கும்ப ராசி நேயர்களே ! மனசாட்சி சொல்வதை மறுக்காமல் செய்யும் குணமுடையவர்களே! புத்தாண்டின் தொடக்கம் முதல் 02.10.2018 வரை குரு பகவான் 9-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் தொழிலதிபர்கள், நாடாளுபவர்களின் அறிமுகம் கிடைக்கும். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகள் வீட்டில் ஏற்பாடாகும். உங்கள் ஆலோசனையை எல்லோரும் ஏற்றுக்கொள்வார்கள். மழலை பாக்கியம் கிடைக்கும். பிதுர்வழிச் சொத்து கைக்கு வரும். தந்தையாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். அவர்வழி உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். ஆனால், 14.02.2018 […]
தனுசு ராசி நேயர்களே ! சதாசர்வ காலமும் உழைத்துக்கொண்டிருப்பவர்கள் நீங்கள், போராட்டங்களை ரசித்து வாழக்கூடிய மனசுடையவர்களே! செவ்வாய் லாப வீட்டில் நிற்கும் நேரத்தில் இந்த 2018-ம் வருடம் பிறப்பதால் கம்பீரமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். பெரிய பதவிகள் தேடி வரும். பிள்ளைகளால் சமூகத்தில் அந்தஸ்து உயரும். குடும்பத்தினருடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். இந்த 2018-ம் ஆண்டு முழுக்கவே சனி உங்கள் ராசிக்குள் நின்று ஜென்மச் சனியாக தொடர்வதால் வாயு பதார்த்தங்கள், அசைவ, கார உணவுகளைத் தவிர்ப்பது […]
மகர ராசி நேயர்களே! கடல்போல் விரிந்த மனசும் கலகலப்பாகப் பேசும் குணமும் உடைய நீங்கள் மனசாட்சிக்குட்பட்டு செயல்படுபவர்களே! இந்த 2018-ம் வருடம் சந்திரன் 5-ம் வீட்டில் நிற்கும்போது பிறப்பதால் புதிய சிந்தனைகள் உதயமாகும். வருங்காலத் திட்டங்கள் நிறைவேறும். சாதுர்யமான பேச்சாலும், சமயோஜிதப் புத்தியாலும் பழைய பிரச்சினைகளைத் தீர்ப்பீர்கள். கடன் பிரச்சினையில் ஒரு பகுதி தீரும். வங்கிக்கடன் உதவி கிடைக்கும். சிலர் பழைய வீட்டை இடித்துக் கட்டுவீர்கள். புத்தாண்டின் தொடக்கம் முதல் 02.10.2018 வரை குரு பகவான் 10-ம் […]
விருச்சக ராசி நேயர்களே ! தீவிரமாக யோசித்து மிதமாகச் செயல்படுபவர்களே! உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிட்டும். கணவன் மனைவிக்குள் அன்னியோன்யம் அதிகரிக்கும். விலை உயர்ந்த ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். பழைய சிக்கல்களுக்குத் தீர்வு கிடைக்கும். பணவரவு கணிசமாக உயரும். வருடம் முடியும்வரை சனி 2-ல் அமர்ந்து ஏழரைச் சனியின் இறுதிக் கட்டமான பாதச் சனி தொடர்வதால் எதிர்மறை எண்ணங்களுடன் பேசுபவர்களின் […]
மீன ராசி நேயர்களே! விருப்பு, வெறுப்பின்றி நடுநிலையோடு செயல்படும் நீங்கள் மனதில் பட்டதை பளிச்சென்று பேசுபவர்களே! முயற்சி ஸ்தானமான 3-வது ராசியில் இந்த 2018-ம் ஆண்டு பிறப்பதால் சவாலான காரியங்களையும் சாதுர்யமாக முடித்து வெற்றி பெறுவீர்கள். வர வேண்டிய பணமெல்லாம் கைக்கு வரும். வருங்காலத்துக்காகச் சேமிக்கத் தொடங்குவீர்கள். புத்தாண்டின் தொடக்கம் முதல் 02.10.2018 வரை குரு பகவான் 8-ம் வீட்டில் நிற்பதால் பணம் எவ்வளவு வந்தாலும் எடுத்து வைக்க முடியாதபடி செலவுகள் துரத்தும். வீண்பழிச் சொல்லுக்கு ஆளாவீர்கள். […]
கன்னி ராசி நேயர்களே! எதையும் ஆற அமர யோசித்து முடிவெடுக்கும் போக்கு உடையவர்களே! உங்கள் ராசிக்கு 9-ம் வீட்டில் சந்திரன் நிற்கும் நேரத்தில் இந்த 2018-ம் ஆண்டு பிறப்பதால் சந்தர்ப்ப, சூழ்நிலையறிந்து செயல்படும் சாமர்த்தியத்தைக் கற்றுக் கொள்வீர்கள். வி.ஐ.பிக்கள் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்ளுமளவுக்கு நெருக்கமாவீர்கள். தந்தையாருக்கு இருந்து வந்த நோய் குணமாகும். அவருடனான மோதல்களும் விலகும். பிதுர்வழி சொத்துப் பிரச்சினை முடிவுக்கு வரும். புத்தாண்டின் தொடக்கம் முதல் 02.10.2018 வரை குரு பகவான் 2-ம் வீட்டில் […]
கடக ராசி நேயர்களே! இடம், பொருள், ஏவல் தெரிந்து, இனிமையாகப் பேசி காரியம் சாதிப்பதில் வல்லவர்களே! உங்கள் ராசிக்கு லாப வீட்டில் சந்திரன் நிற்கும்போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால் சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். குடும்பத்தில் நல்லது நடக்கும். மூத்த சகோதரர்கள் ஆதரவாக இருப்பார்கள். விலை உயர்ந்த ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். வீட்டை விரிவுபடுத்திக் கட்டுவீர்கள். தொழில் தொடங்குவதற்கு வங்கிக் கடன் உதவி கிடைக்கும். வீடு கட்டும் திட்டத்துக்கு ஒப்புதல் கிடைக்கும். சூரியன் 6-ம் […]
மிதுன ராசி நேயர்களே! மற்றவரின் மன ஓட்டத்தை நாடி பிடித்துப் பார்ப்பதில் வல்லவர்களே! உங்களுடைய ராசிக்கு 12-ம் வீடான விரய ஸ்தானத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் அலைச்சலுடன் ஆதாயம் உண்டாகும். கடந்த காலத்தில் ஏற்பட்ட சுகமான அனுபவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். பால்ய நண்பர்களால் உதவிகள் உண்டு. பழைய கடனை நினைத்து அவ்வப்போது கலங்குவீர்கள். வங்கிக்கடன் கிடைக்கும். புத்தாண்டின் தொடக்கம் முதல் 02.10.2018 வரை குரு பகவான் 5-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற […]
ரிஷப ராசி நேயர்களே ! எறும்புபோல் அயராது உழைத்து, தேனீபோல் சேமிக்கும் இயல்பு உடையவர்களே! புதன் உங்களுடைய ராசியைப் பார்த்துக்கொண்டிருக்கும் நேரத்தில் இந்தாண்டு பிறப்பதால் உங்களுடைய திறமைகள் வெளிப்படும். உறவினர்கள் உங்களுடைய பெருந்தன்மையைப் புரிந்துகொள்வார்கள். நட்பு வட்டம் விரிவடையும். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். இந்தாண்டு முழுக்க ராகு 3-ம் வீட்டிலேயே முகாமிட்டிருப்பதால் தைரியம் கூடும். பேச்சில் முதிர்ச்சி தெரியும். தன்னிச்சையாகச் சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். இளைய சகோதரர்களால் பயனடைவீர்கள். வழக்கு சாதகமாகும். தெலுங்கு, இந்தி பேசுபவர்களால் ஆதாயமடைவீர்கள். […]
மேஷ ராசி நேயர்களே ! அனைவரிடமும் கலகலப்பாகப் பேசுவதுடன் கறாராகவும் இருப்பவர்களே! உங்கள் ராசிக்கு 2-ம் வீடான தனஸ்தானத்தில் இந்த 2018 புத்தாண்டு பிறப்பதால் பணவரவு திருப்திகரமாக இருக்கும். கடன் பிரச்சினை தீரும். குடும்பத்தில் உங்களது வார்த்தைக்கு மதிப்பு கூடும். புதிய வாகனம் வாங்குவீர்கள். சனி பகவான் இந்தாண்டு முழுக்க உங்களுடைய ராசிக்கு 9-ம் இடத்திலேயே தொடர்வதால் பெரிய பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு உயரும். […]
இன்று சபரிமலை ஜயப்பன் கோயில் மகரவிளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டுள்ளது.மேலும் சபரிமலை ஐயப்பன் கோவில் நடையானது வரும் ஜனவரி 20 ஆம் தேதி வரை திறந்திருக்கும் என கோயில் நிர்வாகம் அறிவிப்பு செய்துள்ளது.
திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் உள்ள கடைகளில் வாங்கும் பிரசாத பொருட்களில் கெட்டுப்போன நிலையில் விற்பனை செய்யப்படுவதாக பக்தர்கள் புகார் அளித்துள்ளனர். தற்போது பள்ளிகளுக்கு விடுமுறை என்பதாலும் மார்கழி மாதம் என்பதாலும் இங்கு தினத்தோரும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குடும்பத்துடன் வந்து சுவாமி தரிசனம் செய்து செல்கின்றனர். இங்கு வரும் பக்தர்கள் அரிசிமாவுடன் சர்க்கரை வெள்ளம் கலந்து செய்யப்படும் ‘புட்டமுது’ என்னும் பிரசாத பொருளினை விரும்பி வாங்கி செல்வது வழக்கம். அவ்வாறு வாங்கும் அந்த மாவு பொருளில் […]
இந்த நடப்பாண்டின் முதற்கட்ட சீசனில் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சுமார் ரூ.168.84 கோடி வருமானம் கிடைத்துள்ளது. ஆனால் இது கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் சுமார் ரூ.20 கோடி கூடுதல் வருமானம் என அம்மாநில அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தகவல் தெரிவித்துள்ளார்.
சொர்க்கவாசல் திறப்பு விழாவையொட்டி ஸ்ரீரங்கம் கோவிலுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியை முன்னிட்டு திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது 42 இடங்களில் கண்காணிப்பு கேமராக்களும் 11 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
திருவெம்பாவை -12 ஆர்த்த பிறவித் துயர்கெட நாம் ஆர்த்து ஆடும் தீர்த்தன் நற்றில்லைச் சிற்றம்பலத்தே தீயாடும் கூத்தன் இவ்வானும் குவலயமும் எல்லோமும் காத்தும் படைத்தும் சுரந்தும் விளையாடி வார்த்தையும்பேசி வளைசிலம்ப வார்கலைகள் ஆர்ப்பரவம் செய்ய அணி குழல்மேல் வண்டார்ப்பப் பூத்திகழும் பொய்கை குடைந்து உடையான் பொற்பாதம் ஏத்தி இருஞ்ச்சுனைநீர் ஆடேலோர் எம்பாவாய்! அதாவது, பேராரவாரம் செய்கின்ற பிறவித் துன்பம் கெடுவதற்காக, நாம் விரும்பி வழிபடும் தீர்த்தன். தில்லைச் சிற்றம்பலத்தில் தீயேந்தி ஆடுகின்ற கூத்தபிரான். இந்த விண்ணையும் மண்ணையும் […]
சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று மண்டல பூஜை நடைபெறுவதை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. மண்டல பூஜையின் போது ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்பட்டு பூஜை நடத்தப்படுவது வழக்கமாகும். இந்த தங்க அங்கி கடந்த 22ந் தேதி ஆரன்முளாவில் இருந்து ஊர்வலமாக சபரிமலைக்கு எடுத்து வரப்பட்டது.இன்று பூஜை முடிந்தவுடன் நடை சாத்தப்படுவதால், 41 நாட்கள் மண்டல பூஜை முடிவிற்கு வரும். இதனை அடுத்து மகர விளக்கு பூஜைகளுக்காக வரும் 30ந் தேதி மாலை கோயில் நடை திறக்கப்படும். […]
சனி, ஞாயிறு மற்றும் கிறிஸ்துமஸ் தொடர் விடுமுறையால் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் கூட்டம் நிரம்பிவழிகிறது. இலவச தரிசனத்திற்காக 31 காத்திருப்பு அறைகளும் நிரம்பி, ஆழ்வார் ஏரியை சுற்றியும் நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள் 15 மணி நேரத்திற்கு பிறகு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் கூட்டம் அலைமோதுவதால் இரவில் தங்க அறைகள் கிடைக்காமல் கடும்குளிரில் அவதிப்பட்ட பக்தர்கள் ஆங்காங்கே தற்காலிக கூடாரத்தில் தங்கினர். வார விடுமுறை நாளான நேற்று மட்டும் 89,993 பக்தர்கள் சாமி தரிசனம் […]
நவகிரகங்களில் ஈஸ்வரன் பட்டம் பெற்ற ஒரே கடவுள் சனீஸ்வரன் தான். அவருக்கு இப்பட்டம் வருவதற்கு பின் ஒரு காரணம் உண்டு. அது யாதெனில், சனி பகவானுக்கு கொடுக்கப்பட்ட வேலையானது, மக்களுக்கு அவர்களது பாவ புண்ணியங்களை ஆராய்ந்து அவர்களுக்கு கஷ்டங்களையும், வரங்களையும் கொடுக்கும் வேலையாகும். இதனை கண்டு தேவர்கள் வசைபாடினர். இதனால் மனம் சோர்ந்துபோன சனி பகவான் ஈசனிடம் முறையிட்டார். அப்போது ஈசன், நாளை நீ தேவலோகம் வழியாக கைலாயம் வந்து எண்ணை 7 1/2 நிமிடம் பிடித்து […]
கார்த்திகை மாதம் பிறந்தவுடன் சுவாமி சபரிமலை ஐயப்பனுக்கு மாலை அணிந்து பக்தர்கள் வருகை அதிகமாக தொடங்கிவிட்டது. இந்த வருகை மண்டலபூஜையை தொடர்ந்து இன்னும் அதிகரிக்க கூடும் என்பதற்காக பாதுகாப்பு ஏற்பாடுகளும் அதிகமாக்க பட்டுள்ளன. சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை வருகிற 26-ந் தேதி செவ்வாய்க்கிழமை அன்று நடக்கிறது. திருவிதாங்கூர் மன்னர் சித்திரை திருநாள் மகாராஜா, சபரிமலை ஐயப்பனுக்கு 420 பவுன் எடை கொண்ட தங்க அங்கியை வழங்கினார். அந்த தங்க அங்கியானது மண்டல பூஜையின் போது, […]
மீனம்; ராசிக்கு சனி பகவான் லாபத்துக்கும் விரயத்துக்கும் அதிபதியாக இருக்கிறார். அதாவது நல்லதுக்கும் கெட்டதுக்கும் உரியவர். இப்போது தொழில் ஸ்தானமான 10-ம் இடத்துக்கு வருகிறார்.வரும் 3 ஆண்டு காலம் நல்ல பலன்களைத் தரப்போகிறார். திருச்சி, இடையாற்று மங்கலத்தில் இருக்கும் லட்சுமி நாராயணனை வணங்கினால் சிறப்பு உண்டாகும்…