கஜா புயல் காரணமாக கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 15 ஆம் தேதி அதாவது நாளை பிற்பகல் பாம்பன் – கடலூர் இடையே கஜா புயல் கரையை கடக்கும். கடலூர், நாகை, காரைக்கால், திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரத்தில் பலத்த காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இந்நிலையில் கஜா புயல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என்று ஆட்சியர் அன்பு செல்வன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
குரூப்-2 தேர்வுக்கான உத்தேச விடைகள் நாளை இணையத்தில் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது . இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அறிவிப்பில்,குரூப்-2 தேர்வுக்கான உத்தேச விடைகள் நாளை இணையத்தில் வெளியிடப்படும்.விடைகள் குறித்த ஆட்சேபனை இருந்தால், இணையதளம் மூலமே உரிய கோரிக்கைகளை வரும் 20ம் தேதிக்குள் முன்வைக்கலாம் என்றும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது .
டிசம்பர் மாதத்திற்குள் மாணவர்களின் வருகையை கண்டறிய 1000 பள்ளிகளில் பயோமெட்ரிக் முறை அமல்படுத்தப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகின்றது.இந்த திட்டங்கள் மாணவர்களுக்கும் பயனளிக்கும் வகையில் உள்ளது. இந்நிலையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில் மாணவர்களின் வருகையை கண்டறிய, டிசம்பர் மாதத்திற்குள் 1000 பள்ளிகளில் பயோமெட்ரிக் முறை அமல்படுத்தப்படும்.எல்.கே.ஜி., யூ.கே.ஜி வகுப்புகளுக்கு பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவிற்கே முன்னோடி மாநிலமாக தமிழகம் திகழ்கிறது என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில், அனைத்து துறைகளிலும் இந்தியாவிற்கே முன்னோடி மாநிலமாக தமிழகம் திகழ்கிறது .பள்ளிக்கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்களை டிசம்பர் மாதத்திற்குள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் பொறியியல் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் இன்று தொடக்கபட்டுள்ளது. இன்று தமிழகம் முழுவதும் பொறியியல் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் தொடக்கபட்டுள்ளது.இதனால் விடைத்தாள் திருத்தும் பணிகளில், தீவிர கண்காணிப்பு செய்ய அண்ணா பல்கலைகழகம் முடிவு செய்துள்ளது . விடைத்தாள் திருத்தம், மறு மதிப்பீடு விவகாரங்களில் முறைகேடுகள் நடப்பதை தடுக்க நடவடிக்கை எடுத்துள்ளது அண்ணா பல்கலைகழகம்.
குரூப்-2 தேர்வு திட்டமிட்டபடி நவம்பர் 11 ஆம் தேதி நடைபெறும் என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட அறிவிப்பில், குரூப்-2 தேர்வு திட்டமிட்டபடி நவம்பர் 11 ஆம் தேதி நடைபெறும். குரூப்-2 தேர்வு வினாத்தாள் பற்றிய ஆதாரமற்ற, தவறான செய்திகள் குறித்து தேர்வர்கள் கவலைப்பட வேண்டாம். குரூப்- 2 தேர்வு வினாத்தாள் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய 2 மொழிகளிலும் தயாரிக்கப்படுகிறது என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
தமிழில் தேர்வு நடத்த முடியாவிட்டால் டி.என்.பி.எஸ்.சியை இழுத்து மூடுங்கள் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் ஆவேசமாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாட்டில் தமிழ் மொழியில் போட்டித்தேர்வுகளை நடத்த முடியவில்லை என்று கூறுவதற்கு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெட்கப்பட வேண்டும்.தமிழில் தேர்வு நடத்த முடியாவிட்டால் டி.என்.பி.எஸ்.சியை இழுத்து மூடுங்கள் என்று ஆவேசமாக தெரிவித்துள்ளார்.
சிறப்பு ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு விரைவில் நடைபெற உள்ளது என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில், சிறப்பு ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு விரைவில் நடைபெற உள்ளது. கலந்தாய்வு முடிந்தவுடன் அவர்கள் நியமிக்கப்படுவார்கள்.மாணவர்கள் நீட் உள்ளிட்ட மத்திய அரசு நடத்தும் அனைத்து தேர்வுகளையும் எதிர்கொள்ளும் வகையில் பள்ளி பாடத்திட்டங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
குரூப்-1 தேர்விற்கு இனி மேல் 10 மாதங்களில் இறுதி முடிவு வெளியிடப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி. செயலாளர் நந்தகுமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னையில் டி.என்.பி.எஸ்.சி. செயலாளர் நந்தகுமார் கூறுகையில், குரூப்-1 தேர்விற்கு இனி மேல் 10 மாதங்களில் இறுதி முடிவு வெளியிடப்படும். அறிவிக்கை வெளியிட்ட 2 மாதத்தில் முதல்நிலை தேர்வு, அடுத்த 2 மாதத்தில் தேர்வுக்கான முடிவு வெளியாகும் என்று டி.என்.பி.எஸ்.சி. செயலாளர் நந்தகுமார் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் கனமழை வெளுத்து வாங்கியுள்ளது.இதன் காரணமாக அங்கு இன்று பள்ளி வைத்திருக்கும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறையை அறிவித்து ஆட்சியர் அறிவித்துள்ளார். இது குறித்து தெரிவித்த ஆட்சியர் கனமழையால் தூத்துக்குடி மாவட்டத்தில் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்டுகிறது என்று ஆட்சியர் சந்தீப் நந்தூரி உத்தரவிட்டார். இந்த உத்தரவானது சில தனியார் பள்ளிகள் செயல்படுவதாக ஆட்சியாருக்கு புகார் வந்த நிலையில் வந்த புகாரை தொடர்ந்து ஆட்சியர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். DINASUVADU
அரசு மேல்நிலைப்பள்ளியை மது அருந்தும் கூடாரமாக குடிகாரர்கள் பயன்படுத்தி வருவதாகப் பெற்றோர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். தருமபுரி மாவட்டத்தில் சோமனஅள்ளியில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.இந்த பள்ளி அருகே மதுக்கடை ஒன்று செயல்பட்டு வருகிறது இதனால் குடி பிரியர்கள் பள்ளி வளாகத்தை மது அருந்தும் கூடாரமாக மாற்றி அதனை பயன்படுத்தி வருவதாக பள்ளியில் பயிலும் குழந்தைகளின் பெற்றோர்கள் அச்சதுடன் , ஆத்திரத்துடனும் குற்றஞ்சாட்டியுள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் பாலக்கோடு வட்டத்திற்குட்பட்ட சோமனஅள்ளியில் இந்த அரசு மேல்நிலைப் பள்ளிக்கு இருநூறு மீட்டர் தொலைவில் […]
12ம் வகுப்பு தேர்வு முடிந்தவுடன் 25 ஆயிரம் மாணவர்களுக்கு ஆடிட்டர் பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். அரசு பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகின்றது.இந்த திட்டங்கள் மாணவர்களுக்கும் பயனளிக்கும் வகையில் உள்ளது. இந்நிலையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில் இந்தியாவில் 2.85 லட்சம் ஆடிட்டர்கள் தான் இருக்கின்றனர்.12ம் வகுப்பு தேர்வு முடிந்தவுடன் 25 ஆயிரம் மாணவர்களுக்கு ஆடிட்டர் பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களுக்கு சிறந்த […]
குரூப்- 4 பணிக்கு சான்றிதழ் பதிவேற்றம் செய்த/செய்யாத விண்ணப்பதாரர்கள் பட்டியல் வெளியிட்டுள்ளது டிஎன்பிஎஸ்சி. இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அறிவிப்பில், குரூப்- 4 பணிக்கு சான்றிதழ் பதிவேற்றம் செய்த/செய்யாத விண்ணப்பதாரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. http://www.tnpsc.gov.in என்ற தேர்வாணைய இணையதளத்தில் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பதிவெண், பிறந்த தேதியை உள்ளீடு செய்து சான்றிதழ் பதிவேற்ற நிலையை விண்ணப்பதாரர்கள் அறியலாம் என்றும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
2011 – 2016 வரை வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு சிறப்பு சலுகை வழங்கி அரசாணை வெளியிட்டுள்ளது தமிழக அரசு. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், 2011 – 2016 வரை வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு சிறப்பு சலுகை வழங்கப்பட்டுள்ளது. அரசாணை வெளியான நாளில் இருந்து 3 மாதத்திற்குள் ஆன்லைனில் பதிவை புதுப்பித்துக் கொள்ளலாம்.ஆன்லைன் மூலம் புதுப்பித்துக்கொள்ள ஒருமுறை மட்டுமே சலுகை வழங்கப்படும் என்று தமிழக அரசு அரசாணையில் தெரிவித்துள்ளது.
அனைத்து மாநிலத்திலும் இனி 2ஆம் வகுப்புவரை வீட்டு பாடம் கிடையாது மீறினால் பள்ளியின் அங்கீகாரம் இரத்து செய்யப்படும் மத்திய அரசு சுற்றறிக்கை… பள்ளி பருவத்தில் சேர்க்கப்படுகின்ற குழந்தைகளுக்கு வீட்டுப்பாடம் என்ற பெயரில் குழந்தைகளின் மனதுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் பெரும்பாலான பள்ளிக்கூடங்கள் செயல்பட்டுவந்தன.இந்த நிலையில் இன்று மத்திய அரசு அனைத்து மாநில பள்ளிக்கல்வித்துறை செயலகத்துக்கு சுற்றறிக்கை அனுப்பியது.அந்த சுற்றைக்கையில் பள்ளிகூடங்களில் இனிமேல் இரண்டாம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு வீட்டு பாடம் கொடுக்க கூடாது.அதை மீறி குழந்தைகளுக்கு வீட்டுபாடம் கொடுத்தால் சம்மந்தப்பட்ட பள்ளியின் அங்கீகாரம் இரத்து […]
எப்போதும் வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் பள்ளிக்கட்டிடத்தை அகற்ற வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுச்சேரி அருகே எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ள பள்ளிக்கட்டிடத்தை அகற்ற வேண்டுமென அப்பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுச்சேரியை அடுத்த தருமாபுரி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது. 20 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட நிலையில் ஆண்டுகள் மேலாகியுள்ள இப்பள்ளியில் கட்டிடங்கள் மிகவும் சேதமடைந்து காணப்படுகின்றன. இந்நிலையில் எப்போதும் வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ள கட்டிடங்களால் […]
ஆசிரியர்கள் அரசாணை எரிப்பு போராட்டம் நவம்பர் 26ஆம் தேதி நடைபெறும் என்று ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி முடிசெய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநிலச் செயற்குழு கூட்டத்தில் இடைநிலை ஆசிரியர்களிடமிருந்து பறிக்கப்பட்ட மத்திய அரசுக்கு இணையான ஊதியத்தை மீண்டும் வழங்கக்கோரி நவம்பர் 26ஆம் தேதி ஆசிரியர்கள் அரசாணை எரிப்பு போராட்டம் தமிழகத்தில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் நவம்பர் 26ஆம் தேதி ஆசிரியர்கள் அரசாணை எரிப்பு போராட்டம் ந்டைபெறும் என்று ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி […]
அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறியுள்ளார். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பொதுமக்களிடம் ஆங்கில மோகம் உள்ளதை கருத்தில் கொண்டு அங்கன்வாடி மையங்களில் ஒரு லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் அடுத்த மாதம் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடங்கப்படும் என்று கூறியுள்ளார். மேலும் ஈரோடு முருங்கந்தொழுவு பகுதியில் கீழ்பவானி பாசன வாய்க்காலின் கசிவுநீரை குழாய் மூலம் 6 கிலோ மீட்டர் தூரம் கொண்டு சென்று குளத்தில் சேகரிக்கும் திட்டத்தின் தொடக்க […]
தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளி மாணவிகளுக்கு கராத்தே உள்ளிட்ட தற்காப்புப் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது என்று பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அரசு பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகின்றது.இந்த திட்டங்கள் மாணவர்களுக்கும் பயனளிக்கும் வகையில் உள்ளது .தற்போது தமிழக பள்ளிக்கல்வித்துறை புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதை தொடர்பாக தமிழக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பில்,அரசுப் பள்ளி மாணவிகள் தற்காப்புக்காக கராத்தே, ஜூடோ, டேக்வாண்டோ பயிற்சி வழங்கப்பட உள்ளது .சுமார் 5,711 உயர்நிலை பள்ளிகளை சேர்ந்த மாணவிகளுக்கு அக்டோபர் […]
ஆண்டுதோறும் 2 ஆயிரம் பள்ளிகள் சி.பி.எஸ்.இ. அங்கீகாரத்திற்காக விண்ணப்பிப்பதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேக்கர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேக்கர்,ஆண்டுதோறும் 2 ஆயிரம் பள்ளிகள் சி.பி.எஸ்.இ. அங்கீகாரத்திற்காக விண்ணப்பித்துள்ளது. இதுவரை 20 ஆயிரத்து 789 பள்ளிகள் சி.பி.எஸ்.இ.யால் அங்கீகரிக்கப்பட்டு உள்ளது.அதேபோல் சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு அங்கீகாரம் அளிக்கும் முறை எளிமையாக்கப்பட்டுள்ளது என்றும் மத்திய அமைச்சர் ஜவடேக்கர் தெரிவித்துள்ளார்.