்கீடு உத்தரவை, இன்று மாலை,5:00 மணிக்கு, ஆன்லைனில் பதிவிறக்கம்செய்யலாம். நான்காம் சுற்று மாணவர்களுக்கு கவுன்சிலிங்கட்டணம் செலுத்தும் அவகாசம், இன்று பகல்,12:00 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நான்காம் சுற்று விருப்பபதிவு, இன்று பிற்பகல்,2:00 மணிக்கு தான் துவங்கும். ஐந்தாம் சுற்றுக்கான கட்டணம்செலுத்தும் அவகாசம், இன்று பிற்பகல்,2:00 மணிக்கு துவங்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்
இன்று தமிழகம் முழுவதும் பள்ளி கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும்.நேற்று திமுக தலைவர் கருணாநிதி மறைவையொட்டி பள்ளி கல்லூரிகளுக்கு அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்
நாளை திமுக தலைவர் கருணாநிதியின் மறைவையொட்டி அண்ணா பல்கலைக்கழகம் விடுமுறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
ஊழலில் சிக்கித் தவிக்கும் அண்ணா பல்கலை.யின் சூழல் வேதனை அளிக்கிறது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.மேலும் தேர்வு மறுமதிப்பீட்டிற்கு ரூ.10,000 லஞ்சம் பெற்றது அதிர்ச்சி அளிக்கிறது என்றும் கூறியுள்ளார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
ஆகஸ்ட் இறுதிக்குள் நீட் தேர்வுக்கு பயிற்சி அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், டிசம்பர் இறுதிக்குள் +2 முடித்த 25,000 மாணவர்களுக்கு 10 நாட்கள் சி.ஏ. பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.அரசுப் பள்ளிகளில் 50% மாணவர்களுக்கு ஆங்கிலம் கற்றுத்தர வகுப்பறைகள் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
ஆகஸ்ட் 10ஆம் தேதி பி.ஆர்க் படிப்புகளுக்கான நேரடி கலந்தாய்வு நடைபெறவுள்ளது என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
77 மதிப்பெண்களை மறு மதிப்பீட்டில் விதிகளை மீறி மாணவர் ஒருவர் பெற்றுள்ளார் என்று லஞ்ச ஒழிப்புத்துறையினர் தெரிவித்துள்ளனர். கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி அண்ணா பல்கலைக்கழக முன்னாள் தேர்வு கட்டுப்பாட்டாளர் உமா உட்பட 10பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.2017 ஏப்ரலில் நடைபெற்ற தேர்வில் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தோரிடம் லஞ்சம் பெற்றதாக வழக்கு தொடரப்பட்டது. பின்னர் இவரிடம் நடத்திய விசாரணையில், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி உமா, 2016 மே மாதம் முதல் 2018 ஏப்ரல் மாதம்வரை துணைவேந்தர் இல்லாத […]