கும்ப ராசிக்காரர்களே! இந்த வாரம் எதிர்பார்த்த காரிய வெற்றி கிடைக்கும். வாக்குவாதங்கள் அகலும். நண்பர்கள், உறவினர்கள், அக்கம்பக்கத்தினர் ஆதரவாக இருப்பார்கள். பூர்விகச் சொத்துக்களால் வருமானம் கூடும். குடும்பத்தில் இருந்த இறுக்கமான நிலை மாறும். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை நீங்கும். தொழில், வியாபாரம் மந்தமாக இருந்தாலும் பணவரத்து திருப்தி தரும். கடன்களை அடைப்பதில் வேகம் காட்டுவீர்கள். உத்தியோகத்திலிருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். உங்களது வேலையைக் கண்டு மேலதிகாரிகள் திருப்தியடைவார்கள். பெண்கள் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. கலைத்துறையினருக்கு […]
மகர ராசிக்காரர்களே! இந்த வாரம் மனதில் புதிய உற்சாகம் பிறக்கும். ராசியில் இருக்கும் கேதுவின் சஞ்சாரம் மனதில் தன்னம்பிக்கையை அதிகரிக்க செய்யும். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி வரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. நட்புடன் இருந்தவர்கள் பிரிந்து செல்லலாம். குடும்பத்திலிருப்பவர்களுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. குடும்பத்தில் மனம் விட்டுப் பேசுவது நன்மை தரும். பிள்ளைகளுக்காக சில பணிகளை கவனிக்க வேண்டியிருக்கும். தொழில், வியாபாரம் வழக்கம்போல் நடக்கும். கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும். உத்தியோகத்திலிருப்பவர்கள் […]
தனுஷு ராசிக்காரர்களே! இந்த வாரம் ராசிநாதன் குரு சஞ்சாரத்தால் கடினமான பணிகளையும் எளிதாகச் செய்து முடிக்கும் சூழ்நிலை உண்டாகும். சுக்கிரன் சஞ்சாரம் வருவாயைத் தரும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வீண் செலவுகள் உண்டாகும். சூரியன் சஞ்சாரத்தால் எதிர்ப்புகள் நீங்கிக் காரிய அனுகூலம் உண்டாகும். நீண்ட தூரப் பயணத்தால் லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். குடும்பத்திலிருந்த கஷ்டங்கள் நீங்கும். குதூகலம் அதிகரிக்கும். வீட்டுக்குத் தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். தொழில், வியாபாரத்திலிருப்பவர்களுக்கு பழைய பாக்கிகள் வசூலாக நிதிநிலை […]
விருச்சக ராசிக்காரர்களே! இந்த வாரம் வரவுக்கேற்ற செலவு இருக்கும். விரும்பியது கிடைக்கும். பயணத்தில் தடங்கல் ஏற்படலாம். மனதில் ஏதாவது ஒரு கவலை இருக்கும். வாய்க்கு ருசியான உணவு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வீண் செலவு ஏற்படும். குடும்பத்தில் வீண் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். வாழ்க்கைத் துணையின் பேச்சைக் கேட்டு செயல்பட வேண்டி இருக்கும். உறவினர்கள், நண்பர்கள் மூலம் கிடைக்கும் உதவி தாமதப்படும். தொழில், வியாபாரத்தில் லாபம் குறையும். பணவரத்து சீராக இருக்கும். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு வீண் […]
துலாம் ராசிக்காரர்களே! இந்த வாரம் அவசரப்படாமல் நிதானமாக எதையும் செய்தால் வெற்றி நிச்சயம். நீண்ட நாட்களாக இருந்த எதிர்ப்புகள் விலகும். குருவின் சஞ்சாரத்தால் எல்லா வகையிலும் நன்மை உண்டாகும். பணவரத்து அதிகரிக்கும். நண்பர்களால் உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். புதிய நபர்களின் நட்பும் மகிழ்ச்சியும் உண்டாகும். குடும்பத்தில் ஏதாவது வீண் விவகாரங்கள் ஏற்பட்டு நீங்கும். உறவினர்களால் உதவிகள் தாமதமாகக் கிடைக்கும். சகோதரர்களிடம் கவனமாகப் பேசுவது நல்லது. தொழில், வியாபாரம் தொடர்பாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரம் தொடர்பான […]
சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு வரும் 10 வயதுக்கு உட்பட்ட மற்றும் 50 வயதுக்கு மேற்கொண்ட பெண்கள் வயது சான்றிதழ் சமர்பிக்க வேண்டும் என தேவசம் போர்டு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஏன் பெண்களை அனுமதிக்க மறுக்கிறார்கள் என்ற கேள்வி பல காலமாக நிலவி வருகிறது. இது குறித்து உச்சநீதிமன்றம் கேரள மாநில அரசிடமும், திருவாங்கூர் தேவசம் போர்டிடமும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்நிலையில், திருவாங்கூர் தேவசம் போர்டு வெளியிட்டுள்ள செய்தியில், “வயதினை […]
சபரி மலை ஐயப்பன் கோவிலின் பெயர் மாற்ற முடிவை ரத்து செய்ய தேவசம்போர்டு முடிவு செய்துள்ளனர். கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலை திருவிதாங்கூர் தேவசம்போர்டு நிர்வகித்து வருகிறது. இந்த கோவிலின் முழுப்பெயர் ‘சபரிமலை தர்மசாஸ்தா கோவில்’ ஆகும். இந்த கோவிலின் பெயரை ‘ஸ்ரீ அய்யப்ப சுவாமி கோவில்’ என மாற்ற அவர்கள் முடிவு செய்து வைத்திருந்தனர். ஆனால், இது தொடர்பாக சில விமர்சனங்கள் எழுந்த நிலையில் தற்போது இந்த பெயர் மாற்ற முடிவை ரத்து செய்ய தேவசம்போர்டு […]
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தாலுகாவிற்கு உட்பட்ட ஆத்தூரில் பிரபல மாதவன் காய்கறிகடையில் இன்று விற்பனைக்கு வைத்திருந்த காய்கறிகளில் விநாயகர் தோற்றம் கொண்ட கத்தரிக்காய் ஒன்று அதிசயமாக காணப்பட்டது. விநாயகரின் தோற்றம் இயற்கையாக அமைந்ததை வாடிக்கையாளர்கள் வியப்பாக பார்த்து செல்கின்றனர்.அதிசய விநாயகரை பொதுமக்கள் பார்வைக்கு வைத்திருப்பதாக மாதவன் கூறியுள்ளார்.ஏற்கனவே இவர் விநாயகர் பக்தர் என்பதும் குறிப்பிடத்தக்கது .
சிம்ம ராசிக்காரர்களே! இந்த வாரம் பணவரத்து அதிகரிக்கும். ராசிநாதன் சூரியனின் சஞ்சாரம் எதிர்பாராத நல்ல திருப்பங்களை ஏற்படுத்தும். சந்தோஷம் உண்டாகும். எந்தப் பிரச்சினை வந்தாலும் சமாளித்து முன்னேறிச் செல்வீர்கள். தெளிவான முடிவுகள் எடுப்பதன் மூலம் இழுபறியான காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். மற்றவர்கள் பாராட்டக் கூடிய மிகப்பெரிய செயலை செய்து முடிப்பீர்கள். தொழில், வியாபாரம் சிறப்பாக நடைபெறும். பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் பணம் சம்பாதிக்கும் திறமை அதிகரிக்கும். மேலதிகாரிகள் கொடுத்த வேலையைத் திறமையுடன் செய்து […]
கடக ராசிக்காரர்களே! இந்த வாரம் புண்ணிய காரியங்களில் ஈடுபட்டு மனதிருப்தியடைவீர்கள். தனாதிபதி சூரியனின் சஞ்சாரத்தால் எல்லாவற்றிலும் சாதகமான பலன் கிடைக்கும். காரியங்கள் அனுகூலமாக நடக்கும். புத்தித் தெளிவு ஏற்படும். உடல், ஆரோக்கியம் பெறும். தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். மனக்குழப்பம் நீங்கும். பணவரவு அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் நீண்ட நாட்களாக இருந்த பிரச்சினை தீரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்குப் புதிய பதவிகள் கிடைக்கும். மரியாதை, அந்தஸ்து உயரும். குடும்பத்தில் மகிழ்ச்சியான கொண்டாட்டங்கள் இருக்கும். பெரியோர்கள் மூலம் காரிய அனுகூலம் ஏற்படும். […]
மிதுன ராசிக்காரர்களே! இந்த வாரம் வருமானம் அதிகரிக்கும். வசதிகள் பெருகும். ராசிநாதன் சஞ்சாரம் சுகத்தையும் சவுக்கியத்தையும் தரும். உறவினர்களுடன் சுமுக நிலை காணப்படும். வெளியூர் அல்லது வெளிநாட்டு பயணம் செல்ல நேரலாம். நீண்ட காலப் பிரச்சினைகள் தீரும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியத்தை குரு தருவார். உடல் ஆரோக்கியம் பெறும். மன இறுக்கம் நீங்கும். குடும்பத்திலிருந்த சின்னச் சின்னப் பிரச்சினைகள் நீங்கி கலகலப்பு உண்டாகும். பொருள் சேர்க்கை உண்டாகும். சகோதரர்களால் நன்மை உண்டாகும். தனஸ்தானத்திலிருக்கும் ராகுவால் தடைபட்ட […]
ரிஷப ராசிக்காரர்களே! இந்த வாரம் தடைபட்ட பணம் கைக்கு வந்து செரும். அவசர முடிவுகளை எடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. விரும்பத்தகாத ஆசைகள் உண்டாகலாம். வீடு, மனை, நிலம், வாகனம் போன்ற சொத்துக்களில் எடுக்கும் முயற்சிகள் தடைகள் கண்டாலும் வெற்றி பெறும். குடும்பத்தில் குழப்பங்கள் நீங்கும். கடன் பிரச்சினை கட்டுக்குள் இருக்கும். திடீர் செலவுகள் உண்டாகும். அக்கம்பக்கத்தில் அனுசரித்துச் செல்வது நல்லது. தொழில் மாற்றம், உத்தியோக மாற்றம் போன்றவை உண்டாகலாம். எல்லாவற்றுக்கும் அடுத்தவர் தயவை எதிர்பார்க்க வேண்டி இருக்கலாம். […]
மேஷ ராசி நேயர்களே ! இந்த வாரம் துணிச்சலான சில முடிவுகளை எடுப்பதன் மூலம் நன்மைகளைப் பெறுவீர்கள். சப்தம ஸ்தானத்தில் இருக்கும் ராசிநாதன் செவ்வாய் குரு சஞ்சாரத்தால் மிக அதிக நல்ல பலன்களைப் பெற போகிறீர்கள். மகிழ்ச்சியான எண்ணங்கள் வரும். திடீரென்று அவசர முடிவை எடுக்க வேண்டியிருக்கும். கோபத்தைக் கட்டுப்படுத்துவதன் மூலம் நட்பு, உறவுகளிடம் இயல்பு நிலை நீடிக்கும். உல்லாசப் பயணம் செல்லும் வாய்ப்புகளும் கிடைக்கும். ஆரோக்கியப் பிரச்சினைகளுக்குத் தீர்வு வரும். நீண்ட நாள் பிணக்குகள் முடிவுக்கு […]
கன்னி ராசி நேயர்களே! இந்த வாரம் தனாதிபதி சுக்கிரனின் சஞ்சாரம் பணவரத்தை அதிகப்படுத்தும். பேச்சில் இனிமையும் சாதுரியமும் காரிய சித்தியை அளிக்கும். புண்ணிய காரியங்களில் நாட்டம் அதிகரிக்கும். பூர்விகச் சொத்துக்கள் மூலம் வரவேண்டிய லாபம் தாமதப்படும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் பெற கடினமாகப் பணியாற்ற வேண்டும். வர்த்தக ஆணைகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். உத்தியோகத்திலிருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். முயற்சிகள் எதிர்பார்த்த பலன் தராமல் போகலாம். குடும்பத்திலிருப்பவர்கள் உங்களை ஆலோசிக்காமல் முடிவெடுப்பது மன வருத்தத்தைத் […]
கேரளா மாநிலத்தில் உள்ள ஐயப்பன் கோவிலுக்கு மீண்டும் பழைய பெயர் சூட்டப்பட்டது. சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு மீண்டும் பழைய பெயரே சூட்டப்பட்டுள்ளதாக திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பத்மகுமார் கூறினார். சபரிமலை ஐயப்பன் கோயில் ‘ஸ்ரீதர்மசாஸ்தா கோயில்’ என்று தான் பல ஆண்டுகளாக அழைக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த ஆண்டு காங்கிரஸ் ஆட்சியின்போது அப்போதைய திருவிதாங்கூர் தேவசம்போர்டு, சபரிமலை கோயிலின் பெயரை ‘சபரிமலை ஸ்ரீஐயப்ப சுவாமி கோயில்’ என மாற்றியது. இதுகுறித்து அப்போதைய திருவிதாங்கூர் தேவசம் போர்டு […]
கும்பாபிசேகம் செய்யும் போது கும்பமானது கடவுளின் உடலாகவும், சுற்றப்பட்ட நூல் நாடி நரம்புகளையும், உள்ளே இருக்கும் தீர்த்தமானது, ரத்தமாகவும், அதற்குள் போடப்பட்ட தங்கம் ஜீவனாகவும், மேலே இருக்கும் தேங்காய் தலைப்பகுதியாகவும், கும்பத்திற்கு கீழே பரப்பிய தானியம் ஆசனமாகவும் கருதப்படுகிறது. கும்பாபிஷேகத்தின்போது செய்யப்படும் முறைகளை கீழே காணலாம். தெய்வசக்தி கும்பத்திற்கு மாற்றம் : கும்பம் ஒன்றை கோவிலில் உள்ள தெய்வச்சிலை அருகில் வைத்து, தர்ப்பை, மாவிலை கொண்டு மந்திரங்கள் சொல்லப்பட்டு, தெய்வ சக்தி கும்பத்திற்கு மாற்றப்படும். பின்னர், அந்த […]
முருக பெருமானுக்கு செவ்வாய் வெள்ளி கிழமைககள் மிகவும் உகந்த நாளாகும். அன்றைய பொழுதில் முருகனை வேண்டி விரதமிருந்தால் நாம் இழந்த உத்தியோகம் திரும்ப கிடைக்கும் என்பது நம்பிக்கை. இதன் காரணம் என்ன என்னவென்றால் செவ்வாய், வெள்ளிகளில் கிருத்திகை, சஷ்டி திதிக்கும் உகந்த நாட்களாகும். ஆகவே அந்த நாட்களில் முருகனை வேண்டி விரதமிருக்க நல்ல நாளாகும். மேலும், கந்தசஷ்டி மற்றும் தைபூசம் அன்றைய நாட்களும் முருகனுக்கு மிகவும் உகந்த நாட்களாகும். அன்றைய நாட்களில் முருகனுக்கு சிறப்பு பூஜை செய்யபடுகின்றன. […]
நம் வாழ்வில் தினமும் நடக்கும் சம்பவங்கள் நல்லதாகவோ அல்லது கெட்டதாகவோ அமைந்தாலும் நாம் இன்று யார் முகத்தில் விழித்தொமோ என நினைத்து கொள்வோம். அப்படி இருக்கையில், வருடத்தின் முதல் நாளன்று நாம் யார் முகத்தில் (அ) எதன் மீது விழித்துள்ளோம் என்பதை பொறுத்து அந்த வருடம் அமையும் என பெரியவர்கள் தெரிவிக்கிறார்கள். அதன்படி ஆங்கிலப் புத்தாண்டின் முதல் நாளில், கண் விழித்ததும் எதனைப் பார்ப்பது என்று பலரும் நினைக்கலாம். புத்தாண்டு அன்று அதிகாலையில் எழுந்ததும் நம் விழியில் […]
மார்கழி மாதம் தொடங்கிவிட்டது மாலை போட்ட ஐயப்ப பக்தர்கள் அனைவரும் இருமுடி கட்டி ஐயப்பனை தரிசிக்க புறப்பட்டு கொண்டு இருகின்றனர். மண்டல பூஜை நிறைவுற்றதும், பெருவழி பாதையில் ஐயப்ப தரிசனத்துக்கு புறப்பட்டு சென்று கொண்டு இருகின்றனர். மண்டல பூஜையையொட்டி சபரிமலை அய்யப்பன் கோவில் நடை கடந்த மாதம் 15–ந்தேதி திறக்கப்பட்டு நாள்தோறும் பூஜைகள் நடைபெற்று வந்தன. ஏராளமான பக்தர்கள் ஐயப்ப தரிசனம் செய்தனர். மண்டல பூஜை கடந்த 26–ந்தேதியுடன் நிறைவு பெற்றது. அன்று இரவு 11 மணிக்கு […]
புத்தாண்டையொட்டி திருச்செந்தூர் முருகன் கோவிலில் அதிகாலை முதலே சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. லட்சக்கணக்கன பக்தர்கள் கடலில் நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை அடுத்த திரு உத்தரகோசமங்கை கோயிலில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு ஒரே மரகதக்கல் நடராஜர் சிலையில் சந்தனக் காப்பு அகற்றப்பட்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன. ஒலி – ஒளியால் மரகதக் கல் சேதம் அடையும் என்பதால், ஆண்டு முழுவதும் சந்தனம் பூசப்பட்டு […]