வேலூர் மாவட்டம் அரக்கோணம் அருகே நாணமங்கலம் கண்டிகை கிராமத்தில் இயங்கி வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டும் நோக்கில் பழைய கட்டிடம் ஞாயிற்றுக்கிழமை முற்றிலுமாக இடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முறையான மாற்று இடமும் ஏற்பாடு செய்யவில்லை என்று கூறப்படும் நிலையில், காலை வழக்கம்போல் பள்ளிக்கு வந்த மாணவர்கள் செய்வதறியாது தவித்துள்ளனர். மாணவர்களின் பெற்றோர் பள்ளியை முற்றுகைட்டதை அடுத்து, வட்டாட்சியருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து அங்கு வந்த வட்டாட்சியரை சூழ்ந்துகொண்டு பெற்றோர் வாக்குவாதம் செய்த நிலையில், மாற்று […]
அண்ணா பல்கலைகழக தேர்வுத்தாள் மறுமதிப்பீடு முறைகேடு வழக்கில் முன்ஜாமீன் முன்ஜாமீன் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம். கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி அண்ணா பல்கலைக்கழக முன்னாள் தேர்வு கட்டுப்பாட்டாளர் உமா உட்பட 10பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.2017 ஏப்ரலில் நடைபெற்ற தேர்வில் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தோரிடம் லஞ்சம் பெற்றதாக வழக்கு தொடரப்பட்டது.பின்னர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் அண்ணா பல்கலைகழக தேர்வுத்தாள் மறுமதிப்பீடு முறைகேடு வழக்கில் முன்னாள் தேர்வு கட்டுப்பாட்டாளர் உமா, உதவி பேராசிரியர்கள் அன்புச்செல்வன், […]
கல்வி நிலையங்களில் ஏதேனும் இடர்பாடுகள் இருந்தால் மாணவ, மாணவிகள் 14417 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் என்று பள்ளிகல்வித்துறை அமைச்சர் அறிவித்தார் இந்த நிலையில் 14417 என்ற எண்ணில் வரும் மாணவ,மாணவியரின் புகார் மீது 24 மணிநேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். மேலும் அடுத்த ஆண்டு முதல் +2 மாணவர்களுக்கு 12 புதிய திறன் படிப்புகள் கற்றுத்தரும் வகையில் பாடத்திட்டம் உருவாக்கப்படும் மற்றும் 3,700 ஆசிரியர்களை கொண்டு மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான பயிற்சி வழங்கப்பட […]
குரூப்-2 பணி…அழைக்கிறது அரசுப்பணி… ஆயிரத்துக்கும் மேற்பட்ட குரூப்-2 பணியிடங்களுக்கு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) தேர்வுக்கான அறிவிக்கை வெளியிட்டு இருக்கிறது. கடந்த ஆண்டு இந்தியா முழுதும் நடைபெற்ற குடிமைப் பணிகள் (ஐ.ஏ.எஸ்.) தேர்வு கூட 900+ இடங்களைத்தான் வழங்கியது. ஆனால் தமிழ்நாட்டுக்குள் மட்டும், குரூப்-2 அலுவலர்கள் 1179 இடங்கள் இது மிகப் பெரிய வாய்ப்பு. நன்கு முறையாகப் பயன்படுத்திக் கொள்வோம். இந்த பணிகளுக்கு வருகிற செப்டம்பர் 9-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம். நவம்பர் 11 காலை, முதல் […]
பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வுக்கு பிறருடைய உதவியோ, சிபாரிசோ தேவையில்லை என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது குறித்து அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிக்கையில், முன்பின் தெரியாத நபர்களிடம் சான்றிதழ், பணத்தை கொடுத்து மாணவர்கள், பெற்றோர்கள் ஏமாற வேண்டாம். மதிப்பெண், தரவரிசைப்படி விருப்பமான கல்லூரி, பாடப்பிரிவை மாணவர்கள் தேர்வு செய்து கொள்ளலாம்.பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வுக்கு பிறருடைய உதவியோ, சிபாரிசோ தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளது. DINASUVADU
வெளிநாட்டில் படிக்கும் மாணவர்களின் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், மாணவர்களை வெளிநாட்டுக்கு படிக்க அனுப்பும் நிறுவனங்களை கண்காணிக்க குழு அமைக்க வேண்டும்.வெளிநாட்டில் படிக்கும் மாணவர்களின் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார். DINASUVADU
தமிழகத்தை சேர்ந்த ஆர்.ஸதி என்ற அரசு பள்ளி ஆசிரியைக்கு தேசிய ஆசிரியர் விருதுக்கு தேர்வாகியுள்ளார். தமிழகம் சார்பில் பரிந்துரைக்கப்பட்ட 6 பேரில் கோவை ஆசிரியர் சத்தி மட்டுமே விருதுக்கு தேர்வாகியுள்ளார் என மத்திய அரசு அறிவித்துள்ளது நாடு முழுவதும் ஆசிரியர் பணியை சிறப்பித்து வழங்கும் தேசிய நல்லாசிரியர் விருது ஆசிரியருக்கு குடியரசு தலைவர் வழங்குவார். இந்த விருதுகளின் எண்ணிக்கையை இந்தியா முழுவதும் 45 மட்டுமே வழங்கப்படும் என மத்திய அரசு அண்மையில் தெரிவித்தது.இந்த விருது குறைக்கப்பட்டதால் தமிழகத்திலும் […]
தமிழகத்தில் கிராமப்பள்ளிகளுக்குத் தேவையான வசதிகளை செய்ய, முன்னாள் மாணவர்கள் முன்வர வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வேண்டுகோள் விடுத்துள்ளார். அமைச்சர்கள் செங்கோட்டையன், எம்.சி.சம்பத் ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசினர். அப்போது, முன்னாள் மாணவர்களிடம் விடுக்கப்படும் கோரிக்கை அரசு சார்பில் வெளியிடப்படும் என்று செங்கோட்டையன் கூறினார். DINASUVADU
முதல்வர் பழனிச்சாமி சென்னை காமராஜர் சாலையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா காலை நினைவு வளைவுக்கு அடிக்கல் நாட்டினார்.இதனையடுத்து தலைமைச் செயலகத்தில், 2018-2019ஆம் கல்வியாண்டில் பயிலும் 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவ, மாணவியர்களுக்கு 437 கோடியே 86 லட்சம் ரூபாய் செலவில் 11,78,790 விலையில்லா மிதிவண்டிகளை முதலமைச்சர் பழனிசாமி வழங்கினார்.அவருடன் துணைமுதலமைச்சர் பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர். DINASUVADU
10 வகுப்பு படிக்கும் மாணவரா நீங்கள் உடனே இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் ஆம் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான 2018 ஆம் ஆண்டு தேசிய திறனாய்வு தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.அதன்படி இன்று முதல் செப்.5 ஆம் தேதி வரை http://www.dge.tn.gov.in என்ற முகவரியில் பதிவிறக்க செய்யலாம். பதிவிறக்கம் செய்யப்பட்டு பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் ரூ.50 தேர்வு கட்டணத்துடன் தங்கள் பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும் என தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. DINASUVADU
பிளஸ் 2 முடித்த மாணவர்கள், இன்ஜினியரிங் படிப்பில் சேர்ந்து படிப்பர்கள் இதனை அண்ணா பல்கலைகழகம் வழியாக பொது கவுன்சிலிங் நடத்தப்படும் இந்த ஆண்டு நடத்தப்பட்ட கவுன்சிலிங்கிற்கு மாணவர்கள் வரவு குறைந்து காணப்பட்ட போதிலும் அண்ணா பல்கலை கழகம் ஒரு வழியாக கவுன்சிலிங்கை நடத்தி முடித்தது. கவுன்சிலிங் ஆன்லைன்’ வழியாக நடத்தியது இதனால் மாணவர்களுக்கு சிரமம் சற்று குறைந்த போதும் ஆன்லைன் கவுன்சிலிங்கில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.இந்த ஆண்டு, பொது கவுன்சிலிங்கில், 72 ஆயிரத்து, 648 இடங்கள் உட்பட, தொழிற்கல்வி, […]
கல்லூரி, பல்கலைக்கழக வளாகங்களில் நொறுக்குத் தீனி உணவுகளை (JUNK FOOD) விற்க பல்கலைக்கழக மானியக் குழு (UGC) தடை விதித்துள்ளது. இதுதொடர்பாக அனைத்து கல்லூரி, பல்கலைக்கழகங்களுக்கு பல்கலைக்கழக மானியக் குழு (UGC) அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளது, நொறுக்குத் தீனி உணவு வகைகளை மாணவ, மாணவிகள் சாப்பிடுவதால் அவர்களின் ஆரோக்கியம் கெடுகிறது. மேலும் அவர்கள் உடல் எடையும் அதிகரித்து விடுகிறது. அதுமட்டுமல்லாமல் அவர்களுக்கு பல்வேறு நோய்களும் இது போன்ற உணவு வகைகளால் வருகின்றன. குறிப்பாக இந்த வகை உணவுகளால் […]
கேரளா கோரும் அத்தியாவசிய பொருட்களை அனுப்ப தமிழக அரசு தயாராக உள்ளது என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், தமிழக பள்ளிக்கல்வி துறை சார்பில் தனியார் பள்ளியுடன் இணைந்து நிவாரணப்பொருட்கள் அனுப்பப்பட்டது.கேரளா கோரும் அத்தியாவசிய பொருட்களை அனுப்ப தமிழக அரசு தயாராக உள்ளது.மேலும் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதியவர்களுக்கான போட்டித் தேர்வு அறிவிப்பு செப்டம்பர் முதல் வாரத்தில் வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளார். DINASUVADU
மாணவர் ஒருவர் காது கேட்கும் கருவி வாங்குவதற்காக சேமித்தது வைத்திருந்த ரூ.10 ஆயிரத்தை, கேரள நிவாரண நிதிக்கு அளித்துள்ளார். கனமழை மற்றும் வெள்ளபெருக்கு காரணமாக கேரளாவில் மக்களின் இயல்புநிலை பாதிக்கப்பட்டுள்ளது.பல்வேறு மக்கள் வீடுகளையும் இழந்து உள்ளனர்.வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் 324 -க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.பலர் மாயமாகியும் உள்ளனர். அங்குள்ள வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு தன்னார்வ நிறுவனங்களும், அரசியல் தலைவர்களும்,சினிமா பிரபலங்களும் உதவி வருகின்றனர்.தற்போது கேரளாவில் மழையின் அளவு படிப்படியாக குறைந்து வருகின்றது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு […]
98 ஆயிரம் இடங்கள் பொறியியல் சேர்க்கை கலந்தாய்வு முடிந்துள்ள நிலையிலும் காலியாக உள்ளதாக அண்ணா பல்கலைக் கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 550 பொறியியல் கல்லுாரிகள் கடந்த ஆண்டு இறுதியில் இருப்பதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது மொத்த கல்லுாரி எண்ணிக்கையில் 487 மட்டுமே இடம் பெற்றுள்ளது . இதன் மூலம், நடப்பாண்டில் 63 பொறியியல் கல்லுாரிகள் மூடப் பட்டிருக்கும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லுாரிகள், முன்னணி தனியார் கல்லுாரிகள் என 30 கல்லுாரிகளில் […]
உச்சநீதிமன்றத்தில் தமிழகத்தில் பின்பற்றப்படும் 69% மருத்துவப்படிப்பு இடஒதுக்கீட்டுக்கு எதிராக மனு ஓன்று தொடரப்பட்டுள்ளது. 2வது கட்ட மருத்துவ கலந்தாய்வில் இடம் கிடைக்காததால் மாணவிகள் மனு அளித்துள்ளனர் .இதையடுத்து உச்சநீதிமன்றம் மாணவிகள் இருவரின் மனுக்களையும் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது . DINASUVADU
சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் நடிகர்கள் பற்றி இடம் பெறும் அளவிற்கு கல்வித்தரம் குறைந்து விட்டதா? சிபிஎஸ்இக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இது தொடர்பாக சிபிஎஸ்இ பள்ளிகளில் புத்தக சுமையை குறைக்கவும், அங்கீகரிக்கப்பட்ட பாட புத்தகங்களை படிக்க உத்தரவிட கோரி மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், 2ஆம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் தரக்கூடாது என்ற உத்தரவை நாடு முழுவதும் பத்திரிகைகளில் விளம்பரப்படுத்த வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது. நாட்டின் முதன்மை கல்வி வாரியத்துக்கு 2ஆம் வகுப்பு பொது அறிவு பாடத்தில் சல்மான்கான், […]
பொறியியல் துணை கலந்தாய்வுக்கு ஆகஸ்ட் 16 முதல் 20ஆம் தேதி வரை அண்ணா பல்கலைக்கழக இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் சான்றிதழ் சரிபார்ப்பு தேதி உள்ளிட்ட விவரங்கள் எஸ்.எம்.எஸ் வாயிலாக தகவல் தெரிவிக்கப்படும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. DINASUVADU