நேர்த்திக்கடன் என்பது ஒரு பக்தன் இறைவனிடம் தன்னுடைய விருப்பங்களை நிறைவேற்றி விட்டால் தங்களுக்கு இதை செய்கிறேன் என பிரார்த்தனை செய்வதாகும், இதை சில காரணங்களால் மறந்து விடுகிறோம் அல்லது நாம் இருக்கும் இடத்தை விட்டு வேறு ஒரு நாட்டிற்கோ அல்லது இடத்திற்கோ சென்று விட்டோம் என்றால் அந்த நேர்த்திக்கடனை எவ்வாறு செலுத்துவது மற்றும் மறந்து விட்டால் என்ன செய்வது என்ற சந்தேகங்களுக்கு பதில் அளிக்கும் வகையில் இந்த பதிவு அமைந்திருக்கும்… நேர்த்திகடன் ஒவ்வொருவரின் மனப்பக்குவத்தை பொறுத்து மாறுபடும். […]
ஒரு சிலர் வறுமையின் பிடியில் சிக்கி வெளிவர முடியாத சூழ்நிலையில் இருப்பார்கள் அவர்கள் நாளை வரவிருக்கும் விஷ்ணுபதி புண்ணிய காலத்தை எவ்வாறு பயன்படுத்துவது மற்றும் அதன் சிறப்புகளையும் இப்பதிவில் தெரிந்து கொள்வோம். மாசி மாதம் 1ந் தேதி( பிப்ரவரி 13,2024) நாளை விஷ்ணுபதி புண்ணிய காலம் வர இருக்கிறது. இந்த காலம் வருடத்திற்கு நான்கு முறை மட்டுமே வரும். இந்நாளில் விஷ்ணுவையும், மகாலட்சுமியையும் ,கருட பகவானையும் பூஜை செய்ய உகந்த காலமாக கருதப்படுகிறது. விஷ்ணுபதி புண்ணிய காலத்தின் […]
இன்று பலரும் கால்களில் கருப்பு கயிறு கட்டுகின்றனர் இது சரியா மற்றும் முறையாக எவ்வாறு பயன்படுத்துவது என்றும் ஒரு சிலருக்கு கருப்பு நிறம் சேராது என்று கூறுவார்கள் அவர்கள் என்ன செய்வது போன்ற சந்தேகங்களை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.. எத்தனை வயதானாலும் இந்த கண் திருஷ்டி சுலபமாக ஒருவரை தாக்கி விடும். இந்த திருஷ்டியை போக்க பல வழிகள் உள்ளது அதில் ஒன்றுதான் இந்த காலில் கருப்பு கயிறு கட்டும் முறை. கருப்பு கயிறு கட்டுதலின் […]
திருநீறு சைவத்தின் ஒரு அடையாளமாக மட்டுமல்லாமல் ஒரு அங்கமாக கருதப்படுகிறது .சைவத்தில் அங்கங்கள் என்றால், பஞ்சாட்சன மந்திரம் ருத்ராட்சம், விபூதி. இதில் மிக முக்கியமாக கருதப்படுவது திருநீறு இது பல வகைகளில் நன்மைகளை பெற்று தரும், அது என்னவெல்லாம் என்றும் குளிக்காமல் திருநீறு வைக்கலாமா என்பது பற்றியும் இந்த பதிவில் பார்ப்போம். திருநீருக்கு நிறைய பெயர்கள் உண்டு .அதில் விபூதி என்றால் வி என்பது மேலான என்பதையும் பூ என்றால் ஐஸ்வரியம் என்பதையும் குறிக்கும், மேலான ஐஸ்வர்யத்தை […]
தை மாதம் 28[பிப்ரவரி 11,2024]ந் தேதிக்கான இன்றய ரசிப்பலன்களை இங்கு காணலாம். மேஷம் : இன்றைய நாள் உங்களுக்கு சாதகமான நாள். உங்கள் முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். நீங்கள் செய்யும் பணிக்கு அங்கீகாரம் கிடைக்கும். உங்கள் துணையுடன் நல்ல பிணைப்பு வளரும். எதிர்பார்த்த வகையில் பண வரவு இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக உள்ளது. ரிஷபம்: இன்றைய நாள் மகிழ்ச்சியான நாள், மேலும் முக்கிய முடிவுகளை எடுக்க உகந்த நாளாக இருக்கும். பணிகளில் மேல் அதிகாரிகளின் பாராட்டு […]
வாஸ்து என்பது ஒரு கட்டிடத்திற்கான உயிரோட்டமாகும். முந்தைய காலத்தில் வீடு கட்டுவதற்காக ஜாதகம் எழுதி அதற்கான ஆயுட்காலமும் எழுதப்பட்டது இது காலப்போக்கில் மாறி வாஸ்து மட்டுமே பார்க்கப்படுகிறது. பஞ்சபூதங்களின் சரியான சேர்க்கையே வாஸ்துவாக அமைகிறது. இந்த பஞ்சபூதங்களும் ஒரு வீட்டில் அமைந்து விட்டால் அந்த வீட்டில் அனைத்துமே சரியாக இருக்கும். இதில் ஒன்று சரியில்லை என்றாலும் பல பிரச்சனைகளை ஏற்படுத்தும் உதாரணமாக நீரினால் ஒரு பிரச்சனை என்றால் அந்த வீட்டில் பண வரவு பாதிக்கப்படும். நீரை நாம் […]
தை மாதம் 27 [பிப்ரவரி 10,2024]இன்றைய நாளுக்கான ராசிபலன்களை இங்கே பார்க்கலாம் . மேஷம்: இன்று உங்களுக்கு மகிழ்ச்சியான நாளாக இருக்கும் .இன்று எடுக்கப்படும் முடிவுகள் நன்மை அளிக்கும். உங்கள் பணியை விரும்பி செய்வீர்கள். உங்கள் துணையின் உணர்வுகளை புரிந்து கொண்டு அவரின் விருப்பப்படி நடந்து கொள்வீர்கள். இன்று பணம் சம்பாதிக்கும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. நீங்கள் மன உறுதியுடன் இருப்பதால் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். ரிஷபம்: இன்றைய நாள் உங்களுக்கு பரபரப்பான நாளாக இருக்கும். உங்கள் […]
தை மாதம் 26 ஆம் தேதி பிப்ரவரி9, 2024 இன்றைய நாளுக்கு உண்டான ராசி பலன்களை இங்கே பார்க்கலாம். மேஷம் இன்று உங்களிடம் நம்பிக்கையும் உறுதியும் நிறைந்திருக்கும், இதனால் இலக்குகளை எளிதில் அடைவீர்கள். பணிகளை குறித்த நேரத்தில் முடிப்பீர்கள். உங்களுக்கும் உங்கள் துணைக்கும் மகிழ்ச்சி பொங்கும் நாளாக இருக்கும். பணப்புழக்கம் அதிகமாக காணப்படும் .ஆரோக்கியம் சிறப்பானதாக இருக்கும். ரிஷபம் இன்று நீங்கள் அமைதியாக இருப்பது நல்லது. நீங்கள் திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் வெற்றி கிடைக்கும். உங்கள் துணையுடன் […]
சகுனம் என்பது ஒரு முன் அறிகுறி ஆகும், இது நம் முன்னோர்கள் காலத்தில் இருந்து கடைபிடிக்கப்படுகிறது இதை ஒரு சிலர் மூடநம்பிக்கை என்றும் கூறுவர். சகுனத்தில் நல்ல சகுனம், கெட்ட சகுனம் என உள்ளது இவற்றைப் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். நம் முன்னோர்கள் , குலதெய்வங்கள் ,தேவதைகள் என, நல்ல சக்திகள் நமக்கு நடக்கவிருக்கும் தீயவற்றை முன்கூட்டியே உணர்த்தக்கூடியது சகுனம். அதாவது ஒரு ஒரு மணி நேரத்தில் நடக்க இருக்கும் விபத்தை முன்கூட்டியே அறிவுறுத்தி அதை […]
9- 2 -2024 அன்று தை அமாவாசை வர இருக்கிறது. மாதம் தோறும் அமாவாசை வந்தாலும் தை அமாவாசை மிகவும் சிறப்பு வாய்ந்தது. தை அமாவாசையின் சிறப்பு, துவங்கும் நேரம் முன்னோர்களுக்கு படையல் போடும் நேரம், தர்ப்பணம் கொடுக்கும் நேரம் ,அன்று என்னெல்லாம் செய்யலாம் என்பதைப் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். தை அமாவாசையின் சிறப்பு ஒரு ஆண்டின் மூன்று அமாவாசைகள் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை, தை அமாவாசை. இதில் தற்போது […]
இன்று தை மாதம் 24ஆம் தேதி (பிப்ரவரி 7, 2024) ஒவ்வொரு ராசிக்குமான நற்பலன்களை இங்கே காணலாம்… மேஷம் : இன்று நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டிய தருணங்கள் அதிகமாக இருக்கும், அதனை மனதில் வைத்துக் கொண்டு தெளிவாக சிந்தித்து உங்களுக்கு தேவையான சாதகமான முடிவுகளை எடுக்க வேண்டும். உங்களுக்கு இன்று கடினமான சூழ்நிலைகள், சவால்களை சந்திக்க நேரலாம். அதனை திறம்பட கையாள வேண்டும். உங்கள் துணையுடன் பிரச்சனை ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. தேவையற்ற செலவுகள் உங்களுக்கு […]
ஒவ்வொரு வீட்டு பூஜை அறையிலும் படங்கள் வைத்து வழிபடுவது ஒரு முறை, அதைத் தாண்டி விக்ரகங்கள் மற்றும் சிலைகள் வைத்து வழிபடுவதும் ஒரு முறை தான். படங்களை வைத்துக் கொள்வதற்கு அளவு இல்லை ஆனால் விக்ரகங்களை நம் வீட்டில் வைத்து வழிபடுவதற்கு அளவும் சில முறைகளும் உள்ளது அதைப்பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். விக்கிரங்ககளின் வகைகள் பொதுவாக விக்கிரகங்கள் இறைத்தன்மையை ஈர்க்கும் ஆற்றலை கொண்டுள்ளது. இது அதன் அளவைப் பொறுத்து மாறுபடும். விக்கிரகங்கள், கருங்கல், பஞ்சலோகம் […]
ராசிகளின் முதல் ராசியாக திகழும் மேஷ ராசி அன்பர்களே நீங்கள் எந்த கோவிலுக்கு செல்ல வேண்டும் என்பது பற்றியும் மேஷ ராசியில் உள்ள நட்சத்திரக்காரர்கள் எங்கு சென்றால் சிறப்பு என்பதை பற்றி இப்பதிவில் பார்ப்போம். மேஷ ராசியின் தனித்துவம் பொதுவாக மேஷ ராசிக்காரர்கள் நினைத்ததை உடனே செய்ய வேண்டும் என்ற துடிப்போடு செயல்படுபவர்கள். கிரகிக்கும் தன்மையும், கற்றுக் கொள்ளும் வேகமும் ,இவர்களிடத்தில் அதிகமாக இருக்கும். ஆனால் இவர்களுக்குப் பிடித்த விஷயத்தை செய்தால் அவர்களை சற்று நம்பி ஏமாற […]
சமையலறை என்பது ஒரு வீட்டின் ஆணிவேர் என்று கூறலாம். நம் வீட்டு சமையல் அறையில் ஒரு சில பொருட்களை வைத்தால் நிச்சயம் அன்னம் குறையாது, ஐஸ்வரியத்திற்கும் குறைவிருக்காது அது என்னவென்று இப்பதிவில் தெரிந்து கொள்வோம். நம் ஆரோக்கியம் சமையலறையில் தான் துவங்குகிறது, ஒரு குடும்பத்திற்கு முக்கிய இடம் எனலாம் அங்கு சமைக்கப்படும் உணவுகள் தான் அங்கு வசிக்கும் குடும்பத்தாருக்கு உணர்வாக மாறுகிறது அதன் மூலம்தான் நம் மற்ற வேலைகளை செய்ய முடிகிறது குறிப்பாக நடமாட முடிகிறது அப்படிப்பட்ட […]
நம்மில் பலருக்கும் தோன்றும் சந்தேகங்களில் ஒன்று அசைவம் சாப்பிட்டுவிட்டு பூஜை செய்யலாமா …விளக்கு ஏற்றலாமா மற்றும் கவசங்கள் பதிகங்கள் போன்றவற்றை படிக்கலாமா என சந்தேகம் ஏற்படும் அதை தெளிவுபடுத்தும் வகையில் இந்த பதிவு அமைந்திருக்கும். பொதுவாக அசைவம் சாப்பிடுவது அவரவர் மன ஓட்டத்தை பொருத்து தான். ஆனால் இந்த உலக மக்கள் அனைவரும் உயர்வு பெற வேண்டும் என்று பல ஞானிகள் நல்ல விஷயங்களை சொல்லி சென்றுள்ளனர், இப்படி ஞானப் பெரியவர்கள் நமக்கு சைவப் பாதையை காட்டியதற்கு […]
கோவிலுக்கு நாம் சென்று வழிபடும்போது சுவாமி திரை போட்டு மறைத்திருந்தால் அவ்வபோது நாம் வழிபடலாமா சந்தேகம் பலருக்கும் ஏற்படும் அதைப்பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். வழிபாடும் முறை பொதுவாக நம் ஆலயத்திற்கு செல்லும் போது அபிஷேகம் நேரம் அறிந்து செல்வதில்லை .ஒவ்வொரு ஆலயத்திலும் அபிஷேக நேரம் மாறுபடும் அது மட்டுமல்லாமல் பெரிய பெரிய கோவில்களில் அபிஷேக நேரம் விசேஷ நாட்களில் மாறுபடும் என அங்கேயே எழுதி இருப்பார்கள். இது அனைவருக்குமே தெரிந்திருக்கும் என கூற முடியாது. ஆனால் […]
பொதுவாக நாம் ஒரு காரியம் செய்கிறோம் என்றால் ராகு காலம், எமகண்டம் இருக்கக் கூடாது அதுபோல்தான் குளிகை நேரத்திலும் என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாது என்று நம் பெரியோர்கள் கூறியுள்ளனர் அதைப்பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். ராகு காலம் எமகண்டம் என்பது துர்க்கை வழிபாட்டிற்கு சிறந்த நேரமாகும். அதுபோல் குளிகை என்பது ஒன்றுக்கு மேற்பட்ட என்பது பொருளாகும். அதாவது குளிகை நேரத்தில் நாம் எதை செய்தாலும் திரும்பத் திரும்ப செய்ய வைக்கும் என்பது அந்த நேரத்திற்கான தன்மையாகும். […]
இறைவனை நாம் வழிபடும் போது உடுத்தும் உடைகளுக்கு பல கட்டுப்பாடுகள் நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். கோவிலுக்குச் செல்லும்போதும் நம் வீட்டில் பூஜை செய்யும்போதும் கருப்பு உடை ஏன் அணிய கூடாது என்று பலருக்கும் இருக்கும் சந்தேகத்தை போக்கும் வகையில் இப்பதிவு அமைந்திருக்கும். வெள்ளை நிறம் துறவிகளுக்கான நிறமாகவும், காவி நிறம் சன்னியாசிகளுக்கு உரிய நிறமாகவும் மஞ்சள் மற்றும் சிகப்பு நிறம் மங்களகரமான நிறமாகவும் கருதப்படுகிறது. இவ்வாறு ஒவ்வொரு நிறங்களுக்கும் ஒவ்வொரு தன்மைகள் உள்ளது. இதில் கருப்பு நிறம் […]
திதி என்பது நம் இறந்தவர்களுக்கு செய்யும் முறையாகும் சிலர் இதை முறையாக செய்வதில்லை .அதனால் வாழ்வில் பல்வேறு பிரச்சனைகளுக்கு ஆளாகிறார்கள். திதியை எவ்வாறு செய்வது மற்றும் திதி கணக்கிடும் முறை பற்றி இந்த பதிவில் பார்ப்போம். திதி கொடுக்கவில்லை என்றால் என்ன பிரச்சனை வரும் தெரியுமா? திதி கொடுக்கவில்லை என்றால் இறந்தவர்களுக்கு ஒரு பிரச்சனையும் இல்லை ,ஆனால் உயிரோடு வாழும் தலைமுறையினருக்கு நிறைய பிரச்சனைகள் வரும் குறிப்பாக குழந்தை பேரு கிட்டாமல் போகும் அப்படியே பிறந்தாலும் ஊனமுற்ற […]
அரச மர வழிபாடு என்பது மிக உயர்ந்த வழிபாடாகும். இந்த அரச மரத்தை ஏன் சுற்றிவர வேண்டும் அதனால் என்ன நன்மைகள் மற்றும் எந்தக் கிழமைகளில் சுற்றினால் என்ன பலன் என்பது பற்றி இப்பதிவில் பார்ப்போம்.. அரச மரத்தை அதிகாலையில் வலம் வருவதே சிறந்தது.அரச மரத்தின் அடிப்பகுதியில் பிரம்மதேவரும் நடுப்பகுதியில் மகாவிஷ்ணுவும் நுனிப்பகுதியில் சிவபெருமானும் வாசம் செய்கிறார்கள் அதனால்தான் அரசமரம் மும்மூர்த்திகளின் வடிவம் என கூறப்படுகிறது. அரச மரத்தை வளம் வருவதால் ஏற்படும் நன்மைகள் குழந்தை இல்லாதவர்கள் […]