அரசு கல்லூரிகளில் புதிய பாடப்பிரிவுகள் தொடங்க நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அரசு கல்லூரிகளில் விசுவல் கம்யூனிகேஷன், எலக்ட்ரானிக்ஸ், மைக்ரோ பயாலஜி, பயோ கெமிஸ்ட்ரி போன்ற பாடப்பிரிவுகளை புதிதாக தொடங்க நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தெரிவிக்கப்பட்டுள்ள செய்தி குறிப்பில், ‘மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் முதன்மைச் செயலாளர் அவர்களின் தலைமையில் தடைபெற்ற கூட்டத்தில் அரசு கல்லூரிகளில் புதிய பாடப்பிரிவுகள் துவங்குவது தொடர்பாக கருத்துருக்கள் அனுப்பும் போது நவீன காலத்திற்கு தொடர்புடைய BCA MCA BSe […]
அமேசான் தனது ஆன்லைன் கற்றல் தளமான அமேசான் அகாடமியை இந்தியாவில் நிறுத்தப்போவதாக அறிவித்துள்ளது. உலகின் மிகப்பெரிய வர்த்தக நிறுவனமான அமேசான் இந்தியாவில் உயர்நிலைப் பள்ளி, போட்டித்தேர்வு, மற்றும் நுழைவுத்தேர்வுக்கு பயிலும் மாணவர்களுக்கான ஆன்லைன் கற்றல் தளத்தை கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தியது. இந்தியாவில் கொரோனா காலகட்டத்தில் நேரடி வகுப்புகளுக்கு சாத்தியமில்லாமல் இருந்த நேரங்களில், ஆன்லைன் வகுப்புகள் மாணவர்களுக்கு பெரிதும் உதவியாக இருந்து வந்தது. இதற்காக பல்வேறு ஆன்லைன் கற்றல் தளங்கள் அமைக்கப்பட்டன. இதில் அமேசானால் உருவாக்கப்பட்ட ஆன்லைன் கற்றல் […]
டிஎன்பிஎஸ்சி குரூப்- 1 பதவிகளுக்கான முதல் நிலை தேர்வு இன்று நடைபெற உள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்- 1 பதவிகளுக்கான முதல் நிலை தேர்வு இன்று நடைபெற உள்ளது. இந்த தேர்வு கடந்த மாதம் அக்டோபர் 30-ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது. ஆனால் சில காரணங்களுக்காக அது தள்ளிவைக்கப்படுவதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்திருந்தது. இந்த நிலையில், இந்த தேர்வு காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. […]
10,11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு அட்டவணை வெளியீடு. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் 10,11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு அட்டவணையை வெளியிட்டுள்ளார். அதன்படி, 2022-2023 ஆம் ஆண்டிற்கான பொதுத்தேர்வு, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 13.03.23 முதல் 03.04.23 வரையும், 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 14.03.23 முதல் 05.04.23 வரையும், 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 06.04.23 முதல் 20.04.23 வரையும் தேர்வு நடைபெறவுள்ளது. இந்த பொதுத்தேர்வினை 12-ஆம் வகுப்பில் 8.80 […]
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசு சார்பாக அளிக்கப்படும் நீட் பயிற்சிக்கு பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகள் நீட் உள்ளிட்ட பல்வேறு போட்டி தேர்வுகளை எதிர்கொள்ள தமிழக அரசு பயிற்சி வகுப்புகளை நடத்திவருகிறது.இந்த வருடத்திற்கான வகுப்புகள் நவம்பர் மூன்றாவது வாரத்தில் தொடங்கும் என பள்ளிக்கல்வித்துறை […]
யு.ஜி.சி நெட் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படும் என தேசிய தேர்வு முகமை அறிவிப்பு. யு.ஜி.சி நெட் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. அதன்படி, யு.ஜி.சி நெட் தேர்வின் 2021 டிசம்பர், 2022 ஜூன் மாத தேர்வுகளுக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட உள்ளது. இந்த தேர்வு முடிவுகளை www.nta.ac.in என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகளை காணலாம். நெட் தேர்வில் தேர்ச்சி பெற்றால் தேசிய அளவிலான பல்கலைக்கழகங்களில் உதவி பேராசிரியர், ஆராய்ச்சி […]