சென்னை –தீபாவளி அன்று எண்ணெய் தேய்த்து குளிக்கும் நேரம் மற்றும் தீபாவளியின் சிறப்புகளை பற்றி இந்த செய்தித் தொகுப்பில் தெரிந்து கொள்வோம் . தீபாவளி 2024; ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் வரும் அமாவாசை திதியில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த வருடம் [ஐப்பசி மாதம் 14]அக்டோபர் 31ம் தேதி வியாழக்கிழமை கொண்டாடப்படுகிறது. சில சமயங்களில் தீபாவளி பண்டிகை அமாவாசை அன்றும் சில சமயங்களில் அமாவாசைக்கு முதல் நாளும் வரும். அந்த வகையில் இந்த ஆண்டு அம்மாவாசை […]
தூத்துக்குடி : புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு தூத்துக்குடியில் உள்ள வைகுண்டபதி பெருமாள் கோயிலில் மூலவரான பெருமாள், வெங்கடாசலபதி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் நின்றபடி சுவாமியை தரிசனம் செய்து வருகின்றனர். புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதமாகவும், அதிலும், புரட்டாசி மாதம் வரும் சனிக்கிழமைகளில் வைணவ ஆலயங்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்படும். இம்மாதம் பெருமாள் பல்வேறு அலங்காரங்களில் பக்தர்களுக்கு காட்சியளிப்பார். புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு […]
அம்பிகை மகிஷா சூரனை அழிக்க எடுத்துக்கொண்ட காலத்தை தான் நாம் நவராத்திரி பண்டிகையாக கொண்டாடுகிறோம். சென்னை –நவராத்திரி விழாவின் ஒன்பது நாட்கள் கொலு வைத்து பலரது வீடுகளிலும் விழா கோலமாக காட்சியளிக்கும் .ஆனால் கொலு வைத்தவர்கள் மற்றும் கொலு வைக்காதவர்கள் என அனைவரும் கொண்டாடுவது சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமியை தான். விஜயதசமி அக்டோபர் மாதம் 12ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. விஜயதசமி உணர்த்தும் தத்துவங்கள்; கர்நாடக மாநிலத்தின் இரண்டாவது பெரிய நகரமாக திகழ்வது மைசூர் தான். […]
சென்னை –மகா கந்த சஷ்டி விரதம் எப்போது துவங்குகிறது என்றும் கந்த சஷ்டி விரதத்தின் சிறப்புகளையும் இந்த செய்தி குறிப்பில் காணலாம். மாதம் தோறும் இரண்டு சஷ்டிகள் வந்தாலும் ஐப்பசி மாதத்தில் வரும் சஷ்டி விரதம் மிக சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இது ஏழு நாட்கள் கடைபிடிக்கப்படும் விரதமாகும். கந்த சஷ்டி 2024; இந்த ஆண்டு நவம்பர் மாதம் இரண்டாம் தேதி சனிக்கிழமை கந்த சஷ்டி விரதம் துவங்கி நவம்பர் 7ஆம் தேதி சூரசம்காரமும் ,நவம்பர் எட்டாம் […]
சென்னை-நவராத்திரி ஆறாம் நாளில் அம்பிகையின் ஸ்ரூபம், வழிபாட்டிற்கு உரிய மலர் மற்றும் நெய்வேத்தியங்களை பற்றி இந்த ஆன்மீக குறிப்பின் மூலம் தெரிந்து கொள்ளலாம் . நவராத்திரி ஆறாம் நாள் வழிபாடு ; நவராத்திரியின் ஆறாம் நாள் என்பது மகாலட்சுமி வழிபாட்டின் நிறைவான நாளாகும்.நவராத்திரி ஆறாம் நாளில் மகாலட்சுமியை இந்திராணி ஆகவும் ,சண்டிகா தேவியாகவும் வணங்குகின்றோம். நவ துர்க்கையில் காத்யாயினி ரூபத்தில் காட்சியளிக்கிறார். சண்டிகா என்றால் உக்கிரமான ரூபமும் போர்குணமும் கொண்ட அம்பாளாக திகழ்கிறார். இந்த நவராத்திரி காலம் […]
சென்னை-நவராத்திரியின் நான்காவது நாள் பூஜை முறை ,நேரம் ,கடன் தீர மஹாலட்சுமியை வழிபடும் முறை பற்றி இந்த ஆன்மீக செய்தி குறிப்பில் காணலாம் . நவராத்திரி நான்காம் நாள் வழிபாடு ; நவராத்திரியின் ஒவ்வொரு நாளும் அம்பிகையை ஒவ்வொரு ரூபத்தை வழிபாடு செய்கின்றோம். அந்த வகையில் நான்காவது நாள் அம்பிகையை மகாலட்சுமியின் ரூபமாக வழிபாடு செய்யப்படுகிறது . நவ துர்க்கையில் கூஷ்மாண்டா துர்க்கையை வணங்கும் நாளாகவும் கருதப்படுகிறது .கூஸ்மாண்டா என்றால் இந்த அகிலத்தை படைத்தவள் என்று பொருளாகும். […]
சென்னை – சரஸ்வதி பூஜை கொண்டாடுவதன் நோக்கம் மற்றும் வித்யாரம்பம் செய்யும் முறையை பற்றி இந்த ஆன்மீக குறிப்பில் காணலாம் . சரஸ்வதி பூஜையின் சிறப்புகள் ; கலைமகள், அலைமகள் ,மலைமகள் என்னும் முப்பெரும் தேவியர்களில் கலைமகள் என அழைக்கப்படுபவர் சரஸ்வதி ஆவார் .நவராத்திரி விழாவின் ஒன்பதாவது நாள் சரஸ்வதி பூஜை கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தில் கொலு வைத்தவர்கள் வைக்காதவர்கள் என அனைவருமே வழிபடக்கூடிய நாளாக கருதப்படுகிறது . கல்வி மட்டுமே ஒரு மனிதனுக்கு அனைத்து நன்மைகளையும் […]
சென்னை – மகாளய அமாவாசையை எவ்வாறு வழிபடுவது என்றும் அன்று முன்னோர்களுக்கு கட்டாயம் செய்ய வேண்டிய வழிபாடு பற்றி இந்த ஆன்மீக செய்தி குறிப்பில் மூலம் செய்ய தெரிந்து கொள்ளலாம். மாதம் தோறும் அமாவாசை வருகின்றது இந்த அமாவாசை தினம் முன்னோர்கள் வழிபாட்டிற்கு ஒதுக்கப்பட்ட நாளாகும். மாதம் தோறும் முன்னோர்களுக்கு செய்ய முடியாதவர்கள் இந்த மகாளய அமாவாசை அன்று நிவர்த்தி செய்து கொள்ளலாம். நாம் இந்த உலகிற்கு வர காரணமாக இருந்த நம்முடைய முன்னோர்களுக்கு நன்றி கடன் […]
சென்னை- அமாவாசை அன்று சமைக்க வேண்டிய காய்கறிகள் மற்றும் சமைக்க கூடாத காய்கறிகள் என்னவென்று இந்த செய்தி குறிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம்.. அமாவாசை தினத்தில் ஏற்படும் மாற்றங்கள் ; அமாவாசை தினத்தில் ஆண்கள் விரதம் இருந்து தர்ப்பணம் கொடுக்க வேண்டும். சுமங்கலி பெண்கள் விரதம் மேற்கொள்ளக்கூடாது, அன்றைய தினம் அவர்கள் முன்னோர்களுக்கு பிடித்த உணவுகளை சமைத்து படையல் போட வேண்டும் என சாஸ்திரம் கூறுகின்றது. சூரியனும் சந்திரனும் இணையும் நாளை அமாவாசை தினமாகும் இந்நாளில் காற்று, […]
சென்னை- நவராத்திரி அன்று அம்பிகைக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நெய்வேத்தியங்கள் படைக்கப்படுகிறது. அதைப்பற்றி இந்த ஆன்மீக செய்தி குறிப்பில் தெரிந்து கொள்வோம். நவராத்திரி நாளில் அம்பிகையை பல்வேறு வடிவங்களில் வழிபடுவது வழக்கம். பெரும்பாலானோர் வீடுகளில் நவராத்திரி திருவிழா கொலு வைக்கப்பட்டு விமர்சையாக கொண்டாடப்படும். இந்த நாட்களில் அம்மனுக்கு விதவிதமான நெய்வேத்தியங்களும் படைக்கப்படுகிறது. நெய்வேத்தியங்கள் படைக்கும் முறை ; முதல் நாளில் அன்னை மகேஸ்வரியாக காட்சி அளிக்கிறார். அன்றைய தினம் அம்மனுக்கு மல்லிகைப்பூ மற்றும் வில்வம் கொண்டு அலங்கரித்து […]
சென்னை –நவராத்திரி பூஜை கொண்டாடுபவர்கள் தாம்பூலம் கொடுப்பதும் வழக்கமாக இருக்கும். அந்த தாம்பூலத்தில் வைக்கக்கூடிய முக்கியமான பொருள்கள் மற்றும் அதன் பலன்களை இந்த ஆன்மீக செய்தி குறிப்பின் மூலம் தெரிந்து கொள்ளலாம். தாம்பூலம் கொடுப்பது ஏன் ? பூஜையின் போது மகாலட்சுமி தாயார் நம் வீட்டிற்கு யார் ரூபத்திலும் வருவார் என்பது ஐதீகம். அதனால்தான் வீட்டில் பூஜை செய்த பிறகு வீட்டிற்கு வந்திருக்கும் தோழர்களுக்கும் சுற்றத்தார்களுக்கும் தாம்பூலம் கொடுக்கும் வழக்கம் உள்ளது. வந்திருப்பவர்களை வெறும் கையோடு கட்டாயம் […]
சென்னை- ஒன்பது நாட்கள் அம்பிகையை வழிபடக்கூடிய உன்னதமான திருவிழா தான் நவராத்திரி. புதிதாக கொலு வைப்பது எப்படி என இந்த செய்தி குறிப்பின் மூலம் தெரிந்து கொள்ளலாம். நவம் என்றால் ஒன்பது மற்றும் புதுமை என்று பொருள். ஒன்பது ராத்திரிகள் அம்பிகைக்காக கொலு வைத்து கொண்டாடப்படுகிறது. அம்பிகை மகிஷா சூரனை வதம் செய்த காலம் தான் இந்த நவராத்திரி ஆகும். அதை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. கொலு வைக்கும் […]
சென்னை –குடை தானம் செய்தால் என்ன பலன்கள் கிடைக்கும் ,கட்டாயம் கொடுக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார் என்பதை பற்றி இந்த ஆன்மீக செய்தி குறிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம். குடை தானத்தின் பலன்கள் ; நாம் பயன்படுத்தும் பொருட்களில் சில பொருள்கள் வெயில் காலத்தில் பயன்படும் , சில பொருட்கள் மழைக்காலத்திற்கு உதவும் .ஆனால் குடை இந்த இரண்டு பருவ காலத்திற்கும் பயன்படக்கூடியது. ஜோதிட ரீதியாக குடையை தானமாக கொடுப்பது சிறப்பாக கூறப்படுகிறது. குடையை தானமாக கொடுத்தால் […]
சென்னை –தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம். புரட்டாசியில் சிறப்புகள் ; தமிழ் மாதத்தில் மிகவும் புண்ணிய பலன்களை தரக்கூடிய மாதங்களில் புரட்டாசிக்கு முக்கிய பங்கு உண்டு .புரட்டாசி பெருமாளுக்கு உரிய மாதமாக சொல்லப்பட்டாலும் சிவனுக்குரிய கேதார கௌரி விரதம் மற்றும் அம்பிகைக்கு உரிய நவராத்திரி பண்டிகை, முன்னோர்களுக்கான வழிபாடு போன்றவை கொண்டாடப்படுகிறது .புரட்டாசி மாதம் சனிக்கிழமையில் தான் சனி பகவான் அவதரித்தார் எனவும் […]
சென்னை –திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம். மூலவர் சிலையின் விளக்கு ; திருப்பதி வெங்கடாசலபதியின் சிலைக்கு முன் இருக்கும் விளக்கானது முதலில் யார் ஏற்றியது என்ற எந்த குறிப்புகளும் இன்று வரை கிடைக்க இல்லை .கோவில் நிர்வாகமானது அந்த விளக்கு அணையாமல் இருக்க வெறும் எண்ணெயை மட்டுமே ஊற்றி வருகின்றனர் என கூறப்படுகிறது. மூலவர் சிலை நடுவில் இருப்பதாக நம் […]
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம் வீசும் லட்டுவை ஏழுமலையானுக்கு பிரசாதமாக படைக்கப்பட்ட வரலாற்றைப் பற்றி இந்த ஆன்மீக குறிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம். திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு ; லட்டு என்றதும் நம் நினைவுக்கு வருவது திருப்பதி பிரசாதம் தான். திருப்பதியில் 1445 ஆம் ஆண்டு திருப்பொங்கம் பிரசாதமாக வழங்கப்பட்டது. பிறகு 1455 ஆம் ஆண்டு அப்பம் வழங்கப்பட்டது. 1460 […]
சென்னை –நவராத்திரி இந்த ஆண்டு வரும் தேதி மற்றும் நவராத்திரி உருவான வரலாறு பற்றி இந்த ஆன்மீக குறிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம். நவராத்திரி என்றால் என்ன ? சிவனுக்கு சிவராத்திரி என்றால் அம்பிகைக்கு நவராத்திரி சிறப்பானது. இந்தியாவில் பிரம்மாண்டமான பண்டிகை தான் நவராத்திரி .வருடத்தில் நான்கு நவராத்திரிகள் வருகின்றது. ஆனி மாதத்தில் கொண்டாடப்படுவது ஆஷாட நவராத்திரி என்றும் ,புரட்டாசி மாதத்தில் வரும் நவராத்திரி சாரதா நவராத்திரி என்றும், தை மாதம் வரும் நவராத்திரி மகா நவராத்திரி […]
சென்னை –மகாளய பட்சத்தில் வரும் மகாபரணியின் சிறப்பு மற்றும் எம தீபம் ஏற்றும் முறைகள் ,பலன்கள் பற்றி இந்த ஆன்மீக குறிப்பின் மூலம் தெரிந்து கொள்ளலாம். மகாபரணி 2024ல் எப்போது ? மகாபரணி என்பது மகாளய பட்ச காலத்தில் வரக்கூடிய சிறப்பான நாளாக சாஸ்திரத்தில் சொல்லப்படுகிறது. துர் மரணம் மற்றும் விபத்தில் மரணம் ஏற்பட்டவர்களுக்கும் ,திதி தெரியாமல் இருப்பவர்களும் இந்த நாளில் எம தீபம் ஏற்றினால் சிறப்பு என கூறப்படுகிறது. இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 21ஆம் […]
சென்னை -மகாளய பட்சத்தின் சிறப்புகள் மற்றும் கட்டாயம் யார் கடைபிடிக்க வேண்டும் என்பதை இந்த செய்திக் குறிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம். மகாளய பட்ச காலம் ; நம்மோடு வாழ்ந்து மறைந்த முன்னோர்களையே பித்ருக்கள் என்கிறோம் . நம் முன்னோர்கள் பித்ருலோகத்திலிருந்து பூலோகத்திற்கு வந்து நம்மை ஆசிர்வதிக்கும் நாளே மகாளய பட்சம் ஆகும் . ஒவ்வொரு வருடமும் 14 நாட்கள் அனுசரிக்கப்படும் மகாளய பட்சம் இந்த வருடம் நாளை செப்டம்பர் 18 ஆம் தேதி தொடங்கி அக்டோபர் […]
சென்னை –மீன்குளத்தி பகவதி அம்மன் கோவிலில் வரலாறு மற்றும் சிறப்புகள் வழிபாட்டு முறைகளை இந்த செய்தி குறிப்பில் அறிந்து கொள்வோம். கோவில் அமைந்துள்ள இடம்; கேரள மாநிலம் பாலக்காடு அருகில் 18 கிலோமீட்டர் தொலைவில் பல்லசனா பகுதியில் மீன்குளத்தி பகவதி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது . கோயம்புத்தூரில் இருந்து எழுபது கிலோமீட்டர் தொலைவில் உள்ளது .மதுரை மீனாட்சி அம்மனே இங்கு மீன் குளத்தை பகவதி அம்மனாக வீற்றிருக்கிறார் என்று ஸ்தல வரலாறு கூறுகிறது. ஸ்தல வரலாறு; பல […]